








தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு
கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
தந்தையும் தாயும் கடவுளும் ஒன்று
அன்னையிடம் அன்பை வாங்கலாம், தந்தையிடம் அறிவை வாங்கலாம்' என தாய், தந்தையரின் முக்கியத்துவத்தை விளக்கி தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என ராமபிரான் வாழ்ந்து காட்டிய தேசம் நம் நாடு

ஆயுள் வரை நெஞ்சில் சுமக்கும் தந்தை, பாசத்தை வெளிக்காட்டத் தெரியாத, முள்ளுக்குள் ரோஜாவாய், பலாப்பழத்தில் பலாச்சுளையாய் நினைக்க, நினைக்க நெஞ்சுக்குள் சந்தோஷமும், பெருமையும் தருபவர். வாழ்க்கைச் சக்கரத்தில் வசதியாய் நாம் வாழ்வதற்காக, ஓயாமல் சுழலும் அன்புச் சக்கரம் தந்தை.


தான் பட்ட கஷ்டம்', தன் பிள்ளையும் படக்கூடாது என்று வாயாற பேசி, மனமார உழைக்கும் அந்த அன்பு... "கண்ணுக்கு தெரியாத கடவுளைப் போல', நம்மை அரவணைத்து காக்கும். தந்தையின் பெருமைகளை மனதால் உணரும் போதுதான், அவரது அன்பு நம் கண்ணுக்குத் தெரியும்.


தந்தையும் குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்க வேண்டும். தந்தையருக்கு மரியாதையும், நன்றியும் செலுத்தும் விதமாக, சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத் தருவதே உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் ஜூன் 3வது ஞாயிறு கொண்டாடப்படுகிறது
"விடு... விடு...' என்று வாழ்க்கை முழுதும் விட்டுக் கொடுக்கும்
அந்த பெரிய உள்ளம்... இறைவன் நமக்களித்த இயற்கை வெள்ளம்.
ஓய்வறியா கால்கள் ஊன்றுகோலைத் தேட... நரை தோன்றி முகச்சுருக்கம் முற்றுகையிட... பிள்ளையின் அன்பே தஞ்சமென தேடும் அப்பாவி(ன்) நெஞ்சம்... ஆயிரம் தெய்வங்களை மிஞ்சும்.

வளர்ந்தாலும் அப்பாவுக்கு நாம் பிள்ளைகள் தான்.
மழலையில் கைப்பிடித்து, வாழ்வின் பாதைக்கு நம்மை அழைத்துச் சென்ற அப்பாவின் தியாகத்தை நினைவு கூர்வோம்.
முதுமையில் அள்ளி அணைத்து ஆறுதல் செய்வோம்.
.gif)
ஒவ்வொருவரும் தங்களது தந்தைக்கு, நேரிலோ, போனிலோ
வாழ்த்து தெரிவித்துக்கொள்ளும் உன்னத நாள்...
வாழ்த்து தெரிவித்துக்கொள்ளும் உன்னத நாள்...
பாசத்துக்கு எப்போதும் அன்னை உதாரணம்.
தந்தை ஒரு குழந்தைக்கு வழிகாட்டியாக இருக்கிறார்.


தந்தையின் பாசம் வாழ்வோடு கலந்தது.


தந்தை தன் தலைக்கு மேல் குழந்தையைத்தூக்கி தன் தோள் மேல் அமரவைத்து - தான் பார்க்கும் உயரத்தை விட அதிக உயரம் தன் குழந்தை பார்க்குமாறு வசதி செய்துகொடுக்கிறார்..


தந்தையின் பாசம்... தரணியெல்லாம் பேசும்.

மழலையின் சிரிப்பில் மனதை தொலைத்து... வாழ்க்கையை பிள்ளைக்காக அர்ப்பணிக்கும் நேசம்... எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும், தலைகுனிந்து, உடல்குனிந்து பிள்ளையை முதுகில் உப்புமூட்டையாக ஏற்றியும், தலைக்கு மேல் தூக்கியும் கூத்தாடும் பரவசம்... தந்தையன்றி வேறு யாருக்கு வரும்?

அப்பாவின் அன்பை, ஆசைகளை, அறிவுரைகளை ஆனந்தமாக வெளிப்படுத்தும் தன்னலமற்ற தியாகத்தோடு பிள்ளைகளை வளர்க்க பாடுபட்ட தந்தைக்கு, அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் நன்றி செலுத்தும் நாள் தான் தந்தையர் தினம் (Father's Day).

தந்தையின் அன்பு ,அன்னையின் அன்பைப் போலவே குழந்தையின் ஆளுமை,நடத்தையின் வளர்ச்சியில் அதிக பங்காற்றுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்!

அன்னையர் தினம் கொண்டாடும் போது, தந்தையர் தினம் ஏன் கொண்டாடக் கூடாது என வலியுறுத்தி. தந்தையை கௌரவிப்பதற்காக மட்டுமல்லாது தந்தை மீது அன்பு செலுத்தவும், தந்தையைப் பேணிப் பாதுகாக்கவும் ஆண்டுதோறும் ஜூன் மூன்றாவது வாரம் ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக உலகம் முழுவதும் நன்றிப் பெருக்குடன் கொண்டாடப்படுகிறது

ஆடைகள், வாழ்த்து அட்டைகள், மலர்கொத்துகள், நடைப் பயிற்சிக்குப் பயன்படும் கம்புகள், இனிப்பு வகைகள் போன்றவற்றை தந்தைக்கு வழங்கி வணங்கி ஆசிபெற்று . தற்போது தந்தையர் தினமும் குழந்தைகளால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது

தாய்-தந்தையைச் சுற்றி வந்த கணபதிக்குத்தான் சிவபெருமான் மாம்பழத்தை அளித்தார்; உலகத்தைச் சுற்றி வந்த முருகனுக்கு அல்ல.
தாய் தந்தையருக்குத் தொண்டு செய்து கொண்டிருந்த ஒருபக்தன், மாறுவேடத்தில் வந்த இறைவனைக் கவனிக்கவில்லை .. ‘தன் முதற்கடமை இதுதான்’ என்று அவன் உறுதியாகக் கூறியபோது, இறைவனே மனமயங்கினான் என்றும் நாம் படிக்கிறோம்.
அந்தத் தாய் தந்தையரை மனமார நேசிக்கும்
எவருக்கும் எதிர்காலம் உண்டு.
தந்தையர் தினம்..















ReplyDeleteவண்ணமயமான அற்புதமான சிறப்புப் பதிவு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
ஆஹா.... தந்தையர் தின வாழ்த்துகள்.
ReplyDeleteதந்தையர் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமை அருமை அம்மா...
ReplyDeleteதந்தையர் தின நல்வாழ்த்துக்கள்...
மனதை உருக்கும் கவிதை என இனிய பதிவு..
ReplyDeleteதந்தையர் தின நல்வாழ்த்துக்கள்..
அட்டகாசமான ஒரு வாழ்துக்குவியலாய் பதிவு!
ReplyDeleteதந்தையர் தின வாழ்த்துக்கள்!
வண்ணமயமான படங்களுடன் அழகிய பகிர்விற்கும் நன்றி !
ReplyDeleteஇன்று தந்தையின் தினம் என்பதனை உங்கள் பதிவினால் அறிந்து கொண்டேன்! வண்ணப் படங்கள்! பொன்மொழிகள்! நன்றி1 சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமை. உங்கள் பதிவின் மூலம் தந்தையர் தினம் குறித்து அறிந்ததில் மகிழ்ச்சி. பகிர்வுகள் அருமை. நமது வலைத்தளத்தில்: http://newsigaram.blogspot.com
ReplyDeleteகாலையில் பிள்ளைகளிடம் இருந்து வாழ்த்துக்கள்வந்தபோதுதான் இன்று தந்தையர்தினம் என்று தெரிந்தது. தந்தையர் பற்றிய மேலதிக தகவல்கள் தாங்கி வரும் பதிவு பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஅத்தனையும் அழகழகான படங்கள்.
ReplyDeleteதந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.
தந்தையர் தின நல்வாழ்த்துகள்.
ReplyDelete>>>>>
இன்றைய தலைப்பு அருமை
ReplyDelete>>>>>
படங்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு.
ReplyDelete>>>>>
தகவல்கள் எல்லாமே மிகச்சிறப்பாக உள்ளன.
ReplyDelete>>>>>
முதல் காணொளியின் சொல்லியுள்ள ஒவ்வொறு வாக்கியங்களும் மிகச்சிறப்பாக சிந்திக்க வைப்பதாக உள்ளன.
ReplyDelete>>>>>
மிக அழகான பாடலுடன் கூடிய இரண்டாவது காணொளியும் கேட்க காதுகளுக்கு இனிமையாக உள்ளது.
ReplyDelete>>>>>
மூன்றாவது காணொளியும் முத்தாய் [முத்துப்பற்களுடன்] கொடுத்துள்ளீர்கள்.
ReplyDelete>>>>>
தொடர்புடைய பதிவுகளுக்கும் சென்று பின்னூட்டங்களை மீண்டும் ஒருமுறை படித்து மகிழ்ந்தேன்.
ReplyDeletehttp://jaghamani.blogspot.com/2012/06/blog-post_16.html
குறிப்பாக மேற்படி பதிவினில் தங்களின் பதில்களில் அதிக மகிழ்ச்சி கொண்டேன்.
>>>>>
அனைத்துக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.
ReplyDelete;) 1306 ;)
ooo ooo ooo
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!
ReplyDelete.வண்ணமயமான வாணவேடிக்கை. அனைவருக்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல படங்கள்......
ReplyDeleteதந்தையர் தின சிறப்புப் பதிவு மிக அருமை.