Sunday, June 1, 2014

தெய்வீக அற்புத மலர் நிஷாகந்தி








பூவே வெண்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே
இந்நாளும் எந்நாளும் உல்லாசமே

ஜப்பான் மக்கள் நிஷாகந்திமலரை  "பியூட்டி அண்டர் தி மூன்' என்று பெருமைப்படுத்துவதுடன், இரவு மலர் பூக்கும் சமயத்தில் மலர்களைப் பார்த்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்' என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர்


பிரம்ம கமலம் கொடியை பிரம்மனின் நாடிக் கொடி என்றும் அழைப்பர்.
பிரம்ம கமலம் தெய்வீக மலராக  கருதப்படுகிறது
வெள்ளை நிறம் கொண்ட நிஷாகந்தி மலர்கள் "நைட்குயின்' என்றும், திருப்பாற்கடலில் பெருமாள் விஷ்ணு பாம்பு படுக்கையில் சயனத்திருப்பது  போன்று இருப்பதால் "அனந்தசயனம்' என்றும் அழைக்கப்படுகிறது. 

இலைகள் பச்சைமாமலைபோல் மேனி கொண்டு மஹாவிஷ்ணு சயனக்கோலத்தில் பள்ளிகொண்டிருப்பது போன்றும் , இலையின் நடுப்பகுதி விளிம்பில் அவரது தொப்புள்கொடி நீண்டு மலரின் காம்புப்பகுதியாய் உருவாகி நுனியில் பிரம்மா பூவாகி தோன்றியிருப்பதாகவும் காட்சிப்படும் அதிசயத்தை எத்தனை முறை கண்டாலும் திகட்டுவதில்லை..
எங்கள் இல்லத்தில் மீண்டும் நிஷாகந்தி மலர்கள் 
மலர்ந்து மணம் பரப்பி மகிழ்வூட்டின..!
பூவுக்குள் பார்த்தாலும் பிரபஞ்சத்தையே தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளதாய் ஆயிரம் தலைகளைக் கொண்டுள்ள அதிசய ஆதிஷேனைப் படுக்கையாகக்கொண்டுள்ள அனந்தசயனப்பெருமாள் பள்ளிகொண்டு அருள்பாலிப்பதை கண்டு அதிசயிக்கலாம்..




மலர்கள் மலரும் வேளையில் அருகிருந்து செய்யப்படும் பிரார்த்தனைகள் நிறைவேறுவதாகவும் நம்பிக்கை நிலவுகிறது..நள்ளிரவு வரை  விழித்திருந்து மலர்கள் மலர்வதை பார்த்து ரசிக்கின்றனர்




நிஷாகந்தி




ஒரே ஓரு இலை மட்டும் கூட  பெரிய செடியை உருவாக்கும் 
ஆற்றல் பெற்றிருக்கும் தாவரம் தான் நிஷாகந்தி 
என்றழைக்கப்படும் பிரம்ம கமலம் , அனந்த சயனப் பூ ஆகும் .. 
இலைகள் மருத்துவ குணம் கொண்டவை..வெட்டுக்
காயங்களுக்கு மருந்தாகப்பயன்படும் மூலிகையாக திகழ்கிறது..



செடியில் உள்ள இலையை பறித்து நடவு செய் தாலே அது வளரும் தன்மையை   நிஷாகந்தி மலர் செடி பெற்று உள்ளது

இலைகள் தட்டையாக , தடிமனாக இருக்கும்.   
பிரம்ம கமலப் பூ இலைகளிலிருந்தே வளர்கிறது.

வெட்டப்பட்ட மற்றொரு செடியின் துண்டிலிருந்தும் வளரும்.  
பிரம்ம கமலம்  காக்டஸ் செடி. நீண்டு சற்று அகலமானதாக இருக்கும் 

இலையினைப் பாதியளவு மண்ணுள் புதையுண்டு இருக்குமாறு  
நட்டு வைத்துவிட்டால், இலையே புதிதாக வேர்விட்டு மண்ணில் 
பதிந்து கொள்ளும். 
அதன் பின், இலையே அத்தாவரத்தின் தண்டு போல் செயல்படும். 

இலையின் பக்கவாட்டுகளில், சிறுசிறு கணுக்கள் தோன்றி, அவற்றிலிருந்து புது இலைகள் உருவாகும்

அதே கணுக்களில் தான் மொட்டுக்கள் உருவாகி கண்கவர்
 மலர்களாய் மலர்ந்து  மணம் வீசும்.
மலர்களுக்கு  உரிய தனிச் சிறப்பு  இரவில் தான் மலரும்.
மலர்களின் வாசனை அபாரமானதாக இருக்கும்.

தொடர்ந்து சில மணி நேரங்கள் மட்டுமே காட்சி தரும்  மலர் அதிகாலை 
3 மணிக்கே வாடதுவங்கி, காலையில் முழுமையாக வாடிவிடும் தன்மை கொண்டது
Posted Image
நிஷாகந்தி மலர்கள் வாடாமல்லி, மஞ்சள், சிகப்பு வெள்ளை,ஆரஞ்சு என்று பல்வேறு நிறங்களிலும் இருக்கின்றன.அனைத்து மலர்களும் இரவிலேயே மலர்கின்றன..

எத்தனை ..எத்தனை.. வண்ணங்கள்.. 
அத்தனையும் கொள்ளைகொள்ளும் எண்ணங்களை..!






தொடர்புடைய பதிவுகள்...

மணிராஜ்: நிஷாகந்திப் பூ



18 comments:

  1. ஒரு மலருக்குப் பின்னால் இவ்வளவு வரலாறா? வியப்பாக இருக்கிறது. புகைப்படங்கள் பதிவிற்கு மெருகூட்டுகின்றன. நன்றி.

    ReplyDelete
  2. பிரம்ம கமலப் பூவினைப் பற்றிய தகவல்கள் பிரமிப்பு!.. இனிய பதிவு. வாழ்க நலம்..

    ReplyDelete
  3. மெய் மறந்தேன்... அற்புதம் அம்மா...

    ReplyDelete
  4. மிகவும் அழகான மலர்போன்ற மனம் வீசும் பகிர்வு.

    >>>>>

    ReplyDelete
  5. எத்தனை முறை காட்டினாலும் அலுக்காத படங்கள் + விளக்கங்கள்.

    >>>>>

    ReplyDelete
  6. காணொளிகள் மூன்றும் அருமை.

    முதல் காணொளியில் மலையாள பெண்குட்டி தமிழில் பேசுவது இனிமை.

    இரண்டாவதில் இரவு ராணியான இந்தப்புஷ்பம் மலர்வதும் மகிழ்வதும் சூப்பர். காலை சூரியனைக்கண்டதும் சுருங்கிப் போய் வாழைப்பூ போல மூடிக்கொள்வது நன்கு படமாக்கப் பட்டுள்ளது.

    மூன்றாவதில் கலர்கலராக பூப்பதும் நன்றாக அதிசயமாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  7. இலைகள் .... பச்சைமாமலைபோல் மேனி .....

    தண்டு ..... தொப்புள் கொடி போல .....

    மலரும் புஷ்பம் .... ப்ரும்மதேவன் போல .....

    பூவுக்குள் பார்த்தாலும் ஆயிரம் தலைகளுடைய அதிசய ஆதிசேஷனுடன் அனந்த சயனப்பெருமாளைக் கண்டு களிக்கலாம்.

    அடடா, என்னவொரு தெய்வீக கற்பனை.

    நீங்களே இவற்றையெல்லாம் நேரில் கண்டு களியுங்கோ !

    எங்களுக்கு வருஷாவருஷம் இதுபோல பதிவினில் ஏதாவது எடுத்துச் சொன்னாலே [அள்ளிவிட்டாலே] போதும். அதுவே எதேஷ்டம்.

    >>>>>

    ReplyDelete
  8. மனம் வீசிடும் பதிவுக்கும் பகிர்வுக்கும், அட்டகாசமான அனிமேஷன் படங்களுக்கும், காணொளிகளுக்கும், தொடர்புடைய பதிவுகளின் இணைப்புகளுக்கும் மிக்க நன்றி, சந்தோஷம். பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    ;) 1292 ;)

    ooooo

    ReplyDelete
  9. பூப்பூவாப் பூத்தது நிஷாகாந்தி மலர் தகவல்.
    காட்சிகள் பார்க்க நெரமில்லை.
    மற்றைய படங்கள் அருமை. நன்று..நன்று
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  10. நிஷா காந்தி மலர்களின் விபரங்கள் எனக்கு புதியவை. வியப்பூட்டும் செய்திகள், வித விதமான அம்மலர்களின் படங்கள். பூக்களின் மீது மாறாத காதலும் பிரேமையும் கொண்ட ஒருவரால் தான் இத்தனை விபரங்களையும் அழகாக தரமுடியும். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  11. மலர்களை எல்லாம் சாதாரணமாக பார்த்து விட்டு செல்வது என்னுடைய வழக்கம். ஆனால் இன்று மலருக்கு பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருப்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன், நன்றி அம்மா.

    ReplyDelete
  12. நிஷாகந்தியின் வாசம் இங்கு வரை வீசுகிறது.

    அம்மலரின் பலவகை புகைப்படங்கள் அனைத்தும் கண்களுக்குvirundhaai அமைந்தன.

    இலையிலிரிந்து புதிய செடி முளைக்கும் என்ற தகவலுக்கு நன்றி.

    அருமையான நறுமணமான பதிவு.

    ReplyDelete
  13. என் வீட்டில் இந்தச் செடி இருக்கிறது ஏனோ இன்னும் பூக்கவில்லை. வெண்மை நிறத்தில் மட்டும்தான் இருக்கும் என்று எண்ணி வந்தேன். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. கடந்த முறை ஊருக்கு வந்திருந்த போது எங்கள் வீட்டிலும் இந்தப் பூக்கள் மலர்ந்திருந்தன. நள்ளிரவு வரை விழித்திருந்து படங்கள் எடுத்துவந்தேன், ஆனால் காலப்போக்கில் மறந்துவிட்டேன். நினைவூட்டியது உங்கள் பதிவு. பலதகவல்களும் புதிதாகத் தெரிந்துகொண்டேன். உங்கள் வீட்டில் பூக்கள் பூத்திருப்பது கொள்ளை அழகாக இருக்கிறது. :)

    ReplyDelete
  15. அற்புதம்! (’செம்மீன்’ படத்தில் மன்னாடே பாடும் பாடலில் ஒரு வரி ‘ நிலாவின்ற நாட்டில் நிஷாகந்தி பூத்தல்லோ...”என்று வருமே அது இதுதானா...அழகு!)

    ReplyDelete
  16. ஊரில் எங்க வீட்டின் பக்கத்து வீட்டில் இருந்தது. வாசம் என்றால் அப்படியொரு வாசம். இப்ப்வின் சிறப்புகளை இப்பொழுதுதான் அறிகிறேன். உங்க வீட்டில் பூக்கும் பூக்களை படிப்படியா படங்கள் எடுத்து பகிர்வை பகிர்ந்தமைக்கு ரெம்ப நன்றிகள். மிகவும் அழகாக இருக்கு.

    ReplyDelete
  17. பூ வாசம் புறப்படும்.....

    பிரம்ம கமலம் பூவின் பெருமை சொன்ன பதிவு மிக அருமை..

    ReplyDelete