

ராமன் என்ற சொல்லுக்கு ரமிக்கச் செய்கிறவன், ஆனந்தப்பட செய்பவன், இதயத்தில் ரம்மியமாய் வாசம் செய்யக்கூடியவன் என்று பொருள்.

ஸ்ரீ ராமருக்கு விருந்து:
பரத்வாஜர் ராமனுக்கு விருந்து படைத்த கட்டத்தைப் பாடும் விதம் கேட்டு மனம் பறிகொடுத்தோம்....

வைகுண்டவாசருக்கு வாழை இலை போட்டு
வாழை இலைதன்னை வடக்கே நுனி போட்டு
காட்டுச் சிறு கிழங்கும் கந்த மூலம் பழமும்
தூது விளங்காயுடனே சுண்டைக்காய் பச்சடியும்
அஞ்சு வகைப் பச்சடியும் ஆன நல்ல தாளிதமும்
பத்துவகைப் பச்சடியும் பால் குழம்பும் சர்க்கரையும்
பொறிச்ச பொறி கறியும் பொன்போல் சிறு பருப்பும்
புத்துருக்கு நெய்யும் புனுகு சம்பாப் பாயசமும்
தேங்காயும் சர்க்கரையும், தித்திக்க மோதகமும்
பச்சுன்னு கீரையும் பால் வடியும் மாவடுவும்
வேர்புறத்திலே வெடித்த வேண பலாச்சுளையும்
தார் பழுத்துச் செறிந்த தேனான கதலிகளும்
கொத்தோடு மாம்பழமும் கொம்பிலுள்ள நல்தேனும்
கொய்யாப் பழங்களும் கொடி முந்திரிப் பழமும்
கிச்சிலிப் பழங்களும் கிளுகிளுத்த மாதுளையும்
வெள்ளைக் கடுக்காயும் வெடுக்குன்னு இஞ்சியும்
பச்சை மிளகும் பால் வழியும் களாக்காயும்
நேர்த்தியாய் நெல்லிக்காய் மணமுள்ள மாகாளி
நார்த்தை கடநார்த்தை நறுமண எலுமிச்சை
கடுகு மாங்காயும் கார மிளகாயும்
இப்படி முற்றிலும் அருமையாக சுவையான பாட்டும் செய்தார்கள்...,
சீதாராம கல்யாணத்தை சிறப்பாக கண்முன்னே அழைத்துவந்து காட்சியுமாக்கினார்கள்..





போஜனம் முடித்த ராமன், காலும் அலம்பி கனிவாயும் கொப்புளிச்சு ஆசமனம் பண்ணி அவருமங்கே வீற்றிருந்தார் எனும் போது கவிகளாகவும்,
சாஸ்திர ஆசார சீலர்களாகவும் ஆகி மனம் கொள்ளைகொண்டுவிடுகின்றது......

கையலம்பி வந்ததும் ஜீரணம் ஆவதற்காக, ஏலமுடன் சுக்கு எல்லார்க்கும் தாம் கொடுத்தார் என்று மறக்காமல் சொல்வதைக்கேட்டு இன்புறுகின்றோம்...,






ravi krishna said...
ReplyDeletevow! Super!
Thank you ..
கோமதி அரசு said...
ReplyDeleteஸ்ரீ ராமாருக்கு விருந்து பாட்டு அருமை.
பட்டாபிஷேக படம் மற்றும் விருந்து உபசாரபடங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
ரகுபதி ராகவ ராஜா ராம்.
பசித்த பாவன சீத்தா ராம்.//
Thank you...
பார்த்தேன் பரவசமடைந்தேன் சிறப்பு.
ReplyDeleteபடங்கள், பதிவு அருமை.
இனிய நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
விருந்தோ விருந்தில்
ReplyDeleteஸ்ரீராமரின் படங்களே எங்கள் கண்களுக்கு நல்லதோர் மிகச்சிறந்த விருந்தாகப் படைத்துள்ளீர்கள்.
அனைத்தும் அழகோ அழகு. ;)))))
>>>>>>
வைகுண்டவாசருக்கு வாழ இலை போட்டு ...
ReplyDeleteபாடலைத்தாங்களே பாடுவதாகக் கற்பனை செய்து பார்த்தேன்.
நல்லவே ஜோராகப் பாடுறீங்கோ! ;)))))
>>>>>>>
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteவிருந்தோ விருந்தில்
ஸ்ரீராமரின் படங்களே எங்கள் கண்களுக்கு நல்லதோர் மிகச்சிறந்த விருந்தாகப் படைத்துள்ளீர்கள்.
அனைத்தும் அழகோ அழகு. ;)))))
வணக்கம் ஐயா..
அழகான கருத்துரைகளிக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
நுனி இலை போட்டுப்பரிமாறியும் விட்டீர்கள்.
ReplyDeleteபாயஸம் சர்க்கரைப்பொங்கல், புளியஞ்சாதம், அரிசி அப்பளம் என ஏதேதோ தெரிகிறது. எனக்கு இப்போ தொந்தி பசிக்கிறது. இதற்கு மேல் இதைப்பார்த்துக்கொண்டே இருக்க முடியாது.
வறுத்த முந்திரிப்பாக்கெட்டைக் கையில் எடுத்து விட்டேன்.
ஏலமுடன் சுக்கு வேறா?
எதையாவது எழுதி இப்படி அசத்திப்புடுறீங்களே!
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.பகிர்வுக்கு நன்றிகள்.