ஈரோட்டில் ஒரு தெருவெங்கும் வேப்பிலைத் தோரணங்களாக கண்களைக் கவர்ந்தது..விசாரித்தோம்..
அலங்காரமாக தென்னை ஓலைகளாலும், வாழைப் பந்தல்களாலும் அந்தத்தெருமுனையில் அமைத்திருந்த மாரியம்மன் கோவிலுக்கு அழைத்துச்சென்று கூழ் குடிக்கிறீர்களா என உபசரித்தார்கள்..
பக்கத்தில் அம்மனில் எதிரில் ஆடுபலியிட்ட தடயம் ..எனவே தயக்கம் ..!
அரிசி, கம்பு .ராகி மூன்றையும் அரைத்து மாவாக்கி கூழ்காய்ச்சி கொத்துமல்லி இலைகள், மாங்காய்த்துண்டுகள் , வெள்ளரிக்காய் துண்டுகள் சேர்த்து வைத்திருந்தார்கள்.. உப்புப் போடமாட்டார்களாம்...
மற்றொரு பெரிய பாத்திரத்தில் சர்க்கரைப்பொங்கல் இருந்தது..
அந்தத்தெருவில் இருக்கும் வீடுகளில் இருந்து ஒவ்வொரு வீட்டுக்கும்
600 ரூபாய் இந்த கொண்டாட்டத்திற்கு வசூலிப்பார்களாம்..
அந்தத்தெருவே திரண்டு மேளதாளத்துடன் காவிரி ஆற்றிற்குச்சென்று ஒரு கல்லை அம்மனாக பாவித்து பேழையில் வைத்து எடுத்து வருவார்களாம்..
அரிசி மாவில் அம்மனின் உருவம் செய்து சந்தனம் பூசி ,
மஞ்சள் குங்குமம் இட்டு அம்மனாக்குகிறார்கள்..
காவிரி ஆற்றிலிருந்து பக்தியுடன் தீர்த்தம் எடுத்து வந்த ஒரு கும்பத்தை பூச்சரங்கள் சுற்றி அம்மனுக்கு அருகில் வைத்து தங்கள் பிரார்த்தனைகளைவேண்டிக்கொள்க்கிறார்கள்..
பஞ்சலோகத்தால் ஆன அம்மன் சிலையையையும் அழகாக அலங்கரித்து வைத்திருந்தார்கள்..
அம்மை நோய் தாக்காமலிருக்கவும் , தொழில் வியாபார அபிவிருத்திக்காகவும் , உடல் நல மேம்பாடுகளுக்காகவும் மற்ற பிரார்த்தனைகளுக்காகவும் தெருமக்கள் கூடியிருந்து சந்துபொங்கல் என்று கோலகலமாக கொண்டாடுகிறார்கள்..
வெயில் காலங்களில் இல்லங்களில் வெப்பத்தின் தாக்கம்அதிகமாக இருக்கும் என்கிற காரணத்தால் தெருவெங்கும் இடை வெளிவிடாமல் வேப்பிலைத்தோரணங்களால் குளிர்ச்சிப்படுத்தி மக்களை தற்காலிகமாக அமைக்கப்பட்ட வாழைக்குலைகள் , தென்னை ஓலை, மாவிலை ,வேப்பிலைதோரணங்கள் கொண்ட இடத்தில் குழுமச்செய்து கூழ் வார்த்து குளிர்ச்சிப்படுத்தும் பண்பாட்டு நிகழ்வாகவும் இந்த சந்துப்பொங்கல் என்கிற நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருக்கலாம்..
ஒரே தெருவைச்சேர்ந்தவர்களின் ஒற்றுமையும் பலப்படுமே..!
அம்மனின் முன்னிலையில் கடாவெட்டு நிகழ்ந்த ரத்தத்தடயம் இருந்தது..அறுநூறு ரூபாய் கட்டியவர்களுக்கு ஒரு கிலோ ஆட்டுக்கறியாம்..
மற்றபடி பணம் கொடுத்தவர் கொடுக்காதவர் என்கிற பேதம்பார்க்காமல் அந்த தெருவாசிகள் அனைவருக்கும் பொங்கலும் , கூழும் விநியோகிப்பார்களாம்..!
விழா முடிந்த பின் அலங்கரித்த அம்மனை பிரியாவிடை கொடுத்து மேளதாளத்துடன் கூடி மீண்டும் ஆற்றில் விட்டுவிட்டு வருவார்களாம் .
அப்புறம் அடுத்த சித்திரை மாததத்தில் கொண்டாட அழைத்து வருவார்களாம்..
அங்கே ஆப்பிரிக்காவிற்கும் ,சவூதி அரேபியாவுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் துணிவகைகளை பார்வையிட்டோம் ..
இருபக்கமும் அழகானபார்டர்களுடன் உயரம் குறைந்த சேலைகள் காட்சிப்பட்டன..ஆப்பிரிக்கப்பெண்களின் சாரங் என்னும் உடை அது..
அரேபியாவிலிருந்து ரெகுலராக ஆர்டர் வருகிறதாம்.. முஸ்லீம்கள் தொழுகையின் போது விரிப்பாவும் , தோளில் ,தலையில் , இடுப்பில் அணிய என்று எட்டு துண்டு துணிகள் செட்டாக தேவைப்படுமாம்.. பத்து நாட்கள் நமாஸ் செய்யப் பயன்படுத்திவிட்டு நெருப்பில் போட்டு விடுவார்களாம்..
அந்த எட்டு துண்டுகள் கொண்ட செட் அவர்கள் செலாவணியில் ஒருடாலர் மதிப்பீடு என்றால் அதைத் துவைத்து சலவை செய்ய தேவைப்படும் தண்ணீரின் மதிப்பு இரண்டு டாலர்களாம்..
அங்கே தண்ணீர் பெட்ரேலைவிட மதிப்பு மிகுந்ததாயிற்றே.. எனவே துணிவகைகள் யூஸ் அண்ட் த்ரோ தானாம்.. துணி வியாபாரிகளுக்கும் ரெகுலராக ஆர்டர் கிடைக்க காரணமாவும் அமைகிறது..
என்று பல நிகழ்வுகளை இனிமையாக பகிர்ந்துகொண்டார்கள்..!
என்று பல நிகழ்வுகளை இனிமையாக பகிர்ந்துகொண்டார்கள்..!
சமயபுர நாயகியே...பாடல்..
வணக்கம்
ReplyDeleteஅம்மா
நல்ல கருத்துக்கள் நிறைந்தவை.. படங்களும் மிக அழகு வாழ்த்துக்கள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தெருவே கொண்டாடும்
ReplyDeleteதிருவிழா !
வெப்பத்தைத் தணிக்க
வேப்பிலைத் தோரணங்கள் !
ஊரே கொண்டாடியிருந்தால்
எப்படி இருக்கும் ?
சிறப்பான பதிவு !
வாழ்த்துக்கள் !
தெருமக்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடும் திருவிழா.....
ReplyDeleteசெய்திகளும் படங்களும் மிக அருமை.
இனிமையான நினைவுகளையும், வெய்யில் காலத்தில் தற்காப்புக்காக கொண்டாடும் மக்களின் பாரம்பரிய விழாவினையும், அழகாக பகிர்வாக்கியமை அருமை. மிக அழகழகான படங்கள். நன்றி.
ReplyDeleteஇனிமையான நிகழ்வுகள்தான்! சகோதரி! நல்லதொரு பகிர்வு! ஒன்றே ஒன்றுதான் எங்களுக்குப் புரிபடுவதில்லை இது போன்ற கோயில் திருவிழாக்களில்! என்னவென்றால் உயிர்பலி. உலகைக் காக்கும் அந்த அன்னைதானே எல்லா உயிர்களையும் படைத்தவர்! அவர்தானே எல்லா உயிர்களுக்கும் அன்னையாக விளங்குபவர்! அந்த அன்னை தான் படைத்த உயிர் ஒன்று, அது ஐந்தறிவு படைத்த உயிராயினும், தன் முன்னே தனக்காக வெட்டப்படுவதை ஏற்றுக் கொள்வாரா? எப்படி? இது மனிதானால் உருவாக்கப்பட்ட ஒன்றுதானே!? இதுஎங்கள் தாழ்மையான கருத்து.
ReplyDeleteநாங்கள் சொல்லுவது தவறு என்றால் எங்களை மன்னித்து விடுங்கள் சகோதரி!
உயிர்ப்பலி கூடாதென்பதில் உடன்பாடுதான்..
Deleteஅது உயிர்ப்பலி கொடுத்த இடம் என்பது தெரிந்திருந்திருந்தால் காரைவிட்டு இறங்கியே இருக்கமாட்டோம்..
வேப்பிலைத்தோரணங்கள் , தென்னை , மா, வாழைப்பந்தல் அம்மன் எனப்பார்த்து இறங்கி வியப்புடன் விசாரிக்கவும் தகவல் தெரியவந்தது..
அவர்களும் எங்கள் அதிர்ச்சியைப்பார்த்து கஞ்சி குடிக்க வற்புறுத்தவில்லை..
ஒரு படத்தில் கூட விஜய் ஆடுபலியிடுதல் ஆண்டவன் படைத்த உயிரைப்பறிப்ப்பதை கடவுள் விரும்பமாட்டார் என அஹிம்சை உபதேசம் செய்து ஆட்டை விடுவித்துவிட்டு விஜயை பலியிட தயாராகும் காட்சி நினைவு வந்து சொன்ன தகவல்களை கேட்டுக்கொண்டு திரும்பிவிட்டோம்..
அருமையான எளிமையான பதிவு.
ReplyDeleteநான: உடனே எனது ஊரின் முத்துமாரியம்மன் கோவில்
சித்திரைக் கஞ்சி ஊற்றும்
போரடிக்கும் (தேங்காய் கொண்டு தேங்காயை உடைக்கும்)
போரடித்தல் திருவிழாவிற்குச் சென்றுவிட்டேன்
படங்களும் நன்று.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
600 ரூபாய்க்கு ஒரு கிலொ பிரியாணி கிடைக்காவிட்டால் எப்படி? ஏதோ காரணமாக ஏழைகள் சிலர் உப்பில்லாத கூழ் குடிக்கக் கிடைக்கிறதே.
ReplyDeleteதிருவிழாவுக்குத்தானே ..அதற்கு மேல் விருப்பமிருப்பவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் தரலாமாம்..
Deleteகொடுக்காமலும் இருக்கலாமாம்..
தகவல்கள் எல்லாம் இதுவரை கேள்விப்படாதவை..
ஒரு சிறிய சந்துதான்.. வெளிநாட்டு ஏற்றுமதியில் டாலர்கள் பற்றித்தான் அதிகம் பேசுகிறார்கள்..
சித்திரை பொங்கல் பகிர்வு அருமை! கிராமங்களில் ஜாத்திரை திருவிழா பாணியில் இருக்கிறது! நன்றி!
ReplyDeleteசித்திரை பொங்கல் பகிர்வு அருமை! கிராமங்களில் ஜாத்திரை திருவிழா பாணியில் இருக்கிறது! நன்றி!
ReplyDeleteஇன்று காலையில் முதன் முதலாக எவன் முகத்தில் விழித்தேனோ ..... எனக்கு நேரம் சரியில்லை.
ReplyDeleteஅதாவது எதற்குமே நேரம் கிடைக்கவில்லை. மாத்தி மாத்தி என்னிடம் பேச வேண்டி ஏகப்பட்ட விருந்தாளிகள் அடுத்தடுத்து வந்த மயமாக உள்ளனர்.
என் வலைப்பதிவிலோ ஏகப்பட்ட வேலைகள் தேங்கி விட்டன.
அதனால்வேறு, இங்கு வர தாமதம் ஆகிவிட்டது.
>>>>>
பின்னூட்டங்களை மட்டும் முதலில் படித்தேன். அதனாலேயே பதிவினைப்படிக்க வேண்டும் என்றே எனக்குத் தோன்றவில்லை.
ReplyDeleteமனதுக்கு எதுவும் பிடிக்கவும் இல்லை. ;(
நாம் போகவே கூடாத இடங்களுக்கெல்லாம் தொடர்ந்து தாங்கள் போய் வருகிறீர்கள் என்பதையும் புரிந்துகொண்டேன். ;(((((
>>>>>
தலைப்பை மட்டுமே படித்தேன்.
ReplyDeleteவைகாசி பிறந்து விட்டதே இன்னுமா சித்திரை என நினைத்துக்கொண்டேன்.
>>>>>
படங்களை எல்லாம் ரஸித்துப்பார்த்தேன்.
ReplyDelete>>>>>
சமயபுரம் மஹமாயியின் அழகான காணொளி கண்டேன். அதில் ஓர் தம்பதி மாலை மாற்றுவதையும் கண்டேன்.
ReplyDeleteபாடலை மட்டும் ஏனோ என்னால் கேட்க முடியவில்லை.
SOUND ஏதும் வரவே இல்லை. SPEAKER - MUTE - SYSTEMS எல்லாம் சரியாக இருந்தும் ஏனோ என்னால் கேட்கவே முடியவில்லை.
சரி அதற்கும் இன்று பிராப்தம் இல்லை என நினைத்துக்கொண்டு பேசாமல் விட்டு விட்டேன்.
>>>>>
எனினும் தங்களின் வெற்றிகரமான 1278 வது பதிவுக்கு என் பாராட்டுக்கள்.
ReplyDeleteoo oo oo
படங்கள் அற்புதம் அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteபடங்கள் அற்புதம் அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteசமயத்தில் காக்ககும் சமயபுர மாரியம்மன் பாடல் பகிவுக்கு நன்றி.
ReplyDeleteசித்திரை தெரு பொங்கல் அருமை.
நாங்கள் சிவகாசியில் இருக்கும் போது இப்படித்தான் ஒவ்வொரு தெருவிலும் அம்மனுக்கு பொங்கல் வைப்பார்கள். ஆனால் உயிர்பலி கிடையாது.
படங்கள் எல்லாம் அழகு.