பங்குனி மாத முழு நிலவு வெள்ளிக்கிழமை நாளில் சிரகிரிவேலவன் தரிசனம் பெற சென்றிருந்தோம்...
ஆயிரத்து முன்னூறுக்கு மேற்பட்ட படிகள் கொண்ட மலைக்கோவிலுக்கு வாகனத்தில் செல்லவும் அருமையான பாதை உண்டு..
தினசரி அபிஷேகத்திற்கு காளைகள் மூலமாக தண்ணீர் கொண்டுவரும் அதிசய தலம்..
வேங்கை மரத்தேர் அற்புதமாக காட்சியளித்தது..
முன்புறம் புளியடி விநாயகர் சந்நிதியும், அடுத்து கோயிலின் உட்புறத்தில் மூலவர் சென்னிமலை ஆண்டவருக்கு வலது பாகத்தில் மார்க்கண்டேசுவரர் மற்றும் உமையவல்லி அம்மன் சந்நிதிகளும், இடது பாகம் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி அம்மன் சந்நிதிகளும் அமையப்பெற்றுள்ளன.
அம்மன் சந்நிதியிலிருந்து பின்புறம் சென்றால்மலையின் உச்சியில் சித்தர் மகான்(பின் நாக்குச் சித்தர்) புண்ணாக்குச் சித்தர் கோயில் வேல்கள் நிறைந்த வேல் கோட்டமாக அமைந்துள்ளது. இதன் அருகே சரவண மாமுனிவரின் சமாதிக் கோயிலும் உள்ளது. இந்தக் கோயில் அருகே மிகப் பழமை வாய்ந்தகுகை ஒன்றும் காணப்படுகிறது.
கோவிலை விரிவுபடுத்தும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது...
பாலாலயத்தில் விக்ரஹங்கள் வைத்திருந்தார்கள்...
சுயம்புவான சிரகிரி வேலவனின் கண்பார்வையில் துவாரபாலகர்களின் அருகில் நவக்கிரஹ நாயகரான சனிபகவான்...சுற்றிவர சுற்றுச்சுவரின் வெளிப்பாகத்தில் சுக்கிரன் , பின் புறம் சூரியன் ,சந்திரன் , குரு, ராகு, கேது ,புதன் என நவக்கிரஹங்களில் எட்டும் முருகனைச்சுற்றி அமைந்திருக்க முருகனே செவ்வாய்க்கிரஹமாக வேறெங்கும் காணமுடியாத வித்தியாச அமைப்பு கருத்தைக் கவர்ந்தது.
முருகன் தன்னைத்தானே பூஜித்து நமக்கு பூஜை முறை வகுத்துத்தந்த அக்னிஜாத மூர்த்தி என்னும் இரண்டு தலைகளை உடைய மூர்த்தம் அபூர்வமானது...
சிரசுப்பூ உத்திரவு கேட்டவருக்கு நலமாக அளித்தார் கேட்டபடி அளிக்கும் கருணை முருகன்..
புதுக்கணக்கு புத்தகங்கள் வைத்து அர்ச்சனை செய்துகொண்டிருந்தார்கள்...
அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடி படிக்காசு பெற்ற திருத்தலம்
பிரம்மஹத்தித் தோசம் பீடிக்கப்பட்ட சிவாலயச் சோழனின் வாட்டத்தைப் போக்க அர்ச்சகர் உருவில் முருகப் பெருமானே எழுந்தருளி மன்னனுக்காக பூசை செய்து மன்னனைப் பீடித்திருந்த பிரம்மஹத்தி தோசத்தைப் போக்கியருளினார்.
அமிர்தவள்ளியும் சுந்தர வள்ளியும் சென்னிமலை ஆண்டவரை திருமணம் செய்ய தவம் செய்யும் பகுதி தனியாக அமைந்திருக்கிறது...
வீடுகட்டும் பிரார்த்தனைக்கு நிறைய கற்கள் அடுக்கி வைக்கும் வழக்கம் திருப்பதி மலை மாதிரி இங்கும் நீக்கமற நிறைந்து காணப்பட்டது..
ஆடுகள் , குரங்குகள் , மயில்கள் நிறைய காணப்பட்டன..
முழு நிலவு எழிலுற கிழக்கு வானில் எழுந்து முருகனைத் தரிசிக்கும் திகட்டாத காட்சி அற்புதம்....
தேர் நிலைக்கு அருகில் கைலாசநாதர் ஆலயம் தன் பழமையை பறைசாற்றியது..
தேரோட்டம் கண்டு மகிழ்ந்த முருகன் அன்னைதந்தை அருளும் ஆலயத்தில் சீராடிக்கொண்டிருந்தான்..
செயற்கை மின் ஒளி விடை பெற்ற பின் இயற்கை முழு நிலவொளியின் அமுத கிரணத்தின் ஒளியில் முருகன் தரிசனம்...
எந்தாயும் எனக்கருள் தந்தையுமாய்
சிந்தாகுலம் தீர்த்து எமையாள் ஷண்முகனாய் எழில் முருகன்..
இப்பிறவிப்பிணி இனிவாராமல் போக
தப்பிதம் இல்லாமல் உந்தனைப்பாட மனம் வைத்தருள்வாய்
முருகா என வேண்டி வணங்கினோம்..
முருகா என வேண்டி வணங்கினோம்..
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக --என மனம் தன்னிச்சையாய் கந்தசஷ்டிகவசம் சுவாசமாய் ஓடிக்கொண்டிருக்க கோவிலை வலம் வ்ந்தோம்...
வெள்ளிக்கிழமை விசாலாட்சி அம்மன் சந்நிதியில் திருவிளக்குப் பூஜை
பூரண நிலவொளியாய் அன்னை பிரகாசித்து அருள்பொழிய நட்சத்திர மின்மினிகளாய் திருவிளக்கின் சுடர்கள் ஒளிர்ந்திட வானத்திலும் அதே காட்சி பௌர்ணமி நிலவும் சுற்றி பவனிவரும் நட்சத்திரங்களுமாய்...
வில்வமரம் தழைத்திருந்தது... முன் கோபுரம் வழியாக முழு நிலவு
காசி விஸ்வநாதரை நேராக தண்கிரணங்களால் வணங்கியது...
காசி விஸ்வநாதரை நேராக தண்கிரணங்களால் வணங்கியது...
கோவிலுக்கு வெளியே அரசமரத்தடி பிள்ளையார்
முதல் பிள்ளை லட்சணமாக அமர்ந்து இருக்கிறார்..
முதல் பிள்ளை லட்சணமாக அமர்ந்து இருக்கிறார்..
சிரகிரி வேலவனான தன் தம்பிக்காக தன் முதல் பூஜையை மலைமேல் விட்டுகொடுத்து சகோதர ஒற்றுமை பேணும் அண்ணனை மனதார பிரார்த்தித்தோம்..
சாவை சடங்காக நினைக்கும் மனிதர்கள் நடுவே அதை சரித்திரம் ஆக்கிய தியாகி குமரன்.
சென்னிமலையில் குமரன் பிறந்த இல்லம் தேர் நிலைக்கு அருகில் கண்டோம்....
அரசியல் காரணங்களால் பிழைக்கச்சென்ற திருப்பூரை பெயரில் சேர்த்து திருப்பூர்க்குமரனாக அறிமுகம் பெற்ற தேசத்தியாகிக்கு திருப்பூரில் நினைவகம் அமைத்துவிட்டோம் என்று பிறந்த இல்லத்தை நினைவிடமாக எளிமையாக வைத்திருக்கிறார்களாம்..
அச்சமில்லை… அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே என்ற பாரதியின் வைரவரிகளை விண்அதிர முழங்கி கொடி பிடித்து கொண்டு முன்னேறி சென்று வெள்ளையர் குண்டாந்தடி தாக்குதலில் குரமனின் மண்டை பிளந்து கொட்டிய செந்நீர் தாயக மண்ணை மேலும் சிவப்பாக்கி தரையில் சாய்ந்த நிலையிலும் வலது மணிக்கரம் பற்றிய தேசிய கொடி கீழே விழவிடாமல் தாங்கி மண்ணுக்கு உடலை தந்து மணிக்கொடிக்கு தன் மார்பை தந்து தானே ஒரு வரலாறாக மாறிய சென்னிமலை குரமன்
இரத்தம் சிந்தி ,யுத்தம் செய்து பெற்ற சுதந்திரம் !
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் சர்வேசா -- என்று சுதந்திர வேள்வியில் இந்திய விடுதலை போரில் உடல் பொருள் ஆவி என்கிற மூன்றையும் ஆகுதியாக அளித்த தியாகப்பட்டியலில் முதன்மை இடம் பெற்று சாகவரம் அடைந்த தியாகி குமரன் என்னும் தேச பக்திச் சொந்தக்காரனுக்கு ஆத்மார்த்தமாக அஞ்சலி செலுத்தினோம்...
கண்ணீரால் காத்தோம் சர்வேசா -- என்று சுதந்திர வேள்வியில் இந்திய விடுதலை போரில் உடல் பொருள் ஆவி என்கிற மூன்றையும் ஆகுதியாக அளித்த தியாகப்பட்டியலில் முதன்மை இடம் பெற்று சாகவரம் அடைந்த தியாகி குமரன் என்னும் தேச பக்திச் சொந்தக்காரனுக்கு ஆத்மார்த்தமாக அஞ்சலி செலுத்தினோம்...
சென்னிமலை காமாட்சி அம்மன் கோவில் பொங்கல்விழா பால் குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மேளதாளத்துடன் சென்னிமலை 4 ரதவீதிகளில் ஊர்வலமாக வந்து திருக்கோயிலை அடைந்த பின்பு காமாட்சியம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.
Golden Chairot at Sri Arunachaleswarar Temple, Tiruvannamalai.
கோவிலின் ஒவ்வொரு சிறப்பினை பற்றியும் மிக நுணுக்கமாய் விவரிப்பது அருமை.
ReplyDeleteசிரகிரி வேலவன் சீக்கிரம் வருகன்னு கந்தசஷ்டி கவசத்துல கேட்டிருக்கேன். இப்ப உங்க மூலமா விரிவாத் தெரிஞ்சுக்கிட்டேன். சிரகிரிஙகற ஊர் எங்க இருக்கு? அதைச் சொன்னா அந்தப் பககம் போறப்ப பாக்கலாம்னு குறிச்சு வெச்சுக்குவனே. நல்லதொரு பகிர்விற்கு நன்றி!
ReplyDeleteநிரஞ்சனா said... //
ReplyDeleteஈரோட்டுக்கு அருகில் இருக்கும் சென்னிமலை தான் சிரகிரி ..
கருத்துரைக்கு நன்றி,,
படங்களும் பதிவும் ரொம்ப நல்லா இருக்கு நன்றி வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமையான கோவில்
ReplyDeleteசிரகிரி வேலவனின் தரிசனம் பர்ர்க்க செல்லும் வழிகளையும் குறிப்பிட்டு இருந்தால் நலமாக இருந்திருக்கும். படிக்கும் போதே வழிபட்ட திருப்தி கிடைத்தது. நன்றி
ReplyDeleteவேலவன் படங்கள் அருமை. வேலவனோடு, கொடி காத்த குமரனின் இல்லத்தையும் கண்டு வந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி
ReplyDelete@ நிரஞ்சனா said...//
ReplyDeleteசீனு said...
சிரகிரி வேலவனின் தரிசனம் பர்ர்க்க செல்லும் வழிகளையும் குறிப்பிட்டு இருந்தால் நலமாக இருந்திருக்கும்.//
http://jaghamani.blogspot.com/2011/04/blog-post_06.html //
;) இந்த ஆண்டின் 125 ஆவது பதிவுக்கு என் அன்பான வாழ்த்துகள்.
ReplyDeleteகொடிகாத்த குமரனையும் அவரின் படம் போட்ட சிறப்புத்தபால தலையையும் வெளியிட்டுள்ளது மிகவும் சிறப்பு.
பாராட்டுக்கள்.
;) இந்த ஆண்டின் 125 ஆவது பதிவுக்கு என் அன்பான வாழ்த்துகள்.
ReplyDeleteகொடிகாத்த குமரனையும் அவரின் படம் போட்ட சிறப்புத்தபால தலையையும் வெளியிட்டுள்ளது மிகவும் சிறப்பு.
பாராட்டுக்கள்.
நல்ல தகவல்கள்.
ReplyDeleteதங்களின் 505-ஆவது பதிவிற்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.[அனைவரும் 500வது பதிவு எப்போதுவரும் என எதிர்பார்த்து வாழ்த்தி இருப்பார்கள். "என் வழி தனி வழி!!"
ReplyDeleteசென்னிமலை குறித்த பகிர்வு அருமை.
ReplyDeleteபடங்களும் ஜோர்.
சென்னிமலை முருகனை பலமுறை தரிசனம் செய்து இருக்கிறேன்.
ReplyDeleteதிருப்பூர் குமரன் அவர்கள் விவரம் இப்போது உள்ள குழந்தைகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி.
தேர்திருவிழா படங்கள் , மற்றும் படங்கள் எல்லாம் அழகு.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteபாதைகள் எத்தனையானால் என்ன? பயணம் என்பது ஒன்றுதானே ! பயணங்கள் அனைத்துமே பதிக்கும் முதலடியிலேயே பாங்காய் தானே ஆரம்பிக்கின்றன! பாசமான உறவுகளாய் படுத்தாமல் நிழல் தரும் மரங்கள் பழ்மை மாறாத கனிகளை பழங்களாய் தந்து பசி போக்கி இனிமை தந்து பார் முழுதும் அன்பாய் பயன் தரும் மரத்தருவாய் பயிற்றி வாழவேண்டும் பாரினில் உயரவேண்டும்...!!// சரியான பாதையில் பயனிக்கத் துணிந்து அந்தப் ”பாதை” பற்றிய கவிதை எழுதியுள்ள தங்களுக்கு என் பாராட்டுக்கள். விருது பெற்றதற்கு என் அன்பான வாழ்த்துகள்.//
பாராட்டுக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் இனிய நன்றிகள் ஐயா..
அருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
91. ப்ரம்ஹாண்டரூபா கோவிந்தா
ReplyDelete2797+4+1=2802
ReplyDeleteஅன்பிற்குரிய மணிராஜ் அவர்களுக்கு, வணக்கம். எங்களூர் சென்னிமலையைப் பற்றி மிக விரிவாக அழகாக அற்புதமாக எழுதியுள்ளீர்கள் - குறிப்பாக, தங்கள் கட்டுரையைப் படிக்கும்போதே வாசகர்களை சென்னிமலைக்கு அழைத்துச் சென்று விட்டீர்கள் - மீண்டும் நேரில் சென்னிமலைக்குச் செல்லும் ஆர்வத்தை அதிகப்படுத்தி இருக்கிறீர்கள் ! அருமை அற்புதம்.! மிக்க நன்றி !
ReplyDeleteவாழ்த்துக்கள்.
புராணப் பெருமை மிக்க சென்னிமலை - இந்திய விடுதலைக்கு கோடி காத்த குமரனை வழங்கியது போலவே, தொழில்துறையில் தனிபெருமைமிக்க கைத்தறி போர்வைகளையும், பதினாறு ஆண்டுகளுக்கும் மேலாக "கோ-ஆப்டெக்ஸ்" தலைவராகவும், நாற்பத்தாறு ஆண்டுகளுக்கும் மேலாக சென்னிமலை சென்டெக்ஸ் நெசவாளர் சங்கத் தலைவராக இருந்து கைத்தறி நேசவலர்களுக்குப் பாடுபட்ட பத்ம ஸ்ரீ எம்.பி நாச்சிமுத்து அவர்களையும், தமிழ் இலக்கிய உலகிற்கு சாகித்ய அகாடமி பரிசு பெற்ற தமிழன்பன் ( ஈரோடு தமிழன்பன்- சென்னை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்தவர் சென்னை புதுக்கல்லூரி பேராசிரியர்) அவர்களையும் வழங்கிய பெருமை கொண்டது,
"சேர வாரீர் சென்னிமலைக்கு!"
அன்புடன், சென்னிமலை சண்முகம் நியூயார்க் அமெரிக்கா
அன்பிற்குரிய மணிராஜ் அவர்களுக்கு, வணக்கம். எங்களூர் சென்னிமலையைப் பற்றி மிக விரிவாக அழகாக அற்புதமாக எழுதியுள்ளீர்கள் - குறிப்பாக, தங்கள் கட்டுரையைப் படிக்கும்போதே வாசகர்களை சென்னிமலைக்கு அழைத்துச் சென்று விட்டீர்கள் - மீண்டும் நேரில் சென்னிமலைக்குச் செல்லும் ஆர்வத்தை அதிகப்படுத்தி இருக்கிறீர்கள் ! அருமை அற்புதம்.! மிக்க நன்றி !
ReplyDeleteவாழ்த்துக்கள்.
புராணப் பெருமை மிக்க சென்னிமலை - இந்திய விடுதலைக்கு கோடி காத்த குமரனை வழங்கியது போலவே, தொழில்துறையில் தனிபெருமைமிக்க கைத்தறி போர்வைகளையும், பதினாறு ஆண்டுகளுக்கும் மேலாக "கோ-ஆப்டெக்ஸ்" தலைவராகவும், நாற்பத்தாறு ஆண்டுகளுக்கும் மேலாக சென்னிமலை சென்டெக்ஸ் நெசவாளர் சங்கத் தலைவராக இருந்து கைத்தறி நேசவலர்களுக்குப் பாடுபட்ட பத்ம ஸ்ரீ எம்.பி நாச்சிமுத்து அவர்களையும், தமிழ் இலக்கிய உலகிற்கு சாகித்ய அகாடமி பரிசு பெற்ற தமிழன்பன் ( ஈரோடு தமிழன்பன்- சென்னை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்தவர் சென்னை புதுக்கல்லூரி பேராசிரியர்) அவர்களையும் வழங்கிய பெருமை கொண்டது,
"சேர வாரீர் சென்னிமலைக்கு!"
அன்புடன், சென்னிமலை சண்முகம் நியூயார்க் அமெரிக்கா
சென்னிமலை செல்ல வழித்தடங்கள்:
ReplyDelete1, விமானம் வழியாக: மிக அருகில் உள்ள விமான நிலையம் கோவை. கோவை விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக சுமார் 100 km தூரம் கோவை விமானநிலையம் - அவினாசி - பெருந்துறை சென்னிமலை அல்லது, கோவை விமான நிலையம் திருச்சி ரோட்டில் காங்கயம் வழியாக சென்னிமலை.
2. புகைவண்டி ( ரயில்) மார்க்கமாக: கோவை சேலம் வழித்தடத்தில் ஈரோடு சந்திப்பில் இறங்கி பேருந்து மூலமாக சென்னிமலையை அடையலாம்.
2. பேருந்து மூலமாக:
2. 1 ஈரோட்டிலிருந்து 11 ஆம் நெம்பர் டவுன் பஸ் நேரடியாக சென்னிமலை பேருந்து நிலையத்திற்கு சுமார் ஒரு மணி நேரம்
.
2.2 ஈரோட்டிலிருந்து பெருந்துறை வழியாக தாராபுரம் பழனி செல்லும் விரைவுப் பேருந்துகள் = சுமார் 45 நிமிடங்கள்
2.3 கரூர் - திருப்பூர் / கோவை வழித்தடத்தில் காங்கயத்தில் இருந்து சுமார் 30 நிமிடங்கள்
ஈரோட்டில் இருந்து கார் மூலம் சென்னிமலைக்கு வெள்ளோடு வழியாக (11ஆம் நெம்பர் டவுன் பஸ் ரூட்டில்) சுமார் 25 -30 நிமிடத்தில் சென்னிமலையை அடையலாம். கார் கட்டணம் சுமார் 500 - 550 ரூபாய்கள்.
சென்னிமலை அடிவாரத்தில் இருந்து சென்னிமலைக் கோவிலுக்குச் செல்ல படிக்கட்டுக்கள் உள்ளன..1320 படிக்கட்டுக்கள். 1984ஆம் ஆண்டு அதிசய நிகழ்ச்சியாக இந்த 1320 படிக்கட்டுக்கள் வழியாகத்தான் லட்சக்கணக்கான மக்கள் பார்க்க, ஒரு சாமியார் இரட்டை மாட்டு வண்டியை மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு ஓட்டிச் சென்றார்.
சென்னிமலை அடிவாரத்தில் இருந்து சென்னிமலைக் கோவிலுக்கு கார் மற்றும் பேருந்துகள் - மோட்டார் வாகனத்தில் செல்ல தார் ரோடு வசதியும் உண்டி. தேவஸ்தானத்தின் மூலம் இரண்டு பேருந்துகள் செல்கின்றன. பத்து ரூபாய் கட்டணம், கார்கள் / சுற்றுலா வேன்கள் பேருந்துகள் செல்ல சிறப்புக் கட்டணம். அடிவாரத்தில் இருந்து மோட்டார் வாகனத்தில் சுமார் பத்து நிமிடத்தில் சென்று விடலாம்.
மலைக் கோவில் சாமிதரிசனம் செய்ய, தமிழகத்திலேயே முதல் முதலாக அமைக்கப்பட்ட திருக்கோவில் "மலைப்பாதை" சென்னிமலை மலைக்குச் செல்லும் தார் ரோடு தான். திருப்பதி மலைக்கு ரோடு போட்ட அதே என்ஜினீயரின் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட சென்னிமலை மலைப்பாதை 1965ஆம் ஆண்டு சென்னை மாகாண கவர்னராக இருந்த மைசூர் மகாராஜா அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. எனவே சென்னிமலை மலைக் கோவிலுக்கு காரிலோ வேனிலோ பேருந்திலோ செல்லும்போது, தமிழகத்திலேயே முதன் முதலாக அமைக்கப்பட்ட மலைப்பாதை வழியாகச் செல்லும் பெருமையையும் பெறுகிறீர்கள்.
சென்னிமலை சென்று வாருங்கள் -- வேலவன் அருள் பெற்று வாருங்கள்
அன்புடன், சென்னிமலை சண்முகம் நியூயார்க் அமெரிக்கா
வணக்கம் ..வாழ்க வளமுடன் ..
Deleteசிறப்பான தகவல்களை விரிவாக அளித்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
இரட்டை மாட்டு வண்டியை மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு ஓட்டிச் சென்ற நிகழ்ச்சியை தரிசித்து மகிழ்ந்த இனிய நிகழ்ச்சியை நினைவுபடுத்தியதற்கு நன்றிகள்..!
அபிஷேகத்திற்கு தினமும் இந்த மாடுகள்தான் தண்ணீர் கொண்டுவருவதாக அர்ச்சகர் தெரிவித்தார்..
அந்த மாடுகளுக்கு பழம் உண்ணக்கொடுத்து மகிழ்ந்தோம்..!