
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்.( காணொளி காண)
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்.
காற்றடித்தால் அவன் வீடாவான் கடுமழையில் அவன் குடையாவான்
அற்றாதழுதால் அழுத கண்ணீரை அங்கே துடைக்கும் கையாவான்!
சிறையினிலேதான் அவன் பிறந்தான் மழையினிலே வேறு மனைபுகுந்தான்
உறவறியாத குழந்தைக் கெல்லாம் உறவினனாக அவன் வருவான்!
அடையாக் கதவு அவன் வீடு அஞ்சேல் என்பது அவன் ஏடு
அடைக்கலம் தருவான் நடப்பது நடக்கும்
அமைதியுடன் நீ நடமாடு!அழைத்தவர் குரலுக்கு வருவான் கண்ணன்..




உலகுக்கே ‘கீதை’ என்னும் ஞான தீபத்தை ஏற்றி ஒளியூட்டிய கீதாசார்யனுக்கு, , பிரமாண்டமான கீதோபதேச சிலை மலேசியாவில்
நிறுவப்பட்டிருக்கிறது..
நிறுவப்பட்டிருக்கிறது..
வானளாவ உயர்ந்து அருள் புரியும் பத்துமலை முருகன். அருகிலேயே, அவர் மாமனான கீதோபதேச கண்ணனும், ‘அனுமன் முற்றம்’ என்ற பகுதியில் இடம்பெற்றிருக்கிறார்.
நுழைவாயிலிலேயே, விஸ்வரூபம் எடுத்த நிலையில்- ஆஞ்சநேயர் தன் உள்ளத்தில் எழுந்தருளி இருக்கும் சீதாராமரை காண்பிக்கிறார்.


அவருக்குப் பின்னால், இருக்கும் பெரும் குகை வாயிலின் மேற்புறத்தில், ‘சுயம்பு லிங்கக் குகை’ என எழுதப்பட்டிருக்கிறது.







குகையின் உள்ளே ராமாயணக் காட்சிகள்… புத்திர காமேஷ்டி யாகம் முதல் ஸ்ரீசீதாராமப் பட்டாபிஷேகம் வரையிலான அனைத்துக் காட்சிகளும் மிக அற்புதமான வண்ணச் சிலைகளாக உள்ளன.


ஒவ்வொன்றும் நிகழ்காலத்தில் நேரில் காண் பது போன்று
தத்ரூபமாகத் திகழ்கின்றன.
தத்ரூபமாகத் திகழ்கின்றன.
கும்பகர்ணன் படுத்திருக்கும் தோற்றத்தை பிரமாண்டமான முறையில் அமைத்திருக்கிறார்கள். தூங்குகின்ற கும்பகர்ணனை வீரர்கள் பலர் எழுப்பும் காட்சி, அப்படியே கம்பரின் பாடல்களுக்கு விளக்க உரை போல கண்களுக்கு எதிரில் காணக் கிடைக்கிறது.
'உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வு எலாம்
இறங்குகின்றது! இன்று காண்; எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே,
உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்'!
என்று உறங்கும் கும்பகருணனை துயிலெழுப்பசொல்ல, அன்னவன் எழுந்திராமை கண்டு போய், 'மன்றல் தங்கு மாலை மார்ப! வன் துயில் எழுப்பலம்' அன்று, 'கொள்கை கேண்மின்' என்று மாவொடு ஆளி ஏவினான், 'ஒன்றன்மேல் ஒர் ஆயிரம் உழக்கிவிட்டு எழுப்புவீர் -
கம்பனின் கும்பன் கண் எதிரே காட்சி நடப்பதாக பிரம்மாண்டமாக கருத்தைக்கவருகிறது..
இறங்குகின்றது! இன்று காண்; எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே,
உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்'!
என்று உறங்கும் கும்பகருணனை துயிலெழுப்பசொல்ல, அன்னவன் எழுந்திராமை கண்டு போய், 'மன்றல் தங்கு மாலை மார்ப! வன் துயில் எழுப்பலம்' அன்று, 'கொள்கை கேண்மின்' என்று மாவொடு ஆளி ஏவினான், 'ஒன்றன்மேல் ஒர் ஆயிரம் உழக்கிவிட்டு எழுப்புவீர் -
கம்பனின் கும்பன் கண் எதிரே காட்சி நடப்பதாக பிரம்மாண்டமாக கருத்தைக்கவருகிறது..
ராமாயணக் காட்சிகள் நிறைந்த இந்தக் குகைக்கும், அனுமன் முற்றத்தின் தொடக்கத்திலேயே இருக்கும் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கும் நடுவேதான்… உலகிலேயே பிரமாண்டமான ‘கீதோபதேச சிலை’ நிறுவப்பட்டுள்ளது.
சீறிப் பாய்ந்து செல்லத் தயாராக இருக்கும் குதிரைகள், அவற்றின் கடிவாளங்களைக் கையில் பிடித்தபடி தேரில் நின்ற நிலையில் கீதோபதேசம் செய்யும் கண்ணன், அவர் எதிரில் கைகளைக் குவித்தபடி பணிவோடு கீதோபதேசத்தைக் கருத்தோடு கேட்கும் அர்ஜுனன்..!

கண்ணனின் பின்னால் தேரின் பின்பகுதியும், பின் சக்கரங்களும் அமைந்திருக்க, (தொடக்கத் தில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயரைவிட உயரமான) வண்ணமிகு நாராயணர் சிலை, நின்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.
அவருக்குப் பின்புறத்தில் இருக்கும் குகையின் மேற்பகுதி முகடுகளிலும், பத்து மலை முகடுகளிலும் மேகங்கள் ஊர்ந்து போக, மலைகளில் இருந்து சிற்றருவிகள் விழ, அவற்றில் இருந்து பன்னீர்த் துளிகளைப் போலத் தண்ணீர்த் துளிகள் தெளிக்க… தேரின் குதிரைகளின் முன்னால் அமைக்கப்பட்டிருக்கும் நீரூற்றுகளில் இருந்தும் தண்ணீர்த் துளிகள் தெளிக்க… இப்படிப்பட்ட குளுமையான சூழலின் நடுவே அமைக்கப்பட்டிருக்கும் கீதோபதேச சிலை, இரவில் வண்ணமயமான விளக்குகளின் ஒளியில் மிகவும் ரம்மியமாக மனத்தைக் கவர்கிறது.
ராமாயணத்தில் தூது சென்றவரின் (ஆஞ்சநேயர்) அருகே, மகாபாரதத்தில் தூது சென்றவரின் (கண்ணனின்) சிலையைப் பொருத்தமாக அமைத்திருக்கிறார்கள்..,
‘கண்ணன் அர்ஜுனனுக்குக் கீதோபதேசம் செய்தபோது, அந்தத் தேரின் கொடியில் இருந்தபடி அதைக் கேட்டவர் ஆஞ்சநேயர். அதனால்தான் அவர் அருகிலேயே இந்தக் கீதோபதேசச் சிலையை நிர்மாணித்தார்களாம்.
கண்ணன் உபதேசம் செய்யும் அந்தப் பிரமாண்டமான காட்சியைப் பார்ப்பதற்காக, சூரியபகவானும் தன் தேரை திசை திருப்பி ஓட்டிக்கொண்டு வந்துவிட்டாற் போல ! சூரியன் திசை திரும்பிப் பயணத்தைத் தொடங்கும் உத்தராயன புண்ணிய காலமான, ‘தை’ மாத முதல் தேதியன்று…
கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்
கேட்டவர்க்குக் கேட்டபடி வாழ்வு தருகிறான் – என்று சீர்காழியின் பாடலும்,
வயலைத்தேடி பொழியும் மழைபோல் வருகின்றான் கண்ணன் – என்று டி.எம்.எஸ். பாடலும் மலைகளில் எல்லாம் எதிரொலிக்க, அந்தப் பிரமாண்டமான ‘கீதோபதேச சிலை’ திறக்கப்பட்ட்டிருக்கிறது.
”ஏறத்தாழ மூன்று ஆண்டுக் காலமாக உருவான சிலை. 43 அடி உயரமும், 90 அடி நீளமும் கொண்ட இந்தச் சிலையில் 13 குதிரைகள் உள்ளன.
கீதை சொல்லும் கண்ணனின் கைப்பிடியில் கடிவாளங்களோடு அந்த
13 குதிரைகளையும் அமைக்கப்பட்டிருக்கிறது..
13 குதிரைகளையும் அமைக்கப்பட்டிருக்கிறது..

ஞானேந்திரியங்கள்- 5, கர்மேந்திரியங்கள்- 5, மனம் – புத்தி அகங்காரம் என்பவை மூன்று; ஆக, மொத்தம் 13. இவற்றை உணர்த்துவதற்காகவே
13 குதிரைகள் வைக்கப்பட்டிருக்கிறது..
13 குதிரைகள் வைக்கப்பட்டிருக்கிறது..
அவற்றிலும், மனம் போன போக்கில் ஓரம் போகக்கூடாது என்று, முதலில் ஒரு குதிரையை வைத்து, அதன் பின்னால் ஆறு ஜோடிக் குதிரைகளை அமைத்து, கடிவாளங்களைக் கண்ணன் கைப்பிடியில் அமைத்து. கீதை சொல்லும் அந்தக் கண்ணன் அனைவருக்கும் நல்வழி காட்ட உலகிலேயே மிகப்பெரிய அளவில் நிர்மாணிக்கப்பட்ட, கண்ணனின் அழகுமிகு எழில் கோலம் கண்களையும் கருத்தையும் கவர்கிறது.
கண்ணனின் காட்டிய வழியில் நடந்தால்
கசக்கிப் பிழியும் துயரங்கள் காணாமல் போம்!






















'அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்' பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்!
ReplyDeleteவிஸ்வரூப ஆஞ்சி சிலை பிரமிப்பு.
படங்கள் மிகக் கவர்கின்றன.
பத்துமலை முருகன் கோயிலுக்கு ஒரு முறை சென்று வந்துள்ளேன் சகோதரியாரே
ReplyDeleteதங்களின் பதிவினைப் பார்த்ததும் நினைவலைகளில் ஒரு முறை நீந்தி வந்தேன்
நன்றி சகோதரியாரே
//அழைத்தவர் குரலுக்கு வருவான் கண்ணன் ///
ReplyDeleteகண்ணா ! மணி வண்ணா ?
எனக்கும் ஒரு குறை இருக்கிறது.
வா வா.
அதுவரை யானும்
ஆனந்த பைரவியில் பாடியவாறே
உன் வரவை எதிர்பார்த்து
காத்திருப்பேன்.
சுப்பு தாத்தா
www.menakasury.blogspot.com
பிரமாண்டம்....
ReplyDeleteநன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
மனம் கவர்ந்த பதிவு! தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி!
ReplyDeleteதங்களின் இனிய பதிவினால் -
ReplyDeleteமலேஷியாவின் பத்துமலை திருத்தலத்தினைக் கண்ணார தரிசித்தேன்..
மட்டற்ற மகிழ்ச்சி..
This comment has been removed by the author.
ReplyDeleteஅடேங்கப்பா !
Deleteமிகவும் பிரும்மாண்டமானப் படங்களுடன் கூடிய பதிவாக இது உள்ளதே !
சனிக்கிழமைக்கு ஏற்ற அழகான பொருத்தமான அனுமன் பதிவு கொடுத்து வழக்கம்போல அசத்தியுள்ளீர்கள்.
ReplyDelete>>>>>
அழைத்தவர் குரலுக்கு வருவான் அந்தக்கண்ணன்.
ReplyDeleteஅழைக்காமலேயே தங்கள் பதிவுப்பக்கம் அடிக்கடி ஓடோடி வருவான் இந்த கோபாலகிருஷ்ணன்.
>>>>>
இன்று என்னை மலேசியாவுக்கே அழைத்துச்சென்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
ReplyDelete>>>>>
காமதேனு படம் மிகவும் கவர்ச்சியாக கண்களைச் சுண்டியிழுப்பதாக உள்ளது. நீண்ட நேரம் வைத்தகண் வாங்காமல் பார்த்து மகிழ்ந்தேன்.
ReplyDeleteஇருப்பினும் அதைத்தாங்கள் இந்தப்பதிவினில் இணைக்க வேண்டிய அவசியமும், அதில் உள்ள தாத்பர்யங்களிலும் என்னால் சரியாகப் புரிந்து கொள்ள இயலவில்லை.
இன்னும் அந்தப்படத்தினில் எனக்கு ஏராளமான சந்தேகங்களும் உள்ளன.
>>>>>
நமஸ்காரம்...
Deleteசுயம்புலிங்கக்கோவிலில் உள்ள சிறபம் காமதேனு.
நிறைய இடங்களில் பசுக்கள் தானாகவே பால் பொழிந்து அங்கே மறைந்திருக்கும் ஆற்றல் மிக்க இறை உருவங்களை உணர்த்துகின்றன..
அன்பான மனம் நிறைந்த ஆசிகள்...
Deleteதானாகவே பால் பொழியும் பசுவினைப்போன்றே உள்ளது தங்களின் காமதேனு பற்றிய விளக்கங்கள். மகிழ்ந்தேன் + நெகிழ்ந்தேன். மிக்க நன்றீங்கோ ! VGK ;)
This comment has been removed by the author.
ReplyDeleteகும்பகர்ணன் தனது தூக்கத்தில் கொஞ்சம் என்னிடமும் விட்டுச் சென்றுள்ளான் என நினைத்திருந்தேன் நான், இந்தப்பதிவுலகத்திற்கு வருவதற்கு முன்பு.
Deleteஆனால் இப்போ அதுவும் போச்சு !
தூக்கமின்றி பதிவுகளைப் பார்க்க வேண்டியதாக உள்ளது.
சிங்கப்பூர் மாரியம்மன், குகை ஹனுமன் கோயில், மலேசிய குகை ஹனுமன் ஆகிய மூன்று காணொளிகளும் பார்க்க அருமையாக உள்ளன.
ReplyDelete>>>>>
அனைத்துப்படங்களும், பச்சை நிற ஹனுமனும் பார்க்கப்பார்க்கப் பரவஸம் அளித்தன.
ReplyDelete>>>>>
அனைத்துக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றியோ நன்றிகள்.
ReplyDeleteமுத்தான மூக்குத்தியை [மூக்கணாம் கயிற்றினை] மூன்றாம் பரிசாகப் பெற்றுள்ளீர்கள்.
அதே நேரத்தில் இந்த வெற்றிக்கு அதிபதியான ஹனுமன் பதிவும் வெளியிட்டுள்ளீர்கள். ;)
என்னப் பொருத்தம் .............. இந்தப்பொருத்தம்.
;) 1312 ;)
ooo ooo ooo
அழகான படங்களுடன் பத்துமலை அனுமன் முற்றம். சிறப்பான பகிர்வு.
ReplyDeleteநன்றி.
ஸ்றீ ராம ஜெயம்!!!
ReplyDeleteஇன்று சனிக்கிழமையில் அருமையான ஒரு பதிவு...
நல்ல பகிர்வு.
ReplyDelete