குபேர சம்பத்து உண்டாக குபேரர் மந்திரம்
ஓம் யக்ஷõய குபேராய வைஸ்வரவணாய
தனதான்யாதிபதயே தனதான்ய ஸம்ருத்திம்மே
தேஹி தாபய ஸ்வாஹா
லக்ஷ்மி தேவி குபேரனை தனதான்யத்திற்கு அதிபதியாக்கி
அவற்றைக் கண்காணிக்கும் பொறுப்பை அளித்தாள் .
வடக்கு திசைக்கு அதிபதி குபேரன்...
குபேரன் சித்திரங்களில் குள்ளமாகவே சித்தரிக்கப்படுகிறார்..
சிவந்த நிறம். பெரிய தொந்தி, அணிந்திருக்கும் உடை முழுவதும் தங்கத்தினால் ஆனதாம். உடல் முழுவதும் ஆபரணங்கள், கையிலே காசுகள் நிரம்பிய ஒரு பை, மற்றொரு கையில் கதை.
புத்த மதத்திலும் குபேரன் உண்டு.
அங்கு இவரை வைஸ்ரவணா என்று வழிபடுகிறார்கள்.
ஜைன மதத்தில் குபேரனை 'சர்வானுபூதி" என்று வழிபடுகின்றனர்.
இவர் கையில் மது நிரம்பிய கலசம் இருக்குமாம்.
குபேரனின் சரித்திர ஆய்வில் சில இடங்களில் அவருக்கு மூன்று கால்களும், எட்டு பற்களும் ஒற்றைக் கண்ணும் கொண்டவராக இருக்கிறாராம்.
மநுஜ வாஹ்ய விமாந வரஸ்திகம்
கருடரத்ந நிபம் நிதிதாயகம்!
கருடரத்ந நிபம் நிதிதாயகம்!
ஸிவஸகம் முகுடாதி விபூஷிதம்
வரகதம் தநதம் பஜ துந்திலம் !!
.நரவாஹனன் என்று துதிக்கப்படும் குபேரன் வாகனமாக
ஒரு மனிதனே இவரைத் துக்கியபடி இருக்கிறான்
ஒரு மனிதனே இவரைத் துக்கியபடி இருக்கிறான்
குபேரம் மநுஜாஸீநம்
ஸகர்வம் கர்வவிக்ரஹம்
ஸ்வர்ணச்சாயம் கதாஹஸ்தம்
உத்தராதிபதிம் ஸ்மரேத்
அக்னி புராணத்தில் குபேரனைக் கோயிலில் பிரதிஷ்டை செய்வதானால் ஆடு வாகனத்துடனும் கையில் கதையுடனும்
இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது..
இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது..
சில திபெத்திய சித்திரங்களில் கீரிபிள்ளையுடன் இவர் காணப்படுகிறார்.
கீரி குபேரனின் வெற்றிச் சின்னம் என்று திபெத்தியர்கள் கூறுகிறார்கள்.
சீனாவின் வாஸ்துவில் சிரிக்கும் புத்தா என்ற பெயரில் தொந்தியும் தொப்பையுமாக சிரித்த முகத்துடன் ஒரு சிலை கிடைக்கும்
இந்தப் பொம்மைச் சிலை பலவிதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.
ஒன்றில் பணம் மடியில் கொட்டும்
ஒன்றில் தன் இரு கைகளையும் மேலே தூக்கிக்கொண்டிருப்பது
போல இருக்கும்.
போல இருக்கும்.
இதுவும் குபேரன் தான் என்று சொல்கிறார்கள்.
பல வியாபார ஸ்தலங்களிலும் , வீடுகளிலும் இவர் வடக்கு திசையில் அலங்காரப் பொருளாக அமர்ந்திருந்தாலும் அதிருஷடம் வீடு தேடி வரும் என்ற நம்பிக்கையும் அதில் சேர்ந்திருக்கும்.
பார்த்தாலே ஆனந்தம் பொங்கும் சந்தோஷமான செழிப்பான தோற்றம்..
குபேரனின் அருள் பெற்றால் நல்ல மனோபலம் செல்வம். வளம் வியபாரத்தில் லாபம் என்று பல நன்மைகள் கிடைக்கப் பெறுவோம்.
குபேரனின் படத்துடன் லக்ஷ்மியையும் சேர்த்து குபேர யந்திரத்துடன் 48 நாள் பூஜிக்க செல்வம் செழிக்கும்...
குபேரனுக்கென்று மிகவும் ஒரு சில கோயில்கள் தான் உண்டு.
இதில் வண்டலூரிலிருந்து சுமார் ஏழு கி.மீ. தூரத்தில் உள்ள .மிகப்பழமையான ரத்னமங்கலம் குபேரன் கோயிலில் லக்ஷ்மி குபேரனுக்கு தீபாவளியின் போது சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
அன்றைய தினம் இந்தக் கோயிலில் எங்குத் திரும்பினலும் ரூபாய் நோட்டினால் மாலைகள் தோரணங்கள் என்று அலங்கரிக்கப்பட்டு குபேரனின் செல்வ வளத்தைக் காட்டும் மிக அழகான குபேர தரிசனம் கிடைக்கும்.
அங்கு நூறு ரூபாய்க்குச் சீட்டு வாங்கினால் ஒரு முறத்தில் பச்சைத்துணி, பூஜைப்பொருட்கள், ஒரு விளக்கு, லக்ஷ்மி குபேர படம் எல்லாம் கிடைக்கும்.
இத்துடன் மேலே நடக்க ஒரு மீன் குளம் வரும்.
அந்த்க் குளத்தில் இருக்கும் மீன்கள் 'வாஸ்து' மீன்களாம்.
அந்த மீன்கள் வீட்டிற்கு நல்லது செய்யும் என்று நம்பப்படுகிறது. அந்தக் குளத்தின் அருகில் ஆதிசங்கரர் அமர்ந்து அருள் புரிகிறார்
பாதாள குபேர லிங்கம் தரிசித்தபின் முக்கிய சன்னதியான குபேர சன்னதியில் குபேரன் தங்க உடைகள் அணிந்து மனைவி ரித்தியும் கூட அமர்ந்து ஜவலிக்கிறார். அவர் மேல் ரூபாய் நோட்டினல்மாலைகள் அலங்கரிக்கின்றன.
குபேரன் சன்னதியில் அர்ச்சகர் தட்டில் ஐந்து ரூபாய் காசுகள் தனித்தனியாக எடுத்து கைநிறைய அள்ளியது போல் போடவேண்டும். அர்ச்சகர் தீபாராதனைக் காட்டிவிட்டு ஒரு சிரிக்கும் புத்தாவும் laughing buddha. ஒரு ரூபாய் காசும் பிரசாதமாக கிடைக்கிறது..
குபேரன் பற்றிப் பல நல்ல தகவல்களை அழகான படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteகுபேரசம்பத்து கிடைத்து விட்டது.
ReplyDeleteகுபேரர் எத்தனை குபேரர்.
படங்கள் எல்லாம் அழகு.
உல்லன் நூலில் பின்னிய குபேரர் அருமை.
கடைசியில் காட்டப்பட்டுள்ள பூனைப்படை, குபேர சம்பத்துள்ள, பணப்பெட்டகத்தை, பாதுகாக்கின்றனவோ? ;)
ReplyDeleteநான் இன்று கொடுத்த 3 டம்ளர் பாலில், உங்கள் பூனை இரண்டு டம்ளர் பாலை மட்டுமே அருந்தியுள்ளது. ;(
நிறைய படங்கள் அதுவும் 2-3 நாட்கள் இடைவெளியில் Repeat ஆகியுள்ளன என்பதிலிருந்தே, ஏராளமான வேலைகளுடன், நிற்க நேரமில்லாமல், Very Busy Schedule க்கு இடையே அவசர அவசரமாகக் கொடுத்துள்ள பதிவு என்பதை உணர முடிகிறது.
ReplyDelete//குபேர சம்பத்து உண்டாக குபேரர் மந்திரம்
ReplyDeleteஓம் யக்ஷõய குபேராய வைஸ்வரவணாய
தனதான்யாதிபதயே தனதான்ய ஸம்ருத்திம்மே
தேஹி தாபய ஸ்வாஹா//
குபேரா!
இதை எழுதியவரையும் பதிவிட்டவரையும் நீ ஸ்பெஷலாகக் கவனித்து வருகிறீர் என்பதில் எனக்கு மிகவும் சந்தோஷமே!
இதைப் படிப்பவரையும் பின்னூட்டம் கொடுப்பவரையும் லேஸாகவாவது கடைக்கண் காட்டி கவனிப்பீராக!
//சிவந்த நிறம். பெரிய தொந்தி, அணிந்திருக்கும் உடை முழுவதும் தங்கத்தினால் ஆனதாம். உடல் முழுவதும் ஆபரணங்கள், கையிலே காசுகள் நிரம்பிய ஒரு பை //
ReplyDeleteஇவரை ஆர்.எஸ். புரம் என்ற பகுதியில் ஒரு வீட்டினில் தினம் 108 முறை நான் பார்த்திருக்கிறேன். என் நண்பர் திருவேங்கடசாமி என்பவருக்குக்கூட இந்த விஷயம் தெரியும்.
குபேரன் குடியிருக்கும் இல்லம் நிச்சயமாக அதுவாகத்தான் இருக்க வேண்டும். ;)))))
பார்த்தாலே ஆனந்தம் பொங்கும் சந்தோஷமான செழிப்பான தோற்றத்துடன் பல்வேறு பொம்மைகளைக் காட்டி, ஆனந்தம் பொங்கச் செய்து விட்டீர்கள்.
ReplyDeleteபாராட்டுக்கள். வாழ்த்துகள்.
குபேர சம்பத்து உங்களை வந்தடைய வாழ்த்துகிறேன். எனக்கு இருக்கிறதே போதும்.
ReplyDeleteகுபேர சம்பத்து வர பூனைகள் தடையாய் இருக்குமோ என்று பயப்படுகிறேன்.
ReplyDeleteWhat a fine post Rajeswari.
ReplyDeleteIt is happy viewing this much Kubera pictures on the Akshya Trithiday.
viji
தங்கள் பதிவால் குபேரன் குறித்த
ReplyDeleteஅறியாத பல தகவல்கள் அறிந்தேன்
அவன் அருள் அனைவருக்கும் கிடைக்க
பிரார்த்தித்துக் கொள்கிறேன்
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteநிறைய படங்கள் அதுவும் 2-3 நாட்கள் இடைவெளியில் Repeat ஆகியுள்ளன என்பதிலிருந்தே, ஏராளமான வேலைகளுடன், நிற்க நேரமில்லாமல், Very Busy Schedule க்கு இடையே அவசர அவசரமாகக் கொடுத்துள்ள பதிவு என்பதை உணர முடிகிறது//
பதிவுக்கு மிகப்பொருத்தமான படங்கள் அவை .. லிங்க் கொடுத்துவிடலாமா எனவும் யோசித்தேன் .. அப்புறம் அதற்கும் வருத்தம் வரும்...
விரிவான ரசிப்புடன் கூடிய கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள் ஐயா,,,
குபேரன் பற்றிப் பல நல்ல தகவல்களை அழகான படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் said...//
ReplyDelete/விரிவான ரசிப்புடன் கூடிய கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள் ஐயா,,,//
அபூர்வமான நன்றி அறிவித்தலுக்கு நன்றிகள்.
விரிவான விளக்கத்துக்கு நிறைவான நன்றிகள்...
தங்களின் திட்டமிடலும் நேர்த்தியும் அபூர்வமானவை...
அவ்வப்போது இல்லக் கடமைகளும் பிளைகளுடனான உரையாடலுக்கும் இடையில் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் பதிவிடுகிறேன்..
விவாதம் தவிர்க்கப்படுகிறது..
அருமையான படங்களுடன் விரிவான பகிர்வு.. நன்றி.
ReplyDelete;))))) Thanks a Lot.
ReplyDeleteஅருமையான பகிர்வு. குபேர சம்பத்து எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
ReplyDeleteஅழகிய படங்களுடன் விரிவான பகிர்வு.
ReplyDeleteகுபேரன் எத்தன குபேரனடி என்று பாடத் தோன்றுகிரது உங்கள் படங்களைப் பார்க்கும் போது.
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
97. ஜனாதன மூர்த்தி கோவிந்தா
ReplyDelete2842+7+1=2850 ;)
ReplyDelete