


மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே!
பலர் போற்றிப் பாராட்டும் குணம் வேண்டும் தாயே!
வரம் தரும் அன்னையே! வணங்கினோம் உன்னையே…
ஒரு நோயும் தீண்டாமல் அணைபோடு தாயே!
நதி காய நேராமல் நீருற்று தாயே! நல் நிலம் பார்த்து தாயே!
எளியோர்கள் மகிழ்வாக்க வழிகாட்டு தாயே!
வலியோர்கள் வாட்டாமல் வகை காட்டு தாயே! என் வளமான தாயே!
பசி தாகம் காணாமல் பயிராக்கு தாயே!
ரசிப்போர்கள் செவி தேடி இசையூட்டு தாயே!
இசைப் பாட்டை என்றென்றும் இனிப்பாக்கு தாயே!
புகழ் செல்வம் நலம் கல்வி குறைவின்றி வாழ
புவி மீது இறைஞானம் எமை என்றும் ஆள ஓர் குறையாமல் வாழ
அருளோடு பொருள் பேத அறிவோடு ஞானம்
தெளிவோடு தினம் காணும் நிலை வேண்டும் வேண்டும்
அது திரளாக வேண்டும் பல வீடு பல நாடு பல தேசம்
என்றுஉணராமல் வாழ்வோரை ஒன்றாக்கு தாயே!
உறவோடு மகிழ்வோடு எனை மாற்று தாயே!
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே!
வரம் தரும் அன்னையே! வணங்கினோம் உன்னையே


பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
புல் விரியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
சிட் சிட்டுக் குருவிகளும் சில்லென்று நீராடி சிறகுலர்த்தும் ஓசை சங்கீதம்
கரைக்கொண்ட பாறைமேல் கடல் பொங்க அலைவந்து
கைத்தட்டும் ஓசை சங்கீதம்
காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை சிருங்கார சங்கீதம்
முத்தாடும் நீரின் மேலே தத்தித் தத்தித் தாவிச் செல்லும்
தவளைகள் ஓசை சங்கீதம்


சித்ரா பௌர்ணமியை ஒட்டி பத்துப் பூக்கள் பூத்து சந்தோஷம் கொண்டாடிய எங்கள் இல்ல நிஷாகந்திப்பூக்கள் ஆனி பௌர்ணமியையும் சிறப்பிக்க பதினைந்து பூக்கள் வரை பூத்து சங்கீதம் இசைத்து ஆனந்தப்படுத்தின.செடியை எனக்குப் பரிசளித்த மகன்களின் வருகையை மலர்ந்து கொண்டாடி நடனமாடிக் களித்தன ...
http://jaghamani.blogspot.in/2011/05/blog-post_12.html
நிஷாகந்திப்பூ
http://jaghamani.blogspot.in/2011/05/blog-post_12.html
நிஷாகந்திப்பூ
முதலில் மலர்ந்து மணம் பரப்பிய மூன்று பூக்களையும்
குடும்பத்தோடு கண்டு களித்து வீடியோ படமும் எடுத்தோம்..

அடுத்த நாள் மலர்ந்த மலர்களையும் படம் எடுத்தோம் ..!
நாகலிங்கப்பூக்களின் நடுவில் சிவ லிங்க தரிசனம் காண்பது போல நிஷாகந்திப்பூக்களின் நடுவே மஹாவிஷ்ணு ஆயிரம் தலைகளைகளைக் கொண்ட ஆதிசேஷனின் மேல் அறிதுயில் கொள்ளும் திருமாலின்
ஆனந்த சயனத் தரிசனம் காணக் கிடைப்பதால்
அனந்த சயனப் பூ என அழைக்கப்படுகிறது..


ஊட்டி தாவரவியல் பூங்காவில், இரவில் மட்டுமே பூக்கும்
சிவப்பு நிற நிஷாகந்தி மலர்கள் பூத்துள்ளன.
இரவிலும் மின்னிடும் நிஷாகந்தி மலர்.கள் வெள்ளை நிறம்,
மஞ்சள் நிறத்தில் மட்டுமே காணப்படும்.
சிவப்பு நிற பூக்கள் குறிப்பிட்ட சீதோஷ்ண நிலையில் மட்டுமே மலரும். "கேக்டை' தாவர குடும்பத்தை சார்ந்த "எப்பி-பிள்ளம்' என்பது தாவரவியல் பெயர்...

ஜப்பானியர் இந்த மலரை "வளம் கொழிக்கும்' மலராக நம்புவதால்,
வீடுகளில் அதிகளவில் வளர்க்கின்றனர்.
சில நம்பிக்கைகளின் அடிப்படையில் வீடுகள்; ஓட்டல்கள்
ஆகியவற்றில் வளர்க்கிறார்கள்..
இரவில் மட்டுமே பூ மலர்வதால், நைட் குயின்' என அழைக்கப்படுகிறது..
இனிய மணம் வீசுகிறது..

நிலாவின்றே நாட்டிலே நிஷாகந்தி பூத்தல்லோ
மானச மைனே வரூ.. மதுரம் நுள்ளி தரூ..



The flower can be seen only at night.Its the most beautiful flower in my house

Queen of the Night
Dutchman's Pipe
Night-blooming Cereus
Wijaya Kusuma (Indonesian)
Nishagandhi (Hindi, India)
Gul-e-Bakavali (Urdu)
Kadupul (SriLanka)
Night-blooming Cereus
Wijaya Kusuma (Indonesian)
Nishagandhi (Hindi, India)
Gul-e-Bakavali (Urdu)
Kadupul (SriLanka)
Profusion of blooms in an hanging potted plant.
Epiphyllum oxypetalum
Epiphyllum oxypetalum



வண்ணம் கொண்ட வெண்ணிலவு வானம் விட்டு வந்ததோ !
வண்ண வண்ன மலர்கள் எண்ணம் நிறைய மலரவே!























பூக்களின் படங்களைப் பார்க்கப் பார்க்க பரவசம். அவற்றை நேரில் கண்டு ரசித்த உங்கள் ரசனை, நீங்கள் எடுத்த புகைப் படங்களில் மிளிர்கின்றது. ( போட்டோ கிராபியில் எனக்கும் ஆர்வம் உண்டு) நிஷாகந்தி என்ற மலரின் பெயருக்கு வேறு ஏதேனும் பெயர் மக்கள் மத்தியில் உண்டா?
ReplyDeleteபூப்போன்ற மிருதுவான அழகான பதிவு.
ReplyDeleteநைட் குயின் ....
ReplyDeleteநிஷாகந்தி ....
அனந்த சயனப் பூ .....
;)
கண்ணுக்கு இனிய ஏராளமான பூப்படங்களுடன் கூடிய இனிய
ReplyDeleteநந்தவனக் காட்சிகள் ;)
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே.....
ReplyDeleteபூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் அசை.....
அழகான பாடல்களுடன்
மனதை பூவாக மலர வைக்கும் பதிவு ;)
மெருகூட்டப்பட்ட் தங்க நகையாக் [ஆங்காங்கே படிந்துபோன அழுக்குகள் நீக்கப்பட்டு] ஜொலித்திடும் சென்ற ஆண்டுப் பதிவின் லிங்க்குடன் கொடுத்துள்ளது சிறப்போ சிறப்பு.;)))))
ReplyDeleteமகன்கள் பரிசளித்த நிஷாகந்தி மலர்கள் மலர்ந்து சிரிப்பது அழகுதான்.
ReplyDeleteஉங்கள் மனம் அதைவிட அழகாய் மலர்ந்து சிரிக்குமே மகன்களின் வரவால்.
பூக்களின் மலர்தலும், நீங்கள் பகிர்ந்து அளித்த பாடல்களும் அழகு.
நன்றி.
படங்களும் பகிர்வும் அருமை. மிக்க நன்றி.
ReplyDeleteசிகப்பில் இம்மலர்களை இப்போதுதான் பார்க்கிறேன்.
தி.தமிழ் இளங்கோ அவர்களுக்கு,
பிரம்மக் கமலம் என்றும் அழைப்பார்கள். சமீபத்திய என் பதிவு ஒன்றையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்: http://tamilamudam.blogspot.in/2012/05/blog-post_23.html
ஜூலை 3 எனக்கோர் மறக்க முடியாத நாள். எழுந்ததும் பூப்பூக்கும் ஓசையைக் கேட்க முடிந்ததில், பார்க்க முடிந்ததில் என் மனமும் பூவாய் மலர்ந்தது.
ReplyDelete”உன் வீட்டுத் தோட்டத்தில் ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் .....
என்று என் வாய் முணுமுணுக்குது ஒரு பாடலை.
வெகு அழகான ப்திவுக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள், நன்றிக்ள்! ;)
விரகதாபத்தின் சோகமலராக மலையாளக் கவிஞர்களின் கவிதைகள் இந்தப்பூவைச் சொல்வதாக சென்ற ஆண்டின் பதிவினில் தாங்கள் சொல்லியிருந்தாலும், சோகம் தீர்ந்து மறுவாழ்வு பெற்று மலர்ந்து மகிழ்ந்து பூத்துக்குலுங்கும் அழகான பெண்ணாக இந்த ஆண்டுப் ப்திவினில் காட்டியுள்ளது சிறப்போ சிறப்பு.
ReplyDeletesuperb pictures
ReplyDeleteகேந்திப்பூ கேள்விப்பட்டிருக்கிறென்.நிஷாகந்திபூ.....இப்பத்தான் பெயரை தெரிந்து கொண்டேன்.ஏன்னா பக்கத்து வீட்ல இதே பூ சிவப்பு கலரில் பூத்திருக்கும்..அவர்களிடம் பெயர் கேட்டால் சரியா தெரியலை ஏதோ குரோட்டன்ஸ் பூ என்று கூறுவார்கள்.அவர்களிடம் உங்கள்பதிவை காட்டி பெயரை தெரிவித்து விடுகிறேன்.
ReplyDeleteபூவிலும் பெருமாளை பார்க்கும் உங்கள் ஆன்மீகப்பதிவு சிறப்பு ராஜி மேடம்..
ReplyDeleteநிஷாகந்தி மலர்கள் கேள்விப்பட்டதுண்டு இப்பதான் உங்க படங்கள் மூலமாக பார்க்கிரேன் நன்றி வெகு அழகு
ReplyDeleteஎல்லா பூக்களுமே கேள்விப்படாதவையாக உள்ளன. நாங்க எல்லாம் மலர் கண்காட்சிக்கு சென்றாள் ஆவேன்று பார்த்து விட்டு வருவதோடு சரி. பகிர்வுக்கு நன்றிங்க.
ReplyDeleteநிஷாகந்தி மலர்கள் !!! அருமையான பகிர்வு அழகிய படங்கள்
ReplyDelete,{அக்கா இப்ப உங்க ப்ளாகில் அந்த flashingஜம்பிங் பிரச்சினை இல்லை )
ஆஹா என்ன ஒரு அழகு நிஷாகந்தி பூ ...... அக்கா உங்கள் மகன்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளனர்... அதுவும் பௌர்ணமி அன்று மட்டும் நீங்கள் ரசிக்கும் வண்ணம் பூக்கும் பூக்கள் மிகவும் அருமையான அழகு பொருந்தியது... அனைத்தும் அருமை... நான் மறுபடி மறுபடி பார்த்து ரசித்தேன் இந்த வண்ண மலர்களை .................
ReplyDeleteநிஷாகந்தி மலர்கள் அழகோ அழகு ! சிறப்பான பகிர்வுக்கு நன்றி சகோதரி !
ReplyDeleteமிக அருமையான பதிவு! பூக்கள் ரசிக்க வைத்தன.
ReplyDeleteநெஞ்சினில் வைரமாய் பதிந்த அற்புதப் பதிவு! அழகிய பதிவு! வண்ண வண்ணமாய் எத்தனை அழகு! அழகு! நன்றி சகோதரி!
ReplyDeleteஅழகான பதிவு...
ReplyDeleteஇந்த மலரின் பெயரை உங்கள் மூலம் அறிந்து கொண்டேன்.தகவலுக்கு நன்றி...
அழகான நிஷாகந்தி மலர்கள்.இரவில் அவை மலரும் நேரத்திற்காகக் காத்திருந்து இரசித்த நினைவுகளை மனதில் நிழலாடச் செய்தது.
ReplyDeleteஒரு சந்தேகம் தோழி... நிஷாகந்தி மலர்கள் பல்வேறு வண்ணங்களில் உள்ளனவா? ஏனெனில், நான் இதுவரை வெள்ளை நிற நிஷாகந்திப் பூக்களையே பார்த்துள்ளேன். மற்ற வண்ண மலர்கள் பகலில் மலரக் கூடியவையா அல்லது அவையும் இரவில் தான் மலருமா? அறிய ஆவலாய் உள்ளேன்.
வருகைக்கும் கருத்துரைகளுக்கும் இனிய நன்றிகள்...
Deleteநிஷாகந்திமலர்கள் பல்வேறு வண்ணங்களில் இருக்கின்றன..
அனைத்தும் இரவிலேயே மலர்கின்றன..மணம் பரப்புகின்றன..!
எனது சந்தேகத்தினை நிவர்த்தி செய்தமைக்கு மிக்க நன்றி தோழி.
Delete3542+7+1 = 3 5 5 0
ReplyDelete