Monday, May 14, 2012

திருவிடைமருதூர் திருத்தலம்..


Lord Shiva Pictures Graphics Myspace

Lord Shiva Pictures Myspace

நேற்றைய தொடர்ச்சி.....

அப்போது தஞ்சாவூர் சோழ மன்னன் ஆதிக்கத்தில் இருந்ததால் பாண்டிய மன்னன் அந்த நாட்டின் மீதே படையெடுத்து சென்று சோழ மன்னனை விரட்டி விட்டு அந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டி இருந்தது . 

அவனை தொடர்ந்து வந்து கொண்டு இருந்த பிரும்மஹத்தியால் ஆலயத்துக்குள் நுழைய முடியாது என்பதால் ஆலய வாயிலிலேயே அமர்ந்து கொண்டு மன்னன் வரவை எதிர்பார்த்து காத்து இருந்தது. 

ஆலயத்துக்குள் சென்ற மன்னனிடம் பண்டிதர்கள் பிரும்மஹத்தி தோஷத்தைக் களையும் பூஜை செய்து ஆவிட்டு பின் பக்க வாயிலினால் வெளியேறி விடுமாறு கூறினார்கள். 


ஆகவே மன்னன் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த பிரும்மஹத்தி வாயிலிலேயே இன்றும் அமர்ந்து இருப்பதான ஐதீகம் உள்ளதால் அந்த ஆலயத்துக்கு சென்பவர்கள் ஆலயத்தில் நுழைந்து விட்டு திரும்பிப் பார்க்காமல் இன்னொரு வழியே வெளியில் சென்று விட வேண்டும் என்கிறார்கள். 

ஆலயத்தின் நுழை வாயில் அருகில் அமர்ந்து காத்திருக்கும் சிலை பிரும்மஹத்தியின் வடிவம் ....
Brahma Harthi





Inner Praharam 3


Inner Praharam 2
photo
Inner Praharam 2












photo
Temple Tank of Mahalingaswami




சொர்க்கவாசல்








மகாலிங்க பெருமான் ஆலயத்தின் கிழக்கே, மேலவீதியில் அமைந்துள்ளது, ரிஷிபுரீஸ்வரர் திருக்கோயில்.

மகாலிங்க ஆலயத்திற்கு முன்பே இந்த ஆலயம் தோன்றியதாக கூறப்படுகிறது.

பரத்வாஜர், காஸ்யபர், கௌதமர், அகத்தியர், ரோமசர் போன்ற முனிவர்கள் சிவனை பூஜித்து ஞானம் பெற வில்வ மரங்கள் நிறைந்த இந்த இடத்தில் தவம் மேற்கொண்டனர். 

அம்பிகையுடன், ஈசன் தோன்றி அவர்களுக்கு ஞானத்தை போதித்தார். ரிஷிகளுக்கு அருள்புரிந்ததால் ஈசன் ரிஷிபுரீஸ்வரர் என்றும் அன்னைக்கு ஞானாம்பிகை என்றும் பெயர் வந்தது. 
பட்டினத்தார், பத்திரகிரியார் ஆகியோர் இத்தல ஈசனை வழிபட்டு முக்தியடைந்தார்கள்.

இத்தலத்தில் வடக்கு பார்த்த குபேரனை வழிபட கடன் தொல்லைகள் நீங்கும். அஷ்ட ஐஸ்வர்யமும் கிட்டும்.  

தல விருட்சம்-வில்வம். தீர்த்தம்-கனக தீர்த்தம். 
இது சிவபெருமான் திருக்கண்களிலிருந்து உண்டானதாம். இதில் நீராடி ஞானாம்பிகையையும் ரிஷிபுரீஸ்வரரையும் வழிபட குழந்தைப் பாக்கியம் கிட்டும். நோய்கள், பாவங்கள் நீங்கும்.

ரிஷப, மிதுன, சிம்மராசிக்காரர்களுக்கு சிறந்த பரிகார தலம் ...





சிம்ம தீர்த்தம்






Arulmigu Mahalingaswamy Temple, Thiruvidaimaruthur



Arulmigu Mahalingaswamy Temple, Thiruvidaimaruthur




rajakoburam thiruvidaimarudurTemple View

Front View

33 comments:

  1. அரிய தகவல்கள் அழகான படங்களுடன்! நன்றி நண்பரே!

    ReplyDelete
  2. அரிய தகவல்கள் அழகான படங்களுடன்! நன்றி நண்பரே!

    ReplyDelete
  3. niraya thagavaludan koodiya arumaiyana pathivu nanum intha alayathirku sendruvanthen ivvalavu vibaram theriyamale indru thangalal arinthukonden namaskaram amma.
    .

    ReplyDelete
  4. மனம் சஞ்சலத்தோடவும் வருத்தத்தோடவும் வந்தேன். ஏதோ விடை கொடுத்த மாதிரி இருந்தது இந்தப் பதிவு. மிக அழகான படங்கள்.விளக்கங்கள். அழகு ராஜேஷ்வரி. மனம் சொல்கிறது நன்றி.

    ReplyDelete
  5. கோவில் கோபுரங்களும் மண்டபங்களும் மிகப் பிரமாண்டமும், பிரமாதமும். நல்ல இடுகை; நன்றி. பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  6. திருவிடை மரூதூரின் திருத்தலத்தின் பிரகாரமும், கோபுரமும் மிக அழகு.

    ReplyDelete
  7. அட - இன்னும் அருமை ந்ண்பர் வை.கோ வரவில்லையா - அவரது கருத்துக்ளைப் படித்து விட்டுத் தான் பதிப்வினையே படிப்பேன். - பரவாய் இல்லை - இப்பொழுது படித்து விடுகிறேன். நட்புடன் சீனா

    ReplyDelete
  8. காணாமல் போன கஜக்கோலை (அங்குஸத்தை) பத்திரமாக வாயில் கவ்வியபடி வரும் யானை ஜோர் ஜோர்!

    சாதாரண லிங்கமா என்ன!
    மஹாலிங்கம் அல்லவா!!

    அனைத்துத்தகவல்களும் அருமை.

    ReplyDelete
  9. அடுத்த படத்தில் நெற்றியிலும், காதுகளிலும் அழகாகக் கோலமிடப்பட்டுள்ள யானையும் நல்லா இருக்கு. பாவம் அதற்கு கால்கட்டு போட்டுவிட்டார்களே!

    ReplyDelete
  10. ஐந்தாவது படத்தில் உள்ள கோபுரம் நல்ல அழகு. அருமையான கவரேஜ்.

    ஏழாவது எட்டாவது படங்களில் உள்ள பிரகாரங்களும், நம் தொந்திப் பிள்ளையாருக்கும் முன் பின் காட்டப்பட்டுள்ள பிரகாரங்களும், சூப்பரோ சூப்பர் தான்.

    ReplyDelete
  11. ஐந்தாவது படத்தில் உள்ள கோபுரம் நல்ல அழகு. அருமையான கவரேஜ்.

    ஏழாவது எட்டாவது படங்களில் உள்ள பிரகாரங்களும், நம் தொந்திப் பிள்ளையாருக்கும் முன் பின் காட்டப்பட்டுள்ள பிரகாரங்களும், சூப்பரோ சூப்பர் தான்.

    ReplyDelete
  12. அன்பின் சீனா ஐயா!

    வணக்கம்

    நீங்களாவது என்னை இன்னும் நினைவில் வைத்துக் கொண்டுள்ளதற்கு, உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புள்ள vgk

    ReplyDelete
  13. தெப்பத்துடன் கூடிய அந்தத் தெப்பக்குளமும், தேர்களும் மிகவும் அழகாகவே காட்டப்பட்டுள்ளன.

    சப்பரத்தில் ஸ்வாமி புறப்பாடு நன்னா இருக்கு, எவ்வளவு ஜனங்கள் வெயிலுக்குக் குடைபிடித்தபடி தரிஸிக்கிறார்கள் !!

    மிகவும்
    நீ....ண்....ட....
    பதிவினை ’தொடரும்’ போட்டு இரண்டாக்கித் தந்துள்ளது, தனிச்சிறப்பு. அது தான் நல்லது.

    இன்னும் என் கணினி பிரச்சனைகள் முற்றிலும் சரியாகவில்லை. உங்கள் பதிவினைப் படிக்கவும், கருத்திடவும் மட்டுமே, இதுவரை போகாத வீடுகளுக்கெல்லாம், போய் வந்து கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  14. அருமையான பதிவினை, மிகுந்த சிரமப்பட்டு கொடுத்துள்ளதற்கு நன்றிகள்

    தொடருங்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. வை.கோபாலகிருஷ்ணன் said...
    அருமையான பதிவினை, மிகுந்த சிரமப்பட்டு கொடுத்துள்ளதற்கு நன்றிகள்

    தொடருங்கள். வாழ்த்துகள்.//

    மிகுந்த சிரமத்துடன் சிரத்தையாக சிறப்பான கருத்துரைகள் அளித்து பதிவினைப் பெருமைப்படுத்தியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  16. cheena (சீனா) said...
    அட - இன்னும் அருமை ந்ண்பர் வை.கோ வரவில்லையா - அவரது கருத்துக்ளைப் படித்து விட்டுத் தான் பதிப்வினையே படிப்பேன். - பரவாய் இல்லை - இப்பொழுது படித்து விடுகிறேன். நட்புடன் சீனா //

    வருகைக்கும் நினைவான நிறைவான கருத்துரைகளுக்கும் இனிய நன்றிகள் ஐயா..

    பதிவினைப் பற்றிய நிறை குறைகளை பகிர்ந்து உயர்த்தும் உன்னத கருத்துரைகளுக்கு பாராட்டுக்கள் ஐயா..

    ReplyDelete
  17. kovaikkavi said...
    கோவில் கோபுரங்களும் மண்டபங்களும் மிகப் பிரமாண்டமும், பிரமாதமும். நல்ல இடுகை; நன்றி. பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்./

    பாராட்டுகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் தோழி !!

    ReplyDelete
  18. பழனி.கந்தசாமி said...
    ரசித்தேன். /

    ரத்தினச்சுருக்கமான
    ரத்தினமான கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  19. ஆதிரா said...
    மனம் சஞ்சலத்தோடவும் வருத்தத்தோடவும் வந்தேன். ஏதோ விடை கொடுத்த மாதிரி இருந்தது இந்தப் பதிவு. மிக அழகான படங்கள்.விளக்கங்கள். அழகு ராஜேஷ்வரி. மனம் சொல்கிறது நன்றி.

    மனசஞ்சலமும் , வருத்தமும் விடைபெற்றுப் போய் சந்தோஷமும் அமைதியும் ததும்பி நிறைய பிரார்த்திக்கிறேன் தோழி !

    ReplyDelete
  20. indhira said...
    niraya thagavaludan koodiya arumaiyana pathivu nanum intha alayathirku sendruvanthen ivvalavu vibaram theriyamale indru thangalal arinthukonden namaskaram amma. /

    வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றிகள்...

    ReplyDelete
  21. s suresh said...
    அரிய தகவல்கள் அழகான படங்களுடன்! நன்றி நண்பரே!

    கருத்துரைக்கு இனிய நன்றிகள்...

    ReplyDelete
  22. திருவிடை மருதூர் பற்றி அரிய தகவல்களும், அருமையான படங்களுடன் சிறப்பான பதிவு.மேடம். நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  23. அப்பாடி....சொல்லி முடியாது.சாமி கும்பிடுறேனோ இல்லையோ அத்தனை அழகு.கோபுரம்,தேர் சிற்பவேலைகள்...அதைவிட நீங்கள் சொல்லும் ஆன்மீகக் கதைகள்....பிரமாண்டம் நீங்களா கடவுளா.நன்றி என் ஆன்மீகத் தோழி !

    ReplyDelete
  24. மீண்டும் வலைச்சரத்தில் அடையாளம் காட்டப்ப்ட்டுள்ளதற்கு என் அன்பான வாழ்த்துகள்.

    ReplyDelete
  25. திருவிடைமருதூர் மஹாலிங்க சுவாமி கோயில் பிராகாரத்தில் நடந்த உணர்வே ஏற்பட்டது. அந்த பாக்கியத்தைக் கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி.

    திருவிடைமருதூருக்கு பக்கத்து கிராமம் தான் வேப்பத்தூர். திருவிடைமருதூர் இரயில்வே ஸ்டேஷனின் இறங்கி, மாட்டு வண்டியில் எங்கள் குடும்பத்து திருமணத்திற்கு என் பால்ய வயசில் போனது நிழற்காட்சி போல நினைவுக்கு வந்தது. பழைய நினைவுக்களில் தோய வைத்ததற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி, ராஜி மேடம்.

    ReplyDelete
  26. superb post i had recently visited this temple and had got garuda dharisanam

    ReplyDelete
  27. திருவிடை மரூதூர் தலம் பிரமாண்டம்.

    ReplyDelete
  28. அழகான படங்களுடன் அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்

    ReplyDelete
  29. அருமையான பதிவு.
    உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  30. 120. ஸ்ரீ வெங்கடேஸா கோவிந்தா

    ReplyDelete
  31. பாவை விளக்கின் போட்டோ இருந்தால் பகிரவும். அதன் அழகினை திரு எஸ்ரா அவர்கள் வருணித்துள்ளார்

    ReplyDelete
  32. 3022+9+1=3032 ;) ஓர் பதிலுக்கு நன்றி !

    ReplyDelete