திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் யானை முகத்தோனைக்
காதலால் கூப்புவர்தம் கை.'
கணபதியை வழிபட்டால் அவனருளால் வழிபடுவோர்க்கு எல்லாவிதமான இலக்குமி கடாட்சமும் கிட்டும்; செய்ய நினைக்கும் காரியங்கள் இனிது நிறைவேறும்;
செம்மையான சொற்களைப் பேசும் வாக்கு வல்லமையை அளிக்கும்;
பெருமை தரும்; நன்மக்களை உடையராகச் செய்யும்; ஆதலால் தேவலோகத்திலுள்ள தேவர்களும் விருப்பத் தால் பயபக்தியுடன் விநாயகரை கைகூப்பி வணங்கி அவனருளைப் பெறுகிறார்கள்.
எனவே, பூலோகத்திலுள்ள மக்களாகிய நாமும் வழிபட வேண்டும்
என்பது இப்பாடலின் பொருள்.
சிவபெருமான் திரபுர தகனத்தின் பொருட்டு தேர்மீது ஏறிச் சென்றபோது, விநாயகரை முதற்கண் வணங்காது புறப்பட்டதால் தேர்ச் சக்கரத்தின் அச்சு முறிந்துவிட்டது.
பின்னர், சங்கரன் அச்சிறுபாக்கத்தில் ஆனைமுகத் தானைப் பூஜித்துச் சென்றதால்தான் திரிபுராதிகளை வென்றார் என்பது மூத்த பிள்ளையாரின் பெருமை!
எடுத்த காரியங்கள் சித்தி பெற முதன்முதலில் கணேசனை வணங்குவது நம் நாட்டு வழக்கம்.
அதனால்தான் இவருக்கு மூத்த பிள்ளையார் என்று பெயர்.
தேவர்களைத் துன்புறுத்திய கஜமுகாசுரனைக் கொன்று தேவர்களுக்கு நல்வாழ்வு அளிக்க, சதாசிவனே தன் இச்சையால் யானைமுகத்துடன் ஞானமயமான திருமேனியைத் தாங்கித் தோன்றினான் என்பது புராண வரலாறு.
ஆதிப் பரம்பொருள் - பிறவா யாக்கைப் பெரியோன் ஆகிய சிவபெருமானும், பார்வதி தேவியாரும் உலகிலுள்ள மக்களுக்கு
தாயும் தகப்பனுமாக விளங்குகின்றனர்..
அழித்தல் தொழில் கொண்ட அரன், அவரை நோக்கி தவம் செய்யும் அனைவருக்கும் வரம் தரும் வள்ளல். உலகமே அவனை வணங்குகிறது.
இத்தனை பெருமை பெற்ற பரமன் தன் மகன்களான கணபதியையும் முருகனையும் இரண்டு சந்தர்ப்பங்களில் வணங்கியதாக புராணம் சொல்கிறது.
தகப்பன்சாமி பிரணவப் பொருள் அறிந்த முருகன் பிரணவ்ப்பொருள் பற்றி எல்லாரையும் கேட்டு, சொல்லாதவர்களைத் தண்டனைக்கு உள்ளாக்கினான்.
பிரம்மதேவனைக் கேட்டான். படைக்கும் கடவுள் விழித்தான்.
அவனைச் சிறைச் சாலைக்கு அனுப்பினான் சிங்கார வேலன்.
தந்தையான பரமேஸ்வரன், "பிரணவப் பொருளை எமக்குச் சொல்வாயாக' என்று முருகனிடம் கேட்டார்.
"தந்தையாரே, உங்களுக்கு நான் உபதேசிக்கிறேன். ஆனால் நான் குரு ஸ்தானத்திலும் நீங்கள் சிஷ்ய ஸ்தானத்திலும் இருந்தால் நான் தயார்' என்றான் எழில்வேலன்.
அதன்படியே அரன் நிற்க, அழகன் மேலே அமர்ந்து
பிரணவத்துக்குப் பொருள் கூறினான்.
இக்காட்சி சுவாமி மலையில் நன்றாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. எனவேதான் பாலசுப்ரமணியனுக்கு "தகப்பன் சாமி' என்ற பெயரும் உண்டாயிற்று.
எந்த காரியம் செய்தாலும் கணபதியை முதன்முதலில் வழிபட வேண்டும் என்றும்; யாராக இருந்தாலும் கற்பிப்பவன் மேலேயும் கற்பிக்கப்படுபவன் கீழேயும் இருக்க வேண்டும் என்றும் அறிந்துகொள்ளும் நிகழ்வுகள்..
தோற்றி அருணகிரி துன்பம்தளைத் துடைத்தாய்
நேற்றி அயனைச் சிறைவிடுத்தாய்-
அப்பன் அரனுக்கே பொய்யா பிரணவப் பொருளைச் சொல்லி வந்ததென்
பழனிஅய்யா என்பால் ஏன்அடம்?
கணபதி கழல் போற்றி! கங்கை சூடன் திருவடி போற்றி!
கண்ணன் மருகன் காலடி போற்றி!
வெற்றிகரமான தங்களின் 550 ஆவது பதிவுக்கு என் அன்பான வாழ்த்துகள்.
ReplyDeleteஎனக்கு மிகவும் பிடித்த என் ஆஸ்தானக் கடவுள் எம்பெருமான் விநாயகர்.!
ReplyDeleteகணபதி தரிசநம் கண்ணார சேவித்து மனதார வணங்கினேன் அம்மா மிகவும் நன்றி அம்மா.
ReplyDeleteகீழிருந்து மூன்றாவது மற்றும் ஐந்தாவது படங்கள் புதுமையாக சேர்க்கப்பட்டுள்ளன.
ReplyDeleteஅதுவும் அந்த ஐந்தாவது படத்தில் இப்படி அவர் ஒரேயடியாக தேய் தேய் என்று தேய்த்தால் என்ன ஆவது?
;)))))
அடடா! அந்த எலியார் நெசுங்கிப்போய் விட மாட்டாரா?
சூர்யனே இவரின் இந்தச் செயலைப்பார்த்து சிரிக்கிறாரோ!
ஞானமய கணபதியைப்பற்றிய இந்தப் பதிவும் வழக்கம்போல அழகழகான படங்களுடனும், அருமையான விளக்கங்களுடனும் அமைந்துள்ளது.
ReplyDeleteமீண்டும் பொறுமையாகப் படித்து விட்டு, இரவு 10 மணிக்கு மேல் மறுபடியும் வந்தாலும் வருவேன்.
/கணபதி கழல் போற்றி! கங்கை சூடன் திருவடி போற்றி! கண்ணன் மருகன் காலடி போற்றி!/
ReplyDeleteஇந்த வரிகளின் கீழே காட்டப்பட்டுள்ள சக்ரத்தில் உள்ள விநாயகர் படம் சுமாராகவே இருப்பினும், அந்த சக்ரம் உள்ள படத்தை UP & DOWN இழுத்துப்பார்க்கும்போது அது சுழலுவது போலவும் தெரிவது நல்ல அழகாகவே உள்ளது. ;)
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteவெற்றிகரமான தங்களின் 550 ஆவது பதிவுக்கு என் அன்பான வாழ்த்துகள்.
வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
சிப்பிக்குள் முத்துப்போன்ற விநாயகரும், சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டிருக்கும் குட்டிப்பிள்ளையாரும் அழகோ அழகு தான். ;)))))
ReplyDeleteஇருவரும் குட்டியூண்டு வெள்ளரிப் பிஞ்சுகள் போல சுட்டியாகவும் குட்டியாகவும் உள்ளனர்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteகீழிருந்து மூன்றாவது மற்றும் ஐந்தாவது படங்கள் புதுமையாக சேர்க்கப்பட்டுள்ளன.
அதுவும் அந்த ஐந்தாவது படத்தில் இப்படி அவர் ஒரேயடியாக தேய் தேய் என்று தேய்த்தால் என்ன ஆவது?
;)))))
அடடா! அந்த எலியார் நெசுங்கிப்போய் விட மாட்டாரா?
சூர்யனே இவரின் இந்தச் செயலைப்பார்த்து சிரிக்கிறாரோ! //
அவர் சந்திரன் .. தொந்தி கணப்தியைப் பார்த்து இப்படி கேலியாக சிரித்துத்தான் கண்பதியிடம் சாபம் வாங்கி -- ஒவ்வொரு நாளும் தேய்ந்த்தார்..
சாபவிமோசனம் வாங்கி வளர்ந்தார்..
அடடா! ஆம் ஆம்.... கதை தான் தெரியுமே!
ReplyDeleteYou are very Correct.
ஏதோ ஒரு அவசரத்தில் சந்திரனை சூர்யனாக [தவறுதலாக] எழுதிவிட்டேன்.
தவறுக்கு வருந்துகிறேன். ;(
விளக்கத்திற்கு நன்றிகள்.
முதல் படமும் நல்ல தேர்வு தான்.
ReplyDeleteகுத்து விளக்குகள் எரிவதுபோல காட்டியுள்ளதும்,
விந்யாகரின் நெற்றி நாமத்திற்கு மேல் கிரீடத்தில் அந்த ஆபரணம் ஜொலிப்பதும்,
அது போல தொந்திக்கு மேல் ஒன்று ஜொலிப்பதும்,
மூன்று கைகளிலும் வளையல்கள் ஜொலிப்பதும்,
படத்தின் பின்னனியில் மேகம் போன்று ஏதோ ஜொலித்தபடி வந்து கொண்டே இருப்பதும்
அருமையோ அருமை.
மஞ்சள் வஸ்திரம், சிகப்புப் பட்டுப்பீதாம்பரம், பச்சைப்பட்டில் மேல் அங்கவஸ்த்ரம்,லைட் ப்ளூ கலரில் இரண்டு பக்கமும் இரு திண்டுகள், மலர்ந்த மிகப்பெரிய செந்தாமரை ஆசனம்,நீண்ட மாலை, அபய ஹஸ்தம், தட்டு நிறைய லட்டுகள், தொந்தியும் தொப்பையுமாக மோத முழங்க மோதக்ப்பிரியன் .... அருமையாகவே காட்சியளிக்கிறார்.
ReplyDeleteமகிழ்ச்சியாக உள்ளது.
அடுத்த இரண்டாவது படத்தில் ஜொலிக்கும் சுப லாப கணபதியும்,
ReplyDeleteமூன்றாவது படத்தில் தலையாட்டித் தங்கமான எழுத்தர் கணபதியும்
ஜோர் ஜோர்!!
ஐந்தாவது படத்தில் உள்ள மொட்டை கணபதியை ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை.
ReplyDeleteமொட்டையடித்து சந்தனம் பூசுவது போல ஓம் என்று தலையில் எழுதி விட்டார்களோ!
எல்லாவற்றையுமே பாராட்டிக் கொண்டிருந்தால் அப்புறம் திருஷ்டியாகிப் போய் விடும்.
அதனால் எனக்குத் தோன்றியதை அப்படியே சொல்லிவிட்டேன்.
தயவுசெய்து கோபித்துக் கொள்ளதீர்கள்.
கோபால் சாரே பின்னூட்டத்தில் எல்லா தகவல்களும் சொல்லிடரார். வழக்கம்போல பதிவும் படங்களும் நல்லா இருக்கு.
ReplyDelete/எந்த காரியம் செய்தாலும் கணபதியை முதன்முதலில் வழிபட வேண்டும் என்றும்;
ReplyDeleteயாராக இருந்தாலும் கற்பிப்பவன் மேலேயும் கற்பிக்கப்படுபவன் கீழேயும் இருக்க வேண்டும்/
YES YES .... Fully agreed.
நீங்கள் தான் எப்போதும் மேலே.
பல நல்ல நல்ல விஷயங்களை இதுபோன்ற பதிவுகள் மூலம் கற்பிப்பவர் தாங்கள் அன்றோ!
அச்சு முறிந்ததால் அச்சரப்பாக்கம்,
ReplyDeleteஸ்வாமிமலை தகப்பன் ஸ்வாமி என பல தகவல்கள் நன்கு விளக்கப்பட்டுள்ளன.
விநாயகரையும், விநாயகச் சதுர்த்தியன்று பிறந்தவர்களையும், வழிபட்டு பின்னூட்டமிட ஆரம்பித்ததால், இடையில் இடையூறு ஏதும் இன்றி, விக்னம் இன்றி, நிறைவு பெற்றதில் மகிழ்ச்சி.
வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
நன்றிகள். நாளை சந்திப்போம்,.
பிரியமுள்ள vgk
முதலில் கணபதியைதான் வழிபட வேண்டும் என்பது மிக்கவும் உண்மை .
ReplyDeleteஅய்யனாகிய சிவனே தன்னுடைய பிள்ளைகளாகிய கணபதி, முருகனை வணங்கியதும்........
தனது பிள்ளைகளின் பெருமை அய்யனின் பெருமை அடங்கும் கருத்தையும் பகிர்ந்த அக்காவுக்கு நன்றி .
படங்கள் அனைத்தும் அருமை . கண்ணை கவரும் வண்ணம் நிறைந்தது வாழ்த்துக்கள் அக்கா .
உங்களுடைய 550 - வது பகிர்வுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள் அக்கா....
ReplyDeleteபடங்கள் அனைத்தும் அருமை
ReplyDeleteவாழ்த்துகள்
தந்தை போல ஆனந்தத் தாண்டவ நடன - பிள்ளையாரை இன்று தான் பார்த்தேன் மிக்க நன்றி ,இடுகைக்கும் சேர்த்து சகோதரி.550வது பதிவிற்கும் நலவாழ்த்து.
ReplyDeleteவெதா. இலங்காதிலகம்.
Ganapathi is chellpillai to everyone. Viewing our chellapillai is making happy. Thanks Rajeswari for the nice post.
ReplyDeleteviji
3223+12+1=3236 ;)
ReplyDelete2 பதில்களுக்கு நன்றி