Friday, April 20, 2012

அற்புதத் திருநாள் அட்சய திரிதியை.



அள்ள அள்ளக் குறையாது அள்ளித் தரும் 
அற்புதத் திருநாள் அட்சய திரிதியை. 

அட்சய என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள்.

அன்று செய்யப்படும் எந்த ஒரு நல்ல காரியமும் அதிக பலன்களைத் தரும் . 

இந்த நன்னாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி எப்போதும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.


ஸ்ரீலட்சுமி வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், 
இந்திரனிடத்தில் சொர்க்க லட்சுமியாகவும், 
மன்னர்களிடத்தில் ராஜலட்சுமியாகவும்
வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், 
குடும்பத்தில் கிரக லட்சுமியாக வும் விளங்குகிறாள். 


பசுக்களில் கோமாதா, யாகங்களில் தட்சிணை, தாமரையில் கமலை, அவிர்பாகத்தில் ஸ்வாகா தேவி என சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்கும் நாராயணனின் இணைபிரியாத தேவியான லட்சுமியை நாம் அட்சய திரிதியை நாளில் சாஸ்திரப்படி பூஜித்தால் லட்சுமி கடாட்சம் கிட்டும்.


நமக்கு உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாமே. 

மஹாலஷ்மி பாற்கடலில் தோன்றியவள்..
உப்பின் பிறப்பிடம் கடல் ஆகவே உப்பு வாங்குதல் மிகவும் விஷேசம்..
அரிசி மற்றும் ஓரிரு ஆடைகள், சிறிய பாத்திரம் வாங்கலாம். 


சித்திரை மாத மளிகையை அட்சய திரிதியை அன்று வாங்கிப் பயனடையலாமே. ஏனெனில் குபேரன் தான் இழந்த சங்கநிதி, பதுமநிதிகளை திரும்பவும் அட்சய திரிதியையில்தான் பெற்றான். 


குசேலன் தன் பால்ய நண்பன் கண்ணனுக்கு சிறிது அவல் கொடுத்து தன் வறுமையைப் போக்கிய நாளும் இதுவே.


 பாண்டவர்கள் வனவாசத்தின் போது சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாளும் இதுதான்.


 மணிமேகலையும் அட்சய பாத்திரம் பெற்ற நாள். 


பிட்சாடனரான சிவன் தன் கையில் ஒட்டியிருந்த கபாலத்தில் காசி அன்னபூரணியிட மிருந்து உணவு பெற்று, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்ட நாளும் இதுதான்.


கௌரவர் சபையில் பாஞ்சாலி ஆடையை துச்சாதனன் உருவும்போது, "அட்சய' என கண்ணன் கூற, பாஞ்சாலியின் புடவை வளர்ந்து அவள் மானம் காத்த நாள் இதுதான். 


பரசுராமர் அவதரித்த நாளும் இதுதான். 
மகாலட்சுமி திருமால்  மார்பில் நீங்கா இடம்பிடித்த நாள். 


கேரள சொர்ணத்து மனையில் பாலசந்நியாசியான ஆதிசங்கரர் கனக தாரா ஸ்தோத்திரம்  பாடி தங்க நெல்லிக்கனி மழை பெய்வித்த உன்னதத் திருநாளும் இதுவே.


இதனை தானத் திருவிழா என்றும் கூறுவர்


அட்சய திரிதியையில்  செய்யும் எல்லா வகை தான- தர்மங்களும் அளவில்லாத பயன்களைத் தரும். 
அன்னதானம் செய்தால் விபத்து நீக்கி உடல்நலம் தரும். 
கல்விக்கு உதவினால் நம் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாடு கிட்டும். 
அன்று குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கலாம்; புத்தகம் வெளியிடலாம்; வீடு, மனை, கிணறு புதுப்பிக்கலாம்; எந்த ஒரு புதிய செயலையும், புண்ணிய செயலையும் செய்யலாம். 


ஆனால் கண்டிப்பாக கடன் மட்டும் வாங்கவே கூடாது.
gifpeanutbutter: a GIF directory for thousands of tumblr GIFs
அட்சய திருதியை அன்று குபேரர் கோவிலை வழிபட்டால் செல்வங்களும் பெருகும். 
Lakshmi+kubera+temple
சென்னை அருகே வண்டலுர் அடுத்த ரத்னமங்கலத்தில் இந்தியாவிலேயே லட்சுமி குபேரருக்கு என்று தனியாக உள்ள ஒரே கோவில் என்ற பெருமையை பெற்றுள்ளது.

கோவிலைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் லட்சுமி கணபதி, குபேர லிங்கம், செல்வ முத்துக்குமரன், யோக ஆஞ்சநேயர், நவகிரகங்கள் உள்ளன. கோசாலையும் உள்ளது. 

செல்வத்துக்கு அதிபதி லட்சுமி. அதைக் கண்காணித்துக் காப்பவர் குபேரன். இவ்விருவரையும் இணைத்து லட்சுமி குபேர பூஜை செய்து வர நிலையான செல்வம் உண்டாகும்.
 
இழந்த செல்வத்தையும் பெற்று புகழோடு வாழலாம். ரத்னமங்கலம் குபேரரையும் லட்சுமியையும் ஒருசேர ஒருமுறை தரிசித்து வந்தால், அவர்கள் வாழ்வில் செல்வம் செழித்தோங்கும் என்பதில் ஐயமில்லை. 

திருப்பதி செல்லும் முன் ரத்னமங்கலம் குபேரனை வழிபட்டுச் செல்வது மிகவும் விசேஷமானதாகும்.

வளமான வாழ்வுக்காக இங்கு லட்சுமி குபேர பூஜை செய்வது விசேஷம். 

இந்த பூஜையை பவுர்ணமி மற்றும் அமாவாசையில் செய்வது மிகுந்த பலன் தரும். 

குபேரன் காட்சி தரும் கோலமே பெரும் பரவசத்தை ஏற்படுத்தும். 

சிரித்த முகம், இடது கையில் சங்கநிதி, வலது கையில் பதுமநிதி அடங்கிய கலசத்தை அணைத்துக் கொண்டு அன்னை லட்சுமி, துணைவி சித்தரிணீயுடன் குபேரன் தரும் காட்சியை காண கண் கோடி வேண்டும்.
பிரம்மாவின் புத்திரரான புலஸ்தியரின் பேரன் குபேரன்.  

மாற்றாந்தாய்க்கு பிறந்தவனே ராவணன். 

முதலில் இலங்கை அதிபதியாக இருந்தவர் குபேரனே. 

அவரிடம் இருந்து ராவணன் ஆட்சியைக் கைப்பற்றி விட்டான்.

குபேரனின் விமானம் எங்கு பறந்து சென்றாலும் அந்த விமானம் தங்கம், முத்து ஆகியவற்றை சிந்திக் கொண்டே செல்லும். 

குபேரனை ராவணன் இலங்கையில் இருந்து வெளியேற்றியதைத் தொடர்ந்தே அவன் பல சோதனைகளைச் சந்திக்க நேர்ந்தது ... 

குபேரன் சிவனிடம் அதிக பக்தி கொண்டவர். 

குபேரன் கடுந்தவம் புரிந்து சிவனை வழிபட்டார்.

அவரது பக்திக்கு மெச்சிய சிவனும், பார்வதி சமேதராகக் காட்சி தந்தார். 

சிவனுடன் அழகே வடிவான பார்வதியைக் கண்ட குபேரன், ஆஹா இப்படியொரு தேவியை இதுநாள் வரை துதிக்கவில்லை என்று எண்ணினான். 
இந்த நினைப்பில் குபேரனின் ஒரு கண் துடித்து அடங்கியது. 

இதைப் பார்த்து பார்வதி மிகவும் ஆத்திரமடைந்து, 
குபேரனின் துடித்த கண்ணை வெடிக்கச் செய்தாள்.
 
குபேரனுக்கு ஒரு கண் போய் விட்டது. 

பின், அவர் மன்னிப்பு கேட்க, பார்வதியும் பெருந்தன்மையுடன் குபேரனை மன்னித்தாள். 

ஆனால், போன கண் போனது தான் என்றாலும் அதற்குப் பதிலாக சிறிய கண் ஒன்றை குபேரனுக்கு தோன்றும்படி செய்தார் சிவபெருமான். 

அத்துடன் குபேரனின் தவத்தையும், பூஜையையும் மெச்சி எட்டு திக்கு காவலர்களில் ஒருவராக குபேரனை சிவன் நியமித்தார்.
 
அதன்பின், லட்சுமிதேவி குபேரனை தன தானிய அதிபதியாக்கினாள். 

அதாவது பணத்துக்கும், தானியத்துக்கும் அவர் சொந்தக்காரர் அல்ல, அவற்றை கண்காணிப்பது மட்டுமே அவர் பொறுப்பு. கொடுப்பது அன்னை லட்சுமி.
 
அட்சய திருதி விழா:
ரத்ன மங்கலம் ஸ்ரீலட்சுமி குபேரர் கோவிலில் அட்சய திருதியையொட்டி சிறப்பு பூஜை நடைபெறுகிறது.  

விஸ்வரூப தரிசனத்துடன், கோ பூஜை செய்து சுக்ரனின் அதிதேவதையான குபேர லட்சுமி ஆராதனையும் அதை தொடர்ந்து மகாலட்சுமிக்கு உகந்த ஸ்லோகமும், ஸ்ரீசுத்தம் மற்றும் லட்சுமி அஷ்டகம் படித்து அன்று நாள் முழுவதும் ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்லோகம் படித்து பக்தர்கள் பூஜை செய்வார்கள்.
 
அவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளியினால் ஆன நாணயங்களும், பச்சை நிற குங்குமத்துடன் கூடிய அட்சய திருதியை சிறப்பு பிரசாதமான ஹரி பலம் என்று அழைக்கப்படும் நெல்லிக்கனி அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படும். 
பக்தர்கள் தங்கள் கொண்டு வரும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை குபேர லட்சுமியிடம் வைத்தும் அட்சய திருதியை சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு ஆசி பெறலாம்.
 

அட்சய புரீஸ்வரர் கோவில்:
அட்சய திருதியை அன்று அட்சயபுரீஸ்வரர் கோவிலில் வழிபட்டால் காரிய தடைகள் நீங்கி சகல யோகங்கள் பெறலாம். இக்கோவில் தஞ்சாவூர் அருகே பட்டுக்கோட்டையில் இருந்து தெற்கே 30 கி.மீ. தொலைவில் விளங்குளம் என்ற பகுதியில் அமைந்துள்ளது. பேராவூரணியிலிருந்து நகரப் பேருந்திலும் இந்தத் திருக்கோவிலுக்கு செல்லலாம்.
சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் அருள் பாலிக்கும் ஈசன் திருநாமம்- ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர். 
புராணங்களின்படி சூரிய பகவானின் மகன் சனி பகவானுக்கும் இன்னொரு மகன் எமதர்மனுக்கும் இருந்த பகை காரணமாக ஒரு முறை சனி பகவானின் காலில் எமதர்சனம் ஓங்கி அடிக்க... சனி பகவானுக்கு ஊனம் ஏற்பட்டது. 

கால் ஊனத்துடன் விமோசனம் தேடி மானுட ரூபத்தில் பூலோகத்தில் பல திருத்தலங்களுக்கும் அலைந்தார். அப்போது விளாமரங்கள் அடர்ந்த (விளங்குளம்) பகுதிக்கு வந்தபோது, பரந்து விரிந்து தரையில் காணப்பட்ட ஒரு விளாமரத்தின் வேர் தடுக்கி, அருகில் உள்ள ஒரு பள்ளத்தில் விழுந்து விட்டார் சனி பகவான்.
அட்சய திருதியை நாளில்:
அந்த நாள் திருதியையும் பூச நட்சத்திரமும் சனி வாரமும் சேர்ந்த புனித நன்னாள். சனி விழுந்த அந்த நேரத்தில், பல கோடி யுகங்களாக மறைந்திருந்த பூச ஞான வாவி என்ற ஞான தீர்த்தம் சுரந்து, சனி பகவானை மேலெழுப்பி கரை சேர்த்தது. 

இந்நிகழ்வில், சனி பகவானின் கால் ஊனம் நிவர்த்தி ஆகி விட்டது.
மேலும் விளா வேர் தடுத்து விழுந்து சுரந்த குளமானதால், விளம்குளம் என்றழைக்கப்பட்டு, பின்னர் இந்தக் கிராமம் விளங்குளம் என்று அழைக்கப்படுகிறது. 

 திருக்கோவிலில் விஜய விநாயகர் மேற்கு முகமாக இருந்து அரள்பாலிக்கிறார். 
அட்சயபுரீஸ்வரர் சனிக்குக் காட்சி அளித்து, இந்த தலத்தில் திருமணப் பிராப்தியையும் அவருக்குத் தந்தார்.

பின்னர் குறைவில்லாத செல்வத்தை அள்ளித்தரும் அட்சயபுரீஸ்வரராக இங்கு நிலை கொண்டார். 

இறைவன் இங்கே, அருவுருவமாக லிங்க வடிவில் அருள்புரிகிறார். அம்பாளுக்கு, அபிவிருத்தி நாயகி எனும் திருநாமம் வழங்கப்பெறுகிறது. 
[Gal1]
ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீநாகர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீசண்டிகேஸ்வரர், ஸ்ரீசூரிய பகவான், ஸ்ரீபைரவர், ஸ்ரீகஜலட்சுமி உள்பட பல தெய்வங்களுக்கும் சந்நிதி உண்டு.
திருமண தடை நீங்கும்:
சனி கால் ஊனம் நீங்கி மந்தா, ஜேஷ்டா எனும் இரு பத்தினியரை மணம் செய்து கொண்டு ஆதி பிருஹத் சனீஸ்வரராக, திருமணக் கோலத்தில் இங்கே அருள்பாலித்து வருகிறார். 
[Gal1]
இங்கு அமைந்துள்ள பூச ஞான வாவி தீர்த்தத்தில் பூச நட்சத்திரம், திருதியை, சனிக்கிழமை ஆகிய ஏதாவது ஒரு நாளில் நீராடி வழிபட்டால், உடல் வகை துன்பங்களும், நரம்பியல் சம்பந்தப்பட்ட நோய்களும் நிவர்த்தியாகும்.

திருமணத் தடைகளும் விலகும். 

சனி பகவானின் நட்சத்திரம் பூசம். 

பூச மருங்கர் எனும் சித்தர், சனிப்பரணி சித்திரை சத்குருவாக கொண்டவர். 

பூசமருங்க சித்தர் ஸ்தூல, சூட்சும வடிவங்களில் வழிபடும் தலம் விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் ஆலயம்.

அட்சய திரிதியை அன்று விளங்குளம் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் ஆலயம் சென்று சிறப்பு வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
[Image1]
 மூல மூர்த்தி சிவலிங்கத்துக்கு, சந்தனக் காப்பில் முத்துக்கள் பதித்து வழிபட வேண்டும். 

பின், ஸ்ரீசனீஸ்வரமூர்த்திக்கு புனுகு கலந்த சந்தனக் காப்பிட்டு, அதில் எள், அரிசி, கோதுமை, பாதாம் பருப்பு, குங்குமப்பூ மற்றும் நவதானியங்களைப் பதித்து பூஜிக்க வேண்டும்.
இதனால், சந்ததிகள் உணவுப் பஞ்சம் இல்லாமல் நல்வாழ்வு வாழ்வார்கள். 

பெண் பிள்ளைகள் புகுந்த வீட்டில் துன்பமில்லாமல் வாழ்வர். 

அட்சய திருதியை அன்று குறைந்தது ஒரு வார காலத்துக்கு தேவையான உணவுப் பண்டங்களை தானமாக அளிக்க வேண்டும். இது நவக்கிரகங்களின் அனுக்கிரக சக்திகளைப் பெருக்கிடும். அருள் பெருகும்.......
Lakshmi+kubera+temple

20 comments:

  1. அக்‌ஷய திருதியை பற்றிய அழகான தெளிவான விளக்கங்களும் படங்களும் நல்லா இருக்கு

    ReplyDelete
  2. எப்போதும் போல வித்தியாசச் சிறப்புடன் படங்கள்...பாராட்டுகள்

    ReplyDelete
  3. அக்ஷய திரிதியை பற்றி அருமையான விளக்கங்கள்...
    அழகான படங்கள்...நன்றி...

    ReplyDelete
  4. அக்ஷய திருதியை பற்றி விரிவான பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. பதிவு என்றால் இதுவே பதிவு.

    அனைத்துத் தகவல்களும் அக்ஷயமாகத் தரப்பட்டுள்ளன.

    மின் தடையிலும், தட்டுத்தடுமாறி, டார்ச் உதவியினாலும், இன்வெட்டெர் உதவியினாலும் ஒரு முறை படித்து விட்டேன்.

    அக்ஷயமாக கருத்தளிக்க நள்ளிரவில் மீண்டும் முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  6. முதலில் காட்டப்பட்டுள்ள ஜொலிக்கும் பிள்ளையார், கண்ணடிக்கும் மஹாவிஷ்ணு, தொந்திப்பிள்ளையார் போன்ற உருவத்துடன் துதிக்கை இல்லாத குபேரன் அதுவும் தங்கக்காசுகள் நிரம்பிய இரண்டு கொப்பரைகளுடன் உள்ள படம் அனைத்தும் அருமை.

    [ஆமாம் எலியார் எங்கே அங்கு வந்துள்ளார்? ஒரு வேளை அவரும் குபேரனை பிள்ளையார் என்றே நினைத்து விட்டாரோ?]

    ReplyDelete
  7. உப்பு முதல் மளிகை சாமான்களும், வீடு மனை போன்ற அனைத்தும் வாங்கலாம்; ஆனால் கண்டிப்பாக கடன் மட்டும் வாங்கவே கூடாது.

    அழகான அறிவுரை.

    அக்ஷய திருதியை மட்டுமல்ல, எப்போதுமே, எதற்குமே முடிந்தவரை கடன் வாங்காமல் இருக்கப் பழகிக்கொள்வதே நல்லது தான்.

    என் கொள்கை அதுபோலத் தான் இன்றுவரை.

    கடன்பட்டான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்றல்லவா கம்பர் சொல்லியுள்ளார்.

    [கடன் இல்லாமலேயே எவ்வளவோ விஷயங்கள் மனதைக் கலங்கடிக்கத் தான் செய்யுது.]

    பல்வேறு தானங்கள் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் வெகு அழகாகத் தெரிவித்துள்ளீர்கள்.

    Very Very Informative Post. ;)))))

    ReplyDelete
  8. நீங்கள் கடைசியில் காட்டியுள்ள படம் மிகவும் விசேஷமானது.

    27+20+25=72
    22+24+26=72
    23+28+21=72
    ========
    72 72 72
    ========

    இதன் பெயர் குபேர யந்திரம்.

    இது மிகப்பெரிய அளவில் செப்புத் தகட்டில் செய்யப்பட்டு, ஒரு கட்டையில் அதைப்பதித்து, எங்கள் BHEL CASH OFFICD - STRONG ROOM - CASH CHEST இன் மேல் வைத்திருக்கிறோம். வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்வோம்.

    அது இருக்கும் இடத்தில் பணம் அக்ஷயமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை தான்.

    இதை நான் என் அனுபவத்தில் கண்டுள்ளேன்.

    இப்போதும் அது அங்கு தான் உள்ளது.
    பொறுப்பாக அதைப்பற்றி எனக்குப் பிறகு வந்த அதிகாரியிடம், என்னிடமிருந்து பொறுப்புக்களை Take over செய்தவரிடம் சொல்லிவிட்டுத் தான் வந்திருக்கிறேன்.

    அது அங்கு இருக்கும் வரை BHEL நல்ல இலாபகரமாகவே ஓடும்.

    நான் நினைத்திருந்தால் ஓய்வுபெற்று வரும்போது அதை என் வீட்டுக்கே எடுத்து வந்திருக்கலாம்.

    இருப்பினும் தனி மனிதனைவிட கம்பெனி நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்.

    ஏனென்றால் ஒரு கம்பெனி நன்றாக செயல்பட்டால், இலாபகரமாக இயங்கினால், பல தொழிலாளர்களும், அவர்கள் குடும்பங்களும் செழிப்படைவார்கள். பலருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

    இதைப்படிக்கும் அனைவரும் அந்த யந்திரத்தில் உள்ள நம்பர்களை அப்படியே ஒரு பேப்பரிலோ அட்டையிலோ எழுதி, மஞ்சள் தடவி, தங்கள் வீட்டு பணப்பெட்டியில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.

    பணம் அக்ஷயமாகப் பெருகும்.

    ReplyDelete
  9. அற்புதத் திருநாள் அக்ஷயத்திருதீயை பற்றி அற்புதமாக வெளியிட்டுள்ள பதிவுக்கு மிகவும் நன்றிகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  10. அந்த குபேர யந்திரத்தில் எப்படிக் கூட்டினாலும் 72 வரும்.

    மேலிருந்து கீழாக

    படுக்கை வசமாக

    ஒரு மூலையிலிருந்து மறு மூலை வரை

    ஆக எட்டு விதமாக [10 விதமாக என்று கூடச் சொல்லலாம் - Top corner to bottom corner & bottom corner to top corner என்றால் 10 விதமாக ஆகும்] எப்படிக் கூட்டினாலும் அந்த 3 நம்பர்களின் கூட்டுத்தொகை 72 வரும்.

    அது தான் குபேர யந்திரத்தின் ராசியான எண்ணாகும்.

    ReplyDelete
  11. தகவல்கள் அறிந்தேன்.

    ReplyDelete
  12. அக்ஷ்ய திருதியை அன்று செய்ய வேண்டிய நல்ல செயல்கள் மட்டும் அல்லாமல் செய்யகூடாதவையில் அன்று கடன் வாங்க கூடாது என்பது மிகவும் அவசியமானசெய்தி.

    படங்கள் எல்லாம் அருமை.

    கோபாலகிருஷ்ணன் சார் குபேரன் பக்கத்தில் இருப்பது கீரிப்பிள்ளை

    ReplyDelete
  13. விளக்கமான தகவல்களுடன் பகிர்வு அருமை. நன்றி.

    ReplyDelete
  14. Very good post as usual. The first colourful Ganesha is super, I spent much more time with that pretty Ganesha.
    I wish your writing also can grow like Askshya so that many can fenefit.

    viji

    ReplyDelete
  15. கோமதி அரசு said...

    //கோபாலகிருஷ்ணன் சார் குபேரன் பக்கத்தில் இருப்பது கீரிப்பிள்ளை//

    அப்படியா மேடம்.

    தகவலுக்கு மிக்க நன்றி.

    இது நான் இதுவரை அறியாத செய்தி.

    தங்கள் மூலம் அறிந்து கொண்டது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    நன்றி நன்றி ந்னறி.

    Thanks a Lot Madam. vgk

    ReplyDelete
  16. அக்‌ஷய த்ருதியை பற்றிய விளக்கமான பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  17. 95. ஹத்தீராமபியா கோவிந்தா

    ReplyDelete
  18. மளிகை வாங்குவது இந்நாளில் என்பது
    மிக நல்ல ஆலோசனை .
    படங்களும் யந்திரமும் விளங்குளம் கோவில்
    பற்றிய தகவல்களும் அருமை

    ReplyDelete