ஆஸ்திரேலியாவின் 'தோட்ட நகரம்' என
Toowoomba நகரம்அழைக்கப்படுகிறது...
ஆஸ்திரேலியாவின் கிழக்கு மாநிலமான குவீன்ஸ்லாந்தின் தலைநகரம் பிரிஸ்பேன் நகரத்தின் மேற்கே 130 கி.மீ. தொலைவில், கடல் மட்டத்துக்கு 700மீ. உயரத்தில் அமைந்துள்ள நகர் Toowoomba
Toowoomba மலர்த்தோட்டங்கள் மலர்விழாவில் மலர்ந்து மணம் பரப்பி மனதை மகிழ்வித்து மலரச்செய்கின்றன்..
நகரின் தகவல் மையம் மேப்பும், முகவரிப் பட்டியலும் இலவசமாக வழங்குகிறது. அதை வைத்துக்கொண்டு தேர்ந்தெடுத்துப் போய் வருவது வீண் அலைச்சலைத் தவிர்க்கிறது. அவசியம் காண வேண்டிய தோட்டங்களைப் பற்றியும் தகவல் மையம் தெரிவிக்கிறது
ஆண்டுதோறும் மலர் விழா (கார்னிவல்) நிகழ்கிறது
விழாவுக்கு ஏற்பாடு செய்கிற நகர நிர்வாகம் தோட்டங்களைப் பெரியவை, சிறியவை, புதியவை, நர்சரி, கல்லூரித் தோட்டங்கள் எனப் பலவகையாய்ப் பிரித்து அவற்றுள் சிறந்தவற்றுக்கு வகைக்கு மூன்று பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கிறது.
பரிசுக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுக்க நடுவர்கள் நியமிக்கப் படுகிறார்கள்.
நகரமக்கள் அவரவர் இல்லத் தோட்டங்களில் கண்ணைப் பறிக்கும் புதுப்புது வகைப் பூச்செடிகளைக் கலைநயத்துடன் பொருத்தமான இடங்களில் வளர்த்தும் மலர்த் தொட்டிகளை அங்கங்கு நேர்த்தியாக அமைத்தும் அனைவரும் வந்து பார்த்துக் களிக்க ஏற்பாடு செய்கிறார்கள்.
ஆண்டுதோறும் மக்களை வரவேற்கும் தோட்டங்கள் எண்ணிக்கை அதிகமாகிறது.
பெரிய தோட்டங்கள் 5000 சதுர அடிக்கு மேலும் பரப்புடையவை.
செடி விற்பனையும் உண்டு. பற்பல தெருக்களில் உள்ள அந்தத் தோட்டங்கள் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் போய்க் கண்டு மகிழ்வதற்கு சில நாட்கள் வேண்டும்...
Gold Coast Tours to Toowoomba Carnival of Flowers
அணிவகுப்பு ஊர்வலம் வாத்தியக்காரர்கள் இன்னிசை வழங்கியபடி நடைபோட, மலர்களால் தங்களை அலங்கரித்துக் கொண்ட மக்கள் தொடர்ந்து வர, அலங்கார ஊர்திகள் வரிசையாய்ச் செல்லப் பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்த்துப் பரவசமுறுகிறார்கள்.
ஊர்வலத்தில் புகழ் பெற்றப் பாடகர்கள், தொலைக்காட்சிப் பிரபலங்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள்.
Melon Mania Cathy Finch from Toowoomba.
தினமும் அங்கங்கு பாட்டு, நடனம் எனக் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முன்னிரவில் வாணங்கள் வர்ண ஜாலங்களை வாரியிறைத்து வானத்தை நிறைத்தன..
Empire Theatre Toowoomba
Toowoomba Carnival Of Flowers - Rides 3
http://jaghamani.blogspot.com/2011/07/blog-post_17.html
மலர்க்கடலில் மகாராணி நகரம்...
முதல் பகுதி.. படித்துப்பாருங்கள்...
Wedding Flowers
அட்டகாசமான மலர்கள் கண்ணைப் பறிக்கின்றன. பார்ப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
ReplyDeleteநடுவில் பிள்ளைமலர் பிரமாதம்.
ReplyDeleteபெங்களூர் கூட garden city இல்லியோ?
மலர்களே... மலர்களே... இது என்ன கனவா!
ReplyDeleteஅழகிய மலர்க் கண்காட்சி உங்கள் பக்கத்திலும்! நன்றி.
நல்லதொரு பதிவு..
ReplyDeleteமலர்கள் என்றும் ரசனைக்குரியவை. இங்கேயும் ரசித்து மகிழ்ந்தேன். நன்றி!
ReplyDeleteநல்ல அருமையான மலர்கள்
ReplyDeleteமலரும் மலர் விழா கண்டேன்!
ReplyDeleteமனதில் மகிழ்ச்சி கொண்டேன்!!
அனைத்துப்படங்களுமே அழகு தான்.
ReplyDeleteஇருப்பினும்[மேலிருந்து கீழாக 11 ஆவது படம்] கலர் கலர் பலூன்களாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ள ரயில் வண்டி போன்ற படம் சூப்பர். பிரைட்டோ பிரைட். கண்ணைக் கவரும் விதமாக உள்ளது. பளீச்சோ பளீச்.
இன்று என்னை மிகவும் கவர்ந்துள்ளது.
”மலர்க்கடலில் மகாராணி நகரம்”
ReplyDeleteமீண்டும் சென்று மகிழ்ந்து வந்தோம்.
நாற்காலியில் ஏறி குனிந்து பார்க்கும் குழந்தை அருமை.
அதன் கீழே ஓர் பச்சைக்குதிரை:
அந்தப்பச்சைக் குதிரை மேல் ஏறியோ அல்லது அதை அப்படியே பச்சைக்குதிரை தாண்டியோ மகிழ மனம் விரும்புகிறதே!
குதிரை தின்னும் புல்லாலேயே [புற்களாலேயே] குதிரையை வடிவமைத்துள்ளது, என்னைப் புல்லரிக்கச் செய்கிறதே!!
இயற்கையில் எத்தனையோ அழகழகான பூக்கள். ஒவ்வொன்று ஒவ்வொரு விதம். ஒவ்வொரு நிறம். ஒவ்வொரு அழகு.
ReplyDeleteஅவற்றையெல்லாம் ஒன்று சேர ஒருங்கிணைத்து அனைவரும் கண்டு மகிழும் வண்ணம் காட்சிப்படுத்துவது மிகவும் பாராட்டப்பட வேண்டியதொரு செயல் தான்.
என்னதான் செய்தாலும் எல்லோரும் எல்லா இடங்களுக்கும் சென்று கண்டு மகிழ பிராப்தம் இருக்காது என்பதால் அவற்றை அழகான படங்களாக்கிப் பதிவாகத் தந்துள்ள உங்கள் செயலும் மிகவும் பாராட்டுக்குரியது தான்.
மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
வாழ்த்துகள். நன்றிகள்.
நல்ல படங்கள் ,வாழ்த்துக்கள்.
ReplyDelete1000- MALARHALE MALARUNGAL AMUTHA GIITHAM PAADUNGAL.
ReplyDeleteபூக்கள் சிரிக்கும் தோட்டத்தில் அழிவின் ஆட்சி ஏன்?[தண்ணீர் பிரளயம்]
ReplyDeleteஒரு பூவைக் கண்டாலே
ReplyDeleteஅதன் அழகில்
மனம் துள்ளும்..
இங்கே ஒரு பூக்கள் கூட்டத்தையே
நந்தவனத்தையே கண் முன்
நிறுத்திவிட்டீர்கள்..
கண்கள் அகலவில்லை பூக்களின் அழகு கண்டு..
அழகோ அழகு! அருமைத் தகவல்கள். வாழ்த்துகள் சகோதரி. மலர் என்றால் மயங்காதார் யார்!
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
வண்ணபூக்களின் தொகுப்பு ..மிகவும் அருமை...
ReplyDeleteமனதை மயக்கும் வண்ணப்பூக்கள் வாசனை.மெலோன்ல வழுக்கி ஒரு விளையாட்டா !
ReplyDeleteஅருமையான மலர் கண்காட்சி.
ReplyDeleteவாழ்த்துகள்.
மலர்களை பார்ப்பதே ஒரு ஆனந்தம் ஆயிற்றே..... பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteமனத்தை கொள்ளை கொள்ளும் வண்ணத் திருவிழாக்கோலம்...
ReplyDelete77. ராமகிருஷ்ணா கோவிந்தா
ReplyDelete2681+5+1=2687
ReplyDelete