









அருணகிரி நாதர் - பாம்பன் சுவாமிகள்..

அருணகிரிநாதர் திருப்புகழில்
திரிபுரம் அதனை ஒரு நொடியதனில்
எரிசெய் தருளிய சிவன் வாழ்வே ....
அரவணை துயிலும் அரிதிரு மருக
அணிசெயு மருத மலையோனே!
அடியவர்வினையும் அமரர்கள் துயரும்
அற அருள் உதவு பெருமாளே!
என மருதமலை முருகனைப் பாடியுள்ளார்.



மருதமலயில் நடைபெற்ற திருமணத்திற்குச்சென்றிருந்தோம்..
ஸ்தலவிருட்சம் மருதமரம்


ஆதிமூலஸ்தானத்திற்கு அருகில் நாகலிங்கமரம் செழித்து
கருத்தைக் கவர்ந்தது..



அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என ஐந்து மரங்கள் ஒன்றிணைந்த பஞ்ச விருட்சம் என்னும் அபூர்வ மரத்தடியில்
ஐந்து முகங்களுடன் அமைந்துள்ள பஞ்சமுக கணபதி மூலவராக வீற்றிருக்க , சுற்றிலும் தட்சிணாமூர்த்தி, நாகர் , முருகர் , சிவன் சிலைகளாகக் காட்சி தருகின்றனர்.. மரத்தடியில் சித்தர்கள் அரூபமாக தவம் செய்வதாக ஐதீகம்..


மரகதாம்பிகை சன்னிதிக்கு முன்னிலையில் நவகிரகங்கள் சன்னிதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர் ஆகிய தனித்தனி சன்னிதிகள் வெளிமண்டபச் சுற்றில் உள்ளன

முருகன் ஆலயத்தில் கரிவரதராஜப்பெருமாள் சன்னதி அமைந்த காரணத்தை சேகர் சிவம் என்கிற அர்ச்சகர் விளக்கினார்..

பாம்பாட்டி சித்தருக்கு முருகன் , பட்டீஸ்வரர் , மரகதாம்பிகை , காமதேனு, கரிவரதராஜப்பெருமாள் என ஐவரும் மருதமலையில் காட்சி கொடுத்தன் அடிப்படையில் ஆலயம் அமைந்திருப்பதாக தெரிவித்தார்..
கல் கொடிமரத்தின் முன் வலம்புரிவிநாயகர்..

தொடர்புடைய பதிவுகள்
மணிராஜ்: மனம் மகிழும் மருதமலை மருதாசலமூர்த்தி...
திருமண வரவேற்பில் வித்தக விநாயகர் ஆலய குருக்கள் வந்திருந்து திருமண சடங்குகளின் அர்த்தங்களை விளக்கினார்..
சம்ஸ்கிருதத்தில் மந்திரங்களை கூறுவதால் அதன் பொருள் உணரப்படுவதில்லை..

எப்போதும் கணவனுக்கு வலதுபுறம்தான் மனைவி இருக்கவேண்டும்
கணவனுக்கு வலது கையே மனைவி தான் என உணர்த்த வேண்டியே ஆலயங்களிலும் விஷேசங்களிலும் , சடங்குகளிலும் வலதுபக்கம் மனைவியை அமைக்கிறோம்..
அருந்ததி பார்த்தல் , சூரிய நமஸ்காரம் எல்லாம் கணவனுக்கு பணிவிடை செய்து அருந்ததி நட்சத்திரப்பதவி பெற்றது போல தனக்கு பணிவிடை செய்யும் பாக்கியத்தை மனைவிக்கு அளிக்க கணவன் கடமைப்படுகிறார்..
இரண்டு நட்சத்திரங்களாக அருந்ததி வசிஷ்டர் நட்சத்திரங்கள் இருப்பினும் ஒரே நட்சத்திரமாக காட்சிப்படுவதுபோல இருவரும் கருத்தொருமித்து வாழவேண்டும் , கற்புத்திறனுடன் விளங்க வேண்டும் .
பெற்றோருக்கு பாத பூஜை, பாணிகிரகணம் , பெண் தன் கோத்திரத்தை விட்டு இனி கணவனின் கோத்திரத்தை ஏற்றல், அந்தப்பெண்ணின் பொறுப்புகளை மணமகன் இல்லத்தார கவனித்துக்கொள்ளவேண்டிய அவசியம், மணமக்கள் இணைபிரியாமல் இருக்கவேண்டி முந்தானை முடிச்சிடுதல் , கைகோர்த்து வலம் வருதல் , என்று சிறப்பான விளக்கங்கள் அளித்தார்..

கடம்பமரம்
எங்கள் இல்லத்தின் முன் கடம்ப மரங்கள் பூத்துக்குலுங்குகின்றன..





மரம் பழுத்தால் வௌவால் தானாகவே பழுமரம் நாடி வருவதுபோல மரம் பூக்க ஆரம்பித்ததும் நிறைய பட்டாம்பூச்சிகள் படை எடுத்து மலர்களை மொய்ப்பது கண்கொள்ளாக்காட்சி..உருண்டை வடிவத்தில் பூக்கள் பூக்கிறது.
அழகுக்காகவும் இறைவனுக்கு சூட்டவும் பயன்படுகிறது.
கடம்ப மரம் பலகை , பென்சில் செய்ய பயன் படுகிறது.
"உடம்பை முறித்து கடம்பில் போடு" என்னும் சொல் மூலம்
கடம்பு கட்டிலில் படுத்தால் நோய்கள் அணுகாது என்பது முன்னோர் கண்டறிந்த மகத்துவம்..






முருகன் கடம்ப மாலை விருப்புடன் சூடி போருக்குச்சென்று சூரர்களை அழிப்பதை அருணகிரிநாதர் திருப்புகழில் காட்சிப்படுத்துகிறார் ..
போர் முடிவில் பகைவர்களை அழித்தபின் சாந்தமடைய வேண்டி கடப்பமாலையை இனிவிட வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறார்..
போர்க்களத்திற்குச்செல்லும் போது அணியும் மாலையாக கடம்ப மலர் சங்க இலக்கியங்களில் வர்ணிக்கப்படுகிறது..


கடம்பமலர் அணிவதால் "கடம்பன்" என்றும்,
முருகன் கடம்ப மலரில் அமர்ந்தவன் என்னும் பொருளில் பரிபாடலிலும் ("கடம்பமர் செல்வன்") -"கடம்பமர் நெடுவேள்"-
பரிபாடல் [செவ்வேள்......முருகக்கடவுள்] என்றும் காணக்கிடைக்கிறது..
பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்உருளிணர்க் கடம்பின் ஒலிதா ரோயே

நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே.
நம்மால் விரும்பிப் போற்றப்படும். கடம்பமலர் சூடும் முருகன்.
பெற்றவள் -பார்வதி.

அன்னை காமாட்சியும் கடம்ப மலர்களை விருப்புடன் சூடுகிறாள்.
அம்பா காதம்ப நிலையா..என்று போற்றுவார்கள்..
மதுரையில் கடம்ப வனத்தின் மத்தியில் தவமிருந்ததாக ஐதீகம்..

குயிலாய் இருக்கும் கடம்படாவியிடை; கோல இயல்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை; வந்துதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில்; கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே.



:கயிலாய மலையில் உறையும் தலைவராகிய சிவபிரானின் துணைவியும் இமவானின் புதல்வியுமாகிய, கனத்த பொற்குழைகளைக் காதிலணிந்த தேவி, கடம்பமலர் வனத்தில் (மதுரை) குயிலாக விளங்குபவள். இமாசலத்தில் (கயிலை) அழகும், பெருமையும் பெற்ற மயிலாக இருப்பவள், வானத்தின் (விண் - சிதம்பரம்) மேல் வந்து உதித்த சூரியனாக இருப்பாள். தாமரையின் மேல் (மூலாதாரம்-திருவாரூர்) அன்னமாக வீற்றிருப்பாள்.

கண் களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம்பாடவியில்
பண் களிக்கும்குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண் களிக்கும் பச்சை வண்ணமுமாகி மதங்கர்குல
பெண்தனில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.
ஸ்ரீபுரத்திலுள்ள கடம்பவனத்துள் உலவுபவள் சியாமளா தேவி.
பூவுலகில் கடம்பவனம் என்று போற்றப்படும் மதுரையில்,
பாண்டிய மன்னன்- காஞ்சனமாலை ஆகியோரின் வேண்டுதலை
ஏற்று அக்னி குண்டத்தில் உதித்தாள் மதுரை மீனாட்சி கோவிலில் சியாமளா சக்கரம் பதிக்கப்பட்டுள்ளதாம்.

வீணை, கிளி, புத்தகம், தாமரை மலர் ஏந்தி, எட்டுக் கரங்களுடன் அமர்ந்த கோலத்திலுள்ள சியாமளா தேவியை, காஞ்சி காமாட்சி கோவில் பிராகாரத்தில் காணலாம்.











![[ku38.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQQWitF2uGoWEMS2nxFhomj5V-7tYeu2Hqz2gC2WSDIeez6OX1tYHNc0AO2TUWHO_BzrsVmII7610nJv2F1XSf0ZMLx2-6bgsbQfyDgtUr2j5Nr7oTmrG5O7hQr8u_dvrpFzSbAtrSWHSg/s400/ku38.jpg)


வைகாசி மாத முழுநிலவின் முன்
சித்திரை மாத முழுநிலவில் பிறந்த ஆனந்தம்..


ஆலயத் தரிசனமும் அற்புத
ReplyDeleteஅரிய விளக்கங்களும் தங்கள் பதிவின் மூலம் பெற்று
மகிழ்ந்தோம்.பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
very nice Amma. Please write about shadasheedi punniya kalam.
ReplyDeleteமருதமலை மாமணியை மறக்கவும் கூடுமோ!..
ReplyDeleteஇனிய பதிவு.. வாழ்க நலம்..
மருதமலை மாமணி! மிகவும் இனிய பதிவு! எங்கள் மனம் கவர்ந்த இறைவன் பற்றிய இந்த நல்ல பதிவு மிகவும் ம்கிழ்வைத் தந்தது! என்னப்பன் முருகன் என்று சொல்லும் கிருபானந்த வாரியார் ஸ்வாமிகளை நினைவு கூராமல் இருக்க முடியவில்லை!
ReplyDeleteமருதமலை மாமணி! மிகவும் இனிய பதிவு! எங்கள் மனம் கவர்ந்த இறைவன் பற்றிய இந்த நல்ல பதிவு மிகவும் ம்கிழ்வைத் தந்தது! என்னப்பன் முருகன் என்று சொல்லும் கிருபானந்த வாரியார் ஸ்வாமிகளை நினைவு கூராமல் இருக்க முடியவில்லை!
ReplyDeleteமருதமலை முருகன்,கடம்பமலர்கள் தகவல்கள் அருமை.
ReplyDeleteமருதமலை மாமணியே பாடலை மறக்கமுடியுமா.காணொளிகள்,அழகான
படங்கள்.நன்றி.வாழ்த்துக்கள்.
மறக்க முடியாத மாமணி மருதமலை என் பிளாக்
ReplyDeletehttp://swthiumkavithaium.blogspot.com/
மறக்க முடியாத மருதமலை மாமணி என் பிளாக் மும் பாருங்க
ReplyDeletehttp://swthiumkavithaium.blogspot.com/
மருதமலை கோயிக்கு சென்றதில்லை.
ReplyDeleteபடங்களுடன் விளக்கமான தகவல்கள். நன்றி அம்மா
சித்ரா பெளர்ணமியில் பிறந்த விஸ்வநாத் ‘ஆனந்த்’ சும்மா பெளர்ணமி நிலவென ஜொலிப்பதுடன் மனதுக்கு ஆனந்தம் அளிக்கிறார்.
ReplyDeleteஅள்ளித்தூக்கி அப்படியே ஆனந்தமாகக் கொஞ்சணும் போல ஆசையாக உள்ளது. ;)
>>>>>
ஆயிரம் நிலவே வா .....
ReplyDeleteஓர் ஆயிரம் நிலவே வா .....
பாட்டியின் சாயல் அப்படியே உள்ளது ! ;)
உதட்டில் கோவைப் பழச்சிவப்பு ......
கோவையில் பிறந்ததாலோ !
>>>>>
இதழ் விரித்து மலர்ந்த அழகிய தாமரை போலவும் உள்ளன அந்த உதடுகள்.
ReplyDelete>>>>>
என்னைப்போல கொஞ்சம் சிடுசிடுப்பும் அவர் முகத்தில் உள்ளது.
ReplyDeleteபதிவுக்காக நம்மைப்பாடாய்ப்படுத்தி பம்பரமாய் ஆட்டி போட்டோ எடுக்கும் பாட்டி மேல் கோபம் வரத்தானே செய்யும் !
விரும்பத்தகாதவற்றைச் செய்தால் அவ்வப்போது கோபம் வருவதும் இயற்கை தானே !!
>>>>>
தம்பதியினராகச் சேர்ந்து நதியில் ஸ்நானம் செய்யும் போது, வேதவித்துக்களிடமிருந்து தம்பதியினராக ஆசீர்வாத அக்ஷதை பெறும்போது போன்ற ஒருசில சமயங்கள் தவிர, பொதுவாக மனைவிக்கு இடம் கொடுக்கக்கூடாது என்பார்கள்.
ReplyDeleteஇடத்தைக் கொடுத்தால் மடத்தைப்பிடுங்குவார்கள் என்று அர்த்தம் அல்ல.
கணவனுக்கு வலப்புறம் [வலது கரமாக] மனைவி இருக்க வேண்டும் என்ற தங்கள் விளக்கங்கள் அருமை.
>>>>>
This comment has been removed by the author.
ReplyDeleteவாழைமரங்கள், வாழ்த்தார் + வாழைப்பூ பார்க்க கண்களுக்குக் குளுமையாக உள்ளன.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகடம்பமலர்கள் உள்பட இன்றைய அனைத்துப் படங்களும் விளக்கங்களும் வழக்கம்போல் ஜோர் ஜோர்.
Deleteகாணொளிகள் காண இன்று எனக்கு நேரம் இல்லை.
உங்கள் ஊர் மருதமலைக்கு அங்குள்ள என் நெருங்கிய உறவினர்களின் வற்புருத்தலால் ஒரே ஒரு முறை சென்றுள்ளேன். நினைவில் உள்ளது.
அனைத்துக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.
;) 1303 ;)
ooo o ooo
ஆண்டுகள் பலவாகிவிட்டன மருதமலைக்குப் போய். காரில் பயணிக்கும்போதுஎன் பேரன் அப்போது நான்கு வயதுஒரே எதிர்பார்ப்புடன் இருந்தான். காரணம் கேட்ட போது இப்போது மலை முகட்டிலிருந்து தாடகை வருவாளா என்று கேட்டான் மனைவிக்கு எப்போதும் வலப் புறம் என்பது மாறி கேரளத்தில் இடப்புறமே கொடுக்கப் படுகிறது. கடம்ப மரமோ பூக்களோ கண்டதில்லை..!.
ReplyDeleteதங்களின் இறைப்பணிக்கு இறையருள் கிடைக்கட்டும்.
ReplyDeleteஸோ க்யூட் +அழகு உங்க பேரன். மேகத்திற்குள் நிலவு பின்புலமும் அழகு சேர்க்கிறது.
ReplyDeleteசொல்ல வார்த்தைகள் இல்லை.... அற்புதம் அம்மா...
ReplyDeleteசிறப்பான பதிவு.... தகவல்களுக்கு நன்றி.
ReplyDelete