Friday, November 16, 2012

கருணைக்கடல் கந்தன்





செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த திருமாது கெர்ப்ப முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில் திரமாய ளித்த பொருளாகி

மகவாவி னுச்சி விழியாந நத்தில் மலைநேர்பு யத்தி லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த மணிவாயின் முத்தி தரவேணும்


சூரனை மாய்த்திட அருள் கொண்டு வீரனாம் மகனுக்கு சக்திவேலை
தாயவளும் வழங்கிடவே, காவிரிக்கு வடபுலத்தில் ஏரகமெனும் திருத்தலத்தில் போர்புரிய ஆயத்தமாகி வீரவேலைத் 

தாங்கிய பெருமைக்கு உரிய முருகப்பெருமானை பிள்ளைத்தமிழ் 
துள்ளி  அழைக்கும்

கருணை வள்ளல் கந்தன் இச்சா சக்தி வள்ளியையும் , கிரியா சக்தி தெய்வானையும் மணந்து கொள்ளும் நிகழ்ச்சி மஹா கந்த சஷ்டிப் பெருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக திருக்கலயாணக் கோலத்தில் அருளும் இனிய தரிசனம் ஆலயங்களில் நிகழும்..

கருணைக்கடல்  முருகப் பெருமானின் வாகனமாகிய மயில் ஆணவத்தைக் குறிக்கும். பிரணவ வடிவமாகத் திகழ்பவன் கந்தன். 

பிரணவம் என்பதன் பொருள், சிறந்த- புதிய ஆற்றலைத் தருவது ...
. ஆணவத்தை அழித்த பின்னரே புதிய ஆற்றல் பிறக்கும். 

ஆணவ மலம் கொண்ட மயிலின் ஆணவத்தை நீக்கி, அதன்மீது ஆரோகணித்திருப்பவன் முருகன்.

முருகனின் வாகனமாகிய மயில், நாகத்தை மிதித்துக்கொண்டு அதன் விஷம் வெளிப்பட முடியாமல் செய்கிறது. 

விஷத்தினை உமிழாமல் இருக்கும் நாகம் அவ்விஷத்தினையே பிரகாசமுள்ள மாணிக்கமாக மாற்றுவதுபோல,  ஐம்பொறிகளை அடக்கி ஆள்பவன் உடலினுள் ஒளிரும் ஆத்மாவை அறிந்து பேரானந்தம் கொள்கிறான்.

நண்பன்- பகைவன் என்ற பாகுபாடின்றி, உலக உயிர்களிடம் வேற்றுமை பாராட்டாமல் அருள் பாலிப்பவர் முருகப் பெருமான். அகப்பகைவர்களை அடக்கி, உலக உயிர்கள் அனைத்துடனும் சமநோக்குடையவர்களாய் வாழவேண்டும் என்பதையே முருகப் பெருமானின் வாகனங்கள் உணர்த்துகின்றன.

கந்தசஷ்டி தொடங்கி ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சஷ்டி திதியன்று விரதம் கடைப்பிடித்தால் குழந்தைச் செல்வம் கிட்டும்; உடல் வளம் பெறும்; குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்; சுபகாரியங்கள் நடக்கும். 

முருகன் திருத்தலங்களிலும் கோவில்களிலும் இந்த சஷ்டி விழா மிகவும் பிரமாதமாகக் கொண்டாடப்படுவதைக் காணலாம்.



21 comments:

  1. காலை வணக்கம்... இன்றைய பொழுது நன்றாக எல்லாம் வல்ல முருகன் அருள் புரியட்டும்... நன்றி...

    ReplyDelete
  2. கந்தனின் புகழ் பாடும்
    இனிய பதிவு சகோதரி...

    ReplyDelete
  3. விளக்கங்கள் மிகவும் அருமை... நன்றி...

    ReplyDelete
  4. புண்ணியம் அடைந்தேன்.

    ReplyDelete
  5. கந்த சஷ்டி திருநாளின் அற்புதத்தை விளக்கும் ஆன்மீக கட்டுரை அற்புதம்.

    ReplyDelete
  6. ஸ்கூல் பையன் said...
    காலை வணக்கம்... இன்றைய பொழுது நன்றாக எல்லாம் வல்ல முருகன் அருள் புரியட்டும்... நன்றி...//

    காலை வணக்கம் ..
    கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete
  7. மகேந்திரன் said...
    கந்தனின் புகழ் பாடும்
    இனிய பதிவு சகோதரி...//


    கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete
  8. திண்டுக்கல் தனபாலன் said...
    விளக்கங்கள் மிகவும் அருமை... நன்றி...//


    கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete
  9. சு.பசுபதி said...
    மிக அருமை! //

    இனிய நன்றிகள்..

    ReplyDelete
  10. பழனி.கந்தசாமி said...
    புண்ணியம் அடைந்தேன்.//

    இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  11. Kaa.Na.Kalyanasundaram said...
    கந்த சஷ்டி திருநாளின் அற்புதத்தை விளக்கும் ஆன்மீக கட்டுரை அற்புதம்.//



    அற்புதமான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  12. படங்களும் விளக்கங்களும் ரொம்ப நல்லா இருக்கு நன்றி வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. உள்ளம் மகிழ்ச்சியடையும் பதிவுகள்.

    ReplyDelete
  14. அருமையான அழகு முருகன் பற்றிய தகவல்கள்! மிக்க நன்றி!

    ReplyDelete
  15. அனைத்தும் மிக அருமை!!

    ReplyDelete
  16. மயில் படமும், கதையும் பிரமாதம். மயிலழகு ஆணவத்தின் பிம்பமா!

    ReplyDelete
  17. முருக நாமம் போற்றி.
    கந்தனுக்கு அரோகரா
    பக்திப் பதிவு.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  18. ”கருணைக்கடல் கந்தன்”

    இதன் முதல் படத்தில் புஷ்ப அலங்காரங்கள் வெகு அருமையாக உள்ளன.

    முருகப்பெருமானின் வெவ்வேறு வாகனங்களுக்கான காரணம் நனகு சொல்லியுள்ளீர்கள்.

    காட்டியுள்ள மயில் அழகோ அழகு !

    அது என்ன கடைசிப்படத்துக்கு முன்பு ஒரு சினிமா காமெடி நடிகரை [சார்ளி சாப்ளின்] புதிதாக எனக்காக மட்டும் காட்டியுள்ளீர்கள்???????

    ஒருவேளை, முருகன் தான், எனக்கு மட்டும் தான், அப்படி காட்சி தருகிறாரோ? இருக்கலாம், இருக்கலாம். ;)

    ReplyDelete
  19. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ”கருணைக்கடல் கந்தன்”

    இதன் முதல் படத்தில் புஷ்ப அலங்காரங்கள் வெகு அருமையாக உள்ளன.

    முருகப்பெருமானின் வெவ்வேறு வாகனங்களுக்கான காரணம் நனகு சொல்லியுள்ளீர்கள்.

    காட்டியுள்ள மயில் அழகோ அழகு !

    அது என்ன கடைசிப்படத்துக்கு முன்பு ஒரு சினிமா காமெடி நடிகரை [சார்ளி சாப்ளின்] புதிதாக எனக்காக மட்டும் காட்டியுள்ளீர்கள்???????

    ஒருவேளை, முருகன் தான், எனக்கு மட்டும் தான், அப்படி காட்சி தருகிறாரோ? இருக்கலாம், இருக்கலாம். ;)////

    வணக்கம் ஐயா..

    [சார்ளி சாப்ளின்] எப்படி வந்தார் என்று தெரியவில்லை .. அனுப்பிவிட்டேன் ..

    அழகான கருத்துரைகளுக்கு
    இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete