Wednesday, May 14, 2014

சீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்






































































































`ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்ரீ மந்திரம்,

ஓம் லேகிநி ஹஸ்தாய வித்மஹே 
பத்ரதராய தீமஹி 
தந்நோ சித்ரப்ரசோதயாத். 

தேவலோகத்தில் மக்களின் பாவ, புண்ணியங்களை கணக்கெடுக்கும் பணிக்காக புதிதாக ஒருவரை படைக்க. ஈசன் யோசித்தபோது, பார்வதி தேவி  பலகையில்  வரைந்த அழகான  படத்தைப் பார்த்து மகிழ்ந்த பெருமான், அந்த சித்திரத்துக்கு உயிர் கொடுத்தார். 
 சித்திரத்திலிருந்து உருவானதால்  சித்திரகுப்தன் என பெயர் பெற்றார். 
சிவபெருமானின் அரவணைப்பில் கயிலாயத்தில் இருந்தபடி, உலகத்து மக்களின் பாவ, புண்ணியக் கணக்குகளை எல்லாம் முறையாகத் தொகுத்து  பொறுப்பாக பணிபுரிந்த சித்திரகுப்தன் இன்னொருமுறை பிறக்க நேர்ந்தது. 
தேவர்கள் தலைவனான இந்திரனுக்கு  அகலிகையின் சாபத்தால்  நேர்ந்த குழந்தையில்லை என்னும்    குறையைத் தீர்க்க, இந்திரனும் அவன் மனைவி இந்திராணியும் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவம் இருந்தார்கள். 
பத்தினி கொடுத்த சாபத்தை மாற்ற தன்னால் முடியாதே; இந்திரனுக்கு நேரடியாக பிள்ளைப்பேறு தர முடியாதே என சங்கடப்பட்ட 
சிவ பெருமான், இந்திரனின் அரண்மனையில் இருந்த காமதேனுவின் கருப்பையில் சித்திரகுப்தனை புகச் செய்த பெருமான், அந்தப் பசுவுக்குக் குழந்தையாகப் பிறந்து, இந்திரனும் இந்திராணியும்  குழந்தை கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்தனர்.. 

 பிறக்கும்போதே கையில் ஏடும், எழுத்தாணியும்! தன் கணக்குப்பிள்ளை பதவியை மறக்காத குழந்தையாகப் பிறந்தார். 

சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்ததால் அவருக்கு சித்திரா புத்திரன் என பெயரிட்டார்கள் இந்திரனும்,  இந்திராணியும்.
புத்திசாலியாகவும் தீர்க்கதரிசியாகவும் இருக்கும் தன் மகன் சித்திரகுப்தனை, 
 தன் தளபதி யமனின் உதவியாளனாக இருக்கட்டும் என்று சொல்லி அனுப்பிவைத்தார். 
சிவபெருமான்  மனிதர்களின் பாவ, புண்ணிய கணக்குகளை சரியாக எழுதி வைத்து, அவர்களுக்கு எப்படிப்பட்ட நன்மைகள் அல்லது தண்டனைகள் கொடுக்கலாம் என யமனுக்கு யோசனை சொல்லும் கௌரவத்தையும் கொடுத்தார். 

சித்திர புத்திரனை  விரதமிருந்து வணங்குபவர்களுக்கு பாவச்சுமை ஏறாமல் பார்த்துக்கொள்வார் என்ற வரத்தையும் அவருக்கு வழங்கினார் சர்வேஸ்வரன். 

சித்ரகுப்த ஆரத்தி

எனவே சித்ரா பவுர்ணமியில் சித்திரபுத்திரனை விரதமிருந்து வணங்கினால் பாவச்சுமை குறையும்; புண்ணிய பலம் கூடும்.

சித்திரகுப்தனாரின் திருமண நாள் சித்திரைப் பௌர்ணமியாகும் ..

உயிர்களின்  பிறப்பு, பூமியில் மனிதர்கள் செய்யும் பாவ, புண்ணியங்களைக்  கணக்கெடுத்து  அவைகளுக்குத் தகுந்தால் போல் அவரவர்க்குரிய  சொர்க்க, நரகங்களை முடிவு செய்வதே சித்திர குப்தனின் கடமையாகும்.

எனவே அவரது திருமண நாளான சித்திரா பௌர்ணமியன்று பொங்கலிட்டும் கிரிவலம் வந்தும் இறைவனை வழிபடும்போது, சித்திர குப்தனை மனதில் நினைத்து ”நாங்கள் மலையளவு செய்த பாவங்களை கடுகளவாகவும் கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக்கொள்” என வேண்டி வழிபடுவது வழக்கம்...

புனித நதிகளில் நீராடியும் நமது பாவங்களைப் போக்கிக்கொள்ளலாம். 
அன்று கடலில் நீராடுவது மிகவும் சிறப்பானது 

அன்றைய தினம் கடலில் நீராடுபவர்களின் பாவங்களை கழித்தும் சிலவற்றை தாமே ஏற்றுக்கொள்ளவும் அங்கே பிரசன்னமாகியுள்ள பித்ருக்கள், மகரிஷிகள், சித்த புருஷர்கள், யோகியர்கள் தயாராக இருப்பார்களாம்.

இதுவரை செய்த பாவங்களுக்கு, இந்த எண்ணெய் குளியலுடன் முழுக்கு போட்டு விடுகிறேன்' எனச் சொல்லி, நல்லெண்ணையை தேய்த்து குளித்து விட வேண்டும். இதற்கு கை மேல் பலன் உண்டு
ஆயுள்பாவ தோஷங்கள், கடன்கள், வழக்குகள் போன்ற கெட்ட பலன்கள் நீங்க, இவரை வழிபடுவதால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இத்தகைய சக்தி வாய்ந்த சித்ரகுப்தருக்கு என்று தனிக்கோயில் பழமை வாய்ந்த அற்புத திருக்கோயில் காஞ்சிபுரத்தில் மட்டுமே உள்ளது. ஆருத்ரா உற்சவம் சித்ரா பவுர்ணமி திருக்கல்யாண உற்சவம் சித்ரா பவுர்ணமி திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும்..
தொடர்புடைய பதிவுகள்

சித்திரத்தில் அருளும் சித்திரகுப்தர்

சித்திரா பெளர்ணமி






12 comments:

  1. சித்திரகுப்தர் பற்றிய தகவல்கள் தெரிந்துகொண்டேன்..... நன்றி..

    ReplyDelete
  2. சித்திரகுப்தன் – பிறப்பு, பெயர்க் காரணம்,மற்றும் படங்களுடன் நல்ல விளக்கம்.

    ReplyDelete
  3. சித்திரகுப்தன் தகவல்கள் + படங்கள் அனைத்தும் அருமை ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

  4. சித்திரத்திலிருந்து சிவனால் உயிர்ப்பிக்கப்பட்டவரும்,
    சித்திரை மாதம்,
    சித்திரை நட்சத்திரத்தில் பிறந்து,
    சித்திரைப் பௌர்ணமியில் மண நாள் கொண்ட
    சித்திர குப்தருக்கு
    Happy Wedding Day சொல்ல முடியாவிட்டாலும்,
    சித்ரா பௌர்ணமியில்
    சித்திர குப்தரை
    சில மணித்துளி நேரமாவது வணங்க
    சிறப்பான பதிவிட்ட மைக்கு ,
    நன்றிகளும், பாராட்டுக்களும்.

    ReplyDelete
  5. ஸ்ரீசித்ரகுப்தரைப் பற்றிய பதிவு அழகு..
    அனைவருக்கும் நன்மை அருளட்டும்!..

    ReplyDelete
  6. சித்திரம் பேசுதடி ...... உன் சித்திரம் பேசுதடி .....

    எந்தன் சிந்தை மயங்குதடி ...... சித்திரம் பேசுதடி ......

    முத்துச் சரங்களைப் போல் மோகனப் புன்னகை மின்னுதடி .....

    சித்திரம் பேசுதடி ......

    தாவும் கொடி மேலே ஒளிர் தங்கக்குடம் போலே

    பாவையுன் பேரெழிலே எந்தன் ஆவலைத் தூண்டுதடி .....

    சித்திரம் பேசுதடி – எந்தன் சிந்தை மயங்குதடி

    சித்திரம் பேசுதடி ......

    என் மனம் நீ அறிவாய் உந்தன் எண்ணமும் நானறிவேன்

    இன்னமும் ஊ மை யை ப் போல்

    மௌ ன ம் ஏனடி தேன் மொழியே

    சித்திரம் பேசுதடி – எந்தன் சிந்தை மயங்குதடி

    சித்திரம் பேசுதடி ...... /

    என்று பாடத்தோன்றுகிறது .....

    இன்றைய தங்களின் சித்திரகுப்தனைப்பற்றிய பதிவுப்பார்த்ததும் ... படித்ததும்.

    வேறெதுவும் சொல்லத்தோன்றவில்லை.

    அருமையான பதிவு, அதற்கேற்ற படங்கள், புராணக்கதைகளும் விளக்கங்களும் வழக்கம் போல ஜோர் ஜோர் !

    அனைத்துக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றியோ நன்றிகள். - VGK

    ReplyDelete
  7. தங்கள் பதிவுகளின் எண்ணிக்கையில் அடிக்கடி குழப்பம் ஏற்படுகிறது.

    சித்திரகுப்தன் போல நான் என் கண்களில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு தங்களின் கணக்குகளைப் பார்த்து வந்தும், அவ்வப்போது ஒன்று கூடக்குறைய ஆகிவிடுகிறது.

    2011 முதல் 2013 வரை மொத்தம் 1140 என்று இருந்தது .... அன்றொரு நாள்.

    இப்போது பார்த்தால் 379+394+366 = 1139 என ஆகிவிட்டது.

    Dummy பதிவு ஒன்று [விஷயங்கள் எதுவுமே இல்லாமல்] இருந்த ஞாபகம். அதை ஒருவேளை நீக்கிவிட்டீர்களோ என்னவோ?

    OK. ’போனதெல்லாம் போக பொண்ணாட்டி பிள்ளைகள் தான் மிச்சம் என்று சொல்வார்கள்’.

    அதன்படி, அதாவது இன்றைய நிலவரப்படி இன்றைய தங்களின் பதிவு எண்ணிக்கை: 1274.

    நாளையப்பொழுது நல்லபொழுதாக விடிந்தால் அது 1275 எனக் காட்டிடும். மகிழ்ச்சியோ மகிழ்ச்சி

    அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
  8. சித்திர குப்தர் பற்றிய தகவல்களும், பாடகங்களும் அருமை அம்மா.

    ReplyDelete
  9. ஸ்ரீ சித்ரகுப்தர் பற்றி தெரியாத பல (பெயர் வரக் காரணம் உட்பட) விடயங்களை தங்கள் பதிவின் மூலமாக தெரிந்துகொண்டேன். கோவில் விபரங்கள்,படங்கள் சிறப்பு.நன்றிகள்.

    ReplyDelete
  10. அந்த சித்திர குப்தரிடம் கணக்கில் தவறு செய்யாமல் நல்லபடி எழுதச் சொல்லவேண்டும் ,,,!

    ReplyDelete
  11. சித்திரகுப்தர் பற்றிய தகவல்கள் அறிந்து கொண்டேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  12. தகவல்களும் படங்களும் அருமை!

    ReplyDelete