

விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை வேதம்தான் விரித்து ஓத வல்லானை
நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல்புகழாள் உமைநங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்றுடைக் கம்பன் எம்மானைக் காணக்கண் அடியேன் பெற்றவாறே.

பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற
நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல்புகழாள் உமைநங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்றுடைக் கம்பன் எம்மானைக் காணக்கண் அடியேன் பெற்றவாறே.

பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற
ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாக விழாவின்போது,
தேர் திருவிழாவிற்கு முன்னதாக வைகாசி அமாவாசை தினத்தன்று
சிறிய அம்மன் தேரை சிறுவர்கள் இழுத்து வருவது வழக்கம்
சிறிய தேரில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
நள்ளிரவில் இழுத்துச் செல்வதால் இதனை இருட்டுத்தேர் என்று கூறும் இந்தத் தேரை சிறுவர், சிறுமியர் நான்கு வீதிகளிலும் இழுத்துச் செல்வார்கள்.
பல நூற்றாண்டு காலமாக இந்தத் தேரை இரவில் மட்டுமே இழுத்துச் செல்வது வழக்கம்.
சமீபகாலமாக சில ஊர்களில் தேரோட்டங்களின் போது அசம்பாவிதங்கள் ஏற்பட்டதால் அரசு உத்தரவுப்படி பகலில் தேர் இழுக்கப்பட்டது.
சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.
.கடந்த காலங்களில் நள்ளிரவு நேரத்தில் இழுக்கப்பட்ட இந்த தேரை, மக்கள் திருட்டுத்தேர் எனவும், இருட்டுத்தேர் எனவும் அழைப்பது வழக்கம். தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக மாலையில் இழுக்கப்பட்டு வருகிறது.
ரத வீதியிலிருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேர் புறப்பட்டு. நான்கு ரத வீதிகள் வழியாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வடம் பிடித்து இழுத்த வந்த தேர் நிலை சேர்வது வழக்கம்
நள்ளிரவில் இருட்டில் இழுக்கப்பட்ட தேரை வெளிச்சத்தில்
இழுத்து வருவதால், கடந்த சில வருடங்களாக
மழை பெய்யவில்லை என்ற கருத்து பரவலாக உள்ளது.




சிம்மாசலம் குன்றின் மேல் கோயில் கொண்டுள்ள நரசிம்மர் பெருமானை ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தன்றுதான் காண இயலும். பிறகு சந்தனப் பூச்சு பூசி வைத்து விடுவார்கள்.


வைகாசி விசாகத்தினை ஒட்டி காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் கருட சேவை நடைபெறும்.

இந்திரன் வைகாசி விசாகத்தன்று
சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான்.


திருமழபாடியில் ஈசன் வைகாசி விசாக நாளில் திருநடனம் புரிகிறார்.

நாயகி பாவத்தில் பராங்குச நாயகியாக இறைவனை மிகவும் இறைஞ்சி பல பாடல்களைப் பாடியுள்ள நம்மாழ்வார் அவதரித்த நாள், வைகாசி விசாகம் என்று ஆழ்வார்திருநகரியில் வெகு விமரிசையாக விழா கொண்டாடப்படுகிறது.


அற்றது பற்றெனில் உற்றது வீடு உயிர் (திருவாய்மொழி)









வைகாசி விசாகத்தன்று முருகனைத் தொழுதால் பகை விலகும். துன்பம் நீங்கும். குடை, செருப்பு, மோர், பானகம், தயிர்சாதம் தானம் செய்தால் மணப்பேறு கிட்டும். மகப்பேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை

வைகாசி பவுர்ணமியில் சிவனை நினைத்து கலச ஸ்தாபனம் செய்து யாக குண்டம் அமைத்து யாகம் செய்வதற்கு குண்டத்தை தாமரை மலர் வடிவில் அமைத்து சந்தனாபிஷேகத்தை விசேஷமாகச் செய்வார்கள்.

யாகங்களைத்தரிசித்தால் மகாலட்சுமியின் அருள் கிட்டும். சிவனுக்கு அலரிப்பூ செவ்வந்திப்பூ, செந்தாமரை மலர்களை மாலையாக அணிவித்து அர்ச்சிப்பார்கள்.

மகிழம்பூ நிறத்தில் பட்டு வஸ்திரம் சாத்தி, எள் அன்னம் படைத்து முக்கனிகளால் அபிஷேகித்து, பசும்பாலில் மாங்காயை வேக வைத்துப் படைப்பதால் பாவங்கள் அகலும், புண்ணியம் கிட்டும்








வைகாசி விழாக்கள் அறிந்தேன்
ReplyDeleteபடங்கள் அருமை
நன்றி சகோதரியாரே
வணக்கம்
ReplyDeleteஅம்மா
எல்லாம் பக்தி பரவசம் பார்க்கவேண்டும் என்ற உணர்வு தோன்றுகிறது. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
திருச்செந்தூர் ஆறுமுகசுவாமி அழகு..வைகாசியில், வைகாசி விசாகத்தில் நடக்கும் விழாக்களை அழகான படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
ReplyDeleteஅழகிய படங்களுடன் விரிவான தகவல்கள்.. மகிழ்ச்சி..
ReplyDeleteஇருட்டுத் தேர் ...... திருட்டுத்தேர் .... பெயர்களிலேயே நகைச்சுவை.
ReplyDeleteநானும் நேற்று நள்ளிரவு இருட்டுத்தேர் ..... திருட்டுத்தேர் எல்லாம் ஓட்டிப்பார்த்தேன் ......
மழைவருமா என நீண்ட நேரம் நான் எதிர்பார்த்து காத்திருந்தது மட்டுமே மிச்சம். ஊஹூம் ..... வரவேக்காணோம் ...... அழுத்தம் .... மஹா அழுத்தம்.
நான் தேரைச்சொன்னேனாக்கும். ஹூக்க்க்க்க்கும் !
>>>>>
This comment has been removed by the author.
ReplyDeleteமயில்கள் இரண்டும் அழகோ அழகு !
Deleteஇந்தப்பதிவினைப்போலவே தோகைகள் மிக நீளமாக உள்ளன.
இன்று எல்லாவற்றையும் பார்க்கவும் படிக்கவும் மிகவும் களைப்பாக உள்ளது. மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தால் மட்டும் தானே தொடர முடியும்!
ReplyDeleteஇங்கு இன்று எனக்குள்ள ஏராளமான வேலைகளால் ஏற்கனவே செத்து சுண்ணாம்பாகியுள்ளேன். VERY MUCH TIRED.
யாரும் உற்சாகம் கொடுப்பதில்லை என்பதால் மேலும் மேலும் சலித்துப்போய் விட்டேன்.
>>>>>
அனைத்துப்படங்களும் விளக்கங்களும் தலைப்பும் வழக்கம்போல அருமையோ அருமை.
ReplyDeleteஎவ்வளவோ விஷயங்கள் இருக்கையில் எதைக்குறிப்பாகச் சொல்வது ?
பேசினாலும் அவை சுவற்றிடம் பேசுவது போலத்தான் உள்ளன. சுவரால் பதிலா தர இயலும்? ;(
அனைத்துக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
;) 1304 ;)
சிறப்பான பகிர்வை இன்று வீட்டிலும் கண்குளிர கண்டார்கள் அம்மா... நன்றி...
ReplyDeleteஇருட்டுத் தேர் - புதிய செய்திகள்.
ReplyDeleteஅழகான படங்களுடன் விளக்கம் அருமை அம்மா.