


ஆரூரில் பிறந்தால் முக்தி,
அண்ணாமலையை நினைத்தால் முக்தி,
ஐயாறு மண்ணைமிதித்தால் முக்தி என்று சொல்லும் அளவுக்கு மிகவும் பெருமை வாய்ந்த ஊர் திருவையாறு.
காவிரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அழகிய ஊர் ..
பேராற்றல் மிக்க தென்கயிலாயமாகிய அருள்மிகு அறம் வளர்த்தநாயகி உடனாய ஐயாறப்பர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள புனிதமிக்க திருவையாறு திருத்தலம்

சமயக்குரவர்களில் ஒருவரான அப்பருக்கு சிவ பெருமான் திருவையாறில் கயிலைக் காட்சியினைக் காட்டி அருள் புரிந்தாகவும், இதனால் வடக்கே காசிக்கு தீர்த்த யாத்திரை செல்ல முடியாத பக்தர்கள் தென் கயிலாயமான திருவையாறு வந்தால் காசிக்குச் சென்ற பலன் கிடைக்கும் என்று தல புராணம் கூறுகிறது.
திருவையாறில் நவக்கிரகங்களில் ஏனைய எட்டு கிரகங்கள்
சூரியனையே பார்த்து நிற்கின்றனர்.
தஞ்சாவூரிலிருந்து 11 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
தருமபுரம் ஆதீனத்திற்குச் சேர்ந்தது.
திருவையாறிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் சந்திரனுக்குரிய
தலமான திங்களூர்அமைந்திருக்கிறது ..
திங்களூரில் தரிசிப்பவர்கள் இங்கு வந்து ஐயாறப்பனை தரிசித்தால் தான்
முழு பலன்பெறமுடியும் என்பது மரபு.
சந்திரன் சஸ்யாததி பதி..சூரியனின் கதிரை வாங்கித் தான் அருள்பாலிக்கிறார்.
எனவே, திருவையாறில் சூரியன் வழிபட்டதாலும், ஸ்ரீ ராமன் வழிபட்ட தலமானதால் இங்கு வழிபாடு செய்தல் சிறந்த பயனுடையது.

ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி ஸ்ரீ ஐயாறப்பருடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் காட்சியின் நோக்கம், காளை (ரிஷப)வாகனம் தர்மத்தை குறிக்கும் .. காளையின் உடல் போல் திடமான மனமும், அதிக சுமையைத் தாங்கும் காளைப் போல தன்னம்பிக்கை, மனிதர்க்கு வேண்டும் என்பதையும், செவிகள் இறவன் நாமத்தையும், கண்கள் நல்லதையே பார்க்கவேண்டும். காளையின் வால் போல் தீயவற்றை புறம் வைக்க வேண்டும் என்று உணர்த்தும் ரிஷப வாகனக் காட்சி தவறவிடக்கூடாது .அற்புதமான பலன்களை அள்ளிதரும்..

காசிக்குச் சென்று விட்ட அந்தணனின் உடமைகளை ஏனையோர் பறித்துக்கொண்டதை அவனது மனைவி மக்கள் ஈசனிடம் முறையிட்டு அழ, அவர்களைக் காக்கும் வண்ணம், இறைவனார் அந்த சைவ அந்தணன் வடிவம் எடுத்து ஆலயத்தில் ஐயாறப்பனை பூசித்ததை "ஐயாறதனில் சைவனாகியும்" என்று. நினைவுபடுத்துகிறார்
திருஞான சம்பந்தர்..


மதம் பிடிக்கும் யானை, இறைவன் முன் அமைதியாய் இருப்பதைப் போல, ஆணவம், தான் என்ற அகந்தை போன்ற கீழான குணங்களைக் கொண்ட மனிதனும், அன்னை அருளால் நற்பெயர் அடைவான் என்பதேயானை வாகனக் காட்சியின் நோக்கம்...
அன்ன வாகனம், நல்லது கெட்டதும் கலந்திருக்கும் இந்த உலகத்தில் நல்லதை மட்டும் நாம் கருத்தில் வைக்க வேண்டும் என்பதற்காய் அம்மன் அன்ன வாகனத்திலும் காட்சி தருவார்கள்...
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி ஸ்ரீ ஐயாறப்பருடன் குதிரை வாகனத்தில் உலாவருவார்கள்..அறம், பொருள், இன்பம், வீடு பேறு, என்பவை குதிரையின் நான்கு கால்களைக் குறிக்கும் தம் மனக் குதிரையை அடக்கி சரியான வழியில் செல்பவன், இறைவனை அடைவான் என்பதே குதிரை வாகனக் காட்சியின் நோக்கம்.
திருவையாறு "சப்தஸ்தானம்" தனிச்சிறப்பு வாய்ந்தது. திருநந்தித் தேவர் சுயம்பிரகாசையை மணம் முடித்துத் திருமணக்கோலத்துடன் ஊர்வலமாக ஏழூர்தலங்களுக்கும் ஐயாறப்பரால் அழைத்துச் செல்லப்படும் விழாவே ஏழூர்த்திருவிழா.
தொடர்புடைய பதிவு


அதன் பின் சித்திரைமாதம் பெளர்ணமியை அடுத்த விசாகநக்ஷத்திரத்தில், சித்திரைப் பெருவிழாவின் பன்னிரெண்டாம் நாளில் ஏழூர் விழா நடைபெறும்.

திருப்பழனத்திலிருந்து பல்வகைப்பழங்கள்,
திருச்சோற்றுத்துறையிலிருந்து திருவமுது,
திருவேதிகுடியிலிருந்து வேதம் ஓதும் வேதியர்கள்,
திருக்கண்டியூரிலிருந்து மகாகண்டிகை முதலான ஆபரணங்கள், திருப்பூந்துருத்தியிலிருந்து பல்வகை மலர்கள்,
திருநெய்த்தானத்திலிருந்து நெய் முதலான அபிஷேகப் பொருட்கள் அனுப்பி உபசரிக்கப்பட்டதாகக் கூறப்படுவதால், அந்தத்தலங்களுக் கெல்லாம் நந்திதேவரும் ஐயாறப்பரும் நன்றி சொல்லிக் கொண்டு வருவதற்காக ஏழூர்செல்வதாக ஐதீகம். ஊர்தலவரலாற்றில் கூறப்பட்டிருக்கிறது.
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி ஸ்ரீ ஐயாறப்பருடன் கண்ணாடிப் பல்லக்கிலும் நந்திகேஸ்வரர் சுயசாம்பிகையுடன் மணக்கோலத்துடன் வெட்டிவேர் பல்லக்கிலும் திருவையாற்றிலிருந்து கிளம்பி மற்றைய ஆறு தலங்களுக்கும் சென்று அந்தத் தலங்களின் மாட வீதிகளில் வலம்வந்த ஆறு தலங்களின் இறைவன், இறைவியையும் கண்ணாடிப் பல்லக்குகளில் அழைத்துக்கொண்டு திருவையாறு வந்தடைவதே திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி.



அருமையான படங்களுடன் திருவையாறு பற்றிய சிறப்புகளுக்கு நன்றி அம்மா...
ReplyDeleteதிருஐயாற்றை கண் முன் காட்டி விட்டீர்கள்.. மகிழ்ச்சி..
ReplyDeleteபுலனைந்தும் பொறி கலங்கி
ReplyDeleteநெறி மயங்கி
அறிவு அழிந்திட்டு
ஐம்மேல் உந்தி அலமந்து போதாக
அஞ்சேல் என்று
அருள் செய்வான் அமரும் கோவில்
வலம் வந்த மடவார்கள் நடமாட
முழவு அதிர
மழையென்று அஞ்சிச்
சில மந்தி அலமந்து மரமேறி
முகில் பார்க்கும் திருவையாறே !
திருவையாற்றின் பெருமையையும் ,
சிறப்பையும், சிறந்த படங்களுடன்
பதிவிட்டமைக்கு
உளம் கனிந்த பாராட்டுக்கள் !
சிறுவயதில் சென்று கச்சேரி கேட்டிருக்கிறேன். படங்கள் வழக்கம்போல அருமை.
ReplyDeleteஅருமையான தகவல்கள்...
ReplyDeleteதிருவையாறு செல்ல வேண்டும்.....
’தென் கயிலை சித்திரைப் பெருவிழா’
ReplyDeleteபெருமையளிக்கும் த லை ப் ’பூ’
>>>>>
படங்கள் யாவும் கண்கொள்ளாக்காட்சிகள்.
ReplyDeleteஅதுவும் அந்தத் தங்கநிறப் பல்லாக்குகள் .....
அடடா ! என்ன அழகு .......
எனச்சொல்ல வைத்து
சொக்க வைக்கிறதே ! ;)
>>>>>
தெளிவான தெவிட்டாத விளக்கங்கள் .....
ReplyDeleteசூப்பரோ சூப்பர் !
>>>>>
அறம் வளர்த்தநாயகி அம்பாளுக்கு அடியேனின்
ReplyDeleteவந்தனங்கள் / நமஸ்காரங்கள்.
>>>>>
யானைகள்,
ReplyDeleteகோழிகள்,
மான்கள்,
மயில்கள்,
குயில்கள்,
மாடுகள்,
நாரைகள்,
கிளிகள்,
பன்றிகள் உள்பட
அனைத்தும் சிவனும் சக்தியுமாகவே தெரிந்த
தொடர்புடைய பதிவுக்கும் சென்று வந்தேன்.
அதில் 992 என்றும் ..... இன்னும் எட்டே எட்டுதான் பாக்கி என்றும் நான் ஓர் குறிப்புக் கொடுத்துள்ளதையும் கண்டு மகிழ்ந்தேன்.
இன்றும் என்னால் எட்டவே முடியாத
எட்டாக்க[ன்]னியாகவே தாங்கள் உள்ளீர்கள். ;)
>>>>>
இன்றைய தங்களின் பதிவு எண்ணிக்கை: 1,2 6 8 !
ReplyDeleteஎன்னுடையதோ வெறும் 533 மட்டுமே !!
எங்கே எட்டிப்பிடிப்பது ?
ஏணி வைத்தாலும் எட்டவே முடியாதே !!!
எட்டாக்க[ன்]னியாக இருப்பினும்
இதயக்கனியாக என்றும் தாங்கள்
வாழ்க ! வளர்க !!
o o o o o o
படங்களும் பகிர்வும் அருமை.
ReplyDeleteநமசிவாயம் வாழ்க
ReplyDeleteதிருவையாற்று தலத் தகவல்கள் அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதிருவையாறு ஐயாறப்பரின் சிறப்புமிக்க பகிர்வு. தகவல்கள்,படங்கள் எல்லாமே அருமை. நன்றி.
ReplyDeleteThiruchitrambalam
ReplyDeleteAS usual enjoyed reading yuor post. pictures and presentation is good. My tamil software is giving me problem. Hence in English
ReplyDeleteதிருவையாறு பற்றிய செய்திகள் அருமை.
ReplyDelete