Tuesday, October 29, 2013

குபேர வழிபாடு




உறையூரை தலைநகராகக் கொண்டு பராந்தக சோழன் ஆட்சி செய்து வந்த காலம்  வணிகர் ஒருவர்  பெரம்பலூருக்கு முன்னால், செட்டிக்குளம் என்ற கிராமம் வழியாக வந்துகொண்டிருந்தபோது இருட்டத் தொடங்கியது.

பயணத்தை தொடர முடியாமல் காட்டிலுள்ள மரம் ஒன்றில் ஏறி அதிலுள்ள கிளையில் சாய்ந்து ஓய்வெடுத்த நேரத்தில்  அற்புத காட்சி ஒன்று தென்பட்டது.

திடீரென தோன்றிய தீப்பிழம்புக்கு நடுவே ஒரு லிங்கத்திற்கு தேவர்களும் யோகிகளும் முனிவர்களும் பூஜை செய்வதும் தெரிந்தது. 
சில நிமிட நேரங்களே தோன்றிய அரிய காட்சியைக் கண்ட வணிகர்,உறையூர் திரும்பி மன்னனை சந்தித்து தான் கண்ட காட்சியை விவரித்தார்.

குலசேகர பாண்டிய மன்னன் ஆச்சர்யமடைந்தான். உடனே சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் இருவரும் செட்டிக்குளம் நோக்கி புறப்பட்டனர்.

தான் தங்கியிருந்த வனாந்தரப் பகுதியில் சென்று சிவலிங்கம் கண்ட இடத்தை காட்டினார்.

அங்கு லிங்கம் காணப்படவில்லை. மன்னர் படையினர் அந்த வனப்பகுதியில் லிங்கத்தை தேடினர்.

அப்போது கையில் கரும்பைப் பிடித்துக்கொண்டு ஒரு முதியவர் அந்தப் பகுதிக்கு வந்தார். இங்கே வாருங்கள்,’ எனக்கூறி அவர்களை அழைத்துச் சென்று ஒரு சிவலிங்கத்தை காண்பித்தார்.

அனைவரும் மகிழ்ச்சி பொங்க அந்த லிங்கத்தை வழிபட முற்பட்டபோது, திடீரென மின்னல் போல ஒரு வெளிச்சம் தோன்றியது.

உடனே அந்த முதியவர் கிழக்கு திசையில் ஜோதி வடிவாய் மறைந்தார்.

மன்னரும், மற்றவரும் திகைப்புடன் பார்த்தபோது எதிரேயிருந்த மலைமீது கையில் கரும்புடன் முருகப்பெருமான் தண்டாயுதபாணியாக காட்சியளித்தார்.

 இந்த சம்பவத்தை அடுத்து செட்டிக்குளத்தில் ஏகாம்பரேஸ்வரருக்கு ஒரு ஆலயமும், எதிரே மலைமீது முருகனுக்கு ஒரு ஆலயமும் அமைத்தனர்.

ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் அம்பாளுக்கு தனி சந்நதி அமைக்கப்பட்டது. 

கோயிலின்  சிறப்பு, குபேர வழிபாடாகும்.

ஏகாம்பரேஸ்வரர் மற்றும் அம்பாள் சந்நதிகளைச் சுற்றிலும் 12 ராசிக்காரர்களும் வழிபடும் வகையில் 12 தூண்களில் குபேரன் சிலை மீன் ஆசனத்தின் மீது அமர்ந்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது.

இவை அந்தந்த ராசிக்காரர்கள், அவரவர் பிறந்த நட்சத்திரத்தில் வழிபடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இது எங்கும் காணக்கிடைக்காத அபூர்வமான அமைப்பு.

அம்பாள் சந்நதிக்கு எதிரே குபேரனுக்கு தனிச் சந்நதியும் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் குபேரன், தன் மனைவி சித்திரலேகாவுடன் காட்சியளிக்கிறான். குபேரனின் நவநிதிகளான சங்கநிதி, பதுமநிதி, காமதேனு, கற்பக விருட்சம், மச்சநிதி, நீலநிதி, நந்தநிதி, முகுந்த நிதி, கச்சப நிதி ஆகியோர் பரிவார தேவதைகளாக அமர்ந்திருக்கிறார்கள். 

குபேரன் பரமேஸ்வரனை நோக்கி பல நூறு ஆண்டுகள் கடும் தவமிருந்து அவரது ஆசியைப் பெற்றவர்.

வடக்கு திசைக்கும், தனம், தானியம் மற்றும் அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியாகவும், அழகாபுரியின் அரசனாகவும் விளங்குபவர்.

தீராக்கடன் தொல்லை, பொருளாதார நெருக்கடி, தொழிலில் அபிவிருத்தி முதலான பொருளாதார பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் பக்தர்களுக்கு இங்கு நடைபெறும் குபேர வழிபாடு துயர் துடைக்கும் அருமருந்தாக விளங்குகிறது.

தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் தவிப்பவர்கள், இங்கு நடைபெறும் பூரட்டாதி நட்சத்திர சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டால், கடன் தீர்ந்து, செல்வாக்கு உயர்ந்து, குபேர சம்பத்து பெறலாம் என்பது ஐதீகம்.

ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு எதிரே உள்ள மலைமீது முருகன் கரும்பை கையில் பிடித்தபடி அருள் பாலிக்கின்றார்.

இந்த இரு கோயில்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது..

மலைமீது உள்ள முருகன், தனது அம்மை அப்பனை வணங்கும் வகையில் சிறப்பான கலையம்சத்துடன் விளங்குகிறார்.

அதாவது ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள நந்திவாகனம், முருகன் தன் அம்மையப்பனைக் காண சற்று தலைசாய்த்து வழிவிட்டதாம்!

அதன்படி, கோயில் வாயிலில் துவங்கி கருவறை வரை முன்புறமுள்ள அனைத்து நந்திகளும் தலைசாய்த்திருப்பதைக் காணலாம்.

வேளாண் தொழில் செழிக்கவும், குழந்தை பாக்யம் கிட்டவும், வளம் பெறவும் பங்குனி உத்திரப் பெருநாளில் முருகனுக்கு விரதமிருந்து பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.

சூரிய பூஜை. ஆண்டுதோறும் மாசி 19, 20, 21 தேதிகளில் காலையில் ஏகாம்பரேஸ்வரர்-அம்பாள் மீதும், மாலையில் முருகன் மீதும் சூரிய ஒளி விழுகிறது.

இதனையொட்டி இந்த 3 நாட்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன. ஒரே நாளில் நடைபெறும் இந்த அற்புதங்கள், பக்தர்களை மெய் சிலிர்க்க வைக்கின்றன.

குலசேகர பாண்டியனால் கட்டப்பட்ட இந்தக் கோயில்கள் பெரம்பலூரிலிருந்து 22 கி.மீ. தொலைவிலும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆலத்தூர் கேட்டுக்கு மேற்கில் 8 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன. அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் தைப்பூசத்தின் போது 10 நாள் திருவிழா கோலாகலமாக நடக்கும். பழந்தழிழரின் கட்டடக்கலைக்குச் சான்றாக இருக்கும் இந்தக் கோயில்கள்..

கோவில் பற்றிய சில தகவல்கள் அறிய இந்ததளம்..
http://drlsravi.blogspot.in/2013/09/sri-ekambareshwarar-koil-kubera-koil-at.html






27 comments:

  1. கோயில் குறித்த தகவல்களுக்கு நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. கோயிலின் வரலாறு மிகவும் சிறப்பு... இணைப்பிற்கும் நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வணக்கம் அம்மா,
    அறியாத தகவல்களைத் தங்கள் மூலமே அறிந்து கொண்டேன். கோவில்கள் பற்றிய இத்தனை செய்திகளை எங்கிருந்து தான் சேகரிக்கிறீர்கள் என்ற வியப்பு ஏற்படுகிறது. குபரேனின் அருள் பார்வை எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கட்டும். தங்களுக்கு எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிங்க அம்மா.

    ReplyDelete
  4. வணக்கம்
    அம்மா

    அருமையான கருத்துள்ள பதிவு வாழ்த்துக்கள் பாடங்களும் அழகு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. வணக்கம்
    அம்மா
    அருமையான கருத்துள்ள பதிவு வாழ்த்துக்கள் படங்களும் அழகு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. தீபாவளி சமயத்தில் குபேர வழிபாடு பற்றிய பகிர்வு. அருமை.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. நிறைய தகவல்களைத் தந்தமைக்கு மிக்க நன்றி!..

    ReplyDelete
  8. நிறைய தகவல்களைத் தந்தமைக்கு மிக்க நன்றி!..

    ReplyDelete
  9. குபேரன் பற்றிய தகவல்கள், ஏகாம்பரேஸ்வரர் கோவில் பற்றிய விபரங்கள் அனைத்தும் அருமை!

    ReplyDelete
  10. இப்பதிவில் குபேர வழிபாடு பற்றிய அரிய தகவல்களும் படங்களும் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  11. ஏகாம்பரேஸ்வரர் கோயிலைப் பற்றியும் குபேர வழிபாடு பற்றியும் நல்ல தகவல்கள். அனைத்தும் அருமை!

    பகிர்வினுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!

    ReplyDelete
  12. தலை சாய்ந்திருக்கும் நந்திகள் பற்றிய தகவல்களும் புதுமை மீன் வடிவத்தில் குபேரரும் அறிய தகவல்கள் சிறப்பாக படங்களும் பகிர்வும். நன்றிங்க.

    ReplyDelete
  13. இந்தக் கோவில் அமைந்திருப்பது இலங்கையிலா ?..செட்டிக் குளம்
    என்ற பெயரோடு ஒரு கிராமம் இலகையில் இருப்பதால் தான் கேட்கின்றேன் .சிறப்பான தகவலைத் தந்த இப் பகிர்வுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
    Replies
    1. Ambal adiyal has left a new comment on the post "குபேர வழிபாடு":

      //இந்தக் கோவில் அமைந்திருப்பது இலங்கையிலா ?..செட்டிக் குளம் என்ற பெயரோடு ஒரு கிராமம் இலகையில் இருப்பதால் தான் கேட்கின்றேன் .//

      அம்பாளடியாள் அவர்களுக்கு, வணக்கம்.

      இந்த செட்டிக்குளம் என்ற ஊர், தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்திற்கும், பெரம்பலூர் மாவட்டத்திற்கும் இடையே அமைந்துள்ளது. திருச்சியிலிருந்து [டவுன் பஸ்] நகரப் பேருந்துகள் செட்டிக்குளத்திற்குச் செல்கின்றன.

      திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் [ஹை வேய்ஸ் ரூட்டில்], திருச்சியிலிருந்து ஒரு 50 கிலோமீட்டர் சென்றால் இடதுபுறம் ஓர் மிகப்பெரிய ஆர்ச் வரும் - செட்டிக்குளம் செல்லும் வழி - இங்கிருந்து செட்டிக்குளம் 8 கிலோ மீட்டர் என போடப்பட்டிருக்கும்.

      அதில் உள்ளே நுழைந்து ஒரு 7 கிலோ மீட்டர் உள்ளே சென்றால் முதலில் முருகனின் மலையும் அதன் பிறகு ஓரிரு கிலோ மீட்டரில் பிரும்மாண்டமான செட்டிக்குளம் சிவன் கோயிலையும் காணலாம்.

      இந்த சிவன் கோயிலுக்கு சமீபத்தில் தான் கும்பாபிஷேகம் நடைபெற்று, பெயிண்ட் அடிக்கப்பட்டு, ஜொலிக்கிறது.

      மிகவும் பழமை வாய்ந்த சிறப்பான கோயிலாகும்.

      இது தங்கள் தகவலுக்காக மட்டும்.

      அன்புடன் VGK

      Delete
  14. பல புதிய தகவல்களிற்கு நன்றியுடன் மகிழ்வும்.
    நவநிதிகள் அறிந்ததும் மகிழ்வு சகோதரி...
    இனிய பாராட்டு.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  15. குபேரனின் மனைவி பெயர் இன்றுதான் தெரிந்தது எனக்கு.

    ReplyDelete
  16. இன்றும் ’குபேர வழிபாடு’ பற்றிய செய்திகள் படிக்க நேர்ந்ததில் மகிழ்ச்சி.

    >>>>>

    ReplyDelete
  17. அதுவும் நான் சமீபத்தில்தான், குடும்பத்துடன், அடுத்தடுத்து இரண்டு மூன்று முறைகள், காரில் செட்டிக்குளம் போய் வர, சந்தர்ப்பங்கள் கிடைத்தன.

    அதனால் அதைப்பற்றிப் படிக்கப்படிக்க மேலும் மகிழ்ச்சியாக இருந்தது.

    >>>>>

    ReplyDelete
  18. சிவன் கோயிலிலிருந்து பார்த்தால் மலைமேல் உள்ள முருகன் கோயிலும், மலைமேல் உள்ள முருகன் கோயிலிலிருந்து பார்த்தால் அந்த மிகப்பெரிய சிவன் கோயிலும் காட்சி அளிப்பது அருமையாகவே இருந்தன.

    மலைவரை காரிலேயே போக வசதி இருந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

    >>>>>

    ReplyDelete
  19. 12 ராசிக்காரர்களுக்கான தூண்களில் உள்ள குபேரன் சிலைகளில் என் “மிதுன ராசி”யைத்தவிர மற்ற 11 ராசிக்கான குபேரன்கள் அனைத்தும் என் கண்களில் பளிச்சென்று பட்டன.

    ”நீங்களே குபேரன் - அதனால் தான் மிதுன ராசிக்கான குபேரனை இங்கு காணவில்லை” என்று ஜோக் அடித்தாள் என் மனைவி.

    பிறகு நேராக அர்ச்சகரைப்போய் மீண்டும் பார்த்து இது சம்பந்தமாக சந்தேகம் கேட்டேன்.

    அவர் அது எங்கே உள்ளது என்பதை என்னிடம் தெரிவித்தார்.

    பிரதக்ஷணம் செய்யும் பாதையில் ஓரமாக மிகப்பெரிய மேடையுடன் கூடியதோர் நடை பாதை உள்ளது.

    [திருவானைக்கோயில் ஸ்வாமி சந்நதியிலிருந்து ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சந்நதிக்குப்போக ஓர் உயரமான மேடை [திண்ணை போன்ற] நடைபாதை இருக்குமே - அதே போலத்தான், இதுவும் உள்ளது]

    அதில் ஏராளமான மூங்கில்களை அடசலாகப் போட்டு வைத்துள்ளனர். அதன் மேல் கஷ்டப்பட்டு ஏறி, ஒரு தூணின் உள்புறமாக அமைந்துள்ள மிதுன ராசி குபேரனைக் கண்டு தரிஸித்துப் பிறகுதான் நிம்மதியாகக் கோயிலைவிட்டு வெளியே வந்தேன்.

    என் மனைவியால் அந்த உயரமான மேடை மீதோ, மூங்கில் கழிகளின் மீதோ ஏறி நின்று மிதுன ராசி குபேரனை தரிஸிக்க முடியாமல் கஷ்டப்பட்டாள்.

    இருப்பினும், எப்படியோ நான் அவளைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு, தரிஸிக்க வைத்து விட்டேன்.

    >>>>>

    ReplyDelete
  20. திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் மெயின் ரோட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்குள் ’சிறுகனூர்’ என்ற பகுதியில் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த 12 நபர்கள் [நான் என் பிள்ளைகள், என் அக்கா பிள்ளைகள், என் அண்ணா பிள்ளைகள்] மற்றும் சில நண்பர்கள் என வரிசையாக 20 மனைகள் வாங்கியுள்ளோம்.

    அதற்கான பத்திரப்பதிவு அலுவலகம் இந்த செட்டிக்குளம் சிவன் கோயிலுக்கும், முருகன் கோயிலுக்கும் இடையில் தான் அமைந்துள்ளது. அதனால் மட்டுமே 2-3 தடவைகள் நாங்கள் அங்கு செல்ல நேர்ந்தது.

    >>>>>

    ReplyDelete
  21. அழகான படங்களுடன் கூடிய பதிவுக்கும், பகிர்வுக்கும், குறிப்பாக செட்டிக்குளம் சிவன் + முருகன் கோயில்கள், வரலாறுகள் பற்றிய செய்திகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

    பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    -oOo-

    ReplyDelete
  22. உங்களது ஒவ்வொரு பதிவும் எங்களை க் கடவுளை நோக்கி இழுக்கின்றன.அற்புதமான படங்கள். செய்திகள். அனைத்துக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி. இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள் அம்மா.

    ReplyDelete
  23. தகவல்களும் சிவ, குபேர தரிசனமும் அருமை. நன்றி அம்மா.

    ReplyDelete
  24. thanks for sharing new info about kubera sannithi

    ReplyDelete
  25. 12 ராசிக்காரர்களும் வழிபடும் வகையில் 12 தூண்களில் குபேரன் சிலை
    ஏகாம்பரேஸ்வர் கோயிலில் இருப்பது புதிய தகவல்கள். மிக அருமையான
    தகவல்கள். குபேர பூஜை பற்றிய பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  26. Very useful information. But if you have posted pictures for all Rasi, it might be easy to download for all. Thanks.

    ReplyDelete