










மலர்கள் தோறும் நடந்து போகும் சிறிய ஜீவனே
உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே


ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை ஏன் விரித்தாய் சிறகை
வா வா அருகில் நீ வருவாயா

பூப்பூவா பறந்து போகும் பட்டுப் பூச்சி
மலர்ந்து பூத்துச் சிரித்து மனதை மலரச்செய்யும் மலர்களுக்குப் போட்டியாக வான்வில்லின் வண்ணங்களை தன் சிறகில் அழகாக தீற்றிக்கொண்டு நம் எண்ணப்பறவைகளுக்கு விருந்தாக வண்ணச்சிறகணிந்த எழில் மிகு வண்ணத்துப்பூச்சிகளுக்கான சீசன் காலங்களான அக்டோபர் நவம்பர் மாதங்களில் வண்ணத்துப் பூச்சிகளுக்கான பூங்காக்களில் அதிகம் கண்டு மகிழலாம்!

பெங்களூரில் வண்ணத்துப் பூச்சிகளுக்கென்றே பிரத்தியேகமாக பட்டர்ஃப்ளை பார்க் என்று பூங்காவினை அமைத்து விதம் விதமான வண்ணங்களில் ரோஜாக்களைக்கொண்ட பூங்காவில் பச்சை, ஆரஞ்ச், மஞ்சள், நீலம், சிவப்பு என்று சிறகில் கொண்ட ஓவியத் தீற்றலுடன் வண்ணத்துப்பூச்சிகள் அங்கும் இங்கும் பறப்பதைக்காணக்கண்கோடி வேண்டும் ..!
.நம் கையில் நம் தலைமேல் அமர்ந்து ஹலோ சொல்லிப் போகின்றன. ’எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா’ என்று பாரதி போல பாடத் தோன்றும் அளவிற்கு பரவசம் சிறகடிக்கும் ..!
ஏழரை ஏக்கர் நிலப்பரப்பில் 10000 சதுர அடி டோம் அதாவது வட்ட வடிவமான வளைவுப் பகுதி கொண்டு அமைக்கப்பட்டுள்ள பார்க்கில் ஒரே நேரத்தில் இருபதிலிருந்து முப்பது வகை வண்ணத்துப்பூச்சிகளைப் பார்க்கலாம்...
வண்ணத்துப்பூச்சிகள் வந்து அமருவதற்காகவே வளர்க்கப்படும்
ரோஜாத் தோட்டம், பழங்கள் கொண்ட மரங்கள், சிறு ஓடைகள்
என்று உள்ளம் கொள்ளை போகும் விதத்தில்
அமைந்துள்ளது பட்டர்ஃப்ளை பார்க்கில்.
ரோஜாத் தோட்டம், பழங்கள் கொண்ட மரங்கள், சிறு ஓடைகள்
என்று உள்ளம் கொள்ளை போகும் விதத்தில்
அமைந்துள்ளது பட்டர்ஃப்ளை பார்க்கில்.




சில இடங்களில் கூட்டம் கூட்டமாகத் தரையில் உட்கார்ந்து தங்கள் உடலுக்குத் தேவையான உப்பினை உறிஞ்சி எடுத்துக் கொள்கின்றன..!
கேரள மாநிலம், சாலக்குடியில், தும்பூர்முழி பட்டாம்பூச்சி பூங்கா உள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்கள்,ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் காணப்படுகின்றன
அழிவின் விளிம்பில் உள்ள, 'கருடா, கிருஷ்ணா' பட்டாம்பூச்சிகள்,
இந்த பூங்காவில் அதிகளவில் காணப்படுகின்றன.
இந்த பூங்காவில் அதிகளவில் காணப்படுகின்றன.
ஜப்பானில் உள்ள, பிரபல பட்டாம்பூச்சி ஆய்வாளர், இன்னோவ அக்காஷி, அவ்வப்போது, தும்பூர்முழி பூங்காவிற்கு ஆய்வு செய்வது வழக்கம். தும்பூர்முழி பூங்காவை மாதிரியாக வைத்து, சிங்கப்பூரிலும் பூங்காவை உருவாக்கியுள்ளார்..!


பார்வையிட வருவோரின் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து, அதிலிருந்து வெளிவரும், 'கார்பன் மோனாக்சைடு' வாயு, பட்டாம்பூச்சிகளின் இனத்தை பெருமளவில் பாதிப்பதால், இந்தப் பகுதியில் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்குமாறு, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.



நெருங்கும் போது அகப்படாமல் பறந்து போகிறாய்
நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய்


ஆஹா உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே
ஆஹா எனக்கும் கூட அடிமைக் கோலம் பிடிப்பதில்லையே






வணக்கம
ReplyDeleteஅம்மா.
வண்ணத்துப் பூச்சிகள் பற்றி நல்ல விளக்கம் படங்கள் எல்லாம் மிக அழகு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வண்ணமயமான பதிவு.
ReplyDeleteபட்டாம்பூச்சிகளைப் பற்றி அதிகமான புகைப்படங்களுடன், அரிய செய்திகளை அறிந்தேன்.நன்றி.
ReplyDeleteவண்ண வண்ண பட்டாம்பூச்சிகளுடன் அழகிய இனிய பதிவு!..
ReplyDeleteபட்டாம் பூச்சிகள் அழகோ அழகு
ReplyDeleteபார்க்கக் கண் கோடி வேண்டும்
நன்றி சகோதரியாரே
ஆகா...!
ReplyDeleteவண்ணச்சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சிகளும் தகவல்களும் அருமை. பகிர்வுக்கு நன்றி மேடம்.
ReplyDeleteதங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். நேரம் அமையும்போது தொடரவும். நன்றி.
http://geethamanjari.blogspot.com.au/2014/06/blog-post_22.html
ஆகா அற்புதம்.வண்ணத்துபூச்சியின் அழகு. மனதை கொள்ளைகொள்ளும் படங்கள். வண்ணத்துப்பூச்சி பற்றிய தகவல்கள் கொண்ட சிறப்பான பகிர்வு.நன்றி.
ReplyDeleteதலைப்பில் ஒரு புள்ளி குறைகிறது.
ReplyDeleteபெரும்புள்ளியான தங்களை ‘சிறகணிந்து’ என்ற வார்த்தையில் ’ந’ வுக்கு அழகான நெற்றிப்பொட்டு வைக்க வேணுமாய் அன்புடன் ஆசையுடன் மிகுந்த ஆவலுடன் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
பொட்டு வைத்த முகத்தினைக்கண்ட பிறகு மட்டுமே மீண்டும் நான் வருவேனாக்கும். ;)
>>>>>
பொட்டு வைத்த முகமோ
Deleteகட்டி வைத்த குழலோ
பொன் மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ
பொட்டு வைத்த முகமோ
ஆ... ஆ... கட்டி வைத்த குழலோ
பொன் மணிச் சரமோ ..................
அந்தி மஞ்சள் நிறமோ ................
அந்தி மஞ்சள் நிறமோ !
இப்போது அழகாக பளிச்சென்று பாந்தமாக உள்ளது.
பொட்டு வைத்த தங்களுக்கு என் அன்பு நன்றிகள். ;) - VGK
This comment has been removed by the author.
ReplyDelete//நெருங்கும் போது அகப்படாமல் பறந்து போகிறாய் !
Deleteநிழலைப்போல தொடரும் என்னை மறந்து போகிறாய் !!//
ரஸிக்கத்தக்க நல்ல வரிகள். என் முதல் பின்னூட்டத்தைப் பார்க்காமல் நீங்களும் எங்கோ பறந்து சென்று விட்டீர்கள்.
வண்ணத்துப்பூச்சி மட்டும் அல்ல.
ReplyDeleteதங்களின் அன்றாடப்பதிவுகளும் என்னையும் என் எண்ணச்சிறகுகளையும் மிகவும் வசீகரித்துத்தான் வருகின்றன ......
>>>>>
பட்டாம் பூச்சிகள் போலவே, பட்டாம் பூச்சிகளைப் பற்றி மிகவும் அழகழகான படங்களாகக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.
ReplyDeleteபூப்பூவாய்ப் பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா .......
>>>>>
ஆங்காங்கே தாங்கள் எழுதியுள்ள பாடல் வரிகளும், மேலும் பல தகவல்களும் மிகவும் ரஸிக்கத்தக்கதாய் உள்ளன.
ReplyDelete>>>>>
அனைத்துப்படங்களுக்கும் விளக்கங்களுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள். வாழ்க !
ReplyDelete;) 1313 ;)
ooo ooo
படங்களுடன் வண்ணத்து பூச்சி பற்றிய தகவல்கள் சிறப்பு! சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவண்ணத்துப் பூச்சி பற்றிய தகவல்கள் அருமை.
ReplyDeleteவண்ண வண்ண புகைப்படங்களும் அருமை.
நன்றி.
வண்ணத்து பூசசியைப் போலவே வண்ணமயமான பதிவு கண்களுக்கு விருந்தானது. தகவல்களும் அருமை.
ReplyDeleteபூப் பூவாய் பறந்து போகும் பட்டாம் பூச்சி அக்கா – எம்.எஸ்.இராஜேஸ்வரி அவர்களது பின்னணிக் குரல் இந்த சகோதரி ஆன்மீகப் பதிவர் இராஜராஜேஸ்வரி அவர்களின் பதிவினில் ஒலிப்பது போல் ஒரு பிரம்மை.
ReplyDeleteவண்ணத்திப்பூச்சி வண்ணத்திப்பூச்சி
ReplyDeleteஎண்ணிப் பார் எண்ணிப் பார்!
வண்ணம் பலவே வண்ணம் பலவே
எண்ணம் கிளறுது எண்ணம் கிளறுது
இது தான் நான் பேரனுக்குப் பாடும் பாடல்
தங்கள் பதிவு மிக நன்று.
வேதா. இலங்காதிலகம்.
வண்ண வண்ண பூச்சிகள் அதனால் தான் வண்ணத்தி பூச்சிகளோ அருமையான பதிவு கவி வரிகளும் சரி விபரங்களும் சரி சிறப்பே வாழ்த்துக்கள் ....!
ReplyDeleteவண்ணத்திப்பூச்சிகள் எவ்வளவு அழகு !! நான் சிறுபிள்ளையாக இருந்தப்போகூட பிடிக்கணும்னு தோனது கிடையாது அவ்வளவு ஆசை ..தொலைவில் இருந்து ரசிப்பேன் ..பாவம் அவையும் விரைவில் அழியும் அக்கா மனிதரின் பேராசையால் :(
ReplyDeleteபூச்சி கொல்லி மருந்துகளால் ..
அழகிய வண்ணத்துப் பூச்சிகள்.
ReplyDeleteதிருவரங்கத்தில் கூட ஒரு வண்ணத்துப் பூச்சி பூங்கா திறக்கப் போவதாய் சொல்லி இருந்தார்கள். திறந்து விட்டார்களா என்று தெரியவில்லை.