ஈஸ்டர் திருநாள் மார்ச் 22 முதல் ஏப்.25க்கு உட்பட்ட நாட்களில் ஏதாவது ஒரு ஞாயிறு அன்று கொண்டாடப்படும். சூரியன் நிலநடுக்கோட்டை கடந்து செல்லும் காலத்தில், ஏற்படும் பவுர்ணமியை அடுத்த மூன்றாம் நாள் ஈஸ்டர் திருநாள் குறிக்கப்படும்
மனிதர்களின் பாவம் போக்க சிலுவையில் அறையுண்ட இயேசுபிரான், அடுத்த மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த திருநாளே ஈஸ்டர் பெருவிழாவாக உலகெங்கும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
உலகில் அமைதி நிலவவும், மனித நேயம் தழைக்கவும், இயேசுபிரான் காட்டிய நல்வழி பாதையில் மக்கள் அனைவரும் தியாக உணர்வோடு வாழவும் பிரார்த்தித்து, ஈஸ்டர் திருநாளை கொண்டாடி மகிழும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகை ஈஸ்டர் பெருநாள்.. ஈஸ்டருக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடிக்கப்படுகிறது.
தவக்காலத்தின் கடைசி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி புனித வாரத்தின் முதல் நாள் குருத்தோலை பவனி நடைபெறும்... தேவாலயங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெறும்...

மதவெறியை மாய்த்து மனித நேயம் தழைக்க ஈஸ்டர் திருநாள் ஒரு இன்ப திருநாளாக மலரட்டும். ஏழைகளுக்கு செய்யும் தொண்டு, இறைவனுக்கு செய்யும் தொண்டாகும். இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே ....
ஈஸ்டர் திருநாளுக்கு மறுநாள் அமெரிக்க ஜனாதிபதி தமது வெள்ளை மாளிகையில் குழந்தைகளுக்கு ஈஸ்டர் முட்டை வழங்குகிறார்.
நியூயார்க் நகரில் ஈஸ்டர் அணிவகுப்பு நடத்தப்படுகிறது.
நியூயார்க் நகரில் ஈஸ்டர் அணிவகுப்பு நடத்தப்படுகிறது.
ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்....
உலகில் பிறந்த எவரும் மரிப்பது கட்டாயமான ஒன்று.
ஆனால், இயேசு கிறிஸ்து மட்டும் பிறந்து இறந்து உயிர்த்து எழுந்தார் என்ற நிகழ்ச்சி ஒரு சாதனை நிகழ்வாகும்.
ஆனால், இயேசு கிறிஸ்து மட்டும் பிறந்து இறந்து உயிர்த்து எழுந்தார் என்ற நிகழ்ச்சி ஒரு சாதனை நிகழ்வாகும்.
உயிர்த்தெழுந்த பின் அவர் கூறியதைக் கேளுங்கள்.
""நான் மரித்தேன். ஆனாலும் சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறேன். என் பெயரால் இரண்டு அல்லது மூன்று பேர் எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவில் இருக்கிறேன். வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமும் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன். நீங்கள் ஜெருசலம் தொடங்கி உலகமெங்கும் சர்வ மக்களுக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள். மனம் திரும்புதலுக்கென்று பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் பெயரால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்,'' என்றார்.

இவ்வாறு சீடர்களுக்குக் கட்டளையிட்ட பிறகு அவர் வானத்திற்கு ஏறிப்போனார்.அன்பின் திருவுருவமாம் இயேசுபிரான் உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் திருநாளா£க கொண்டாடி மகிழும் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் இதயபூர்வமான ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
நல்ல மரம் நச்சுக்கனி கொடாது; நச்சு மரம் நல்ல கனி கொடாது; அந்தந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும்;
யாரும் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பதுமில்லை;
நெருஞ்சிச் செடியில் திராட்சைப் பழங்களை அறுப்பதுமில்லை.
நெருஞ்சிச் செடியில் திராட்சைப் பழங்களை அறுப்பதுமில்லை.
நல்ல மனிதன் தன் உள்ளத்திலிருக்கும் நல்ல களஞ்சியத்திலிருந்து நலமானதை எடுத்து அளிக்கிறான்;
பொல்லாத மனிதன் தன்னுள் இருக்கும் பொல்லாத களஞ்சியத்திலிருந்து பொல்லாததையே எடுத்து அளிக்கிறான்"" என்றார் இயேசு.
பொல்லாத மனிதன் தன்னுள் இருக்கும் பொல்லாத களஞ்சியத்திலிருந்து பொல்லாததையே எடுத்து அளிக்கிறான்"" என்றார் இயேசு.
துன்பமகற்றி இன்பம் பூக்கும் ஈஸ்டர் திருநாள் வருவது போன்று
இன்ப மயமான எதிர்காலம் உதயமாகும்
இன்ப மயமான எதிர்காலம் உதயமாகும்
கொடியவர்களால் துன்புறுத்தப்பட்ட போதும், மனம் நோகாமல் அவர்களையும் ரட்சிக்க வேண்டுமென்று நினைத்தவர் இயேசு.
அவர் போதித்த போதனைகள் பலவற்றை கடைபிடித்தால், இந்த உலகத்தில் போட்டி இருக்காது. மோதல்கள் இருக்காது.சச்சரவுகள் நீங்கும். அமைதி நிலவும். பொதுவாக அமைதி யும், அன்பும், தெய்வ பக்தியும், தொண்டுள்ளமும் கொண்டு விளங்க ஈஸ்டர் கொண்டாட்டங்கள் வழிகாட்டும்...

தலையில் முள் முடி; பாரமான சிலுவை; அந்த சிலுவையோடு சேர்த்து ஆணிகளால் அடிக்கப்பட்ட கொடுமை; இத்தனை துன்பங்களை அனுபவித்த போதிலும் தம்மை துன்புறுத்தியவர்களை மன்னியும் என்று இயேசு இறைவனிடம் மன்றாடினார் என்று விவிலியத்தில் படிக்கிறோம்.
அவரது உயிர்த்தெழுதல் பண்டிகையை கொண்டாடுகிற இந்த நேரத்தில் அவரை பின்பற்றி மற்றவர்கள் மீது அன்பு செலுத்தவும், மற்றவர்களை மன்னிக்கவும் கற்று கொள்வோம். பசித்தவர்களுக்கு உணவு அளிக்க முன்வருவோம். ஏழைகளை நேசிப்போம்.

மற்றவர்களின் குற்றங்களை மன்னித்து அனைவரிடமும் அன்பு செலுத்தி அன்புள்ளவர்களாக வாழ்வோம் என இந்த நன்னாளில் சூளுரைத்துச் செய்வோம்.
அனைவரின் பாவச்சுமைகளை தான் ஏற்று, அன்பையும் கருணையையும் பிரதிபலனாக உலகிற்கு அளித்த ஏசுபிரானின் போதனைகள், மனித குலம் தழைத்தோங்கச் செய்யும் மகத்துவம் மிக்கவை.
அன்பும் சகோதரத்துவமும் மனித நேயமும் சக மனிதர்களிடையே நிலைப்பெற்று நின்று புவி எங்கும் சமாதானம் தழைத்தோங்கும் விதமாக இந்த ஈஸ்டர் திருநாள் அமைந்திட நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.
விரதம் முடித்து ஈஸ்டர் திருநாளை கொண்டாடும் கிறிஸ்தவ சொந்தங்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்...
பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்குப் பகுதியில்ஈஸ்டர்
அன்று கண்டுபிடிக்கப்பட்ட ஈஸ்டர் தீவு இருக்கிறது.
அன்று கண்டுபிடிக்கப்பட்ட ஈஸ்டர் தீவு இருக்கிறது.
மனித முகம் போல் தோற்றமுடைய மோவாய்கள் என்ற பிரமாண்டமான நூற்றுக்கணக்கான கற்சிலைகள் தீவெங்கும் காணப்படுகின்றன.
ஈஸ்டர் பண்டிகையின் போது கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் வண்ண ஓவியங்கள் வரைந்த முட்டைகளை பரிசாக வழங்கும் முட்டைகளை ஜெர்மனியை சேர்ந்த வொல்கர் கிராப்ட் என்பவர் மரத்தில் கட்டி தொங்க விட்டு ஈஸ்டர் மரம் ஒன்றை உருவாக்கியுள்ளார்..
அவரது மனைவி,, குழந்தைகளின் உதவியால் கடந்த 47 ஆண்டுகளாக ஈஸ்டர் மரத்தை உருவாக்கியுள்ள மரத்தைப் பாதுகாப்பது மிகவும் சிரமமாக உள்ளதால் இனி இதற்கு மேல் ஈஸ்டர் முட்டைகளை அதிகமாக கட்ட மாட்டாராம்..
ஈஸ்டர் வாழ்த்துகளுக்கு நன்றிகள்.
ReplyDeleteமஞ்சள் பூக்கள் பூத்துக்குலுங்குவது அழகு. சொரக்கொன்னையை ஞாபகப்படுத்துகிறது.
ReplyDeleteதேவாலயத்தில் நடைபெறும் பிரார்த்தனை நிகழ்ச்சிகள் வெகு அழகாகப் படமாக்கப்பட்டுள்ளது.
ReplyDeleteவெட்டவெளியில் மனித முகத்துடன் கூடிய மோவாய்கள் வரிசையாக நிற்பது வேடிக்கையாக உள்ளது. நாம் வயல்களிலும் புதிய வீடு கட்டும்போதும் வைக்கும் திருஷ்டிப்பரிகார பொம்மை போலத் தோன்றுகிறது. .
ReplyDeleteஜெர்மனியைச் சார்ந்த வொல்கர் கிராப்ட் அவர்கள் பிரும்மாண்ட அளவில் மிகச்சிறப்பாகச் செய்துள்ள ஈஸ்டர் மரமும், அதைத் தாங்கள் கவரேஜ் செய்துள்ளதும் இன்றைய பதிவின் ஹைலைட் ஆகும். ;)))))
ReplyDeleteஒரு குழந்தை எம்பி மரத்தில் கட்டியுள்ளதைப் பறிப்பதும், அதற்கு அடுத்தபடத்தில் ஏராளமான மக்கள் கூட்டத்தை சர்ச்சுக்கு முன் காட்டியுள்ளதும் வெகு ஜோர்.
ReplyDeleteஎல்லாமே ஜோர் தான். எதைச் சொல்வது? அதுவும் மனம் திறந்து எப்படிச்சொல்வது? எதைப் பாராட்டுவது? எப்படியெல்லாம் பாராட்டுவது? என்ற குழப்பம் ஏற்படுத்தும் அழகிய பதிவு.
அன்பான பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
நன்றி தங்களிற்கும் இனிய நல் ஈஸ்ரர் வாழ்த்துகள். இடுகை, படங்கள் பிரமாதம் போங்கள்!
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
நல்ல பகிர்வு. பல விஷயங்களை அறிந்து கொண்டேன். அனைவருக்கும் ஈஸ்டர் நல்வாழ்த்துகள்!
ReplyDeleteசகோதரிக்கு வணக்கம்! உங்கள் பதிவை அருமை, சூப்பர் என்று வழக்கமான வார்த்தைகளில் சொல்ல விரும்பவில்லை.
ReplyDelete” நல்ல மரம் நச்சு கனி கொடாது. நச்சு மரம் நல்ல கனி கொடாது. அந்தந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும் “
என்று இயேசு சொன்னதைப் போல, உங்கள் பதிவு நல்ல மரம். ஈஸ்டர் வாழ்த்துக்கள்!
அன்பும் சகோதரத்துவமும் மனித நேயமும் சக மனிதர்களிடையேநிலைப்பெற்றி நின்று புவி எங்கும் சமாதானம் தழைத்தோங்கும் விதமாக இந்த ஈஸ்டர் திருநாள் அமைந்திட நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.//
ReplyDeleteஆம், எல்லோரும் பிரார்த்திப்போம்.
ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் ஈஸ்டர் வாழ்த்துகள்.....
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteஅரிய த்கவல்கள்.
நன்றி.
79. ப்ரத்யக்ஷதேவா கோவிந்தா
ReplyDelete2695+7+1=2703
ReplyDelete