Monday, April 23, 2012

குபேர பூஜை





Laxmi Kubera Puja



பாற்கடலை தேவர்கள் கடைந்தபோது குபேரன் உருவானான். 
லட்சுமி தேவியின் அருளைப் பெற்ற அவன், வற்றாத செல்வத்துக்குச் சொந்தக்காரன் ஆனான். இவனது எஜமான் ஸ்ரீமன் நாராயணன். 

ரிக் வேதத்தில், குபேரனுடன் மகாலட்சுமி, தன் தேவதைகளுடன் நியமிக்கப்பட்டுள்ளதாக இருக்கிறது. 

மகாலட்சுமியின் அஷ்ட சக்திகளில் இரண்டான
 ‘சங்க நிதி’, ‘பதும நிதி’யை குபேரன்தான் ரட்சிக்கிறார். 

சங்கநிதி, பதுமநிதி இருவரும் குபேரனின் 
இருமருங்கிலும் வீற்றிருக்கிறார்கள். 
சிவபூஜையில் லயிக்கும் குபேரன் ராஜ யோகத்தை அளிக்க வல்லவன், தனலட்சுமியும், தைர்ய லட்சுமியும் சர்வ சக்திகளாக குபேரனிடம் வாசம் செய்வதால் தனத்திற்கும், வீரத்திற்கும் ராஜனாகிறார். 

திருப்தியுடன் கூடிய சுகத்தில் தினமும் லயிப்பதால் கோபதாபங்கள் எழாமல் சாந்தகுணம் கொண்டுள்ளார். 

யட்சர்களுக்கு தலைவனான குபேரன் ஸ்ரீராஜராஜேஸ்வரியின் பஞ்சததி மந்திரத்தை சதா ஜபித்த வண்ணமிருப்பவன். 

இதனால் சகல சக்திகளையும் தன் வசம் கொண்டு பக்தர்களுக்கு ‘இல்லை’யென்று கூறாமல் வாரி வழங்கிடும் பெருங்குணம் கொள்கிறான். 

“எந்த பூஜை செய்தாலும், எந்த தெய்வத்தை துதித்து பூஜை செய்தாலும் முடிவில் ராஜாதிராஜனாகிய குபேரனை வணங்கினால்தான் பூஜையின் முழு பலன் கிட்டும் என்பார்கள். 

ஆகவே, கற்பூர ஆரத்தி காட்டும்போது யஜுர் வேதத்தில் இடம்பெறும்;

“ராஜாதி ராஜாய ப்ரஸய ஸாஹிநே
நமோ வயம் வைஸ்ரவணாய குர்மஹே!

ஸ மே காமாந் காம காமாய மஹ்யம்

கர்மேஸ் வர வைஸ் ரவணாய ததாது!
குபேராய வைஸ்ரவணாய, மஹாராஜாய நம!!


என்ற சுலோகத்தைக் கூறி, மங்கள ஆரத்தி செய்கிறார்கள். 

குபேர பூஜை துவங்குவதற்கு முன்னால் எப்போதும் போல் விநாயகரை தியானித்து அவரை பூஜிக்க வேண்டும். 

தொடர்ந்து லட்சுமி தேவியை விளக்கு வடிவிலோ அல்லது படமாகவோ வைத்து தூப தீபம் போன்ற பதினாறு உபசாரங்கள் செய்து, அஷ்டோத்திர (நூற்றியெட்டு) திருநாமங்களைக் கூறி, அடுத்து நவகிரகங்களை பூஜித்து, தொடர்ந்து தேவி வழிபாடு செய்ய வேண்டும்.

பசுக்களுக்கு பழம் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும். பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜையை குபேர பூஜையாகக் கருத சாஸ்திரத்தில் இடமிருக்கிறது. 

செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம். சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வைத்திருக்க வேண்டும்.


எண்களை வெள்ளை அரிசிமாவினாலும் , 
கட்டங்கள் சிவப்பு குங்குமத்தாலும்,
வார்தையை மஞ்சள் பொடியினாலும் வரையவேண்டும்..


எண்கள் கலையாமல் நாணயம் வைத்து யந்திரத்தின் 
முன் குத்துவிளக்கு ஏற்றிவைத்து பூஜை தொடங்கவேண்டும்..

மகாலஷ்மி தாயாரிடம் கடன்கள் தீர அல்லது வரவேண்டிய பணம் தடங்கலின்றி கிடைக்க ,நிறைய லாபம் வர  நம் கோரிக்கையை சொல்லி நாணயத்தின் மீது பூக்களைப்போட்டு மனதாரப் பிரார்த்திக்கவேண்டும்..

நம்முடைய பக்திபூர்வமான கோரிக்கையுடன் ஒன்பது முறை வேண்டிக்கொண்டு பூஜை முடிந்து கற்பூர ஹாரத்தி காட்டி பூஜையை
நிறைவு செய்து பலனடையலாம்..

குபேரனை நூற்றியெட்டு திருநாமங்களால் பூக்களைக் கொண்டு அர்ச்சித்து, இனிப்புப் பண்டங்களை நிவேதனம் செய்து பூஜையை நிறைவு பெறச் செய்ய வேண்டும்.
Shree Lakshmi Kubera Temple's  Kubera Pooja Box
Kubera Rudraksha Mala 








Sri Lakshmi Kubera Yanthram Moola Mantra

Om Shreem Hreem Im Kubera Lakshmiai 

Kamaladharinyai Dhana Akrashinyai Swaaha

17 comments:

  1. படங்கள் அருமையோ அருமை

    அழகிய விளக்கங்கள்

    ReplyDelete
  2. லட்சுமியை வரவேற்கும் குபேர பூஜையை செய்யும் வழிமுறைகளை விரிவாக விளாக்கமாக சொல்லி தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  3. //யட்சர்களுக்கு தலைவனான குபேரன் ஸ்ரீராஜராஜேஸ்வரியின் பஞ்சததி மந்திரத்தை சதா ஜபித்த வண்ணமிருப்பவன். //

    அதானே பார்த்தேன்! ;)))))

    மற்ற கருத்துக்கள் நள்ளிரவுக்குள் வழக்கம் போல வரும்.

    ReplyDelete
  4. //“எந்த பூஜை செய்தாலும், எந்த தெய்வத்தை துதித்து பூஜை செய்தாலும் முடிவில் ராஜாதிராஜனாகிய குபேரனை வணங்கினால்தான் பூஜையின் முழு பலன் கிட்டும் என்பார்கள்.

    ஆகவே, கற்பூர ஆரத்தி காட்டும்போது யஜுர் வேதத்தில் இடம்பெறும்;


    “ராஜாதி ராஜாய ப்ரஸய ஸாஹிநே
    நமோ வயம் வைஸ்ரவணாய குர்மஹே!
    ஸ மே காமாந் காம காமாய மஹ்யம்
    கர்மேஸ் வர வைஸ் ரவணாய ததாது!
    குபேராய வைஸ்ரவணாய, மஹாராஜாய நம!!//

    அருமையோ அருமை!

    இன்று உங்களாலேயே இதை யஜுர்வேதியான நான் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  5. //பசுக்களுக்கு பழம் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும்.//

    ஆஹா! வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்! ;)))))

    //பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜையை குபேர பூஜையாகக் கருத சாஸ்திரத்தில் இடமிருக்கிறது. //

    பசுக்களின் தேகத்தில் இல்லாத தேவதைகளோ தெய்வங்களோ இல்லை என்பார்களே!

    குபேரனும் இருக்கிறாரா!! சந்தோஷம், சந்தோஷம்.

    ReplyDelete
  6. //எண்களை வெள்ளை அரிசிமாவினாலும், கட்டங்கள் சிவப்பு குங்குமத்தாலும், வார்த்தையை மஞ்சள் பொடியினாலும் வரையவேண்டும்.

    எண்கள் கலையாமல் நாணயம் வைத்து யந்திரத்தின் முன் குத்துவிளக்கு ஏற்றிவைத்து பூஜை தொடங்கவேண்டும்//

    சொல்லிய செய்தி மகத்தானது.

    நீங்கள் இவற்றையெல்லாம் பொறுமையாகப் பொறுப்பாகச் செய்வது போலவும், நான் அதை அருகில் நின்று ரஸிப்பது போலவும் கற்பனை செய்து பார்த்தேன்.

    நல்ல பயனுள்ள தகவல்களாக அளித்துள்ளீர்கள்.

    எல்லோரையும் இதுபோல செய்ய வைத்து, கோடீஸ்வரர்களாகவும், கோடீஸ்வரிகளாகவும் ஆக்கி விடுவீர்கள் போலத் தோன்றுகிறது.

    நான் ஏற்கனவே கோடீஸ்வரன் தான், ஒரு .. கோடி வீட்டில் குடியிருப்பதால், மட்டுமே!

    [கோடி + வீட்டு + ஈஸ்வரன் = கோடீஸ்வரன் தானே? ]

    ReplyDelete
  7. குபேர யந்த்ரம், மந்த்ரம், விளக்கங்கள், விளக்குகள், கோலம் போடும் முறை, பூஜை செய்யும் முறைகள் என ஒரே கலக்கலான பதிவு தான் இது.

    படித்ததும் மிகுந்த் சந்தோஷம் ஏற்படுறது.

    கடுமையான உழைக்கிறீர்கள்.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    நீங்கள் மேலும் மேலும் பலகோடிகளுக்கு அதிபதியாக
    வாழ்த்துகள் / ஆசிகள்.

    அந்த செல்வத்திற்கே அதிபதியான குபேரனே ஸ்ரீஇராஜராஜேஸ்வரி பஞ்சததி மந்திரத்தைத்தான் ஸதா ஜபித்த வண்ணமிருக்கிறார் என்றால் நாங்களெல்லாம் எம்மாத்திரம்?

    விடமாட்டோம். மந்திர தந்திரமெல்லாம் ஜபிக்கா விட்டாலும், தினமும் ஸதா ஸர்வகாலமும் உங்கள் பதிவுகளைப் படித்துக்கொண்டே இருப்போம்.

    அதற்கே நிச்சயம் பலன் உண்டு என்பதை என்றைக்கோ நான் தெரிந்து கொண்டு விட்டேனாக்கும்! ;)))))

    ReplyDelete
  8. http://gopu1949.blogspot.in/2012/02/blog-post.html

    இந்த வருஷம் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி மேற்படி லிங்கில்


    ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம்
    [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது]

    என்பதை வெளியிட்டிருந்தேன்.

    பிப்ரவரி மாதத்திற்கு மொத்தமே 29 நாட்கள். ஆனால் அந்த மாதம் மட்டும் நான் வெளியிட முடிந்த மொத்தப்பதிவுகள் 34.

    என்னைப்பொருத்தவரை இது ஒரு சரித்திர சாதனை தான்.

    உங்களைப்போலவே, அந்த மாதத்தில் தினமும் ஒரு பதிவுக்கு மேல் கொடுக்க முடிந்துள்ளது என்னால். இதற்கு என்ன அர்த்தம்?

    குபேரன் பூஜிக்கும் ஸ்ரீஇராஜராஜேஸ்வரி தேவியின் மகிமை தானே.

    உங்கள் பெயர் ராசி அப்படி!

    மகிழ்ச்சியோ மகிழ்ச்சியான இந்த செய்தியை அனைவருக்கும் தெரிவிக்க ஆசைப்பட்டு இங்கு இப்போது குறிப்பிட்டுள்ளேன்.

    ReplyDelete
  9. அடேயப்பா எத்தனை படம்? அருமை. பாதி வரை நினைத்தேன் படம் தானோ ஆக்கம் என்று. மிக நன்று வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  10. அடேயப்பா எத்தனை படம்? அருமை. பாதி வரை நினைத்தேன் படம் தானோ ஆக்கம் என்று. மிக நன்று வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  11. திருப்தியுடன் கூடிய சுகத்தில் தினமும் லயிப்பதால் கோபதாபங்கள் எழாமல் சாந்தகுணம் கொண்டுள்ளார்.//


    நிறைவு இல்லா மனம் தானே கோபத்திற்கு ஆளாகும்.

    லட்சுமி குபேர பூஜை செய்து நிறைவான வாழ்க்கை வாழ்வோம்.
    படங்கள். செய்திகள் எல்லாம் அருமை.
    நன்றி.

    ReplyDelete
  12. படங்கள் எல்லாமே அருமையாக இருந்தது.

    ReplyDelete
  13. குபேர பூஜையை செய்யும் வழிமுறைகளை விரிவாக விளாக்கமாக சொல்லி தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  14. லட்சுமிகரம் - அபாரம்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. 98. ஜகத்சாக்ஷிரூபா கோவிந்தா

    ReplyDelete