Sunday, May 11, 2014

நவநிதிகள் வர்ஷிக்கும் ரத்னமங்கலம்ஸ்ரீலக்ஷ்மிகுபேரர்











Shree Arakasu Amman Temple [Rathinamangalam]



சென்னை வண்டலூரை அடுத்து கேளம்பாக்கம் செல்கிற வழியில் ரத்தினமங்கலத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர்  கோயில்தான் குபேரனுக்கு என்று தனிப்பட்ட முறையில் அமைக்கப் பட்ட உலகின் முதல் கோயிலாகத் திகழ்கிறது.
    
 வடக்கு திசையே குபேரனுக்குரிய திசை என்பதாலேயே 
ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் ஆலயம் வடக்கு நோக்கிய ஸ்தலமாக இருக்கிறது.... 

கோயிலுக்குள் ஷோடஷ கணபதி ஆலயத்தில் 
16 கணபதிகள் அருள்பாலிக்கிறார்கள்.
   
 லிங்க வடிவத்தில்  இருக்கும் ஈசான குபேரர் வழிபடும் போது, 
சிவனின் அருள் விரைவில் கிடைக்கும் என்பது நம்பிக்கை... 

 நவக்கிரகங்கள் வழிபட்டு, அக்னி மூலையில் ஸ்தலவிருட்சமான வில்வ மரத்திஞ் கீழ் உள்ள  அக்னி லிங்கத்திற்கு சான தீபம் ஏற்றப் படுவது புனிதமாகவும்  வேண்டுதலுக்கு வெற்றியாகவும் கருதப் படுகிறது. 

 மகாலக்ஷ்மியின் அருள் கிடைக்கவும், கடன்கள் தீரவும்  தீபம் ஏற்றப்படுகிறது.  
குபேரனிடம் கடன் வாங்கிய வெங்கடாசலபதி திருத்தலம் உள்ளது. 
இவர் தனது திருமணத்திற்கு குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், 
இந்த கலியுகம் முடியும்  போதுதான்  அசல் கட்டி முடியும் என்று 
குபேரன் கூறியதாகவும் ஐதீகம்.
   
 காவல்காக்கும் ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் சன்னதி இருக்கிறது. 

மொத்தம் 64 வகை பைரவர்களில்  தங்கம் போன்ற செல்வங்கள் கொடுத்து அதற்கு காவல்காக்கும் தெய்வமாகவும். குபேரனின் காவல் தெய்வமாக இங்கு வீற்றிருக்கிறார். 

சனி பகவானால் ஏதும் பிரச்சனைகள் ஏற்பட்டால் இவருக்கு பூசணி தீபம், அல்லது மிளகு மூட்டை தீபம் ஏற்றி வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் தொல்லைகள் மாறி நன்மைகள் கிட்டுமாம். 

இவரை வழிபட உகந்த நேரம், ராகுகாலம், எமகண்டம், 
அஷ்டமி, நவமி தினங்கள்.
    
 கன்னி  மூலையில் அருள்பாலிக்கும் பிரம்மா சரஸ்வதி தம்பதியருக்கு  மஞ்சள் காப்பு நெஞ்சில் சாத்தி வழிபாட்டு அந்த மஞ்சளை தினம் நெற்றியில் இட்டுவர  தலை எழுத்து மிக நன்றாக இருக்கும் என்பது நம்பிக்கை..!. 

 ஹேப்பி மேன் என்று சொல்லப்படும் சீன வாஸ்து பொம்மையான லாபிங் புப்தா. இவரை கிச்சு கிச்சு மூட்டுவது போல வயிற்றில் தடவினால் அவர் மகிழ்ச்சியில் சிரிப்பார், நமக்கும் தினம் மகிழ்ச்சியை அள்ளித் தருவார் என்பது சீன மக்களின் ஐதீகம்.
     
குபேரனை சீன மக்கள் லாபிங் புத்தாவாக வழிபடுகிறார்கள் என்பதை உணர்த்தவே   லாபிங் புத்தா பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாம்.. 

 18 படிகள் கொண்ட சன்னதியில் ஐயப்பன். அறுபடை வீடு கொண்ட முருகன் அனைவரையும் தரிசித்து விட்டு  குபேரன் கருவறை வணங்கலாம்..
   
குபேரன் சன்னதி: கண்களைக் கொள்ளை கொள்ளும் விதமாக பணமாலையோடு லக்ஷ்மி. 
அதற்கும் சற்று கீழே குபேரன் தனது மனைவி சித்ரலேகாவுடன் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார் 
செல்வத்தை தரும் மகாலக்ஷ்மி ஆனால் நிலையாகத் 
தங்கவிடமாட்டார் என்பதும் ஐதீகம். 

ஆனால் லக்ஷ்மியின் அருளால் பெற்ற செல்வத்தை 
குபேரனை வழிபட்டுத் தக்கவைத்துக் கொள்ளலாம். 

குபேரன் மடியில் கீரிப்பிள்ளை வைத்திருப்பார், நோயற்ற வாழ்வையும், குறைவற்ற செல்வத்தையும் தருபவர் குபேரன் என்பது பொருள்.
     
குபேரனுக்கு பூஜை செய்யும் போது, நாணயங்களால் ஓங்கி சப்தம் எழுப்பும் படி குபேர மந்திரங்களை கூறி, வழிபடவேண்டுமாம். 

காரணம் அவர்களிடம் இருக்கும் செல்வத்தை விட  நாணயங்கள் மூலம் நாம் அர்ச்சனை செய்யும் ஒலி கேட்டால் மிக சீக்கிரம் நம் வேண்டுதலுக்கு செவி சாய்ப்பார்கள் என்பது நம்பிக்கை...
     
நவநிதி அதிபதி என்று சொல்லப்படும் குபேரனின் எதிர்புறம் மச்சநிதியும், கச்சபம் நிதியும் வளர்க்கிறார்கள். அதாவது, மீனும் ஆமையும்.

குபேரர் சங்கநிதி, பதும நிதி எனப்படும் தேவர் காலத்து பணத்திற்கும், காமதேனு, கற்பக விருட்சம் என்று சொல்லக் கூடிய கற்பக விருட்ச மரத்துக்கும், நீலநிதி என்று சொல்லக் கூடிய கடல் செல்வத்துக்கும், நந்தநிதி, முகுந்த நிதி சுக்கிரன் என்று  சொல்லக் கூடிய அதிர்ஷ்ட தேவதைக்கும் அதிபதியாக இருக்கிறாராம் குபேரன்.
     
 வழிபட்டு வருபர் இல்லங்களில் செல்வம் கொழிக்கும், 
உள்ளங்களில் மகிழ்ச்சி திளைக்கும்.

சித்ரலேகா. இவளை சித்ராபவுர்ணமி அன்று நெய் தீபமேற்றி 
வணங்க அல்லவை அகன்று நல்லவை பெருகும்.

தேவி உபாசனையால் சகல சௌபாக்கியங்களைப் பெற்ற குபேரன் யோக சாதனை செய்ய நேரமில்லாதிருப்பதனால் குண்டலினி சக்தியை உயர்த்த எந்த யோகமும் செய்வதில்லை. 

பாம்பு, கீரியைக் கண்டால் படமெடுக்கும். எனவே, குபேரனின் கையில் உள்ள கீரியைப் பார்த்து குபேரனின் குண்டலினி சக்தி படிப்படியாக உயரும் என்பதை உணர்த்தவே  கையில் கீரிப்பிள்ளை. 

கீரிபிள்ளை மிகக் கொடிய விஷத்தன்மை வாய்ந்த ராஜநாகத்தின் விஷத்தை தாங்கக் கூடிய அபரிதமான எதிர்பாற்றலை பெற்று விளங்குவதே அதனுடைய தலையாய பாதுகாப்பு அரணாகவும் மற்றவற்றிலிருந்து வேறுபட்ட விதிவிலக்கான அம்சமும் ஆகும். 

குபேரபட்டினமான அழகாபுரியில் அத்தாணி மண்டபத்தில் 
தாமரை மலர் மெத்தை, மீனாசனம் ஆகியவைகளின் மீது அமர்ந்து ஒரு கை அபயமுத்திரை, கிரீடம் முதலிய தங்க ஆபரணங்களுடன் முத்துக் குடையின் கீழ் சிம்மாசனத்தில் தனது தர்ம பத்தினியான யட்சியுடன் சேவை சாதிக்கிறார் குபேரன். சிவந்த மேனியும் குள்ளமான உருவமும், பெரிய வயிறும் உடையவராக குபேரன் சித்தரிக்கப்படுகிறார்

நவநிதிகளுக்கும் அதிபதி குபேரன். இவற்றுள் சங்க நிதி மற்றும் பத்ம நிதி இரண்டும் கூடிக்கொண்டே இருக்கும் நிதிகள் இந்த சங்க நிதி மற்றும் பதும நிதிகளின் அதிபதியான தெய்வ மகளீரை சங்க லட்சுமி, பதும லட்சுமி  இருவரும் குபேரனின் மனைவிமார்கள் இவர்களிடம் குபேரன் செல்வத்தினை கொடுத்து வைத்திருப்பதாகவும் நம்பிக்கை .

நர வாகனம் என்னும் மனிதன் மேல் ஆரோகணித்துச் செல்பவன். 
 மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் அமர்ந்து செல்வதில் பிரியமுள்ளவன். 

பூமியில் உள்ள சகல ஜீவராசிகள் செய்யும் காரியங்களைக் கணக்கு எழுத சிவபெருமான் . ஒரு சித்திரம் வரைந்து அதற்கு உயிரூட்ட, அதிலிருந்து தோன்றியவர் சித்திர குப்தர்! காமதேனுவின் புத்திரனாகப் பிறக்க சிவன் அருள்புரிந்தார்.

அவரிடம் மனிதர், தேவர் செயல்களைப் பற்றிக் கணக்கெழுதும் பணியை ஒப்படைத்தார். சித்திர புத்திரனாகப் பிறந்தாலும் சித்திர குப்தன் என்ற பெயரே நிலைத்து விட்டது. சித்திரம் என்றால் ஆச்சர்யமான என்று பொருள். குப்தம் என்றால் ரகசியம் என்று பொருள். சித்திர குப்தரின் கணக்குகள் மிகவும் ஆச்சர்யமான முறையில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன .

சித்திர குப்தர் யமதர்மராஜனின் முன்னிலையில் இறந்தவர்களின் பாவ, புண்ணியங்களைத் தன்னுடைய ஏட்டிலிருந்து படிக்கிறார் என்பதும், தீவினை, நல்வினைக் கேற்ப நரக, சொர்க்க வாழ்வை ஜீவ ராசிகள் அடைகிறார்கள் என்பதும்  நம்பிக்கை.

நவகிரகங்களில் ஒன்றான கேதுவுக்கு, இந்தச் சித்திர குப்தர் அதிதேவதை என்றும், கேது புக்தி, கேது தசைகளால் சங்கடப்படுபவர்கள், சித்திர குப்தரை வழிபட வேண்டும் என்றும் தென் இந்தியாவிலேயே சித்திர குப்தருக்காகக் கட்டப்பட்ட ஒரே கோயிலான காஞ்சிபுரத்திலுள்ள நெல்லுக்காரன் தெருவில் இருக்கும் சித்திர குப்தர் கோயிலில் எழுதப்பட்டுள்ளது.

 சித்திரா பௌர்ணமியன்று சித்திர குப்தரை வேண்டி, உப்பில்லாமல் உணவருந்தி நோன்பு இருப்பது சிறப்பு..!

பெண்கள் வணங்கும்போது ""உன்னோடு பிறக்கவில்லை, உன் மனேவியோடு பிறந்தவர் நாங்கள்; எங்கள் பாவங்களை அழித்து விடு'' என்று வேண்டுவார்களாம். 
"தலைமுடிக்கு மிஞ்சின கருப்பில்லை; 
மச்சினிக்கு மிஞ்சின உறவில்லை" என்று சித்திர குப்தனும் மன்னித்தருளுவார் என்பது நம்பிக்கை!

சித்திர குப்தனின் மனைவி பெயர் பிரபாவதி என்கிற கர்ணிகை ஆகும்.







18 comments:

  1. சிவாலயங்களில் குபேரன் பரிவார மூர்த்தி தான்..
    வைரவ மூர்த்தி தனிப்பெரும் அதிகாரம் படைத்தவர்.
    சர்வேஸ்வர ஸ்வரூபம். சகல புவனங்களுக்கும் அதிபதி.
    அத்தகைய வைரவர் இங்கே - குபேரனுக்கு காவலாளியா!..

    தனிப்பட்ட கோயில்களின் தகவல்.
    நன்றாக இருக்கின்றது..

    ReplyDelete
    Replies
    1. Bairavar can never become parivaram for kuberan.wrong pradishtai

      Delete
  2. அற்புதமான படங்களுடன் முதல் கோயிலின் தகவல் அனைத்திற்கும் நன்றி அம்மா... அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நல்லதொரு பகிர்வு! விளக்கங்கள் அருமை!

    ReplyDelete
  4. படங்களும் செய்திகளும் அருமை. அதிகமான செய்திகளைத் தந்துள்ள விதம் சிறப்பாக உள்ளது.

    ReplyDelete
  5. அழகான படங்களுடன் அற்புதமான விளக்கங்கள். மகிழ்ச்சி. [1271]

    ReplyDelete
  6. அன்னையர் தின இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. தலைமுடிக்கு மிஞ்சின கருப்பில்லை
    மச்சினிக்கு மிஞ்சின உறவில்லை.

    ஆஹா ! ;)))))

    எனக்கு மச்சினியே இல்லையே ;(((((
    நான் என்ன செய்ய ?

    கருகருவென மிக அடர்த்தியாகத்
    தலைமுடியாவது இருந்தது.

    இப்போ அதுவும் போச்சு ;(((((
    நான் என்ன செய்ய ?

    கட்டிக்கொடுத்த சோறும்
    சொல்லிக்கொடுத்த வார்த்தையும் போல
    எதுவுமே நிரந்தரமில்லை.

    >>>>>

    ReplyDelete
  8. கடைசியில் காட்டியுள்ள காணொளியில்
    பல்வேறு ஹோமங்கள் பார்க்க முடிந்தது.

    >>>>>

    ReplyDelete
  9. நீங்க எங்கிருந்தாலும் வாழ்க !

    எந்தப்பதிவுக்கெல்லாம் போனாலும் வாழ்க !!

    ooooo

    ReplyDelete
  10. ஸ்ரீலஷ்மிகுபேரரின் முதல் ஏழு படங்களும் மிக அருமை.அரைகாசு அம்மன் மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. தகவல்களும்,படங்களும் மிகச்சிறப்பாக‌ இருக்கு. பகிர்வுக்கு நன்றி.
    அன்னையர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. செல்வம் அல்லது சொத்து வேண்டும் என்று என்றும் எண்ணியது கிடையாது. அதனால்தானோ இந்தக் குபேரன் கதைகள் அதிகம் தெரியாது. உங்கள் பதிவு நிறையவே சொல்லிப் போகிறது. பகிர்வுக்கு நன்றி, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. உலகமே பணத்தைத் தேடி... தக்க வழிபாட்டை சுட்டியிருக்கிறீர்கள்.

    பெண்களின் பிரார்த்தனையில் குபேரருக்கு மச்சினி பாவனை செய்தி வியப்பு.

    ReplyDelete
  13. குபேரன் தகவல்கள் நன்று.
    இனிய படங்கள்.
    அன்பான அன்னையர் தின வாழ்த்து.ம்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  14. குபேரன் கதையும், சித்திரகுப்தன் கதையும் தெரிந்து கொண்டேன். புகைப்படமும், காணொளியும் பதிவுக்கு சிறப்பு சேர்த்தன.
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. பார்த்தாலே பக்திப் பரவசமாகும் அழகிய படங்கள்.. வாழ்த்துக்கள் ராஜேஸ்வரி அக்கா. நலமாக இருக்கிறீங்களோ?.

    ReplyDelete
  16. பக்தி மனம் கமழும் தங்கள் வலைப்பக்கம் ஐந்து லெட்சம் ஹிட்ஸ் பெற்றிருப்பது வியப்பேதும் இல்லை

    ReplyDelete
  17. குபேரன் மற்றும் சித்திரகுப்தன் கதைகளை தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி அம்மா.

    ReplyDelete