Saturday, March 5, 2016

அம்மா துணை !!

பேரன்புடையீர் நல்வணக்கங்கள் !!

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்                 - திருக்குறள்

இத்துனை காலமாய் எங்கள் தாயார் திருமதி. இராஜ ராஜேஸ்வரி அவர்களின் வளைப்பதிவிற்கு துனைநின்ற நல் உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றியுங்கள்!!

ஒவ்வொரு பதிவிலும் உன்னதமான செய்திகளை தன் வளைப்பதிவு நள்ளுநர்களுடன் பகிர்ந்துகொண்ட எங்கள் தாயார், மிகவும் மகிமை பொருந்திய இறைவன் திருவடிதன்னில் கலந்திட 9-2-2016 அன்று வைகுண்ட பிராப்தி அடைந்தார்.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது                             - திருக்குறள்

தன் பதிவுகளின் மூலம் அனைவரின் நினைவுகளில் நிறைந்திருந்த எங்கள் தாயார், இந்த இறுதி பதிவின் மூலம், உணர்வுகளில் கலந்து அனைவருக்கும் நல்லாசிகள் வழங்கிடுவார். 

எல்லாம்வல்ல இறைவன் துணையுடன்
நன்றி கலந்த வணக்கங்கள்.

மகள் மற்றும் மகன்கள்

Tuesday, January 19, 2016

ஸ்ரீ குரு நரசிம்மர்



எந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படி கால் தொடங்கி,
வந்து வழிவழி ஆட் செய்கின்றோம். திரு வோணத் திரு விழாவில்
அந்தியம் போதிலரியுரு வாகி அரியை யழித்தவனை,
பந்தனை தீருப்பல் லாண்டு பல்லாயிரத் தாண்டென்று பாடுதுமே
திருப்பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு..!

ப்ரஹ்லாத வரதம் ஸ்ரேஷ்டம்
ராஜ்யலக்ஷ்ம்யா ஸமந்விதம்
புத்ரார்த்தம் ப்ரார்த்தயே தேவம்
மட்டபல்யாதிபம் ஹரிம்
சுதம் தேஹி! சுதம் தேஹி! சுதம் தேஹி! 
ஜெய் லக்ஷ்மிந்ருஸிம்ஹா!!

யானையும், சிங்கமும் நட்பு பாராட்டும் ஷேத்ரமாகத் திகழ்கிறது சாளக்ராமம் எனும் சிற்றூர்
அரபிக் கடலோரம், மங்களூரு - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் உடுப்பியிலிருந்து வடக்கே 22 கி.மீ. தொலைவிலும், மங்களூரிலிருந்து ஏறக்குறைய 80 கி.மீ, தொலைவிலும் உள்ளது சாளக்ராமம் எனும் சிற்றூரில் சங்கு, சக்கரம் என்ற இரு புண்ணியத் தீர்த்தக் கட்டங்களுக்கு இடையே ரம்மியமான சூழலில் அமைந்துள்ள ஸ்ரீ குரு நரசிம்மர் ஆலயத்தில் கம்பீரமாகத் தசபுஜ கணபதி எழுந்தருளியுள்ளார். 

கி.பி நான்காம் நூற்றாண்டில் மௌரியக் குலத் தோன்றல் ராஜா லோகாதித்யன், தன் ராஜகுரு பட்டாச்சார்யாவுக்கு நிவேதனமாக அளித்த பதினான்கு கிராமங்கள் அடங்கிய இந்தச் சாளக்ராம ஷேத்திரத்துக்குக் கூட தேசத்துப் பிராமணர்கள், ஸ்ரீ நரசிங்கப் பெருமாளையே தங்களுக்குக் குருவாகவும், குல தெய்வமாகவும் போற்றி வணங்குவதால்
  ஸ்ரீகுரு நரசிம்ம ஷேத்திரம் என்றே பெயர். 

Gurunarasimha

ராஜகுரு என்னும் தீவிர கணபதி உபாசகர் ஒருவரது கனவில் ஸ்ரீ நரசிம்மர், தசபுஜ கஜானனாக வல்லபை தேவியுடன் காட்சியருளி, ஆலயம் எழுப்ப உத்தரவானதால், கணேச யந்திரத்தின் மீது ஸ்ரீ நரசிம்மரை ஸ்தாபனம் செய்வித்தார். 
Moola Vigraha

(Period: 4th Century AD)

வைணவக் கோயிலில் சைவ சம்பிரதாயமே எல்லா விஷயங்களிலும் அனுஷ்டிக்கப்படும்  அதிசயம் ...

 தசபுஜ விநாயகருக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. 
Dhashabhuja Ganapathi


pancha muga vinayagar
ஆலய நிகழ்ச்சிகளில், மகா கணபதி நரசிம்மப் ப்ரீத்யர்த்தம் என்றே சங்கல்பம் செய்விக்கப்படுகிறது. 

விநாயக சதுர்த்தியின் போது வெள்ளி ரதத்தில் விநாயகர் வீதி உலா வருவது காணக் கண் கொள்ளா காட்சியாகும். 

இப்பிரதேசத்தில், யானைகளும், சிங்கங்களும் விரோதம் பாராட்டாமல் நட்புடன் பழகியதைக் கண்டு பரவசப்பட்ட ராஜகுரு, இந்த இடத்தை நிர்வைர ஸ்தலம் (பகைமை பாராட்டாத பிரதேசம்) என்று குறிப்பிட்டு மகிழ்ச்சி அடைந்தாராம்! 

இதை உறுதி செய்யும் விதத்தில் ஆலயத்தில் ஆனை முகத்தான் தசபுஜ கஜானனனாகவும், சிங்கம், ஸ்ரீநரசிம்ம வடிவிலும் காட்சியளிக்கின்றனர்.

Postcard

Car Festival, Saligrama

Monday, January 18, 2016

ஸ்ரீரங்கம் தசாவதார திருக்கோயில்









சகஸ்ர சந்திர ப்ரதிமா தயாள:
லக்ஷ்மீ முகா லோகன லோல நேத்ர:
தசவதாரைர் பரித பரீத:
ந்ருகேசரி மங்கள மாதளேது

கிரகங்கள் தோஷ நிவர்த்தி தலமான ஸ்ரீரங்கம் தசாவதார திருக்கோயில்

'உலகத்தில் தருமம் அழிந்து, அதர்மம் ஓங்குகிற சமயம், நான் உலகத்தில் அவதாரம் எடுக்கின்றேன்' என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் கூறுகிறார். 
உலக உயிர்களுக்கு இறைவன் தன் கருணையை காட்டுவதற்கே அவதாரங்களை இறைவன் எடுக்கிற அடிப்படையில் ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரம், திருமதில் சுவர் உட்பட கோயில் கட்டுமானப்பணிகளை திருமங்கையாழ்வார் முன்னின்று நடத்தி.ய பணியை பாராட்டி ரங்கநாதர் திருமங்கையாழ்வாரின் கோரிக்கையை ஏற்று, பத்து அவதாரத்தில் (தசாவதாரம்) திருமங்கையாழ்வாருக்கு காட்சியளித்த இடம் கொள்ளிடம் ஆற்றங்கரையிலுள்ள தசாவதாரம் கோயிலாகும்.

திருமங்கையாழ்வாருக்கு தனி சன்னதியுள்ளது.


[Gal1]
கிரகங்கள் தோஷ நிவர்த்தி தலமாக இருப்பதால், ஒவ்வொரு கிரக தோஷமுடையவர்கள் தங்கள் பிறந்த நட்சத்திரத்தில் தசாவதார கோயிலில் பத்து அவதாரங்களையும் பிரார்த்தித்து பலனடையலாம். 
Matsya Jayanthi At Dasvathara Sannadhi Srirangam 2015 -01Matsya Jayanthi At Dasvathara Sannadhi Srirangam 2015 -02
பிரார்த்தனை நிறைவேறியவுடன் 10 அவதார மூர்த்திகளுக்கும் திருமஞ்சனம் செய்து வஸ்திரம் அணிவித்து வழிபாடு செய்கின்றனர்.
[Gal1]
கோயில்களில் ஒரு மூலவருக்கு பல உற்சவர் இருப்பதை காணலாம்.

 ஆனால் இங்கு பத்து மூலவருக்கு ஒரே ஒரு உற்சவர் மட்டுமே
 இருப்பது சிறப்பு.

[Gal1]Sri Adhivan Satakopan Panguni Kettai thirumanjanam Dasvathara Sannadhi Srirangam 2015 -04Sri Adhivan Satakopan Panguni Kettai thirumanjanam Dasvathara Sannadhi Srirangam 2015 -13
திருச்சி - ஸ்ரீரங்கத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில்  
அருள்மிகு தசாவதாரக் கோயில் உள்ளது.
[Gal1]

[Gal1]



Saturday, January 16, 2016

ஸ்ரீ தசபுஜ ருத்ரவீர்ய ராமாஞ்சநேயர்









அஸாத்ய ஸாதக ஸ்வாமின்; அஸாதயம் தவகிம் வத
ராமதூத தயாஸிந்தோ மத் கார்யம் ஸாதய ப்ரபோ

முடியாத பணிகளையும் முடித்து வைப்பவன் ஜெய மாருதி. 
அசாத்தியத்தைச் சாதிப்பவன். இராமதூதன்,

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதாம் |
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||


அனுமனை அணுகி அவனடி பணிந்து வேண்டினால் இம்மையிலும் மறுமையிலும், சதுர்வித புருஷார்த்தங்களும், புத்தி, வித்தை, வீரம், தைரியம், வாக்கு போன்ற அஷ்டலக்ஷ்மியின் அருளும், நிச்சயம் கிடைக்கும்.

யார் யாருக்கு, என்ன என்ன எப்பொழுது எங்கெங்கே 
எப்படியெல்லாம் வேண்டுமோ, அவையெல்லாம் கிட்டும். 

அனுமனிடமில்லாத்து ஒன்றில்லை. 
அனுமனை வேண்டினால் அனைத்தும் கிட்டும்.

அனுமன் எடுத்த வடிவங்களில் அற்புதமானதும், 
தரிசிப்போர் வாழ்வில் தடைகளைத் தகர்க்க வல்லதுமான ஒன்று,  
‘தசபுஜ ருத்ரவீர்ய ராமாஞ்சநேய’ வடிவம்
ரக்தாட்சன், ரக்தபீஜன் எனும் அரக்கர்களை இத்திரு உருவில்தான் வதைத்தானாம் அனுமன். நோய், பயங்கள், கிரக தோஷங்கள், தீயோரின் தொல்லை முதலியவை அழியும்படி அருள்பவன் அனுமன். 
விபத்து, ஆபத்துகள், சிறைவாசம் போன்றவை அனுமனை நினைப்பதாலேயே நெருங்காது ஓடிவிடும்.
அனுமனுக்கு வெற்றிலையில் பாக்கு வைத்து ஒற்றைப்படை எண்ணிக்கையில் மாலையாகக் கட்டி வியாழன், சனிக்கிழமைகளில் பிரார்த்தனை செய்துகொண்டால், மங்கலமான மண வாழ்க்கை கிட்டும். 

வடநாட்டில் இனிமையான வாழ்வு வேண்டுமென இனிப்புகளாலும், தென்னாட்டில் ராகு தோஷம் நீங்க உளுந்து வடையை மாலையாகக் கட்டி சாத்தியும் பலன் பெறுகிறார்கள். 
தஞ்சாவூரில் உள்ள அனந்த மங்கலத்தில் ராஜகோபால சுவாமி கோயில் தசபுஜ ருத்ரவீர்ய ராமாஞ்சநேய திருஉருவத்தை தரிசித்து அருள் பெறலாம்.