அசுரன் ஒருவனை வெல்வதற்காக சக்திதேவியின் அம்சமான
அன்னை கௌமாரி வைகை நதியின் கரையின் அடர்ந்த காட்டுப் பகுதியில் சிவலிங்கம் செய்து அதன்முன் தவமியற்றி வந்தார்.
இதையறிந்த அசுரன் கௌமாரியை கடத்திச் செல்ல முயன்றதைத்
தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த கௌமாரி
அருகிலிருந்த அருகம்புல்லை எடுத்து அசுரனை நோக்கி வீசினாள்.
தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த கௌமாரி
அருகிலிருந்த அருகம்புல்லை எடுத்து அசுரனை நோக்கி வீசினாள்.
அந்த அருகம்புல் முக்கழுப்படையாக உருவெடுத்து அசுரனை இரண்டாகப் பிளந்து கொன்றதைப் பார்த்த தேவர்கள் வானிலிருந்து மலர்களைத் தூவினர்.
அன்னை பூஜித்து வந்த சிவலிங்கத்திற்கு "திருக்கண்ணீசுவரர்"
எனப் பெயரிட்டாள்.
எனப் பெயரிட்டாள்.
மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டிய நாட்டின் மன்னன் வீரபாண்டியன் தனது ஊழ்வினைகளால் இரண்டு கண்களின் பார்வையை இழந்தான்.
பார்வை வேண்டி தவம் மேற்கொண்ட அரசன் முன்பு, ஈசன் தோன்றி. ‘தென்பாண்டி சீமையில் முல்லையாறு பாயும் ஊரில் கண்ணுடைய தேவி தவம் கொண்டுள்ளாள். அம்மன் அமர்ந்துள்ள திசையில் எனக்கு கோயில் எழுப்பு, தேவி மனம் மகிழ்ந்து உனக்கு ஒரு கண் பார்வை வழங்குவாள்.
மற்றொரு கண் பார்வையை நான் வழங்குகிறேன்’ என்று கூறி மறைந்தார்.
அதுபோன்றே ஈசனுக்கு மன்னன் வீரபாண்டியன் கோயில் எழுப்பி
கண் பார்வை பெற்றான்.
கண்ணீசுவரமுடையாருக்கு கற்கோயிலும், கௌமாரியம்மனுக்கு சிறிய கோயில் ஒன்றையும் அமைத்து வழிபாடு செய்தான்
ஈசனுக்கு கோயில் எழுப்பி கண் பார்வை பெற்ற மன்னன் வீரபாண்டியன் பெயரே காலப்போக்கில் வீரபாண்டி என ஊர் பெயரானது.
வீரபாண்டியில் உள்ள கண்ணீஸ்வரமுடையார் கோயில்
கௌமாரி பார்க்கும் திசையில் அமைந்துள்ளது.
கௌமாரி பார்க்கும் திசையில் அமைந்துள்ளது.
பாண்டிய மன்னனுக்குக் கண் பார்வை தந்த இந்தக் கோயிலில் வணங்கிச் செல்பவர்களுக்கு அம்மை மற்றும் கோடைக்கால அனைத்து
வெப்ப நோய்களும் நீங்கி விடும் என்பது நம்பிக்கை ...
வெப்ப நோய்களும் நீங்கி விடும் என்பது நம்பிக்கை ...
சித்திரை மாதக் கடைசி செவ்வாய்க் கிழமை துவங்கி வைகாசி மாத முதல் செவ்வாய்க் கிழமை வரையிலான எட்டு நாட்கள்
சிறப்பு சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது
சித்திரைத் திருவிழாவின் போது மட்டும் 24 மணி நேரமும் கோயிலில் வழிபாடு நடத்தப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பான திருவிழா வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ...
கோயிலின் தீர்த்தமாகக் கோயிலுக்கு அருகே ஓடும்
முல்லை நதியின் நீர் பயன்படுத்தப்படுகிறது.
கோயில் கோபுரம் இந்திய சுதந்திரமடைந்த காலத்தில் கட்டப்பட்டிருப்பதால் கோபுரத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகளான மகாத்மா காந்தி, கஸ்தூரிபா காந்தி, ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோரது உருவச் சிலைகள் கோபுரம் அமைக்கப்பட்ட போது இடம் பெற்றுள்ளது.
தேனி மாவட்டம் முல்லையாறு ஓடும் பகுதியில் அமைந்துள்ள வீரபாண்டி. கொலுவீற்றிருக்கும் கௌமாரியம்மன் தேனி மாவட்ட மக்களின்
காவல் தெய்வமாக விளங்குகிறாள்.
பசு ஒன்று நடந்து சென்ற போது அதன் கால் ஒரு கல் மீது இடற அந்த கல்லிலிருந்து ரத்தம் பீறிட்டது.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, தினமும் அந்தப் பசு நேராக அந்த கல் இருக்கும் இடம் தேடி வருவதை வாடிக்கையாக கொண்டது.
கன்றுக்குக்கூட பால் தராமல் பசு தினமும் எங்கே செல்கிறது என்று பார்த்தபோது, மடியிலிருந்து பால் தானாக கறந்து, கல்லின் மீது பொழிய, அவ்வளவு பாலையும் கல் உறிஞ்சிக் கொண்டிருந்தது.
பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அம்மன், ‘நான் கௌமாரி. எனக்கு அந்த இடத்தில் கோயில் எழுப்பு’ என்று கூறியதன் பேரில் வீரபாண்டியில் கோயில் எழுப்பப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
கோயிலில் சுயம்புவாக அம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கிறாள்...
சித்திரை கடைசியில் துவங்கி 8 நாட்கள் நடக்கும் திருவிழாவில்
முல்லையாற்றங் கரையில், அருள் இறக்கி மேளதாளத்துடன் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது மெய் சிலிர்க்க வைக்கும்.
பால், பன்னீர், தேன் உள்ளிட்ட பலவகை அபிஷேகங்கள் நடக்கும். பக்தர்கள் 22 நாட்கள் விரதமிருந்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.
வீரபாண்டி கௌமாரி வினை தீர்க்கும் வீரபாண்டி மாரி என்றே அழைக்கப்படுகிறார்.
குழந்தை வரம், திருமண யோகம், நோய்களுக்கு நிவாரணம், வேலைவாய்ப்பு என பலவற்றுக்கும் இங்கு வந்து வேண்டி. வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறுவதாகவும் பரவசமடைகின்றனர்.
கௌமாரி அம்மனிடம் நேர்த்திக் கடனாக வேண்டிக் கொண்டவர்கள் அக்கினிச் சட்டி எடுத்து ஆயிரம் கண் பானை சுமந்தும் மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்கா.
சிலர் நாக்கில் அலகு குத்துதல் எனும் சிறிய வேலைக் குத்திக் கொண்டு அக்கினிச் சட்டி எடுக்கின்றனர்.
சித்திரைத் திருவிழாவின் போது அம்மன் அன்ன வாகனம், சிம்ம வாகனம், காமதேனு வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம் போன்றவற்றில் காட்சி அளிக்கிறார்.
அம்மை குணமாக வேண்டுவோர் சேற்றை உடலில் பூசி சேத்தாண்டி வேடம் பூண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
சித்திரைத்திருவிழா நெருங்கும் சமயத்தில், பக்தர் கனவில் தோன்றும் அம்மன், முக்கொம்புடன் கூடிய பால் வடியும் அத்திமரம் இருக்கும் திசையை காட்டுகிறது.
அதன்படி சென்று, அத்திமரத்தை கொண்டு வருகின்றனர்.
தேனி அருகே உள்ள அரண்மனைப்புத்தூர் தட்சிணாமூர்த்தி கோயில் அருகே இருந்த அத்திமரம் கொண்டு வரப்படுகிறது..!
முதலாவதாக அத்தி மரத்திற்கு வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். அதன்பின்னர் மேளதாளத்துடன் திருக்கோயிலுக்கு கொண்டு வருகின்றனர்.
முக்கொம்புடன் கூடிய பால்வடியும் அத்திமரத்தை கோயிலில்
கொடிக் கம்பமாக வைத்து வணங்குகின்றனர்சித்திரைத் திருவிழாவின் போது முல்லை ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்துச் சென்று அம்மன் கோயிலில் இருக்கும் முக்கொம்பிற்கு ஊற்றிவிட்டு அதன்பிறகு அம்மனை வழிபடுவது வழக்கம்..!
கொடிக் கம்பத்தை ஈஸ்வர மூர்த்தியாக வணங்குகின்றனர்.
திருவிழா நாட்களில் முல்லையாற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து கொடிக் கம்பத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர்.
தேனியில் இருந்து கம்பம் செல்லும் வழியில் 8வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்..
ஒருமுறை இந்தக் கோயிலுக்கு சென்று வந்துள்ளோம் அம்மா... திருவிழா சிறப்புகள் + படங்கள் அனைத்தும் அருமை அம்மா... நன்றி...
ReplyDeleteவீரபாண்டி ஸ்ரீ கௌமாரி அம்மனைப்பற்றி அழகான படங்களுடன் அறியத் தந்தமைக்கு நன்றி..
ReplyDeleteவீரபாண்டி ஸ்ரீகெளமாரி அம்மனின் வரலாறு, கோவில் சிறப்புகளை அழகான படங்களுடன் அருமையான பதிவு. நன்றி
ReplyDeleteவீரபாண்டி சித்திரைத் திருவிழாவினை ஆவலுடன் கண்டு களித்தோம்.
ReplyDelete>>>>>
படங்கள் எல்லாம் அழகோ அழகு.
ReplyDeleteகடைசியில் காட்டப்பட்டுள்ள படம் மிக அழகாக உள்ளது.
அது எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
Very Beautiful Coverage ! ;)
>>>>>
சொல்லியுள்ள கதைகள் கேட்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன,
ReplyDeleteவிளக்கங்கள் எல்லாமே அருமையாக உள்ளன.
>>>>>
கேட்ட வரம் அருளும் கெளமாரி அம்மனுக்கு எந்தன் வந்தனங்கள் / நமஸ்காரங்கள்.
ReplyDelete>>>>>
தேவலோக தரிசனத்தில் அம்பாளைப் பார்ப்பது நடுங்க வைக்கிறது.
ReplyDeleteஅனைத்துக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
ooooo
முதல் (குடும்பப்) படத்தில் முருகனைக் காணோமே என்று கவலை ஏற்பட்டது! :)))))))))))))))) படமும் பதிவும் அருமை.
ReplyDeleteதமிழகத்தில் பல கோவில்களில் சித்திரை திருவிழா நயக்கிறதென்று பல பதிவுக; மூலம் தெரிகிறதுஇந்தப் படங்களெல்லாம் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது. That is a 64 MILLION dollar question அது தெரிந்தால் மேடத்தின் பதிவுகளின் சூட்சுமம் தெரிந்து விடெம். ஸ்ரீ ராம் அந்தக் குடும்பப் படம் முருகன் பிறப்பதற்கு முன் எடுக்கப் பட்டது.....!!!!!!!
ReplyDeleteஅருமையான பதிவு ராஜி. வாழ்த்துகள். :)
ReplyDeleteவீரபாண்டி சித்திரைத் திருவிழா காட்சிகள் அருமை. சில ஆண்டுகளுக்கு முன் உறவினர் வீட்டு திருமணத்தை முன்னிட்டு வீரபாண்டி சிவன் கோயிலுக்கும், கௌமாரி அம்மன் கோயிலுக்கும் சென்று இருக்கிறேன். உங்கள் பதிவு அந்த நினைவுகளைக் கொணர்ந்தது. இரு தல புராணங்கள் தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteகௌமாரி - இதில் கௌ-விற்கு அர்த்தம் என்ன அம்மா
ReplyDeleteகௌமாரி - :பைரவி, இந்திராணி, மாகேஸ்வரி, நாராயணி, வராஹி, கௌமாரி, பிடாரி - என்ற இந்த ஸப்த மாதர்களில் மாதர்களுள் ஒருத்தி
Deleteபார்வதி : மாகாளி : காளி.
முருகனின் சக்தியான கௌமாரி - ஸ்கந்த மாதா - குமாரரூபிணி - முருகனின் அம்சமாக அவதரித்தவள்
நல்ல படங்களுடன் கூடிய அருமையான தொகுப்புடன் நல்ல பதிவு! முல்லையாற் பிரச்சினை ஒரு புரம் இருக்க....அந்த ஆற்றிலிருந்து நீர் எடுத்து அபிஷேகம் செய்யப்படுகின்றதே! அறியும் போது இனிமையாக இருக்கின்றது! அதற்காவது பிரச்சினை வராமல் இருந்தால் நல்லதே!
ReplyDeleteகௌமாரி அம்மன் கோவிலைப் பற்றிய விளக்கங்களும், படங்களும் அருமை அம்மா.
ReplyDelete