










வேதமந்திரங்கள் அனைத்துக்கும் தாயாகப் போற்றப்படும் பெருமைக்கு உரிய காயத்ரி மந்திரம். வேதமாதா என்று போற்றப்படும் பெருமை மிக்கது.
காயத்ரி மந்திரம் சூரிய வழிபாட்டைக் குறிப்பது.
பிரபஞ்சம் இருப்பதற்குக் காரணமானவரும் உயிர்கள் வாழ்வதற்குரிய ஆற்றலை அளிப்பவரும் துன்பங்களை எல்லாம் போக்கி இன்பத்தை அளிப்பதும் எமது அறிவினைத் தூண்டி தெய்வ சக்தியினை நிறைவாக்கி எம்மை சரியான பாதையில் இட்டுச் செல்வதுமான ஒளிக்கடவுளை நான் தியானிக்கிறேன் என்பதே இதன் பொருள்.
காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர், விஸ்வாமித்திரர். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள் உண்டு.

காயத்ரி மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும்
நண்பகலில் சாவித்ரிக்காகவும்
மாலைச் சந்தி நேரத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.
மந்திர வழிபாட்டில் முதல் இடம் காயத்ரிக்குத்தான்.
இதற்குப் பின்தான் மற்ற மந்திரங்களை ஜபிக்க வேண்டும்
27, 108, 1008 தடவை முறைப்படி காயத்ரி மந்திரத்தை ஜபித்தால், முழுப்பலனை அடைவதோடு எந்த ஓர் ஆபத்தும் அண்டாது .
காலையிலும் மாலையிலும் கதிரவனை நோக்கி அமர்ந்து இதை ஜபம் செய்வது பூர்ண பலனைத் தரும். ஆண், பெண், குழந்தைகள் என அனைத்து வயதினரும் இம் மந்திரத்தை ஜபிக்கலாம். காயத்ரி மந்திரத்தில் உள்ள 24 அட்சரங்கள் 24 வகையான பேறுகளை அளிக்க வல்லது.
காயத்ரி மந்திரத்தின் அதிர்வுகள் பிராண சக்தியினை
ஈர்த்து அளிக்க வல்லவை.
பிராண சக்தியே ஒருவருடைய உடல், மனம், புத்தி ஆகியவற்றின் ஆற்றலுக்குக் காரணமானது.
காயத்ரி மந்திரத்தை ஜபிப்பவர் பிராண சக்தியினை அதிகமாகப் பெறுவர்.
ஒவ்வொரு மனிதனுக்கும் அறிவு, மனோசக்தி, ஞானம் இருப்பது போல், இந்தப் பிரபஞ்சத்தின் முழு ஞான ஆன்ம சக்தியின் அலைவடிவம் தான் காயத்ரி மந்திரம் என்பார்கள்.
மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன் என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுவதிலிருந்து. இதன் மகத்துவத்தை நாம் உணரலாம்
மகிமைமிக்க காயத்ரி மந்திரத்தினையே காயத்ரி மாதாவாக வழிபடும் வழக்கம் உள்ளது
காயத்ரி தேவிக்கான கோயில்கள் மிக அபூர்வமாகவே உள்ளன. அந்த வகையில் காயத்ரி தேவிக்கு கோவை வேடபட்டியில் ஓர் அழகிய ஆலயம் அமைந்துள்ளது.
ஆலயத்தில் பிரதானமாக கொலுவீற்றிருக்கும் காயத்ரி அம்மன், ஐந்து முகங்களுடன் பத்துக்கரங்களில் சங்கு, சக்கரம், கதை, அங்குசம், கபாலம், தாமரை, கசை, ஏடு என ஏந்தி வெண்தாமரை மீது அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.
![[Gal1]](http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T1_1751.jpg)
ஐந்து முகங்களும் ஐந்து நிறங்களைக் கொண்டவை.
அவை ஞானம், மனதைக் கட்டுப்படுத்துதல், உயர்ந்த குணங்கள், ஐஸ்வர்யம் தரக்கூடிய வல்லமை, , உயர்ந்த ஆன்மிக ஞானம் என ஐந்து பண்புகளைக் குறிப்பவை என்பர்.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் முதல் சனி மற்றும் ஞாயிறு அன்று ராதா மாதவ திருக்கல்யாண மஹோத்ஸவம் நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் கணபதி, துர்க்கை, தன்வந்திரி, மிருத்யுஞ்சய, ஆஞ்சநேயர் நரசிம்மர், சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, நவகிரக குபேர, காயத்ரி ஹோமங்களுடன் சிறப்பு வழிபாடுகளும் நடந்து வருகின்றன.
இந்த ஹோமங்கள் தொடர்ந்து நடை பெற்று வருவதால் கூடுதல் அதிர்வுகள் வியாபிப்பதால் இத்தலத்தில் அமர்ந்து தியானிக்கும்போது கூடுதல் அதிர்வுகளையும், உடனடி பலனையும் உணர முடியும்.


காயத்ரி சன்னதியின் இடதுபுறம் லட்சுமி நரசிம்மர் காட்சி தருகிறார்.
நரசிம்மரின் ஒருபுறம் கருடாழ்வாரும் மறுபுறம் ஆஞ்சநேயரும் அருள்பாலிப்பது அரிதான ஒன்றாகும்.
ரம்ய கணபதி, ஆஞ்சநேயர், கல்யாண முருகன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவகிரகம் என எழிலுடன் அமைந்துள்ள சன்னதிகள் கோயிலுக்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாக உள்ளன.

தொடர்புடைய பதிவுகள்
சுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்...

https://www.youtube.com/watch?v=R-HP3fbzveQ




Jagatsukh Gayatri Mandir, Kullu, Himachal Pradesh



very nice
ReplyDeleteஅற்புதமான படங்கள் அம்மா... சிறப்பான பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteகாயத்ரி மந்திரத்தின் மகத்துவத்தினை விளக்கமாக அறியத் தந்த சிறப்பான பதிவு.. வாழ்க நலம்..
ReplyDeleteஅழகான படங்கள்,சிறப்பான பகிர்வு.நன்றி.
ReplyDeleteஉங்களுக்கு மட்டும் பதிவுகளுக்கு பொருத்தமான படங்கள் எங்கிருந்துதான் கிடைக்குமோ! வழக்கம் போல மிக அழகு.
ReplyDeleteமனதிற்கு நிறைவளிக்கும் தெய்வீக எழுத்தும் படங்களும் எப்படித்தான் உங்களுக்குக் கைவருகின்றனவோ! மிக்க நன்றி.
ReplyDelete’காருண்யம் மிக்க ஸ்ரீ காயத்ரி தேவி கோயில்’ பற்றிய இன்றைய தங்களின் பதிவு மிகவும் அருமையாக உள்ளது. பல்வேறு நல்ல பயனுள்ள விஷயங்களை உள்ளடக்கியதாகவும் உள்ளது.
ReplyDelete>>>>>
படங்கள் யாவும் வழக்கம்போல அருமை.
ReplyDelete>>>>>
இசைக்குயில் லதா மங்கேஷ்வர் அவர்களின் குரலில் மந்த்ர உச்சரிப்புகள் இனிமை.
ReplyDelete>>>>>
108, 1008 போல ஜபிக்க நேரமில்லாவிட்டாலும் ஒவ்வொரு வேளையும் 32 தடவைகள் வீதம் தினமும் மூன்று வேளைகள் ஜபிப்பதும் விசேஷமே.
ReplyDelete>>>>>
கோவை ... வேடப்பட்டியில் அமைந்துள்ள இந்த விசேஷ ஆலயத்தாலும், அங்கு தொடர்ந்து நடைபெறும் தியான மந்த்ர ஒலி அதிர்வுகளாலும், கோவை மாவட்டம் முழுவதற்குமே, நன்மை உண்டாகும் என்பதில் சந்தேகமே இல்லை..
ReplyDelete>>>>>
பதிவின் படங்களின் மூலம் அபூர்வமானதொரு ஆலய தரிஸனம் செய்து வைத்துள்ளதற்கு நன்றிகள், பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
ReplyDelete;) 1288 ;)
oooooo
ஐந்து முகங்கள் கொண்ட காயத்ரி சிலை அற்புதம்!
ReplyDeleteநான் இன்றைக்கு தான் காயத்ரி தேவியின் திருவுருவத்தையே பார்க்கிறேன். மிக்க நன்றி அம்மா.
ReplyDeleteபடங்கள் அனைத்தும் மிக அருமை.
ReplyDeleteபதிவில் சொன்ன விஷயங்களும் தான்.
என் அன்பு ராஜராஜேஸ்வரி புகைப்படங்களோடு காயத்ரி தேவியின் தரிசனம் மிக அருமை. மாமனார் எப்பொழுதும் மனசில் காயத்ரி சொல்லிக் கொண்டே இருப்பார். கைவிரல்கள் அசைவதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்..வேத மாதா எல்லோரையும் காக்கட்டும்.
ReplyDeleteஅழகிய படங்கள் அருமையான பதிவு.
ReplyDeleteதங்கள் உதவியால் இன்று காயத்ரி தேவியின் தரிசனம் முதல் முதலாக...
ReplyDelete