Thursday, April 12, 2012

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்..நலம் நல்கும் நந்தன ஆண்டு


500 - வது பதிவு 
புத்தாண்டு பதிவு.. நலமே நல்கும் நந்தன வருட நந்தவனப் பூக்கள்...
மனம் நிறைந்த இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்...

dg1c 3d Animated GIF Showcasedg1c 3d Animated GIF Showcase
heart_of_gems.gif 83 image by lovemeasiam_77






மாற்றங்களின் மூலமே வாழ்க்கையின் 
ஏற்றங்களை கற்றுத்தரவே புதிதாய்பிறக்கும் 
 நந்தன ஆண்டே வருக நீ ஏற்றம்பல தருக நீ! 
நலம் பல நல்கும் நல்ல ஆண்டே வருக !

  • சூரியன் முதல் ராசியான மேஷத்தில் ப்ரவேசிப்பது. சித்திரை முதல் நாள்தான் ராமபிரான் ராவணனை வெல்ல அகஸ்திய முனிவரிடம் உபதேசம் பெற்று, ஆதித்ய ஹ்ருதயம் படித்தார். ஆகவே இந்தப் புனித சித்திரை நன்நாளில் காலையில் எழுந்து நீராடி, சுத்தமான மனதுடன் இறைவனைப் பிரார்த்தித்து, ஆதித்ய ஹ்ருதயம் சொல்வது மிகுந்த பலனைத் தரும். 

 சித்திரை.  இளவேனில் வசந்தகாலம் என எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் பருவம். 

தளிர்க்கும்,பூக்கும் தாவரங்கள்,பாடித் திரியும் பறவைகள் என கூர்ந்து நோக்கினால் மகிழ்ச்சியாகவும், வியப்பாகவும் இருக்கும் காலம் இது. 

சித்திரை மாதத்து உதய சூரியனின் கதிர்கள் தொடர்ந்து பனிரெண்டு நாட்கள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பா சமுத்திரம் பாபநாசம் கோயிலில் உள்ள பாபநாச ஸ்வாமியின் மீது படுவதால், அந்த நேரத்தில் அங்கு வந்து வணங்கும் பக்தர்களின் பாபங்களையெல்லாம் தீர்க்கீறார் என்பது ஐதீகம்.

இந்த தினத்தைக் கேரள மக்கள் “விஷுக்கனி“ என்று கொண்டாடுகிறார்கள்

பூமியில் வாழும் எல்லா உயிர்களிடத்தும் சூரிய பகவான் ஆதிக்கம் செலுத்துவதால், இந் நாளில் சூரிய வழிபாடு மிகவும் சிறப்பாக கருதப்படுகின்றது. இந்த புனித நன்னாளில் புத்தாடை அணிந்து பெரியோர்களின் ஆசிர்வாதம் பெற்று, கோயில்களுக்கு சென்று இறைவனை வழிபடுவது மராபாகும்.











dg1c 3d Animated GIF Showcasedg1c 3d Animated GIF Showcase

49 comments:

  1. 500 ஆவது பதிவுக்கு என் அன்பான வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. பேரன்பும், தாய்ப்பாசமும் ஒருங்கேயுள்ளவரும், ஆர்வம், ஆற்றல், திறமை, அறிவு, சுறுசுறுப்பு, கடின உழைப்பு, தெய்வீகத்தன்மை என அனைத்துச்சிறப்பு அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளவரும், என் மனம் கவர்ந்ததொரு பதிவருமான திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் முதற்கண் வணக்கங்கள்.

    வெற்றிகரமான தங்களின் 500 ஆவது பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.


    ஒருசில உள்ளுணர்வுகளை வெளிப்படுத்த விரும்புகிறேன்.

    21.01.2011 அன்று முதன் முதலாக “காயத்ரி மந்திரம்” என்ற பதிவினை அளித்து தங்களை வலைப்பூவினில் அறிமுகப்படுத்திக்கொண்டீர்கள்.

    நானும் அதே 2011 ஜனவரி மாத முதல் வாரத்தில் தான் என் வலைப்பூவில் முதன் முதலாக எழுத ஆரம்பித்தேன். .

    அந்த காயத்ரி மஹாமந்திரம், வலையுலகில் இன்றுவரை உங்களுக்கு மிகப்பெரிய புகழினைத் தேடித்தந்துள்ளது. தனியாக் ஓர் உன்னத இடத்தினைப் பெற்றும் தந்துள்ளது.

    21.01.2011 முதல் இன்று 12.04.2012 வரை முடிந்துள்ள மொத்த நாட்களோ 448.

    இந்த 448 நாட்களுக்குள் தாங்கள் வெளியிட்டுள்ள மொத்த வெளியீடுகளோ 500.

    சதவீதக் கணக்குப்படி 500/448*100 = 111.61% எனக்காட்டுகிறது.

    அதாவது நூறு நாட்களுக்குள் 112 பதிவுகள் என்ற விகிதாசாரத்தில் பதிவுகள் தந்துள்ளீர்கள்..

    தினந்தோறும் கட்டாயமாக ஒரு பதிவும், 10 நாட்களுக்கு ஒரு முறை
    உபரியாக ஒரு பதிவும் கொடுத்துள்ளீர்கள் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

    இது சாதாரண ஒரு சாதனையே அல்ல.

    மிகப்பெரியதோர் இமாலய சாதனை ஆகும்.

    மேலும் உங்களது ஒவ்வொரு பதிவுகளும் சாதாரணப்பதிவுகளே அல்ல.

    பெரும்பாலானவை தெய்வீகப்பதிவுகளே ஆகும்.

    ஏராளமான படங்களும், தாராளமான தகவல்களும் அக்ஷயபாத்திரம் போல அள்ளி அள்ளித் தந்து, எங்களையெல்லாம் தினமும் அசத்தி வந்துள்ளீர்கள்.

    தங்கள் பதிவுகள் எல்லாவற்றிலும் அழகழகான படங்களை இணைப்பதோடு
    மட்டுமல்லாமல், தகவல்களை நன்கு அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து ஒன்றும் விட்டுவிடாமல் அதன் நீளம், அகலம், ஆழம் முதலியன பற்றி வாசிப்போர் நன்கு உணரும் வண்ணம் பதிவிட்டுள்ளது தங்களின் தனிச்சிறப்பாகும்.

    கடந்த ஓராண்டு காலமாக தினமும் தங்களின் பதிவுகளை வாசித்து,
    [உங்கள் பாக்ஷையில் சொல்லப்போனால் சுவாசித்து] மனம் மகிழ்ந்து தொடர்ந்து அதுபற்றிய கருத்துக்கள் கூறி பின்னூட்டம் இட்டு வருபவன் என்பதனால் எனக்கு உங்களைப்பற்றியும், உங்களின் தனித்திறமைகள் பற்றியும், மிக நன்றாகவே தெரிந்து கொள்ள முடிந்துள்ளது.

    உங்கள் பதிவுகளுக்கு மட்டும், என்னால் ஏனோதானோ என்று, ஓரிரு பின்னூட்டங்கள் மட்டுமே எனக்குக் கொடுக்கத் தோன்றாது.

    படத்துக்குப்படம், வரிக்கு வரி ஏதாவது எழுதிப் பாராட்டவே என் மனமும், என் கைவிரல்களும் துடிக்கும்.

    இதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.

    அது என்னவோ உங்கள் பதிவுகளில், எழுத்தில் என்னால் எடுத்துரைக்க முடியாத ஏதோ ஒரு மாபெரும் சக்தியிருப்பதை என்னால் நன்கு உணரமுடிகிறது.

    கிட்டத்தட்ட உங்கள் பதிவுகளுக்கு நான் அடிமையாகி விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.

    நாம் ஒருவரையொருவர் இதுவரை நேரில் சந்திக்க சந்தர்ப்பம் ஏதும் அமையாது போயினும், இனியும் அதேபோல கடைசிவரை சந்தர்ப்பம் அமையாமலேயே போனாலும் கூட, எழுத்துலகில் நமக்குள் ஏதோ ஓர் உறவு நீடிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே.

    இதை ஜன்ம ஜன்மமாக தொடரும் உறவு போல உணர்கிறேன்.

    தங்களின் ஒரு சில பதிவுகளுக்கு, தாங்கள் பதிவிட செலவழித்த
    மொத்த நேரங்களுக்கு மேல், நான் பின்னூட்டமிட மட்டும் அதிக நேரங்கள்
    எடுத்துக்கொண்டிருப்பேன் என்பது பற்றி தாங்கள் இதுவரை நினைத்துப் பார்த்திருப்பீர்களோ இல்லையோ.அது பற்றி எனக்குத் தெரியாது.

    இருப்பினும் என்னால், உங்கள் விஷயத்தில் மட்டும், இவ்வாறு நேரம் செலவழிப்பதை குறைத்துக்கொள்ளவே முடிவதில்லை என்பதே உண்மை..

    தாங்கள் பதிவிடும் வேகம் இதே ரன் ரேட்டில் போனால் நாளை பிறக்கவுள்ள தமிழ்ப் புத்தாண்டான “ந்ந்தன” வருஷம் முடியும் போது, தங்கள் பதிவுகளின் எண்ணிக்கை ஆயிரத்தை, வெகு சுலபமாகத் தொட்டு விடும் என்று நான் நம்புகிறேன்.


    ”கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?

    கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?

    சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா?

    பதிவெல்லாம் “மணிராஜ்” இன் பதிவாகுமா?”

    என்பதே என் பசுமையான நினைவுகள் என்பதை மட்டும் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

    தங்களின் எழுத்துப்பணி மேலும் மேலும் சிறப்பாக அமையவும், பல்வேறு வெற்றிகளும், பாராட்டுக்களும், பரிசுகளும் உங்களைத்தேடி அவைகளாகவே வந்து சேரவும், என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொல்கிறேன்.

    பிரியமுள்ள,

    vgk

    ReplyDelete
  3. ஆஹா.. தலை வாயிலேயே திவ்ய தரிசனம்!

    அட! அந்த கோபுரமும் கோபுர வாசலும் ஒளிக்கீற்றுகளும் கொள்ளை அழகு!

    வண்ண வண்ணப் பூக்கள்!

    அம்மாடி! அந்தப் பல்லக்கு ஊர்கோலம்-- அத்தனை அழகு! 'கண்ணிமைத்து காண்பார் தம் கண்ணென்ன கண்ணே'
    என்றல்லவா எண்ணத் தோன்றுகிறது!

    மீண்டும் தரிசனம்..

    அடுத்து, அது என்ன, தஞ்சாவூர் பூப்பல்லக்கு அலங்காரம் போல் அல்லவா இருக்கிறது! பார்க்கும் பொழுதே என்ன பரவசம்!

    அதற்கு அடுத்து, குதிரை வாகன சேவையா?..

    அதோ, ஆதித்யன் அன்றையப் புறப்பாட்டிற்குக் கிளம்பி விட்டான்!
    புள்ளினமும், பூக்கூட்டமும்
    இசைக்கத் தொடங்கி விட்டன!

    வளி மண்டலம்- ஒளி மண்டலமென்று புத்தாண்டு வண்ண கோலங்களோடு வடிவழகெடுத்து
    வரும் காட்சி நேர்த்தி தான் என்னே!

    இந்த நந்தன ஆண்டு வரவேற்பு கொள்ளை அழகுங்க..

    ReplyDelete
  4. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. இனிய‌ த‌மிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்க‌ள் ச‌கோத‌ரி! ந‌ல‌மே விளைக‌ அனைவ‌ருக்கும்!

    ReplyDelete
  7. ஐநூறாவ‌து ஐயாயிர‌மாக‌ ப்ரிய‌ வாழ்த்துக்க‌ள்!

    ReplyDelete
  8. வை.கோபாலகிருஷ்ணன் said...//


    அன்பான பராட்டுகளும் , ஊக்குவிக்கும் கருத்துரைகளும் மட்டுமே பதிவிட ஆதார சுருதியாக , பலமான அஸ்திவாரமாக அமைந்திருக்கிறது...

    ஆகவே பதிவுகளைப் பாராட்டி கருத்துரை தருவது தங்களைத் தாங்களே பாராட்டி பெருமைப்படுத்திக் கொள்வதாக உணர்கிறேன்..

    மனம் நிறைந்த அருமையான இனிய நன்றிகள்..

    தமிழ்ப்புத்தாண்டு இனிய வாழ்த்துகள் தங்களுக்கும் அருமை இல்லத்தாருக்கும்....

    ReplyDelete
  9. நிலாமகள் said...
    இனிய‌ த‌மிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்க‌ள் ச‌கோத‌ரி! ந‌ல‌மே விளைக‌ அனைவ‌ருக்கும்!/

    ஐநூறாவ‌து ஐயாயிர‌மாக‌ ப்ரிய‌ வாழ்த்துக்க‌ள்!//

    தமிழ்ப்புத்தாண்டு இனிய வாழ்த்துகள் தங்களுக்கும் அருமை இல்லத்தாருக்கும்....

    வாழ்த்துகளுக்கு ப்ரிய நன்றிகள் தோழி!

    ReplyDelete
  10. சென்னை பித்தன் said...
    500க்கு வாழ்த்துகள்!நந்தன ஆண்டிகள் புதிய எல்லைகளை எட்ட வாழ்த்துகள்!.


    வாழ்த்துகளுக்கு இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  11. ஜீவி said.../

    திவ்யமாய் கொள்ளை அழகாய்
    ரசித்து ரசனையுடன் அளித்த
    மகிழ்வான கருத்துரைகளுக்கு
    மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

    ReplyDelete
  12. Manimaran said...
    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்./


    வாழ்த்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

    தங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.விரைவில் ஆயிரத்தைத் தொட வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  14. கே. பி. ஜனா... said...
    உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    தங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. shanmugavel said...
    தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.விரைவில் ஆயிரத்தைத் தொட வாழ்த்துகிறேன்.//

    வாழ்த்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

    தங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. இராஜராஜேஸ்வரி said...
    வை.கோபாலகிருஷ்ணன் said...//

    //ஆகவே பதிவுகளைப் பாராட்டி கருத்துரை தருவது தங்களைத் தாங்களே பாராட்டி பெருமைப்படுத்திக் கொள்வதாக உணர்கிறேன்..//

    இந்த வரிகளில் தாங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

    ReplyDelete
  17. நான்காவதாக வெளியிடப்பட்டுள்ள என்னுடைய மிகநீண்ட கருத்துரையின் கடைசி வார்த்தை “தெரிவித்துக்கொள்கிறேன்” என்று இருக்க வேண்டும்.

    அவசரத்தில் டைப் செய்யும் போது
    “தெரிவித்துக்கொல்கிறேன்” என தவறாக டைப் செய்யப்பட்டுள்ளது.

    எழுத்துப்பிழை ஆகியுள்ளதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்.

    முடிந்தால் அதைத் திருத்திக் கொள்ளவும் அல்லது முழுப்பகுதியையுமே PUBLISH கொடுக்கமல் நீக்கிக்கொள்ளவும்.

    ReplyDelete
  18. இனிய‌ த‌மிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்!!

    500 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
    தாங்கள், மேலும் சத்விஷயங்களை எங்களுக்கு வழங்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    இடது பக்கம் அரங்கன்.வலது பக்கம் ப்ருத்வியின் சாரதிதானே?

    பூப்பல்லக்கு திருவல்லிக்கேணி?

    ReplyDelete
  19. புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    ஐனூறாவது பதிவா! மலைப்பாக இருக்கிறது. உங்கள் உழைப்புக்கு ஒரு பெரிய வணக்கம்.

    ReplyDelete
  20. வை.கோ பின்னூட்டத்தின் sincerity நெகிழ வைக்கிறது.

    ReplyDelete
  21. தரமான ஐ நூறு பதிவுகளைத் தந்து
    பதிவுலகில் தங்களுக்கென ஒரு தனிப் பெருமையை
    நிலை நாட்டிவரும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. Congragulations Rajeswari.
    Really a great job you had done no doubt.
    Each and everypost of yours is such a great, The pictures..............
    wow i really enjoying it like anything. happy Tamil Newyearsday greetings.
    I prey the almighty to give you all the wealth, health on this niceday

    ReplyDelete
  23. ஆன்மீகத்தோழிக்கு என் அன்பான சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்.உங்கள் தெய்வீக எழுத்திற்கும் வாழ்த்துகள் !

    ReplyDelete
  24. Congrats for 500! Nandhana varuda vaazhthukkal

    I fully endorse Sri via.Gopakrishnan Sir's words!! All the very best to you!

    ReplyDelete
  25. வணக்கம்! ஆரம்பத்தில் திரட்டிகளில் வரும் எல்லா பதிவுகளையும், நேரம் இன்மை காரணமாக மேம் போக்காக படிப்பது ( நுனிப் புல் மேய்வது ) போன்றுதான் உங்கள் பதிவுகளையும் படித்தேன்! உங்கள் வலைப் பதிவில் சுருங்கச் சொல்லி அதிக செய்திகள் மற்றும் மாறுபட்ட வண்ணப் படங்கள், சமரச சமயக் கொள்கை போன்றவைகள் பிறகு என்னை நிறுத்தி நிதானமாகப் படிக்க வைத்தன. என்னையும் உங்கள் பதிவில் இணைத்துக் கொள்ள வைத்தது. தங்கள் 500 – ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்! மேலும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  26. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
    தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ஐந்நூறாவது சிறப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    500-வது பதிவிற்கும்!

    ReplyDelete
  28. 500 வது புத்தாண்டுப் பதிவில் விதம் விதமான படங்களுடன் கலக்கி விட்டீர்கள். அசுர வேகம் தவறு தெய்வ வேகம் என்றுதான் சொல்லவேண்டும். இத்தனை பதிவுகளுக்கு இடையில் பிறருடைய பதிவுகளுக்கும் பின்னூட்டம் இடுகிறீர்கள்.
    வாழ்த்துக்கள்!பாராட்டுக்கள்.

    ReplyDelete
  29. புத்தாண்டு தினத்தில் 500வது பதிவு வெளியிட்டுள்ள தங்கள் பணிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
    அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

    ReplyDelete
  30. 500- வது பதிவுக்கு வாழ்த்துகள். நந்தன வருட புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  31. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  32. புத்தாண்டும் 500-வது பதிவும் ஒன்றாக வந்திருக்கு வாழ்த்துகள்

    இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துகள்

    இன்றைய பதிவு50 தேடுஇயந்திரங்களில் உங்கள் பதிவுகளை இனைக்கலாம்

    ReplyDelete
  33. உங்களின் ஐநூறாவது பதிவிற்கும், இனிய தமிழ் புத்தாண்டிற்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  34. நந்தன ஆண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  35. 500-வது பதிவுக்கு வாழ்த்துக்கள். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். எங்கே சிலரது அரசியல் தீர்மானத்தின்படி தை முதல் தேதிதான் புத்தாண்டின் துவக்கமாகுமோ என்றிருந்தேன்.

    ReplyDelete
  36. வை.கோபாலகிருஷ்ணன் said...
    இராஜராஜேஸ்வரி said...
    வை.கோபாலகிருஷ்ணன் said...//

    //ஆகவே பதிவுகளைப் பாராட்டி கருத்துரை தருவது தங்களைத் தாங்களே பாராட்டி பெருமைப்படுத்திக் கொள்வதாக உணர்கிறேன்..//

    இந்த வரிகளில் தாங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை//

    ஐயா தங்களின் இனிய கருத்துரைகள் பதிவுக்குப் பலம் சேர்க்கின்றன ..விளக்கமளிக்கின்றன.. பதிவிடும் நான் செலவழிக்கும் நேரத்தைவிட படிக்கவும் , பாராட்டுக்கருத்துரை வழங்கவும் தாங்கள் பலமடங்கு நேரம் செலவழிக்கிறீர்கள் என்பதை நானும் உணர்ந்திருப்பதோடு கருத்துரைகள் வழங்குபவர்களும் குறிப்பிட்டுள்ளனர்..

    சாதனை என்று தாங்கள் சொல்வதற்குக் காரணமே தங்களின் நேர்மையான வழிகாட்டல்தான்..

    நான் என் போக்கில் பதிவு எழுதுகிறேனே தவிர எண்ணிக்கை பற்றிய சிந்தனை எதுவும் இல்லை..

    தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ஐநூறாவது பதிவு என்பதும் தங்கள் சித்தமே !

    தவறாக எதுவும் நினைக்கவில்லை என நம்புகிறேன்..

    தவறானால் மன்னிக்கவும்..

    ReplyDelete
  37. 500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    இளவேனிர் கால பழங்கள், பூக்கள் கண்காட்சி அற்புதம்.

    இதை எல்லாம் படைத்த இறைவனின் பூ பல்லாக்கு அலங்காரம் எல்லாம் மனதை கொள்ளைக் கொள்கிறது.

    பிள்ளையார் மாம்பழ வடிவில் உங்கள் வீட்டுக்கு வந்து ஆசிர்வாதம் செய்து விட்டார்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  38. தாங்கள் கடைசியாகக் கொடுத்துள்ள விளக்கங்களுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  39. ;) புஷ்பப் பல்லாக்குகள் வெகு அழகாகப் படமாக்கிக் காட்டப்பட்டுள்ளன்.

    ”அட என்னடி ராக்கம்மா!
    பல்லாக்கு நெளிப்பு
    என்நெஞ்சு குலுங்குதடி”

    என்ற பாடல் “பட்டிக்காடா பட்டணமா” என்ற சிவாஜி
    நடித்த படத்தில் வரும்.
    1972 இல் வெளியான படம்.

    திருமணம் ஆனதும் நானும் என் மனைவியும் சேர்ந்து பார்த்த முதல் படம் இது.

    மலரும் நினைவுகளைக் கிளறியது தங்களின் இந்த புஷ்பப்பல்லாக்கு ப்டம். நன்றியோ நன்றி.

    ReplyDelete
  40. மாம்பழமோ மாதுளையோ விநாய்கருக்கு தும்பிக்கை இருப்பது போல காட்டியிருக்கும் படம் ரஸிக்கத்தக்கதோர் படத்தேர்வு தான்.
    ;)))))

    இயற்கையில் இதுபோல சில விசித்திரங்கள்!

    ReplyDelete
  41. அந்த தும்பிக்கையுடன் காட்டியுள்ள பழத்தின் மேலே காட்டப்பட்டுள்ள வெவ்வேறு கலர்கலரான பூக்களில் தான் எத்தனைக் கொள்ளை அழகு!

    கிளி கொஞ்சும் அழகான படம் அது.

    அருமையான படத்தேர்வு. ;)))))

    ReplyDelete
  42. கடைசிப்படம் பிரைட்டோ பிரைட்டு.

    கண்களைப்பறிக்கும் அழகழகான கலர்கள்.

    எதையாவது கொண்டுவந்து நடுவில் எங்கேயாவது அதைச் சேர்த்து அசத்தி விடுவதில் நீங்க .... நீங்கதான்.

    அவற்றையும் எண்ணிப்பார்த்து விட்டேன்.

    எண்ணிக்கை மிகச்சரியாக 500
    என்றே வந்தது.

    என் கோரிக்கைப்படி, என் விருப்பபடி என் ஆசைப்படி, என் பிரார்த்தனைப்படி தமிழ்ப் புத்தாண்டையும் 500 ஆவது பதிவையும் ஒன்றுசேர அருளித்தந்த அம்மனை வணங்கி மகிழ்கிறேன்.

    ReplyDelete
  43. புத்தாண்டுக்கும், 500வது பதிவுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  44. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  45. 500வது பதிவுக்கு வாழ்த்துகள்.
    உங்களது அனைத்து பதிவுகளும் அருமை.

    ReplyDelete
  46. //அப்பாதுரை said...
    வை.கோ பின்னூட்டத்தின் sincerity நெகிழ வைக்கிறது.

    April 13, 2012 1:44 AM//

    Thank you very much, Sir.
    vgk

    ReplyDelete
  47. middleclassmadhavi said...

    //I fully endorse Sri vai.Gopakrishnan Sir's words!!

    April 13, 2012 7:22 AM //

    Thanks a Lot Mrs. MCM Madam.
    vgk

    ReplyDelete
  48. 86. பிஷூக ஸம்ஸ்துத கோவிந்தா

    ReplyDelete
  49. 2756+12+1=2769 ;)))))))))) 500வது மகிழ்ச்சிப்பகிர்வு. பதிலுக்கு நன்றிகள்.

    ReplyDelete