Tuesday, April 10, 2012

குருவாயூர் சித்திரை விஷு




கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாத துவக்கத்தில் விஷூ கனி உற்சவம் நடைபெறும்
 குருவாயூர் கோயிலில்   சித்திரை விஷு  தினத்தில் கோயிலின் குறுகிய வாசற்படிகளின் வழியாக சூரியக்கதிர்கள் குருவாயூரப்பன் மீது படிவது சிறப்பான நிகழ்வாகும். 

சித்திரையில் மேஷ ராசிக்கு செல்லும் சூரியன் உச்சம் பெற்று பலம் கூடுகிறது...

எனவே, இந்த மாதங்களில்"சூரியநாராயணன்' என்று போற்றும்  சூரியன் இறைவனை வழிபடுவதாக ஐதீகம்..
சன்னிதிக்கு எதிரே உள்ள முக மண்டபத்தில், தங்கத்தினாலான சிம்மாசனத்தில் சர்வ அலங்காரத்தில் குருவாயூரப்பன் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்படுவார். 

அவருக்கு முன்பாக வெள்ளரிக்காய், கொன்றைப் பூக்கள், மாம்பழம், பலாப்பழம், முகம் பார்க்கும் கண்ணாடி, வஸ்திரம், தேங்காய் மற்றும் பல பொருட்கள் வெள்ளியிலான உருளியில் முதல் நாள் இரவே வைக்கப்படும்.
விஷூ என்ற வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் "சமம்" என்று பொருள். வருடத்தின் ஒரு சமதின நாளைக் குறிக்கிறது... 

விஷூ அறுவடை பண்டிகையாக கேரளாவில் கொண்டாடப்படுகிறது..

மலையாளத்தில் "கனி" என்பதற்கு "முதலில் காண்பது" என்ற பொருளாகும், "விஷூக்கனி" என்றால் விஷூ அன்று முதலில் காண்பது என்று பொருள்படும்.

விஷூவின் முன் தினமே உன்னதமான பொருட்களாகிய பூ, பழம், காய், துணி மற்றும் தங்க நாணயம் ஆகியவற்றை பூஜை அறையில் வைத்து விடுவார்.

விஷூ அன்று பொழுது புலரும் நேரம் முதற் பார்வையில் விஷூவைக் கண்டால் அவ்வருடம் முழுதும் சிறப்பானதாக இருக்கும் என நம்புகின்றனர். 

பாரம்பரிய வழக்கமாக உருளி பஞ்சலோகத்தால் செய்யப்பட்டு வந்தது. ஐந்து உலோகங்கள் சூட்சுமமாக அண்டத்தைக் குறிக்கின்றது அதாவது அதன் ஐந்து தத்துவங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்ற ஐம்பெரும் தத்துவங்களைக் குறிப்பனவாக அமைகின்றது.

கொன்னைப் பூ கொண்டு கனி உருளி, படம் மற்றும் சுற்றுப்புறங்களை அலங்கரிக்கின்றனர். 

ஏற்றப்பட்ட நில விளக்கை (பித்தளை விளக்கு) இதற்கு அருகே வைத்து அதன் தங்க நிற ஒளிர்வை கனி பார்வைக்காக கூட்டுகின்றனர்.

விஷூக்கனி - கனிக் கொன்னை 
பூஜை அறையில் நில விளக்கின் மகோன்னதமும், அதிலிருந்து உருளியில் பட்டு ஏற்படும் ஒளிச் சிதறல்களும், தங்க நிற கனி வெள்ளரி, தங்க ஆபரணங்கள், மஞ்சள் நிற கனி கொன்னை மலர்களின் அழகைக் கூட்டும் பளபளக்கும் பித்தளைக் கண்ணாடியும் மற்றும் இவை யாவும் சேர்ந்து உருவாக்கும் மஞ்சள் நிற ஆன்மீக ஒளிர்வு அந்த கிருஷ்ண பரமாத்மாவை நினைவுபடுத்தும்.
தங்கம் விஷூக்கனியில் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது.
தங்க மஞ்சள் நிறமுடைய கனிக்கொன்னை மலர்களைக் கொண்டு
பூஜை அறையை அலங்கரிக்கின்றனர். 

கனிக்கொன்னைப்பூ சூரியன் உச்சத்தில் உள்ள அதாவது விஷூ 
ஏற்படும் மாதமாகிய மேஷ மாதத்திலேயே பூக்கின்றது. 

பூஜை அறையில் இப்பூக்கள் விஷ்ணுவின் கண்களாகிய சூரியனையே குறிக்கின்றது. தங்க நாணயம் அவரவரின் பொருளாதார நிலையையும் மற்றும் கலாச்சார ஆன்மீக வளத்தையும் குறிக்கின்றது.

அஷ்டமாங்கல்யமும் கனி உருளிக்குள் வைக்கப்படுகின்றது.
விஷூக்கை நீட்டம் எனப்படும் செல்வம் பகிர்ந்து கொள்ளும் வழக்கம். செல்வம் கொடுப்பவர்கள் தடையின்றி எல்லோருக்கும் கொடுக்க பெறுபவர்கள் மிக்க மரியாதையுடன் அதனைப் பெறுவர். 

விஷூ அன்று காலையிலும் அதற்கு முந்தைய தின மாலையிலும் குழந்தைகள் பட்டாசுகள் வெடித்து மகிழ்வர்.
പ്രമാണം:Mathapoo vishu.jpgപ്രമാണം:Mathapoo vishu.jpgപ്രമാണം:Mathapoo vishu.jpg

15 comments:

  1. ”குருவாயூர் சித்திரை விஷு”
    என்ற பெயரே தலைப்பே குதூகுலம் அளிப்பதாக உள்ளதே! ;)

    ReplyDelete
  2. முதல் படத்தில் ஸ்ரீகுருவாயூரப்பன்
    தகதகவென தங்கக்கலரில் காட்சிய்ளிப்பது அருமையோ அருமை!

    யானை மண்டையில் ஜொலிக்கும் இரண்டு பெரிய வழவழப்பான புத்தம்புதிய கண்ணாடிப் பேப்பர் வெயிட் போன்ற தங்கக்க்கலர் குமிழ்களும், அதைச்சுற்றியுள்ள குட்டிக்குட்டிக் குமிழ்களும் சூப்பரோ சூப்பர்.

    ஸ்ரீகிருஷ்ணனைச்சுற்றியுள்ள தங்கக் காசுகளை எண்ணினேன் .... ஐநூறை நெருங்குகிறது. ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!!

    ReplyDelete
  3. வெள்ளியில் உருளி, அடடா ;))))))

    அதில் வைக்கப்படும் மங்களப் பொருட்கள் .... ஆஹா!

    விஷு + கனி க்கான மலையாள மொழியின் விளக்கங்க்ள்.

    ஜோர் ஜோர்

    ReplyDelete
  4. நகைகள், வெண்பட்டில் வஸ்த்ரங்கள், பல முகங்களுடன் எரியும் குட்டி [தீபம்] விளக்கு, நுனி இலை, முந்திரி மிதக்கும் பால் பாயஸம், வெல்லப் பாயஸம், பொரித்த அரை அப்பளம், வாழைப்பழம், நேந்திரங்காய் வறுவல், சாதம், உப்பு, பருப்பு, காய்கறிகள், பச்சடிகள், பழப்பச்சடி, வடை என அமர்க்களாகப் பரிமாறப்பட்டுள்ளது பார்க்கவே பரவசப்படுத்துவதாகவும், அதே சமயம் பசியைக்கிளப்புவதாகவும் உள்ளது.

    ReplyDelete
  5. ஆஹா, நல்ல நிறத்துடன் கூடிய மாம்பழங்கள், முழுபலாப்பழம், சுளைகள் வேறு தனியாக, நேந்திரம் வாழைப்பழங்கள் சீப்பு சீப்பாக .... அடடா! முக்கனிகளுடன் நல்ல விருந்து இன்று எங்கள் கண்களுக்கு!

    ReplyDelete
  6. குருவாயூர் பதிவில் யானைகளைக் காணோமே என்று நினைத்தேன்.

    அடடா நாங்கள் இல்லாமலா என அணிவகுத்து நின்றுள்ளனர்.

    அவைகளை எண்ணிப்பார்த்தேன் மிகச்சரியாக 495 இருந்தன.

    வேறு யாருக்குமே இப்படி எண்ணத்தோன்றாது.

    எண்ணினாலும் விடை கிடைக்காது.

    ReplyDelete
  7. ”பாட்டத்தில்” காட்டியிருந்தாலும், விளக்குகளின் அணிவகுப்பு ”டாப்”

    ரொம்பவும் ஜொலிக்கின்றன.

    அருமையான அசத்தலான பதிவு.
    பதிவையும் படங்களையும் பார்த்துத் தான் திருப்திப்பட முடிகிறது.

    நல்லவேளையாக பின்னூட்டம் அளிப்பது என்ற ஒன்றாவது ஒருவருக்கொருவர் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வசதியாக உள்ளது. அதுவரை மகிழ்ச்சியே.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.
    அன்பான வாழ்த்துகள்.
    நல்லதொரு பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்!

    ReplyDelete
  8. ரொம்பவும் அழகான பதிவு. நானும் ’விஷு” வைப்பேன்.

    ReplyDelete
  9. ”குருவாயூர் சித்திரை விஷு” வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. கனி காண இன்னும் நாலு தினங்கள் இருக்குபோதே நாங்கல்லாம் இப்பவே கனி கண்டாச்சு.

    ReplyDelete
  11. குருவாயூருக்கே போய் வந்த மாதிரி இருக்குங்க உங்க பதிவும், படங்களும் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  12. ரசித்தேன், தேன் சொட்டும் பழங்களை.

    ReplyDelete
  13. அருமையான பதிவு.
    அருமையான படங்கள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete