சகல வளங்களையும் தரும் வரலட்சுமி விரத பூஜையில்
அம்பிகையை ஆத்மார்த்தமாக, தம் வீட்டுப்பெண்ணாக செல்ல மகளாக பாவித்து உயிருக்கு உயிராகக் கண்ணுக்கு கண்ணாக வரித்து பூஜிக்கிறோம்..
பத்மாஸநே பத்மகரே சர்வலோகைக பூஜி்தே
நாராயணப்ரியே தேவி ஸூப்ரிதாப்பவ ஸர்ப்பதா
லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ர ராஜ தநயாம் ஸ்ரீரங்க தாமேஸ்வரீம் |
தாஸீபூத ஸமஸ்த தேவ வநிதாம் லோகைக தீபாங்குராம் ||
ஸ்ரீமந்மந்த கடாக்ஷலப்த விபவ பிரம்மமேந்த்ர கங்காதராம் |
த்வாம் த்ரைலோக்ய குடும்பிநீம் ஸரஸிஜாம் வந்தே முகுந்தப்ரியாம் ||
மாதர்நமாமி கமலே கமலாயதாக்ஷீ ஸ்ரீவிஷ்ணு ஹ்ருத்கமலவாஸினி விஸ்வமாத:|
க்ஷீரோதஜே கமல கோமல கர்பகெளரி லக்ஷ்மீ :ப்ரஸீத சததம் நமதாம் ஸரண்யே ||
யா சா பத்மாசனஸ்தா விபுலகடிதடீ பத்ம பத்ராய தாக்ஷி
கம்பீரா வர்தனாபி: ஸ்தனபார நாபிதா சுப்ர வஸ்தோத்தரீயா
லக்ஷ்மீர் திவ்யை கஜேந்த்ரை: மணிகன கசிதை: ஸ்நாபிதா ஹேமகும்பை:
நித்யம் சா பத்மஹஸ்தா மம வசது க்ருஹி சர்வமாங்கல்ய யுக்தா
பத்மாசனாம் பத்மகராம் பத்மமாலா விபூதிஹாம்
க்ஷீரவர்ணசமம் வஸ்த்ரம்ததானாம் ஹரிவல்லபாம்
பாவயே பக்தியோகேன கலஷே(அ)ஸ்மின் மனோஹரே
அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகளாக பூஜிக்கிறோம்...
சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரயம்பிகே கௌரி நாராயணீ நமோஸ்துதே
கார்த்தியாயணி மகா மாயே மகா யோகி யதீஷ்வரி
நந்த கோப சுதம் கிருஷ்ணம் பதிம் மே குருதே நமஹ
.
பங்கஜ மலர் வளர் அன்னைமஹாலக்ஷ்மி ஜகன்மாதா மனமிரங்கி நமக்கு வரமருள இரண்டுகால்களிலும் சலங்கையும் கொலுசுகளும் கலீர் கலீர் என்று ஒலிக்கும் சப்தத்துடன் கரகமலங்களில் தங்கமழை பொழிந்து சகல சௌபாக்கியங்களை அள்ளித்தர வரலஷ்மியாக வரங்களை வர்ஷிக்கிறாள்
தயிர் கடையும்போது வரும் வெண்ணயைப்போல் நம் பூஜைகளாலும் புண்ணியங்களாலும் திரண்டு வரும் அன்னை கோடி கோடி சூர்யனுக்கு ஒப்பான காந்தியுடன் கூடிய ஜனகமஹாராஜனின் மகளாக மண்ணில் அவதரித்த லக்ஷ்மிதேவியாக கருணை பொழிகிறாள்..
கைகளில் தங்க கங்கணங்களை அணிந்து குங்குமத்தினால் சிவந்த முகத்தில் சிவந்த தாமரை புஷ்பங்கள் பூத்திருப்பதுபோல் அழகிய கண்களுடனுடைய அந்த திருப்பதி மலை மேல் இருக்கும் வெங்கட்ரமணனுடைய ராணி நமக்கு பாக்கியங்களைத்தர இசைந்து பிரசன்னமாகிறாள்....
ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாளாகவும்,நச்சியார் கோவிலில் ஸ்ரீதேவியாகவும், ஒப்பு இல்லா அப்பன்(உப்பிலியப்பன்) கோவிலில் பூதேவியாகவும் திருப்பதியில் திருச்சானூரில் பத்மாவதியாகவும் அவதாரம் எடுத்தாள்.
சரஸ்வதி கடக்ஷ்த்தால் நான்குவிதமான கவிகளைமழைபோல வர்ஷிக்ககூடிய வல்லமைபடைத்தபுலவர்களுக்கும். ஸ்ரீவித்யாவான பராசக்தியை உபாசனை செய்யும் மெய் ஞானியர்களான முனிவர்களுக்கும்,எல்லா சக்திகளையும் பெற்ற வானவர்களுக்கும் கூட அன்னை லக்ஷ்மிதேவியே புகலிடமாக திகழ்கிறாள்...
நித்திய சுமங்கலியாக மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள்.
திருமாலின் மலர் மார்பில் குடியிருப்பவள்.
பெண்களுக்கே உரித்தான தயை , கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதி அன்னை வரலட்சுமி
வேதம் படிப்பதால் கிடைக்கும் அத்தனை வளமும் நலனும் ஞானமும் விரதம் நோற்பதால் கிடைப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
சகல செல்வங்களுக்கும் யோகங்களுக்கும் அதிபதி மகாலட்சுமி தேவி. அவளது அவதார நாள் துவாதசி வெள்ளிக்கிழமை என்று என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த நாளன்று செய்யும் தனஆகர்ஷண தேவி பூஜை சிறப்பானது, பிரசித்தி பெற்றது.
http://jaghamani.blogspot.in/2011/08/blog-post_12.html
வரங்களை வர்ஷிக்கும் வரலக்ஷ்மி பூஜை இங்கு நம் ஆத்தில் நடைபெற்று, வீடே அமர்க்களமாக இருப்பதால், அம்மனின் அருள் இருந்தால், பிராப்தம் இருந்தால் மட்டுமே மீண்டும் வருவேன்.
ReplyDeleteநல்லதொரு அழகான பதிவுக்கு நன்றிகள்.
வரலட்சுமி விரதத்தை பற்றி தெரிந்துக் கொடேன். படங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஅன்பின் ராஜராஜேஸ்வரி,
ReplyDeleteவணக்கம். வரலட்சுமி நோன்பு பற்றி தெரிந்து கொண்டதோடு, அம்மனை நேரிலேயே தரிசித்தது போன்று எத்தனை அழகழகான படங்கள்.. அருமை தோழி.வாழ்த்துகள்.
வல்லமைக்கு படைப்புகள் வந்து நாளாகிறதே.. அவ்வப்போது அனுப்பலாமே. நன்றி.
அன்புடன்
பவள சங்கரி
எங்கள் இல்லத்திலும் இன்று வரலக்ஷ்மி பூஜை சிறப்பாக நடந்தது. தங்களின் பூஜை குறித்த படங்கள் அனைத்தும்
ReplyDeleteஇறையருள் ததும்பி விளங்குகிறது. நன்றி.
excellent pics of mahalakshmi
ReplyDeleteவரலட்சுமி விரதத்தை பற்றி தெரிந்துக் கொண்டேன். படங்கள் அருமை அக்கா.
ReplyDeleteவிரதம் இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகடைசிபடமும் கடைசியிலிருந்து மூன்றாவது படமும் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அழகோ அழகாக உள்ளன. எனக்கு கீழிருந்து மூன்றாவது படம் மிகவும் பிடித்துள்ளது.
ReplyDeleteசென்ற ஆண்டுப் பதிவைவிட இந்த ஆண்டு படங்களும் விளக்கங்களும் இன்னும் அதிகமாக உள்ளன.
ReplyDeleteஜொலிக்கும் முதல் லக்ஷ்மியும், எனக்கு எப்போதுமே மிகவும் பிடித்தமான சர்வ செளந்தர்யங்களுடன் கூடிய [பதிவின் நடுவே காட்டியுள்ள வசீகரிக்கும் வதனத்துடன் உள்ள - நீலப்புடவை சிவப்பு ஜாக்கெட், ஜரிகைத்தலைப்பு + நீண்ட காசுமாலையுடன் கூடிய அம்பாள்] கஜலக்ஷ்மியும், பலமுறைகள் தங்கள் புண்ணியத்தால் தரிஸித்தும்
ReplyDeleteகொஞ்சமும் அலுப்பு சலிப்பு இல்லாத கண்ணைக்கவர்ந்திடும் படங்களே! ;)
பத்மாஸநே பத்மகரே ....
ReplyDeleteஸ்லோகத்துடன் ஆரம்பித்து தந்துள்ள இந்தப்பதிவு, இன்று வரலக்ஷ்மி விரத நாளுக்கும், ஆடி வெள்ளிக்கும் ஏற்றதொரு மிக அழகான பொருத்தமான பதிவு.
வெள்ளி வரலக்ஷ்மி முகம் தனியாகக் காட்டியுள்ளதும் அழகு தான்.
இன்று என் பெரிய அக்கா அவர்கள் வீட்டில் இதுபோல ஒன்பது வெள்ளிமுகங்களை அழகாக ஒரு மிகப்பெரிய சொம்பினில் வைத்து, பின்புறம் பின்னல் அலங்காரமும், குஞ்சலமும் வைத்து, மிகப்பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியில் அவை தெரிவது போல அமைத்து, அசத்தியிருந்தார்கள்.
மிகப்பெரிய சம்சாரி. ஆறு நாட்டுப்பெண்கள் + இரண்டு பெண்கள் + என் அக்கா ஆக மொத்தம் ஒன்பது முகங்கள். ஒன்பது பேரும் இன்று ஒன்றாகச் சேர்ந்து, அழகாக அமர்ந்து பூஜை செய்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
இது தவிர எங்கள் ஆத்தில் தனி பூஜை வேறு. வருவோரும் போவோருமாக ஒரே ஜே ஜே தான்.
மிகவும் மங்களகரமான மகிழ்ச்சி தரும் நாள் அல்லவோ இது! ;))))).
அனைத்து லக்ஷ்மிகளையும்,
ReplyDeleteஅற்புதமான ஸ்லோகங்களையும்,
அரிய பெரிய விளக்கங்களையும் அளித்து, வழக்கம் போல அசத்தியுள்ள தங்களின் கடும் உழைப்புக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
அருமையான புகைப்படங்களுடன் மிக அருமையான பதிவு வழக்கம் போல்!
ReplyDeleteநல்ல வெள்ளிக்கிழமை விரதநாள் அருமையான தரிசனம் மிகவும் நன்றி அம்மா.
ReplyDeleteவரலஷ்மி விரத பூஜை அன்று தரிசனமும் கிடைக்கப்பெற்றோம் நன்றி
ReplyDeleteநல்ல படங்கள்... அருமையான பதிவு...
ReplyDeleteநன்றி.
விளக்கத்தோடு கூடிய அழகான படங்கள். எங்க இருந்துதான் இப்படங்கள் எடுக்கிறீங்களோ என ஒவ்வொரு தடவையும் ஆச்சரியப் படுகிறேன்.
ReplyDeleteவரலட்சுமி பூஜை விளக்கமும் படங்களும் அருமை!...வாழ்த்துக்கள் சகோதரி எல்லா நலனும் எல்லோருக்கும் கிட்ட அம்மன் அருள் புரியாட்டும்!..மிக்க நன்றி பகிர்வுக்கு .
ReplyDeleteHere in this flat, i visited so many houses for varalakshmi pooja. Kannda, Andrapresh, various parts of south TamilNadu people. I wounder about the decorations, prasadams, way they giving Tambulam to us elder ladies.
ReplyDeleteAt one house, they are having a big frammed photo that one is coming to her by generation long. The varalakshmi in that photo smiled at me and I felt it.
That much vaibaration is with that photo.
Visiting your blog, seeing so many varalakshmi Ambal made me happy further.
Thanks for the post dear.
viji
வரங்களை அள்ளித்தரும் வரலட்சுமியின் படங்கள் எல்லாம் அழகு.
ReplyDeleteஅவள் எல்லோர் வாழ்விலும் நலங்கள் அள்ளி தரட்டும்.
வாழ்த்துக்கள்! அருமையான பதிவை வழங்கியதற்கு.
அழகிய படங்களுடன் அருள் பதிவு. எங்கள் இல்லத்திலும் பூஜை இனிதே நிறைவுற்றது-இன்றைய புனர் பூஜையுடன்.
ReplyDeleteஅனைத்து படங்களும் அருமை..வரலட்சுமி விரதத்தின் அருமை, பெருமைகளை அறிந்ததில் மகிழ்ச்சி.அம்மனின் தரிசனம் கண் குளிர பெற்றேன்.பகிர்வுக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteஅனைத்து படங்களும் அருமை..வரலட்சுமி விரதத்தின் அருமை, பெருமைகளை அறிந்ததில் மகிழ்ச்சி.அம்மனின் தரிசனம் கண் குளிர பெற்றேன்.பகிர்வுக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteஸ்ரீ வரலக்ஷ்மி நோன்பு பற்றிய விவரங்களை திரு VGK ( வை. கோபாலகிருஷ்ணன் ) அவர்களின் கருத்துரைகளோடு படித்தேன். தெய்வப் படங்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. நல்ல தொகுப்பு.
ReplyDelete//தி.தமிழ் இளங்கோ said...
ReplyDeleteஸ்ரீ வரலக்ஷ்மி நோன்பு பற்றிய விவரங்களை திரு VGK ( வை. கோபாலகிருஷ்ணன் ) அவர்களின் கருத்துரைகளோடு படித்தேன்.//
அன்புள்ள ஐயா, வணக்கம்.
நேற்று எனக்கு ஓய்வில்லாமல் ஏராளமான வேலைகள்.
வீட்டிலோ விசேஷம். நிறைய விருந்தினர் வருகை.
நடுவே வெகு நேரம் [9 AM to 6 PM] இன்டெர்நெட் கிடைக்காமல் பெரும் தொல்லை.
அத்துடன் இவர்களின் பதிவுக்கு மட்டுமாவது ஏதாவது கருத்துக்கள் வழக்கம் போல் கூறிவிட வேண்டும் என்ற ஓர் ஆவல்.
அதை ரஸித்து தாங்களாவது இங்கு தங்களின் கருத்துக்களைச் சொல்லி என்னை உற்சாகப்படுத்தியுள்ளது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
FEEDBACK என்பது எவ்வளவு முக்கியம் என்பது சிலருக்கு ஏனோ தெரிவதில்லை/புரிவது இல்லை.
FEEDBACK கொடுத்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
vgk
சகல செல்வ யோகமளிக்கும் சிறப்ப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDelete3730+7+1=3738
ReplyDelete