ஸத்ய வ்ரதஸ்ய த்ரமிலாதிபர்த்து:
நதீஜலே தர்ப்பயதஸ் ததாநீம்:
கராஞ்சளெள் ஸஞ்ஜ்வலிதா க்ருதி:
த்வமதுர்ஸ்யதா” கஸ்சந பால மீந:” (நாராயணீயம்)
ஸ்ரீநாராயணீயம்; ஸ்ரீ குருவாயூரப்பனே சிலாகித்த -நாராயண பட்டத்ரி.இயற்றிய அற்புத நூல்
கிருஷ்ண பக்தரான நாராயண பட்டத்ரி, ஒரு முறை வாத நோயால் பாதிக்கப்பட்டார். மருத்துவத்தால் பலன் இல்லை என்று தெரிந்ததும், ஜோதிடர் ஒருவரிடம் நோய் குணமாக பரிகாரம் கேட்டு வரும்படி சீடனைப் பணித்தார்.
அதன்படி ஜோதிடரிடம் சென்று வந்த சீடன், ''மத்ஸ்யம் தொட்டு ஊண் என்று தங்களிடம் தெரிவிக்கச் சொன்னார்'' என்றான் தயங்கியபடி!
பாவம்... அவனுக்கு, ஜோதிடர் சொன்ன வார்த்தைகளுக்கா உள்ளார்ந்த அர்த்தம் புரியவில்லை. 'மத்ஸ்யம் என்றால் மீன்; மீனைத் தொட்டு உண்டால் வாதம் எப்படி குணமாகும்?' என்று குழம்பினான்.
பாவம்... அவனுக்கு, ஜோதிடர் சொன்ன வார்த்தைகளுக்கா உள்ளார்ந்த அர்த்தம் புரியவில்லை. 'மத்ஸ்யம் என்றால் மீன்; மீனைத் தொட்டு உண்டால் வாதம் எப்படி குணமாகும்?' என்று குழம்பினான்.
ஆனால், நாராயண பட்டத்ரிக்கு, ஜோதிடர் சொன்னதற்கான உள்ளர்த்தம் புரிந்தது!
உற்சாகம் அடைந்தவர், சீடனின் உதவியோடு குருவாயூரப்பன் கோயிலுக்கு விரைந்தார். திருக்குளத்தில் நீராடினார்;
உற்சாகம் அடைந்தவர், சீடனின் உதவியோடு குருவாயூரப்பன் கோயிலுக்கு விரைந்தார். திருக்குளத்தில் நீராடினார்;
சந்நிதிக்குச் சென்று அமர்ந்தவர், மச்சாவதாரம் தொடங்கி பகவானின் அவதாரச் சிறப்பு களையும் பெருமைகளையும் பாடினார்;
நோய் நீங்கப் பெற்றார்.
அதுமட்டுமா? ஸ்ரீகுருவாயூரப்பனின் தரிசனமும் அவருக்குக் கிடைத்தது!
இத்தனை மகிமைகள் கொண்டது ஸ்ரீமந்நாராயணனின் அவதாரக் கதைகள்! குறிப்பாக, மச்சாவதாரக் கதையைப் படிப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும் என்று அருளியுள்ளார் சுகபிரம்மம்...
ஞான நூல் காத்த மீன நாராயணப்பெருமாளை ஞானம் பெற வணங்குவோம்..
கிளி கொத்திய பழம் அந்த மரத்திலேயே சுவை உடைய பழம்
என்பதை அறிவோம்...
என்பதை அறிவோம்...
அதே போல கிளி முகம் கொண்ட சுகப்பிரம் ரிஷியால் பரீட்சித்து ராஜாவுக்கு ஏழு நாட்களே ஆயுள் கொண்டவருக்கு சப்தாகமாக உபதேசிக்கப்பட்ட பாகவதம் மிகவும் சுவை கொண்டவை என்பதை படித்தவர்கள் அறிவார்கள்..
பகவான் பயிராக்கிய மரங்களே வேதங்கள்; அந்த மரங்களில் இருந்து நன்கு பழுத்து உதிர்ந்த பழம்... ஸ்ரீமத் பாகவதம். அந்தப் பழத்தில் இருந்து பிழிந்த ரசம்... ஸ்ரீநாராயணீயம்' என்று ஆன்றோர் போற்றுவர்.
ஸ்ரீமத் பாகவதத்தின் சாரமாக திகழும் நாராயணீயம்- 1,034 ஸ்லோகங்கள் கொண்டது.
ஒவ்வொன்றிலும் பகவானின் மகிமைகளை விவரித்து... 'இவ்வாறு நடந்ததாமே? இது சத்தியம்தானே' என்று ஸ்ரீகுருவாயூரப்பனின் விக்கிரகத் திருமேனியைப் பார்த்து கேட்பாராம் நாராயண பட்டத்ரி!
இதற்கு, 'ஆம்' என்று ஸ்ரீகுருவாயூரப்பன் தலையசைத்து ஆமோதித்தால் மட்டுமே அடுத்த ஸ்லோகத்தை ஆரம்பிப்பாராம்.
இத்தகு தெய்வ நூலான ஸ்ரீநாராயணீயத்தைப் படிப்பதால் இன்னல்கள் அகலும்; நினைத்தது நிறைவேறும். ஸ்ரீகுருவாயூரப்பனின் திருவருளால் அஷ்ட ஐஸ்வரியங்களும் இல்லத்தில் பெருகும்!
புகழ் பெற்ற "தசாவதாரங்களில்' வேதங்களைக் காத்த பெருமையினால் பெரிதும் போற்றப்படுவது மத்ஸ்ய ரூபத்தில் (மீன் உருவம்) எடுத்த அவதாரமே! முதன்மையானது.
சிருஷ்டியின் பரிணாம வளர்ச்சியின்படி உயிர் தொடக்கம் நீரில்தான்!
பிராணி சாஸ்திரப்படியும் தாய் மீன், தன் கண் பார்வையினாலேயே பெற்ற குஞ்சுகளைக் காப்பாற்றுகிறது.
யுக ஆரம்பத்தில் உயிர்கள் "ஸ்வரூப ஞானம்' பெற்றுய்யக் கண்களாலேயே தயை செய்து காப்பாற்றவே மத்ஸ்யாவதாரம் எடுத்தார் மாதவன்.
சிருஷ்டியின் ஆறா வது மன்வந்தரத்தின் முடிவில், பகவான் மத்ஸ்யாவதாரம் செய்ததாக' நம்பூதிரி வர்ணிக்கிறார்.
ஒரு மன்வந்தரத்தின் முடிவில் படைப்புக் கடவுளான நான்முகன் ஓய்வெடுக்கும் தருணத்தில், "ஹயக்ரீவன்' என்ற அசுரன், அவருடைய வாக்கிலிருந்து வேதங்களைத் திருடிவிட்டான். (பிரம்மதேவனுடைய வாக்கிலிருந்து வேதத்தை அபகரிப்பது என்பது அவருடைய வாக்கிலிருந்து வரும் வேத சப்த உச்சாரணத் திறனைக் கவர்வது).
அசுரனை அழித்து, வேதங்களை திரும்பவும் பிரம்மனிடம் ஒப்படைக்கத் திருவுள்ளம் கொண்டார் பகவான். .
வேதங்களைக் கவர்ந்த அசுரன், ஆழ்கடலில் சென்று பதுங்கியிருந்த. அசுரனை அழிக்க பிரம்மாண்டமான "மச்ச' உருவம் எடுத்தார்திருமால்,
மீனாக அவதரிக்க வேறொரு காரணமும் இருந்தது. சத்தியவரதன் என்ற அரசனுக்கும், அவனைப் போன்ற மற்ற பக்தர்களுக்கும் பிரம்ம ஞானத்தை உபதேசிப்பதற்காகவும் இந்த மத்ஸ்யவதாரம் காரணமாக அமைந்தது. இதை ஸ்ரீமத் பாகவத புராணம் இயம்பும்.
"மத்ஸய ஜெயந்தி' என்று கொண்டாடுவது மரபு.
முதல் அவதாரமாகிய மச்சாவதாரக் கோலத்திலேயே திருக்கோயில் கொண்டு அருள்புரியும் திருமால் ஆலயத்தை, ஆந்திர மாநிலத்தில் உள்ள நாகலாபுரத்தில் காணலாம்.
இத்தகைய கோலம், வேறு எங்கும் காணப்படாத ஒன்று. பிற ஆலயங்களில் புடைப்புச் சிற்பமாகவோ, சித்திரமாகவோ மட்டுமே மீனாகிய தேவனை தரிசிக்க முடியும். மூலவராக தனி சந்நிதி கொண்டு அருள்புரிவது இங்கு மட்டுமே
16ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரால், அவர்தம் தாயின் நினைவாக இக்கோயில் கட்டப்பட்டது.
மூலவர் வேதநாராயணப் பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவியுடன் காட்சி தருகிறார். திருமாலின் திருப்பாதங்கள் மீனின் அடிப்புறம் போலவே அமைந்துள்ளது. இந்த அற்புதக் காட்சியை இன்றைக்கெல்லாம் கண் குளிர சேவிக்கலாம்.
திருச்சுற்று மதிலுடனும், ராஜகோபுரங்களுடனும் ஒரு பெரிய ஆலயமாகவே இது திகழ்கிறது.
ஸ்ரீ வேத நாராயண சுவாமி ஆலயம், திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகத்தின் கீழ் சிறப்புற நிர்வகிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் சூரிய பூஜையுடன் கூடிய தெப்பத் திருவிழாவும், பிரம்மோத்ஸவமும் முக்கியமானவை.
Miracle: Sunrays as seen from the ‘Gopuram' of
Sri Vedanarayana temple in Chittoor district.
Arch at Vedanarayana Swami Temple entrance
Tirupati temple
Veda Vimanam, Vedanarayana Perumal Temple
Sun performing the pooja to the Veda Narayana Swamy.
நாராயணீயம் மிகச்சிறந்த நூல் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதன் முழு வரலாற்றை இன்றுதான் அறிந்தேன்.
ReplyDeleteவழக்கம்போல படங்களும் பதிவும் நல்லா இருக்கு கூடவே நாராயணீயம் பற்றிய தகவல்களும் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி
ReplyDeleteமத்ஸ்ய ஜெயந்தி.. கேள்விப்பட்டதில்லை.
ReplyDeleteபடங்கள் பிரமாதம் - வபூ படம் மனதில் நின்றுவிட்டது.
அருமையான படங்களுடன் நல்லதொரு பகிர்வு..
ReplyDeleteசித்தூர் வேத நாராயணர் கோவில் - என்ன அழகான படம். வண்ணத்துப் பூச்சி படம் அழகு.
ReplyDeleteஅழகான ஓவியங்கள்
ReplyDeleteஅழகான விளக்கங்கள்
சித்தூர் வேத நாராயணர் கோவில் பார்க்க ஆவலை ஏற்படுத்திவிட்டீர்கள்.
ReplyDeleteஅருமையான படங்கள்.
மச்சாவதாரக் கோலத்தில் இருக்கும் நாகலாபுரம் பற்றிய புது செய்தி அறிந்து கொண்டேன் நன்றி.
thank u for the gud post.
ReplyDeletesorry for english font.
one of the shloka in narayaneeyam which cures chronicle disease is:
asmin paraatman nanu paadmakalpe
tvamitthamutthaapita padmayOniH |
anantabhuumaa mama rOgaraashiM
nirundhi vaataalayavaasa viShNO || 13
(dasakam 8 ; shlokam 13 ).
thanks for sharing mathsya jayanthi post
Just now I chanted NARAYANEEYAM and opening the computer. Aha what a pretty Darshan of Meenavadhara Perumal.
ReplyDeleteThanks Thanks a lot Rajeswari.
I will try to go to the Temple you referred.
viji,
மச்சாவதாரம் படமும் பகிர்வும் அருமை.
ReplyDelete;) படங்களும் விளக்கங்க்ளும் வழக்கம்போல் அருமை.
ReplyDeleteபாராட்டுக்கள்.
ஓம் நமோ நாராயணாய. அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteகண்ணைக் கவரும் படங்கள் அருமை .
ReplyDeleteநாராயணீயம் பற்றிய தகவல்களுக்கும், மச்சாவதாரத்தின் மகிமையையும் அழகாக உயர்த்தியுள்ளது.
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
92. பக்தரக்ஷகா கோவிந்தா
ReplyDelete2802+2+1=2805
ReplyDelete