Sunday, October 6, 2013

நலம் நல்கும் நவராத்திரி



நவராத்திரி சுபராத்திரி நவராத்திரி சுபராத்திரி
அலைமகளும் கலைமகளும் கொலுவிருக்கும் ராத்திரி
மலைமகளும் சேர்ந்து நம்மை மகிழவைக்கும் ராத்திரி

சிவனுக்கு உகந்தது சிறப்பான சிவராத்திரி. 
அவர் தம் தேவியர்க்கு உகந்தது நவராத்திரி.
கன்னியர்க்கு ஒன்பது நாள் நவராத்திரி

நவம்’ என்ற சொல் நவ நவமாய் பெருகும்’ நவக்கிரகங்கள்,  நவரத்தினங்கள், நவதானியங்கள், நவயோகங்கள், நவரசங்கள், நவபாஷாணங்கள், நவகற்பங்கள், நவமேகங்கள், நவநிதிகள் என ஒன்பதின் பெருக்கத்தை விசேஷமாக கூறுவார்கள். 
நாடு முழுவதும் ஒன்பது நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகை சிறப்பானது. 

புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி ஆகும். 

நவராத்திரி  நமது பண்பாடு, கலை, கலாசாரம் போன்றவற்றை பிரதிபலிக்கும் விழாவாக  பெண்களை முன்நிறுத்தி கொண்டாடப்படும் பண்டிகையாகும்.
சக்தி தேவியான அம்பாளை பிரார்த்தித்து அவள் அருள் வேண்டி
ஒன்பது ராத்திரிகள் விரதம் இருந்து வணங்குவதே சிறப்பு.

இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி (இச்சை என்றால் விருப்பம், ஞானம் என்றால் அறிவு, கிரியா என்றால் செய்தல்) என்ற முப்பெரும் தேவிகளை வணங்குவதே நவராத்திரியின் சிறப்பாகும்.

இதற்கு சாரதா நவராத்திரி என்றும் பெயர் உண்டு. 

நவராத்திரி பண்டிகை முடிந்து வரும் தசமி திதியை
‘விஜயதசமி’ என்று கொண்டாடி நிறைவு செய்கிறோம். 
சுபகாரியங்கள் செய்ய விலக்கி வைக்கும் பிரதமை, அஷ்டமி, நவமி ஆகிய திதிகளையும் சிறப்பிப்பதற்காகவும், எல்லா திதிகளிலும் இறைவன் அம்சம் உளளது என்பதை உணர வைப்பதற்காகவும், நவராத்திரியில் இந்த திதிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. 

நவராத்திரியில் வரும் நவமி நாள் ஆயுத பூஜை , சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது. 

மாணவர்கள் புத்தகங்கள், நோட்டு, பேனா, பென்சில் போன்றவற்றை வைத்து வணங்குவார்கள். கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என்று எல்லா துறைகளில் இருப்பவர்களும் ஆயுத பூஜையை விமரிசையாக கொண்டாடுவார்கள். 
நவராத்திரியில் வரும் தசமி நாள் விஜயதசமி என கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தொடங்கப்படுகின்ற எந்த செயலும் வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம். 
இந்நாளில் ஞானம், வித்தை, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வணங்குவதால் எல்லா வளமும், நலமும் வந்து சேரும். 
விஜயதசமி நாளில் கல்வி கற்கவும், புது கணக்கு ஆரம்பிக்கவும், முக்கிய பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் போடுவதற்கும் இயல், இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைகள் விருத்தியடைய வழிபடுவது மிகவும் உகந்ததாகும். 


42 comments:

  1. கண் கொள்ளாக் காட்சி... வாழ்த்துக்கள் அம்மா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கு இனிய நன்றிகள்..!

      Delete
  2. அழகான படங்களுடன் நல்ல தகவல்கள். நன்றி அம்மா

    ReplyDelete
    Replies
    1. அழகான கருத்துரைக்கு நன்றிகள்..!

      Delete
  3. அருமையான படங்களுடனான பதிவு

    ReplyDelete
    Replies
    1. அருமையான கருத்துரைக்கு நன்றிகள்..!

      Delete
  4. அழகான பகிர்வு. நவராத்திரி நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. அழகான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

      நலமான நவராத்திரி நல்வாழ்த்துகள் தங்களுக்கு ..!

      Delete
  5. மனம் நிறையச் செய்தது தங்களின் பதிவு!..

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த கருத்துரைக்கு இனிய நன்றிகள் ..!

      Delete
  6. ’நலம் நல்கும் நவராத்திரி’ அழகான படங்களுடன் அற்புதமான விளக்கங்கள் தரும் மிகச்சிறந்த பதிவு. ;)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. நலம் நல்கும் கருத்துரைகளுக்கு நன்றிகள்..

      Delete
  7. நவம் என்ற சொல்லுக்கான விளக்கங்கள் + உதாரணங்கள் .... அடடா .... நவரத்தினமாக ஒளிர்கின்றனவே !!!!!!!!! ;)))))))))

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஒளிவீசும் கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்..!

      Delete
  8. அடுத்துள்ள அதிமுக்கியமான 9 வகையான நவதான்ய சுண்டல்கள் சுண்டி இழுக்கின்றன.

    சுவையோ சுவை. அப்படியொரு சுவை. ;)))))

    அதிலும் எட்டாவதாக உள்ள காரசாரமான + இயற்கை இனிப்பான நிலக்கடலை சுண்டலை மட்டும், அப்படியே நான் கடத்திக்கொண்டு திருப்தியாக சாப்பிட்டு விட்டேன்.

    தேங்காய் மேலிட ஜோராக இருந்தது. இன்னும் ஒரு ப்ளேட் வேண்டும்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. சுவையான ரசனையான கருத்துரைக்கு நன்றிகள்.

      Delete

  9. என்னைப்பொறுத்தவரை இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி எல்லாமே சேர்ந்த ஒட்டுமொத்த ஒரே உருவம் தாங்கள் மட்டுமே தான்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. நலமான நவராத்திரி நல்வாழ்த்துகள்

      Delete
  10. கடைசியில் காட்டியுள்ள மூன்று கொலுப்படங்களும் அருமையோ அருமையாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. அருமையான கருத்துரைக்கு நன்றிகள்..!

      Delete
  11. நேற்று நான் கொடுத்துள்ள கமெண்ட் ஒன்று [For 10.12.2011] வெளியிடப்படாமல் உள்ளது. நான் எதிர்பார்த்த பதிலும் கிடைக்கவில்லை.

    நவராத்திரி பதிவுகளில் அம்பாள் பிஸியாக இருப்பினும், தீவிர பக்தனை இப்படி மறக்கலாமா? தவிக்கவிடலாமா ? ;(

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள்..!

      Delete
  12. இன்றைய மிக அழகான பதிவுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்பான பாராட்டுக்கள்.

    நல்வாழ்த்துகள்.

    நீடூழி வாழ்க !

    -oOo-

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நிறைந்த நன்றிகள்..!

      Delete
  13. நலங்கள் அத்தனைக்கும் நவராத்தி போதுமே
    வளங்கள் வாழ்வில் பெருக்கும்!

    அருமையான அழகிய படங்களும் அற்புதமான பதிவும் தந்தீர்கள். மிக்க நன்றி!

    நவராத்திரி நல்வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  14. முதலாவது படத்தை முதன் முதலாகப் பார்க்கிறேன் மிக்க நன்றி.
    பாராட்டுகள்
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  15. நவராத்திரி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. நலங்கள் யாவும் தரும் நவராத்திரி விழா செய்திகள் படங்கள் எல்லாம் அழகு.
    தேர்திருவிழா, பார்க் படங்கள் மிக அருமை.
    நவராத்திரி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. நவராத்திரி தகவல்களும் படங்களும் சிறப்பு! முத்தேவியரும் காட்சி தரும் முதல் படம் மிக அழகு! நன்றி!

    ReplyDelete

  18. எல்லா நாளும் நல்ல நாளே பொதுவாகத் தவிர்க்கப்படும் திதிகளில் நலந்தரும் நவராத்திரி விழா. இந்தக் கோணம் இதுவரை தெரியாத்து. பகிர்வுக்கு நன்றி. வழக்கம்போல் படங்களும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. புதிய கோணத்தில் பண்டிகைகளை கண்டு அருமையான அருமையான கருத்துரைக்கு நன்றிகள் ஐயா.!

      Delete
  19. 40 வருடங்களுக்கும் மேலாக நவராத்திரி சமயம் கொலு வைத்து அனைவருடனும் பிரசாதம் கொடுத்தும் வாங்கியும் கொண்டாடிய விழா இந்த முறை விரத பூஜைகளுடன் நிற்கிறது. குடியிருப்பில் இருந்தபோதுஇருந்த கோலாகலம் இப்போதெல்லாம் இல்லைமாலையில் பெண்களின் அணிவகுப்பும் பாட்டும் பிரசாத வினியோகமும் இல்லாதது வெறுமை அளிக்கிறது. .

    ReplyDelete
    Replies
    1. இப்போதெல்லாம் பண்டிகைகளின் கோலாகலங்கள் குறைந்துவிட்டன ..

      பிரசாத விநியோகங்கள் எல்லாம் களையிழ்ந்துவிட்டன..

      Delete
  20. ஆவ்வ்வ்வ் நவராத்திரி எல்லோர் வீட்டிலும் களகட்டத் தொடங்கிவிட்டது. நாங்களும் நேற்று ஒருவித சுண்டல் இன்று ஒருவித சுண்டல் செய்து வைத்தோம்ம்..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அதிரா வாங்க ..
      வகை வகையாக சுண்டலோ..!
      கிண்டல் பண்ணாம சாப்பிடுங்கோ..! நல்லது..!!

      கருத்துரைக்கு இனிய நன்றிகள்..!

      Delete
  21. ஆஹா... நவராத்திரி பார்க்கப் போனது போல் இருந்தது படங்கள்...
    அழகான பகிர்வு....
    வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
    Replies
    1. அழகான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..!

      Delete
  22. நவ சுண்டல்கள்,கொலு எல்லாமேஅருமையாக இருக்கு.அழகான படங்களுடன் நவராத்திரிப்பகிர்வு.உங்களுக்கும் எங்கள் நவராத்திரி வாழ்த்துக்கள்.நன்றி.

    ReplyDelete
  23. vijayadasami is used for starting new ventures - important information thanks for sharing

    ReplyDelete
  24. நவராத்திரி. நவ சுண்டல்! படங்கள் அழகு.

    ReplyDelete
  25. யார் வீட்டு கொலு இது? மிகச் சிறப்பாக வைத்திருக்கிறார்கள். பொம்மைகள் எல்லாம் மிகவும் களையுடன் இருக்கின்றன. விதம்விதமான சுண்டல்களுடன் நலம் நல்கும் நவராத்திரி பதிவு அருமை!

    ReplyDelete
  26. படங்கள் அனைத்தும் அருமையா இருக்கு

    ReplyDelete