
www.youtube.com/watch?v=RJ3fpXeCzQw |


இம்பர் வாழ்வினிறுதிகண்டு உண்மையின்
இயல்புணர்த்திய சங்கரன் ஏற்றமும்

மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வி
மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்
நீலமா மேகம்போல நிற்கின்ற திருமால் உந்தன்
நேயத்தால் மெய்சிலிர்த்து நிகரிலாச் செல்வம் கொண்டான்;
மாலவன் மீது வைத்த மாயப்பொன் விழியிரண்டை
மாதுநீ என்னிடத்தில் வைத்தனை என்றால்- நானும்
காலமா கடலில் உந்தன் கருணையால் செல்வம் பெற்று
கண்ணிறை வாழ்வு கொள்வேன் கண்வைப்பாய் கமலத்தாயே


பொன்மழை என்ற தலைப்பில் கனகதாரா ஸ்தோத்திரத்தைத் தமிழில்கவிஞர் கண்ணதாசன் எழுதின பாடல் ஸ்டிக்கர்களாக தமதுபணப்பெட்டியில்ஒட்டி வைத்திருப்பார்கள்..






சர்வமங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரியம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே
சரண்யே த்ரியம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே

ஸ்ரீ சங்கர பகவத்பாதாள் தனக்கு ஒரு நெல்லிக்கனியை அளித்த ஒரு பெண்மணியின் ஏழ்மை நிலை நீங்கும்படி செய்யவேண்டுமென்று ஸ்ரீ லக்ஷ்மியை பிரார்த்திக்க கனகதாரை (பொன்மழை) பொழிந்ததாகக் கூறுவார். இதை பக்தியுடன் பாராயணம் செய்பவர்க்கு ஸ்ரீ தேவியின் அனுக்ரகத்தால் சகல சம்பத்துக்களும் உண்டாகும்)

அங்கம் ஹரே : புலக பூஷண மாஸ்ரயந்தீ
ப்ருங்காங்கனேவ முகுலாபரணம் தமாலம்
அங்கீ க்ருதாகில விபூதி ரபாங்க லீலா
மாங்கள்ய தாஸ்து மம மங்கள தேவதாய (1)
சிலிர்த்துப் பறக்கும் எழில் பொன் வண்டுகளைப்போன்று
மலர்ந்து விரிந்தன தமால மலர் மொட்டுக்கள்
திருமாலின் மலர் மார்பினில் அமர்ந்த தேவி நின்
மலர் விழிப் பார்வை எனக்கு மங்களங்கள் சேர்க்கட்டும் (1)

முக்த்தா முஹூர் விததி வதனே முராரே
பிரேமத்ராப ஆப்ரணி ஹிதானி கதாகதாநி
மாலா த்ரிசோர் மது கரீவ மஹோத்பலேயா
ஸா மே ஸ்ரியம் திசது ஸாகர ஸம்பவாய (2)
நீலத் தாமரையில் வண்டு அமர்வதும் பறப்பதும் போல்
நீல விழி வண்டுகள் மாதவன் மலர் முகம் நோக்க
பாற்கடலில் உதித்த மந்தஹாச மலர் முகத்தாள் நின்
பார்வை எனக்கு செல்வச் செழிப்பினை அருளட்டும் (2)
ஆமீலி தாக்ஷ மதிகம்ய முதா முகுந்தம்
ஆனந்த கந்த மநிமேஷம நங்க தந்த்ரம்
ஆகே கரஸ் திதகநீ நிகபக்ஷம நேத்ரம்
பூத்யை பவேந்மம புஜங்க ஸயாங்க நாயா: (3)
அரவணையில் துயிலும் அரங்கனின் நாயகியே
முரன் அரக்கனை அழித்த முகுந்தன் மனம் நாடிட
நீலோற்பவ மலரின் விழி முகத்தாள் நின்
நீல விழி பார்வை எனக்கு சௌபாக்யத்தை அளிக்கட்டும் (3)

பாஹ்வந்தரே மதுஜித: ஸ்ரித கௌஸ்து பேயா
ஹாராவளீவ ஹரிநீலமயீ விபாதி
காமப்ரதா பகவதோபி கடாக்ஷமாலா
கல்யாணமா வஹது மே கமலாலயாயா (4)
எல்லையில்லா இன்பத்தில் கார்வண்ணன் இமைகள் மூட
எல்லையில்லா காதலினால் நின் இமைகள் மூட
மறக்க அளவில்லாக் கருணையே உருவாய் அமைந்த தேவி நின்
கோல விழி பார்வை எனக்கு கோடி செல்வம் அளிக்கட்டும்(4)

காலம்புதாளி லலிதோரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதி யா தடிதங்க நேவ
மாதுஸ் சமஸ்த ஜகதாம் மஹநீய மூர்த்தி
பத்ராணி மே திஸது பார்க்கவ நந்தநாயா: (5)
மது அரக்கனை அழித்த மாலவன் மருவும் தேவி
மாதவன் மார்பினில் ஒளிரும் கௌஸ்துப மணி நீயே
மான் விழி பார்வை மாலுக்கே வளம் சேர்க்கும் நின்
மகத்தான பார்வை எனக்கு மங்களத்தை அளிக்கட்டும் (5)

ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத் ப்ரபாவாத்
மாங்கள்ய பாஜி மதுமாதிநி மந்மதேந
மய்யாப தேத்ததிஹ மந்தர மீக்ஷணார்த்தம்
மந்தாலஸம் ச மகராலய கந்யகாயா: (6)
கார்மேக வர்ணனின் கண்ணனின் பரந்த மார்பில்
ஒளிர் வீசிடும் மின்னல் கொடியென ஒளிரும் தேவி
பார்க்கவ மகரிஷியின் பார்காக்கும் திருமகளே
நின் பார்வை எனக்கு பல வளங்கள் சேர்க்கட்டும் (6)

விஸ்வா மரேந்த்ர பத விப்ரமதாந தக்ஷம்
ஆனந்த ஹேதுரதிகம் முர வித்வி ஷோபி
ஈஷந் நிஷீதது மயிஷண மீஷணார்த்தம்
இந்தீவ ரோதரஸ ஹோதர மிந்திராயா: (7)
பொங்கும் மங்களம் தங்க அரக்கனை சம்ஹரித்த
மகாவிஷ்ணு மார்பினில் மகிழ்வுடன் உறைபவளே
நின் காதற் பார்வை காமனுக்கு பெருமை சேர்க்க
நின் அருட் பார்வை எனக்கு அருளும் பொருளும் அருளட்டும் (7)

இஷ்டா விசிஷ்ட மதயோபி யயா தயார்த்ர
த்ருஷ்ட்யா த்ரிவிஷ்ட பபதம் சுலபம் லபந்தே
திருஷ்டி: ப்ரஹ் ருஷ்ட கமலோதர தீப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா: (8)
வேள்வியோ கடும் தவமோ புரிய இயலாத என்னை
கேள்வியே கேளாமல் சுகமான வாழ்வைத் தந்து
தோல்விகள் இல்லாத வெற்றிகள் எனக்கருள்வாய் நின்
தளிர் பார்வை எனக்கு தாராளமாய் நிதி அருளட்டும் (8)

தத்யாத் தயாநு பவநோ த்ரவிணாம் புதாராம்
அஸ்மிந் நகிஞ்சந விஹங் கஸிசௌ விஷண்ணே
துஷ்கர்ம மகர்மம பநீய சிராய தூரம்
நாராயணப் பரணயிநீ நயநாம்பு வாஹ: (9)
கருணை மழைக்காக ஏங்கும் சாதகப் பறவை என்னை
வறுமை என்னும் வெப்பம் தாளாது துடிக்கும் முன்னே
பெருமை பொங்க உலகில் வாழவைப்பாயே நின்
குளிர் பார்வை எனக்கு குறையா செல்வம் பொழியட்டும் (9)
கீர்த்தேவதேதி கருடத்வஜ ஸுந்தரீதி
சாகம்பரீதி சசிசேகர வல்லபேதி
ஸ்ருஷ்டி ஸ்திதி பிரளய கேளிஷு சம்ஸ்திதாயை
தஸ்யை நமஸ் த்ரிபுவனைக குரோஸ் தருண்யை (10)
முத்தொழில் புரியும் முகுந்தனின் துணைவியே
காத்தலில் அலை மகள் நீ படைத்தலில் கலைமகள் நீ
அழித்தலில் மலைமகள் நீ எத்தொழில் புரிந்திடவும் நின்
எழில் பார்வை எனக்கு தொழில் மேன்மை அளிக்கட்டும் (10)
ஸ்ருத்யை நமோஸ்து சுப கர்ம பலப் ரஸுத்யை
ரத்யை நமோஸ்து ரமணீய குணார்ணவாயை
ஸக்த்யை நமோஸ்து சதபத்ர நிகேதநாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை (11)
வேத வடிவானவளே ஞானஒளி தந்தருள்வாய்
நாத வடிவானவளே நற்கல்வி தந்தருள்வாய்
வேத நாதம் அனைத்தும் அருளிடும் வேதவல்லியே நின்
கடைக்கண் பார்வை எனக்கு கலை மேன்மை அளிக்கட்டும் (11)
நமோஸ்து நாளீக நிபாநநாயை
நமோஸ்து துக்த்தோததி ஜன்மபூம்யை
நமோஸ்து சோமாம்ருத சோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை (12)
எழில் தாமரை ஒத்த முகமதியாளே வணக்கம்
திருப்பாற்கடல் உதித்த திருமகளே வணக்கம்
அமுதமும் அம்புலியும் உடன் பிறப்பானவளே நின்
அருட்பார்வை எனக்கு ஆயகலைகள் அருளட்டும் (12)
நமோஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை
நமோஸ்து பூமண்டல நாயிகாயை
நமோஸ்து தேவாதி தயாபராயை
நமோஸ்து ஸார்ங்காயுத வல்லபாயை (13)
பொற்றாமரை வீற்றிருக்கும் கொற்றவளே வணக்கம்
கற்றார் உளம் வீற்றிருக்கும் திருமகளே வணக்கம்
கமல மலரில் உறையும் லட்சுமி தேவியே வணக்கம்
கவலையெலாம் போக்கும் அலைமகளே வணக்கம் (13)
நமோஸ்து தேவ்யை ப்ருகு நந்தநாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை
நமோஸ்து லக்ஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதர வல்லபாயை (14)
பெருமா மகரிஷியின் தவ செல்வியே வணக்கம்
திருமால் மார்பில் திகழும் தேவ தேவியே வணக்கம்
கமல மலரில் உறையும் லட்சுமி தேவியே வணக்கம்
கவலையெல்லாம் போக்கும் அலைமகளே வணக்கம் (14)
நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவன ப்ரசூத்யை
நமோஸ்து தேவாதி பிரர்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜ வல்லபாயை (15)
தாமரையில் கொலுவீற்றிருக்கும் ஒளிவடிவே வணக்கம்
மூவுலகும் தொழும் களஞ்கியமே வணக்கம்
தேவருலகம் வணங்கும் தெய்வ வடிவே வணக்கம்
நந்த கோபாலன் கோகுல நாயகியே வணக்கம் (15)

சம்பத்கராணி சகலேந்த்ரிய நந்தநாநி
சாம்ரஜ்யதான விபவானி சரோருஹாக்ஷி
தத்வந்தநாநி துரித ஹரணோத்யதாநி
மாமேவ மாதர நிஸம் கலயந்து மாந்யே (16)
கமல விழி மலரே காண்போர்க்கு அருள் விருந்தே
ஐம்புலன்களின் ஆனந்தமே ஐஸ்வர்யம் அளிப்பவளே
என்றும் தொழுவோர்க்கு ஏற்றங்கள் தரும் தேவி
என்றென்றும் எனக்கே செல்வ வளங்கள் தந்தருள்வாய் (16)

யத் கடாக்ஷ ஸமுபாஸ நாவிதி:
சேவகஸ்ய சகலார்த்த ஸம்பத:
ஸந்தநோதி வசநாங்க மாநசை:
த்வாம் முராரி ஹ்ருதயேஸ்வரீம் பஜே (17)
கண்ணாளன் திருமாலின் மலர் மார்பில் உறைபவளே
வெண்பட்டு சந்தனம் மலர் மாலை அணிபவளே
எண்ணற்ற செல்வம் எளியோர்ர்க்கு அருள்பவளே
கண் மலர்ந்து தேவி செல்வங்கள் நீ அருள்வாய் (17)

சரசிஜ நிலயே சரோஜ ஹஸ்தே
தவளதமாம் சுககந்த மால்ய சோபே
பகவதி ஹரிவல்லபே மநோஜ்ஞே
த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம் (18)
கடைக்கண் பார்வை வேண்டி நிதம் தொழுவோர் கோடி
கடைக்கண் மட்டுமின்றி கமலவிழி பார்வையால்
கடையனாய் இருந்தோர்க்கு கணக்கற்ற செல்வம் தந்தாய்
கடயேனைக் காத்தருள் கனிந்துருகி வணங்குகின்றேன் (18)
திக்கஸ்திபி: கநககும்ப முகாவ ஸ்ருஷ்ட

ஸ்வர்வாஹிநீ விமல சாருஜலாப்லுதாங்கீம்
ப்ராதர் நமாமி ஜகதாம் ஜனனீ மசேஷ
லோகாதி நாதக்ருஹிணீ மம்ருதாப்தி புத்ரீம் (19)
அஷ்டதிக் கஜங்களால் கங்கை நீரால் அபிஷேகம்
அஷ்ட ஐஸ்வர்யம் வேண்டி தங்கக் குடத்தால் அபிஷேகம்
அஷ்ட லெக்ஷுமியே உன்னை வணங்குகிறோம் நாளும்
கஷ்டங்கள் களைந்து இஷ்ட செல்வங்கள் நீ அளிப்பாய் (19)

கமலே கமலாக்ஷ வல்லபே த்வம்
கருணா பூரத ரங்கிதை ரபாங்கை:
அவலோகய மாமகிஞ்ச நாநாம்
ப்ரதமம் பாத்ரம க்ருத்ரிமம் தயாயா (20)
கமல மலர் உறைபவளே மலரிதழ் விழியாலே
மாதவன் துணையாக மார்பில் உறை ஓவியமே
ஏழைக்குள் முதல்வனாய் எளிமையுடன் வாழுகின்றோம்
ஏழையை காத்து என்றும் இனிய வாழ்வினை நீ அளிப்பாய் (20)
ஸ்துவந்தி யே ஸ்துதி பிரமீ பிரந்வஹம்
த்ரயீமயீம் த்ரிபுவன மாதரம் ரமாம்
குணாதிகா குருதர பாக்ய பாகிநோ
பவந்தி தே புவி புதபாவிதாஸயா: (21)
வேதஸ்வரூபினியை மூவுலகும் தொழும்
நாதஸ்வரூபினியை நாள்தோறும் வணங்கி
ஸ்வர்ணமாரி பொழியும் ஸ்ரீதேவி மந்த்ரமிதை
சொல்பவர்க்கு திருமகள் திருவருள் புரிந்திடுவாய் (21)
-ஸ்ரீ கனகதரா ஸ்தோத்ரம் சம்பூர்ணம்
கனகதாரா ஹோமம் பரம ஏழையைக் கூட செல்வந்தன் ஆக்கிவிடும் வகையில் அவனுக்குள் புதைந்து கிடக்கும் திறமையை வெளிக்கொண்டு வரும் சக்தியுடையது.
ஆதிசங்கரரின் அவதார தலமான கேரளா, காலடியில் மகாலட்சுமிக்கு தங்க நெல்லிக்கனி அபிஷேகம் ஆதிசங்கரரின் குல தெய்வமான திருக்காலடியப்பன் கோவிலில், ஆண்டுதோறும் கனகதாரா யாகம் நடத்தப்படுகிறது.
கனகதாரா ஸ்லோகத்தை, ஆதிசங்கரரின் 32 வயதை குறிக்கும் வகையில் 32 நம்பூதிரிகள் 1,008 முறை ஜபித்தனர். பின், தங்க நெல்லிக்கனிகளால் கனகாபிஷேகம் நடத்தப்பட்டது.உலக நன்மைக்காகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெருகவும் ஆண்டுதோறும் காலடி கண்ணன் கோவிலில் கனகதாரா யாகம் நடந்து வருகிறது.
பக்தர்களுக்கு பிரசாதமாக தங்க நெல்லிக்கனியும், வெள்ளி நெல்லிக்கனியும், கனகதாரா யந்திரமும் வழங்கப்படுகிறது..
முன்னதாகப் பணம் கட்டி பதிவு செய்த பக்தர்களுக்கு இவை தரப்படும். இதனை வீட்டு பூஜையறையில் வைத்துப் பூஜித்தால் நலமும் வளமும் பெற்றலாம்.
திருக்காலடியப்பன் ஆலய மூலஸ்தானத்தில் கண்ணன் ஒரு கையில் வெண்ணெயுடனும், ஒரு கையை இடுப்பிலும் வைத்தபடி காட்சி தரும் அழகைக் காணலாம். ஆலயத்தின் பெயர் கிருஷ்ண அம்பலம் என்பதாகும்.
திருக்காலடியப்பன் ஆலயத்தின் உள்ளே வலப்புறம் சங்கரர் சந்நிதியும், இடப்புறம் சாரதாம்பாள் சந்நிதியும், சக்தி விநாயகர், கிருஷ்ணர் சந்நிதிகளும் அமைந் துள்ளன.
சங்கரரின் தாயார் ஆர்யாம்பாள் ஆலயமும் சிறப்புடன் அமைத்துள்ளனர். இங்கு ஒரு கல் விளக்கு நிரந்தரமாக ஒளி வீசியபடி உள்ளது. இது ஒரு அணையா தீபம். ஆன்மிகத்தின் முதல் குருவான ஆதிசங்கரரின் தாய்க்கு திருக்காலடியப்பன் ஆலயத்தில் தரப்பட்டுள்ள சிறந்த புகழ் சரியானதுதானே.!!
1910-ஆம் ஆண்டு ஆதிசங்கரர் அவதரித்த காலடியில் ஒரு கோவில் அமைத்துள்ளனர். இக் கோவிலில் சங்கரரின் உருவத்தை தட்சிணாமூர்த்தி யாக வடிவமைத்து பிரதிஷ்டை செய்துள்ளனர்.
ஆலயத்தில் உள்ள பெரிய மண்டபத்தின் சுவர்களில் சங்கரரின் வாழ்க்கை வரலாற்றை வண்ண ஓவியங்களாகத் தீட்டியுள்ளனர்.

கனகதாரா ஸ்தோத்திரம், தமிழில் - YouTube
www.youtube.com/watch?v=RJ3fpXeCzQw |


இம்பர் வாழ்வினிறுதிகண்டு உண்மையின்
இயல்புணர்த்திய சங்கரன் ஏற்றமும்



.
”பொன் மழை பொழியும் கனகதாரை”
ReplyDeleteஅழகான தலைப்பு. பொறுமையாகப் படித்துவிட்டு பிறகு வருகிறேன்.
முதல் படத்தில் ஜொலிக்கும் லக்ஷ்மியும், மஹாலக்ஷ்மி நமஸ்துப்யம் என்று ஆரம்பிக்கும் ஸ்லோகமும் நல்ல அழகாக உள்ளன. ;)))))
கனகதாரை போலவே கனகதாரா ஸ்தோத்ரத்தை முழுவதுமாக வர்ஷித்துள்ளது மிகச்சிறப்பு.
ReplyDeleteஎவ்வளவு பொறுமையாக செய்துள்ளீர்கள்!
படிப்பதை விட எழுதுவது மனதில் பதியும் என்பார்கள்.
அதுபோலவே நாம் மிகவும் கவனமாக தவறேதும் இல்லாமல் ஒவ்வொரு வரியாக டைப் அடித்து பதிவிடும் போது நன்றாகவே மனதில் பதிந்து விடுவதுண்டு.
இதை நான் “ஆதி சங்கரர் வாழ்வும் வாக்கும்” நாடகத்தை டைப் அடிக்கும் போது நன்கு உணர முடிந்தது.
21 ஸ்லோகங்களுக்கும் அர்த்தம் எழுதியிருப்பது அதைவிட சிறப்பாக உள்ளது. Very Great Work ! ;))))
ReplyDeleteகாலடியின் மஹாலக்ஷ்மிக்கு தங்க நெல்லிக்கனி அபிஷேகம்,
ReplyDeleteதிருக்காலடியப்பன் கோயிலில் ஆண்டுதோறும் 32 நம்பூதிரிகளால் 1008 முறை கனகதாரா ஸ்லோகம் சொல்லுதல், அதன் பின்பு தங்க நெல்லிக்கனிகளால் கனகாபிஷேகம்...
அழகழகான தங்கமான தகவல்கள்.
தங்க நெல்லிக்கனி, வெள்ளி நெல்லிக்கனி, கனகதார யந்திரம் முதலியன தங்கள் ஆத்தில் பூஜை அறையில் இருக்கும் தானே!
இன்றைய பதிவினில் “பொன்மழை” பொழிந்து விட்டீர்கள்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
கடைசியில் காட்டப்பட்டுள்ள மலர்கள். மின்னொளியில் கோபுரம், ஸ்ரீ பாதுகைகள், ஸ்ரீ குருவாயூரப்பன் போன்றவை, வழக்கம்போல் பதிவுக்கு மேலும் அழகூட்டுவதாக அமைந்துள்ளன.
ReplyDeleteஇன்று தங்கத்தை கனவிலாவது பார்க்க வேண்டும் என நினைத்தேன் நேரில் அதுவும் மழைபோல கண் முன்னே பொழியும் காட்சி அருமை .
ReplyDeleteசிறப்பாக உள்ளதுகண் முன்னே ... காட்சி அருமை .
ReplyDeleteஅட்சய திருதியை அன்று பொன்மழை பொழிய வைத்து விட்டீர்கள்!
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
99. அலங்காரப்பிரியா கோவிந்தா
ReplyDelete2858+6+1=2865
ReplyDeleteAmma Indha sthothirathai samaskiruthathil solla venduma illai tamil ilum sollalama? samaskiruthathil sonnal than palan kidaikuma?
ReplyDelete