தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து பெற்ற அமிர்த கலசத்திலிருந்து விழுந்த ஒரு துளி அமிர்தம் இரண்டாகப்பிரிந்து புண்ணியமான பாரத பூமியின் வடக்கிலும் தெற்கிலும் விழுந்து இலந்தை வனமாக உருவெடுத்தது.
வட இந்தியாவில் உருவான இலந்தை வனம் (இலந்தை - பதரி) "உத்ர பதரிகாரண்யம்' என்றழைக்கப்படும் உத்ரகாண்ட் மாநிலத்திலுள்ள பத்ரிநாத் திருத்தலமாகும்.
தென் திசையில் உருவான இலந்தை வனம் "தக்ஷிண பதரிகாரண்யம்' எனப்படும் திருக்கீழ்வேளூராகும்.
சிலந்திச் சோழனாம் கோட்செங்கட்சோழன் எடுப்பித்த மாடக்கோயில் கீழ்வேளூர் திருக்கோயில்.
"அகத்திய' என்றழைக்கப்படும் வெட்டாற்றிலிருந்து பிரிந்து செல்லும் சிற்றாற்றில், இன்னிசையால் தமிழைப்பரப்பிய திருஞானசம்பந்தப் பெருமானுக்கும், நம்பியாரூரர் என்றழைக்கப்படும் சுந்தரருக்கும் ஓடம் விட்டு திருவருள் புரிந்த காரணத்தால் "ஓடம்போக்கி' எனப் பெயர் பெற்ற ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது கீழ்வேளூர். இது,தேவாரப்பாடல் பெற்ற சிவத்திருத்தலமாகும்.
ஸ்ரீஅக்ஷயலிங்கப் பெருமான்- இறைவன் சுடரொளியாய், வளரொளியாய், மரகதத்தின் உருவாய், ஆதியந்தமில்லா சுயம்புவாய், மும்மூர்த்திகளும், மூன்று தேவிகளும், அஷ்ட வசுக்களும், நவநிதிகளும் வாசம் செய்யும் சிறப்பு மிக்க அக்ஷய பாத்திரத்துக்கு அதிபதியாய், குறைவில்லாதவராய், அனைத்து ஜீவராசிகளையும் ரட்சித்து அருள்பவராய் கேடிலியப்பர் என்றும், ஸ்ரீ அட்சயலிங்க சுவாமி எனவும் வழங்கப்படுகிறார்.
ராஜ கோபுரம் கற்றளியால் கட்டப்பட்டு ஐந்து நிலைகளைக் கொண்டு விளங்குகிறது.
ஒருவரது ஜாதகத்தில் 5 ஆம் இடமாகிய பூர்வபுண்ணிய ஸ்தானம் என்பது அவரது முற்பிறவிகளில் செய்துள்ள பாவ புண்ணியங்களையும் அதனால் இப்பிறவியில் அவர் அனுபவிக்கவுள்ள இன்ப துன்பங்களையும் குறிப்பிடுகிறது. இந்தப் பூர்வபுண்ணிய ஸ்தான தோஷமிருப்பவர்கள், இத்தலத்து இறைவனை வழிபட்டால் அந்தத் தோஷம் அடியோடு நீங்கப் பெறுவார்கள் என்பதையே அப்பரடிகள், "கீழ்வேளூராளுங்கோவைக் கேடிலியை நாடுமவர் கேடிலாரே' என்று பாடியுள்ளார்.
இவ்வுலக வாழ்வு முடிந்து ஜீவன் "வைவஸ்வதம்' என்னும் விண்ணுலகை அடையும் போது அந்த ஜீவன் பூவுலகில் செய்துள்ள பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப, சொர்க்கம் அல்லது நரகம் சென்று வசிக்க எமதர்மராஜன் உத்திரவிடுகிறார்.
அந்த ஜீவனது பாவ புண்ணிய கணக்குகளைக் குறித்து வைக்க சித்ரகுப்தருக்கு 12 சிரவணர்கள் உதவி செய்து வருகிறார்கள்.
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எத்தகைய பாவங்களைச் செய்திருந்தாலும் அவன் திருக்கீழ்வேளூர் திருத்தலத்து இறைவனின் திருத்தாள்களைப் பற்றிக் கொண்டால், அவனது பாவங்களை நீக்கி அருள்புரிகிறார் அக்ஷயலிங்கப் பெருமான்.
கருவறைக்கு எதிரில் உள்ள மண்டபத்தில் சித்திரகுப்தருக்கு உதவி செய்துவரும் 12 சிரவணர்களும் 12 தூண்களாக இங்கு விளங்குகிறார்கள். இவர்கள் பக்தர்களைக் கண்காணிப்பதால் அவர்கள் தங்கள் பாவங்கள் விலகி நற்கதி அடைகிறார்கள்.
இறைவனுக்கு அருகில் தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அம்பிகை சுந்தர குஜாம்பிகை என வழங்கப்பெறுகிறார்.
குமரக் கடவுளின் தவத்திற்கு ஏற்பட்ட இன்னல்களைக் களைய அம்பாள் பத்ரகாளித் திருவுருவம் கொண்டு இத்தலத்தின் ஈசான்யத்தில் எழுந்தருளி "அஞ்சுவட்டத்தம்பிகை' எனச் சிறப்பித்துப் போற்றப்படுகிறாள்.
விநாயகர் "பதரிவிநாயகர்' என அழைக்கப்படுகிறார்..
முருகப்பெருமான் வடதிசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் தவமியற்றும் பாலசுப்ரமணியராகவும் திகழ்கின்றனர்.
ஸ்ரீகுபேர பகவான். ஒரு அட்சயதிருதியை நன்னாளில் இறைவனை வணங்கித் துதித்ததின் பயனாக, இறைவன் இவரை வடதிசை அதிபதியாக்கி சங்கநிதி, பதுமநிதி, கச்சநிதி, கற்பநிதி, நந்த நிதி, நீலநிதி, மகாநிதி, முகுந்த நிதி, மகாபத்மநிதி என்னும் நவநிதிகளையும் அளித்து அழகாபுரி என்னும் குபேரபுரியை ஆளும் அருளை வழங்கினார்.
சமுத்திர குப்தன் எனும் வணிகன் தீய வழியில் தனது செல்வம் முழுவதையும் இழந்தான். பிரசாதம் பெற்றுப் புசிக்கலாம் என்று வந்தபோது கொடிமரத்தின் அருகே மயங்கி விழுந்தான்.
கேடிலியப்பர், குபேரனிடம் அவனுக்கு மீண்டும் வேண்டிய செல்வத்தை அளிக்குமாறு அருளினார். அவன் மயக்கமுற்று கீழே வீழ்ந்திருந்தாலும், விழுந்து வணங்கியதாகவே ஏற்றுக்கொண்டு கருணையுடன் அருளினார்.
தனது பெருத்த பேழை வயிற்றைக் கண்டு பரிகாசம் செய்த சந்திரனின் மீது கோபங்கொண்ட விநாயகர், சந்திரனை பிறர் பழிக்கும்படி கலைகள் குறையும் என சாபமிட்டார்.
அந்தச் சாபம் நீங்கும் பொருட்டு சந்திர தீர்த்தத்தை ஏற்படுத்தி, அதில் மூழ்கி நியமத்துடன் அட்சயலிங்கரை வழிபட்டார் சந்திரன்.
அதனால் சந்திரனது க்ஷயங்கள் நீங்கியது. இந்த நிகழ்வு
ஒரு அட்சயதிருதியை நன்னாளில் நடந்தது.
திருவாரூர்- நாகப்பட்டினம் வழியில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது.
இதுவரை அறிந்திராத ஸ்தலம்
ReplyDeleteஅதன் அருமை பெருமைகளை உங்கள்
அற்புதமான பதிவின் மூலம் அறிந்து மகிழ்ந்தோம்
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஅக்ஷயலிங்கப் பெருமாள் அறிந்தேன் நன்றி சகோதரியாரே
கீழ்வேளூர் கோவில் பற்றி தெரிந்து கொண்டேன். எவ்வளவு பழமையான கோவில்! திருப்பணி நடந்தபோது எடுத்த புகைப்படங்களோ...
ReplyDeleteகீழ்வேளூர் திருத்தலம் பற்றிய பதிவு அருமை..
ReplyDeleteசிறப்பான தலத்தின் விளக்கங்களுக்கு நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteகீழ்வேளூர் தலத்தின் சிறப்புகளை, அழகான படங்களுடன் அருமையான
ReplyDeleteபகிர்வு. வழங்கியமைக்கு நன்றிகள்.
நவ நிதிகளும் அருளும் ஸ்ரீ அக்ஷயலிங்கப் பெருமானுக்கும், சுந்தரமான அம்பாள் சுந்தர குஜாம்பிகைக்கும் அடியேனின் வந்தனங்கள் / நமஸ்காரங்கள்.
ReplyDelete.............
.............
பதரி என்றால் இலந்தை .... ஆஹா !
இலந்தை என்றாலே உடனே என் நினைவுக்கு வருவது ...
’பணமா பாசமா’ என்ற படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய
எ ல ந் த ப ய ம் .........
எ ல ந் த ப ய ம் .........
செக்கச்சிவந்த பழம் ..... இது
தேனாட்ட[ம்] இனிக்கும் பழம் ......
எல்லோரும் வாங்கும் பழம் .........
இது ஏழைக்கென பிறந்த பழம் .....
எ ல ந் த ப ய ம் .........
எ ல ந் த ப ய ம் .........
எத்தனையோ பேருக்கிட்ட
எலந்தப்பழம் பார்த்தயே
எடுத்தப்பார்த்த பழங்களிலே
இ ம் மா ம் பெ ரி சு பார்த்தையா ! ;)
..............
..............
வழக்கம்போல படங்கள், விளக்கங்கள், காணொளி எல்லாமே ஜோர் ஜோர் !
ஆனால் பாதிப்படங்கள் இன்னும் திறக்கவே இல்லையாக்கும் ..... ஹூக்க்கும் !
நவ நிதிகளும் அருளும் ஸ்ரீ அக்ஷயலிங்கப் பெருமானுக்கும், சுந்தரமான அம்பாள் சுந்தர குஜாம்பிகைக்கும் அடியேனின் வந்தனங்கள் / நமஸ்காரங்கள்.
ReplyDelete.............
.............
பதரி என்றால் இலந்தை .... ஆஹா !
இலந்தை என்றாலே உடனே என் நினைவுக்கு வருவது ...
’பணமா பாசமா’ என்ற படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய
எ ல ந் த ப ய ம் .........
எ ல ந் த ப ய ம் .........
செக்கச்சிவந்த பழம் ..... இது
தேனாட்ட[ம்] இனிக்கும் பழம் ......
எல்லோரும் வாங்கும் பழம் .........
இது ஏழைக்கென பிறந்த பழம் .....
எ ல ந் த ப ய ம் .........
எ ல ந் த ப ய ம் .........
எத்தனையோ பேருக்கிட்ட
எலந்தப்பழம் பார்த்தயே
எடுத்தப்பார்த்த பழங்களிலே
இ ம் மா ம் பெ ரி சு பார்த்தையா ! ;)
கைக்கு அடக்கமா ....... நீ .....
கடிச்சுப்பாக்க வாட்டமா .....
இருக்குதூஊஊஊஊ ..........
அதுதான் ஊரையெல்லாம் .....
இஸ் இஸ்ஸுன்னு இஸுக்குது ...
..............
..............
வழக்கம்போல படங்கள், விளக்கங்கள், காணொளி எல்லாமே ஜோர் ஜோர் !
ஆனால் பாதிப்படங்கள் இன்னும் திறக்கவே இல்லையாக்கும் ..... ஹூக்க்க்க்க்க்க்க்க்கும் !.
கீழ்வேளூர் தலச்சிறப்புக்கள் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteகீழ்வேளுர் திருக்கோவில் சிறப்புகள் அறிந்தேன். இந்த ஊர் எங்கிருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆவல்.
ReplyDeleteவணக்கம்..வாழ்க வளமுடன் ..சிறப்பான கருத்துரைக்கு இனிய நன்றிகள்..
Deleteகீழ்வேளூர் -திருவாரூர்- நாகப்பட்டினம் வழியில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது.
சந்திரக்கலை விநாயகர் விளக்கம் புதிதாக அறிந்தேன்.
ReplyDeleteமிக மகிழ்ச்சி.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
கீழ்வேளூர் தளத்தின் சிறப்புகளையும், மிக மிக அழகான படங்களுடன் பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி அம்மா.
ReplyDeleteசிறப்பானதோர் தலம் பற்றிய தகவல்களுக்கு நன்றி.
ReplyDelete