கரிமுகவன் இளைய கந்தப் பெருமாளே”
என்றும்
”சிந்துரமின் மேவு போகக்கார
செந்தமிழ் சொல்பாவின் மாலைக் கார
செந்தில் நகர் வாழும் ஆண்மைக்கார … பெருமாளே”
செந்தமிழ் சொல்பாவின் மாலைக் கார
செந்தில் நகர் வாழும் ஆண்மைக்கார … பெருமாளே”
என்றெல்லாமும் செந்திலாண்டவனைப் பாடிக்
களிக்கிறது அருணகிரிநாதரின் திருப்புகழ்.
களிக்கிறது அருணகிரிநாதரின் திருப்புகழ்.
கொள்ளித் தலையில் எறும்பது போலக் குமுறும் என்தன்
உள்ளத் துயரை ஒழித்தருள்வாய் ஒரு கோடி முத்தம்
உள்ளத் துயரை ஒழித்தருள்வாய் ஒரு கோடி முத்தம்
தெள்ளிக் கொழிக்கும் கடற்செந்தில் மேவிய சேவகனே
வள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமேஅலைகள் கடலில் சென்று அமிழ்வது போல,சேர்ந்த வினைகள் சென்றழியும்; அதனால் இவன் சன்னிதி வாருங்கள், வாருங்கள்” என்று அலைவரிசைகள் மனிதரை ஆர்ப்பரித்து அழைக்கும் கடற்கரையில் நிற்கிறான் செந்திலாண்டவன்...
திருச்சீரலைவாய், ஜயந்திபுரம், செந்தில் என்ற பெயர்களாலும் அழைக்கப்படும் கந்தமாதன பர்வதத்தின் சாரலில் முருகன் சிவபிரானை வழிபட்டு சூரசம்ஹாரம் புரிந்த இடம் இதுவே..
ஸ்ரீமத்பாகவதத்தில் பலராமன் தீர்த்த யாத்திரையில் செந்தூரையும், கன்னியாகுமரியையும் வணங்கிச் சென்ற குறிப்பு உள்ளது.
ஆதிசங்கரரும், தமது திக்விஜயத்தின் போது, இங்கு வந்து குமரக் கடவுளை வழிபட்டு சுப்ரமணிய புஜங்கம் என்கிற அழகிய துதியை இயற்றினார் ..
முருகனின் அறுமுகங்களையும், பன்னிரு கைகளையும், வேலையும், மயிலையும், சேவற்கொடியையும் போற்றிப் பின்,
”உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே”
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே”
என்ற வரிகள் உலகம் போற்றும் புகழுடையது என்று சங்க இலக்கியங்களில் ஒன்றான திருமுருகாற்றுப் படை குறிப்பிடுகின்ற
பதி தெருச்செந்தூர்....
பதி தெருச்செந்தூர்....
தமிழ் நாட்டின் வீரத் தெய்வமாகத் திருமுருகன் காலம்காலமாக விளங்கி வருகிறான்.
“வீர வேல், வெற்றி வேல்” என்ற கோஷமே அதற்குச் சான்றாகும்.
“வீர வேல், வெற்றி வேல்” என்ற கோஷமே அதற்குச் சான்றாகும்.
சுப்பிரமணிய சுவாமியின் திருவுருவச் சிலை உள்ளிட்ட கோயில் சொத்துக்கள் பலவற்றைக் கொள்ளையிட்ட டச்சுக் காரர்கள், விக்கிரகங்களை உருக்க முடியாமல், அப்படியே எடுத்துக் கப்பலில் போட்டனர்.
கப்பல் கிளம்பியவுடன், பெரும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது, சூறைக் காற்று அடித்தது. கப்பல் நிலைகுலைந்தது.
கோயில் விக்கிரகங்களைக் கடலிலேயே எறிந்து விட்டு சென்றன்ர்...
சுவாமியின் உருவச் சிலையை டச்சுக் காரர்கள் கொள்ளையிட்டது பற்றிக் கேள்விப் பட்டுப் பெரிதும் வேதனையுற்ற தீவிர முருக பக்தரான திருநெல்வேலியில் ராஜப் பிரதிநிதியாக இருந்த வடமலையப்ப பிள்ளை
அதே போன்ற பஞ்சலோக விக்கிரகங்களை வடிவமைத்து பிரதிஷ்டை செய்வதற்காக திருச்செந்தூருக்கு எடுத்து வந்தார்.
அப்போது வடமலையப்பரது கனவில் முருகப் பெருமான் தோன்றி, கடலில் சென்று தனது திருவுருவச் சிலையை மீட்குமாறு பிள்ளைக்கு ஆணையிட்டார்.
அதன் படி, கடலில் ஓரிடத்தில் எலுமிச்சம்பழம் ஒன்று முழுகாமல் மிதக்கும் என்றும் அந்த இடத்தைச் சுற்றி வானில் கருடன் வட்டமிடும் என்றும் அங்கு தான் சிலை கிடைக்கும் என்றும் கனவு உரைத்தது .
வடமலையப்பர் கடலில் இறங்கியபோது, அந்த அடையாளங்களுடன் இருந்த இடத்தில் தெய்வச் சிலைகள் கிடைத்தன. அவற்றை மகிழ்ச்சியுடன் எடுத்து வந்து கோயிலில் பிரதிஷ்டை செய்தார். அவர் கட்டிய வடமலையப்ப பிள்ளை மண்டத்தில் இன்றும் ஆவணி, மாசி மாத விழாக்களின் போது அவர் பெயரில் கட்டளைகள் நடைபெறுகின்றன.
வடமலையப்பர் உருவாக்கிக் கொண்டு வந்த சிலைகளை அவர் மீண்டும் எடுத்துச் சென்று, திருநெல்வேலியில், பாளையம் கோட்டைக்கு அருகே உள்ள முருகன் குறிச்சி என்ற ஊரில் திருப்பிரந்தீஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தார் –
டச்சுக்காரர்கள் எடுத்து சென்று பின் கண்டெடுக்கப்பட்ட முருகன் திருஉருவை கோவிலினுள்ளே நாம் ஜெயந்திநாதர் என்ற பெயரில் காணலாம்.
அவர் திருமேனியில் கடலில் இருந்ததற்கான அறிகுறிகள் இருக்கும்.
அவர் திருமேனியில் கடலில் இருந்ததற்கான அறிகுறிகள் இருக்கும்.
மாசி மாதம் திருவிழாவின் பொழுது எட்டாம் திருநாளில் ஜெயந்திநாதர் திருவுலா வருவார்.
முன்பக்கம் பார்க்க முருகப்பெருமானை போலவும், பின்புறம் பார்க்க நடராஜரை போலவும் தெரியும்படியாக அலங்காரம் செய்திருப்பார்கள்.
ஆழ்கடலில் வியாபாரம் செய்யப் போகும் செட்டியார்களின் துணைவனாக கடற்கரையில் வீற்றிருக்கும் முருகன் இருக்கிறார் என்ற நம்பிக்கையை காட்டுகிறது செட்டி கப்பலுக்கு செந்தூரன் துணை’ என்ற சொலவடை ..
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் செருக்குப் பிடித்த தமிழ்ப் பண்டிதர்களை வாதில் முறியடிக்க திருச்செந்தூர் நிரோட்ட யமக அந்தாதி என்ற நூலை எழுதினார்.
இந்த நூலின் பாடல்கள் முழுவதையும் படிக்கையில் உதடுகள் ஒட்டவே ஒட்டாத வகையிலான சொற்களைக் கொண்டு இயற்றப் பட்டிருக்கிறது. (நிரோட்ட = நிரோஷ்ட = நிர் + ஓஷ்ட, உதடுகள் இல்லாமல் என்ற பொருள் தரும் சம்ஸ்கிருதச் சொல்).
பகழிக் கூத்தர் என்ற வைணவர் எழுதிய திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ் என்பதும் ஒரு அருமையான நூல். இதில் பல்வேறு வகையான முத்துக்களின் பெயர்களைக் கூறி, இவை எல்லாவற்றிற்கும் விலை உண்டு, ஆனால் உன் கனிவாய் முத்தத்திற்கு விலை இல்லை என்று சொல்லும் பாடல் படிக்கும் தோறும் இன்பம் தருவது.
“ஓங்காரத்து உள்ளொளிக்கு உள்ளே முருகன் உருவம் கண்ட” பின், அதன் எதிரொலியை மகா சமுத்திரத்தின் அடிநாதமாக உணர்வதும் ஓர் பேரானந்த அனுபவம்.
2004ஆம் ஆண்டில் சுனாமியின் அதி பயங்கர ஆழிப் பேரலைகள் கூட செந்தூர்க் கோவிலைத் தொட்டுத் தழுவி, வணங்கிச் சென்று விட்டன.. காலங்காலத்திற்கும் கந்தனின் அடியார்களை ஆர்ப்பரித்து அழைத்து வருவன அல்லவோ அந்த அலைகள்!
திருச்செந்தூரில் கடல் ஒரு கிலோமீட்டருக்கு உள்வாங்கியது குமரியம்மன் (கன்னியாகுமரி) சந்நிதியில் ராஜகோபுர நிலைப்படிதாண்டி கடல் அன்னை வராமல் நின்றுகொண்டாள்.
ஆகம முறைப்படி கட்டப்பட்ட கோவில்களில் என்றும் எந்த அசம்பாவிதமும் நடவாது என்பதே உண்மை.
நம: ஸிந்தவே ஸிந்துதேசாய துப்யம்
புன: ஸ்கந்தமூர்த்தே நமஸ்தே நமோஸ்து ||
புன: ஸ்கந்தமூர்த்தே நமஸ்தே நமோஸ்து ||
கடலே, உனக்கு நமஸ்காரம்,
கடல்தேசத்தானே, கந்தனே, கடவுளே,
உனக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.
கடல்தேசத்தானே, கந்தனே, கடவுளே,
உனக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.
Site is optimized for 1024 x 768 pixels
|
Copyright
|
Copyright © 2009. Tiruchendur Murugan Temple
| Powered by emantras |
முதல் நான்கு படங்களும் அருமை.
ReplyDeleteநாலாவது படம் வெகு அருமை.
ரோஜாப்பூ மலைகளும், ஜவந்திப்பூ மாலைகளும் சூப்பரோ சூப்பர்.
தங்கக்காசுமாலைகள், வேல், பீடத்தில் தொங்கும் சின்னச்சின்ன மணிகள் யாவும் அருமையாகவே உள்ளன.
செந்தில் வேலன்
ReplyDeleteசெந்தூர் முருகன்..
வடிவேல் அழகன்..
சுனாமியின் வேகம் தனித்த வீரன்...
பற்றிய அழகிய பதிவு சகோதரி..
சுனாமி ஏற்படாமல் தடுக்கப்பட்டது அனைவருக்குமே மகிழ்ச்சி தான்.
ReplyDeleteநேற்று திருச்சியிலும், திருவானைக்காவிலும், ஸ்ரீரங்கத்திலும் கூட மிக லேசான நில அதிர்வுகள் ஆங்காங்கே உணரப்பட்டுள்ளன. நல்லவேளையாக எந்தவித உயிர்சேதமும் இல்லை. சிற்சில பொருள் சேதம், கட்டட விரிசல்கள் மட்டுமே.
//முன்பு ஏற்பட்ட சுனாமி அலையால் பாதிக்கப்படாமல் சுனாமி காத்த சுப்பிரமணியருக்கு ஒரு வேண்டுதல்..//
OK OK நீங்கள் எதுசொன்னாலும் OK தான் இனி.
யாராவது ஒருவர் சொல்வதை மற்றொருவர் கேட்டால் போதுமே.
பிரச்சனையே இல்லையே.
கடைசியில் காட்டப்பட்டுள்ள அனிமேஷன் படம் அருமையாக உள்ளது.
ReplyDeleteஅந்த யானையார் பாகனைச் சுழட்டிப் பந்தாடப்போகிறாரா? பார்க்கவே சற்று பயமாக இருக்கிறதே!
அந்த மயிலார் தன் மயில்கழுத்தைத் திருப்பி திருப்பி பறக்கும் பட்டாம்பூச்சிகளை லுக் விட்டுக்கொண்டே இருக்கிறாரே!
ReplyDeleteகழுத்து சுளுக்கிக்கொள்ளாதோ, பாவம்.
கடைசி படத்தை சற்று நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தால் திடீரென 3 காக்கைகள் பறக்கின்றனவே.
எதையோ காக்காப்பிடிக்க துடிக்கின்றனவோ எனத் தோன்றுகிறது.
ஆஹா இது 499 ஆவது பதிவு.
ReplyDeleteஇன்னும் ஒண்ணே ஒண்ணு தான் பாக்கி.
வெடி வெடிக்க பட்டாஸ் கட்டுகள் ரெடியாக வாங்கி வைத்து விட்டேன்.
கல்யாணி என்று அழைக்கப்படும் புது பித்தளை பாத்திரமும் [சற்றே குழிவாக இருக்கும் தாம்பாளம் போல இருக்கும்; ஸ்ரீகுருவாயூரப்பன் கோயில் உருளி போல இருக்கும் - ஆனால் இருபுறமும் காதுகள் மட்டும் இருக்காது] 2 Nos. வாங்கி வந்து விட்டேன். அதில் மஞ்சள் குங்குமமும் போட்டு ரெடி செய்துவிட்டேன்.
அது போல இரண்டு செட் ரெடிசெய்துள்ளேன்.
ஒன்று எங்கள் வீட்டு கம்ப்யூட்டருக்கு.
மன்றொன்று லாப்டாப்புக்கு,
தண்ணீரை ஊற்றி ஹாரத்தி சுற்ற வேண்டியது தான் பாக்கி.
இரண்டு ஹாரத்திகளுக்கும் சுற்றுபவர்களுக்கு, இரண்டு பக்கமும் பளபளப்பாக உள்ள 500+500 = 1000 தங்க நாணயங்கள் வாங்க இப்போது புறப்பட இருக்கிறேன். போன வாரமே ஆர்டர் கொடுத்து விட்டேன்.
ஒரு கிராம் தங்க நாணயங்கள் தான்
ஒவ்வொன்றும் ரூ 2750*1000 = 2750000. மொத்தம் 27.5 லட்சங்கள் மட்டுமே.
ஹாரத்தி சுற்றப்போகிறவர்கள் என் மனைவியும், மருமகளும் தானே.
அதனால் ஒன்றும் நஷ்டமில்லை.
முதலீடு மட்டுமே இது.
நீண்ட கால சேமிப்புத்துத் திட்டம் போல மொத்தத்தில் இலாபம் தருவதாகவேதான் இருக்கும்.
இப்போதே புறப்பட்டு நகைக்கடைக்குப்போய் விட்டு, 1000 தங்கக் காசுகளுடன் வருவேன்.
நேரம் இருந்தால் மீண்டும் வருவேனாக்கும்.
அதுவரை Bye Bye!!
திருசெந்தூர் முருகனை பற்றி மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஇந்தப்பதிவைப்பற்றிய விள்க்கங்களுக்கும்,
ReplyDeleteஅழகன் முருகனின் படங்களுக்கும்
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
வெற்றிகரமான அடுத்த 500 ஆவது பதிவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து இன்று இரவெலாம் தூங்காமல் கண் விழித்துக் காத்திருப்பேன்.
ஓம் என்னும் பிரணவ மந்திரம் மீண்டும் மீண்டும் கோயில் மணியோசையுடன் ஒலிக்கச் செய்து அசத்தியுள்ளது இந்தப்பதிவின் தனிச்சிறப்பாக உள்ளது.
ReplyDeleteமுதலில் என் வீட்டின் அருகே உள்ள கோயிலிலிருந்து தான் இந்த சப்தம் வருகிறதோ என நினைத்து விட்டேன்.
ஏனென்றால் இதுபோல அடிக்கடி இங்குள்ள கோயில்களில் ஏதாவது நடந்துகொண்டிருப்பது வழக்கமே.
இன்று என்ன விசேஷமாக இருக்கும் என்றும் சற்று நேரம் யோசித்தேன்.
பிறகு சற்று நேரம் கழித்தே என்னால் இதை உணர முடிந்தது.
நீங்க கணினி தொழில் நுட்பங்களில் எங்கேயோ போயிட்டீங்க. பாராட்டுக்கள். ;)))))
திருக் குமரனின் அற்புதத் திருத்தலத்தினை அழகுத் தமிழால், அழகுடன் வடிவமைத்து, அற்புதமாய் தந்தமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்! தொடருங்கள் அழகுமயிலோன் பற்றிய பதிவுகள்.!
ReplyDeleteசுனாமில இருந்து மக்களை காப்பாற்றியவருக்கு கண்டிப்பாய் நன்றி சொல்ல வேண்டும். படங்கள அருமை.
ReplyDeleteஅழகான படங்கள்..கூடவே புதிதாக செய்தி / தகவல் ஏதாவது ஒன்று உங்கள் பதிவுகளில் எப்போதுமே இருக்கிறது..வாழ்த்துகள்..
ReplyDeleteநெல்லை மேம்பாலத்தின் கீழ் அமைந்திருக்கும் "அருள்மிகு சாலைக்குமரன்" மற்றும் தாமிரபரணியின் நடுவில் உள்ள குறுக்குத்துறை சுப்பிரமணி சுவாமி கோவில்களும் ஒருவிதத்தில் திருச்செந்தூர் சுவாமியைச்சேர்ந்தது தான்.
ReplyDeleteநல்லதொரு பதிவு! பகிர்வுக்கு மிக்க நன்றி!
ReplyDeleteAha!!!!!!!!!!1
ReplyDeleteOom sound with kadalalai sabtham!!!!!
Kanmoodi neenda neram rasithen.
Thanks Rajeswari.
viji
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்.
ReplyDeleteசுனாமி மட்டுமல்லாது அது போன்ற தீய விளைவுகள் எல்லாவற்றிலிருந்தும் பக்தியும் பக்தனும் காக்கப் படுவார்கள்.
பகிர்விற்கு நன்றி
அருமையான படங்களும் அன்பான வாழ்த்துக்களும். மிக்க நன்றி.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்!வழக்கம்போல படங்கள் ஒவ்வொன்றும் அருமை! புலவர் சா இராமாநுசம்
ReplyDeleteஅருமை.
ReplyDeleteஎன்னை ஈர்க்கும் திருச்செந்தூர் பற்றிய பதிவு.
மகிழ்ச்சி.
வாழ்த்துகள்.
85. பில்வபத்ராதர கோவிந்தா
ReplyDelete2747+8+1=2756
ReplyDelete[மீண்டும் படிக்க மகிழ்ச்சியூட்டிடும் பின்னூட்டங்கள்]