

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணுக்கும் மண்ணுக்கும் நாதனுமாம்
தண்மையினாற் கண்ணிற் பணிமின் கனிந்து.



திகட சக்கரச் செம்முக மைந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர வின்மணி யாவுரை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்


உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதிய னம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்

வியாசர் அருளிய. ஸ்ரீ குரு பகவான் ஸ்தோத்ரம் (நவக்கிரக ஸ்தோத்திரம்)
தேவர்களும் முனிவர்களும் சேவிக்கும் சுரகுருவை
மேவுசுடர்ப் பொன்போன்று மிகவும் ஒளிர்பவனை,
மூவுலகும் வணங்குகின்ற மூர்த்தியினை, ஈஸ்வரனை
யாவுமிக அறிந்தவனை யான்வணங்கிப் போற்றுகிறேன்.
தேவர்கள்,முனிவர்கள்,எல்லோராலும் வணங்கப்பெறுபவனும்
ஒளிவீசும் பொன்னைப் போல் காந்திஉடையவனும்
மூன்று உலகங்களும் போற்றிப் பணியும் வடிவுடையவனும்
எல்லாம் அறிந்தவனும் ஈசன் எனப் புகழப்படுபவனும்
தேவர்களின் குருவும்ஆன வியாழ பகவானை நான் வணங்குகிறேன்.

குரு ஸ்லோகம்-
குரு பிரஹ்மா குரு விஸ்ணு குரு தேவோ மகேச்வர:
குரு சாஷாத் பரப்ரஹ்மை தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ.
தேவனாம்ச ரிஷிணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஷ்பதிம்.
என்னும் ஸ்லோகத்தை 12 முறை சொல்லி வணங்கினால்,
குருவால் ஏற்படும் சிரமங்கள் குறையும்.

ராம கிருஷ்ண குரவே நமஹ - ஹம்ஸ
ராம ராம ஹரே ராமராம கிருஷ்ண குரவே நமஹ
ராம ராம ஹரே ராம ராம கிருஷ்ண குரவே நமஹ

குரு காயத்ரி
ஓம் வ்ருஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்.

உத்தமனே! உயர்ந்தவனே!
தத்துவத்தின் நாயகனே ! சித்தனே!
புத்திரருக்கு அதிபதியே! பொன் மகனே!
நித்தம் உன்னைப் பணிவேன்- பக்தியுடன்
பதம் பணிவேன் பிரகஸ்பதியே போற்றி! போற்றி!!

வானவர்க்கரசே! வளம் தரும் குருவே!
காணா இன்பம் காண வைப்பவனே!
பொன்னிற முல்லையும் புஷ்பராகமும்
உந்தனுக்களித்தால் உள்ளம் மகிழ்வாய்!
சுண்டல் தானியமும் சுவர்ண அபிஷேகமும்
கொண்டுனை வழிப்படக் குறைகளைத் தீர்ப்பாய்!
தலைமைப் பதவியும் தனித்தோர் புகழும்
நிலையாய்த் தந்திட நேரினில் வருக!

வியாழன் துதி
குணமிகு வியாழ குருபகவானே!
மணமுள வாழ்வை மகிழ்வுடன் அருள்வாய்!
பிரகஸ்பதி வியாழ பர குரு நேசா!
கிரக தோஷமின்றிக் கடாட்சித் தருள்வாய்!
மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க் கரசன் மந்திரி
நறைசொரி கற்ப கப்பொன் நாட்டினுக் கதிபனாக்கி
நிறைதனம் சிவிகை மன்றல நீடுபோ கத்தை நல்கும்
இறையவன் குருவி யாழன் இணையடி போற்றி போற்றி.
வளமெலாம் அளித்திடும் வியாழா போற்றி
குலமெலாம் தழைத்திட வருவாய் போற்றி
புலமெலாம் மலர்ந்திட முனைவாய் போற்றி
உலகெலாம் உவந்திட அருள்வாய் போற்றி!


தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை எல்லோரும் ஜபம் செய்யலாம். எந்தவித நிர்பந்தங்களும் இல்லாத மந்திரங்கள் சிலவற்றில் தலையாய மந்திரம் இந்த தக்ஷிணாமூர்த்தி மந்திரம்.
மூலமந்திரம்
"ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்த்தயே
மஹ்யம் மேதாம் ப்ரஞ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா"

நாள் தோறும் மூன்று முறை சொல்லி வழிபட்டால் குருவருளால் குறைகள் நீங்கி நன்மை பெறலாம்.- தினமும் மாலையில் விளக்கேற்றி சொல்லி வர கஷ்டங்கள் குறைந்து நன்மை பெறலாம்.

குரு காயத்ரி, தட்சிணாமூர்த்தி துதிகளையும் சொல்ல .,
குருவருள் பரிபூரணமாகக் கிட்டும்.
குருவருள் பரிபூரணமாகக் கிட்டும்.
“குரு பார்க்க கோடி நன்மை’ என்பது ஜோதிட பழமொழி.
நவக்கிரகங்களில் முதன்மையானதாக கருதப்படும்
சுபக் கிரகமாக குருபகவான் திகழ்கிறார்.
சுபக் கிரகமாக குருபகவான் திகழ்கிறார்.
குரு தலங்களான திருச்செந்தூர், ஆலங்குடி (திருவாரூர்), பட்டமங்கலம் (சிவகங்கை) தென்குடித்திட்டை (தஞ்சாவூர்), குருவித்துறை (மதுரை), ஆகிய ஊர்களிலுள்ள கோயில்களுக்கு சென்று குருவை முறைப்படி வழிபட்டால் பிரச்சனைகள் தீர்ந்து வாழ்வில் வளம் பெறலாம்.
வேலைவாய்ப்பு வழங்குவதிலும், தடைப்படும் திருமணம்
விரைவில் நடைபெறவும் உதவி செய்பவர் குரு பகவான்.
வேலைவாய்ப்பு வழங்குவதிலும், தடைப்படும் திருமணம்
விரைவில் நடைபெறவும் உதவி செய்பவர் குரு பகவான்.


தஞ்சை மாவட்டம் திட்டையில் குருபரிகார தலமாக வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குரு பகவான் தனி சன்னதியில் தனி விமானத்துடன் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.


குருவருள் இருந்தால் தான் இறைவனின் திருவருள் கிடைக்கும்
குரு பார்வையால் தான் ஒரு மனிதன் வாழ்வில் திருமணம், குழந்தைப்பேறு, பணவரவு, கல்வியறிவு, சமூக கவுரவம் போன்றவை சிறப்பாக அமையும்.
குரு இருக்கும் இடத்தை விட, அவரது பார்வைக்கு பலம் அதிகம். -
பிரம்மதேவர் படைப்புத் தொழிலில் தனக்கு உதவிபுரிய சப்த ரிஷிகளை உருவாக்கினார். அந்த ஏழு ரிஷிகள் மூலம் மனித, அசுர இனங்கள் தோன்றின. அந்த ஏழு ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன்தான் பிரகஸ்பதி எனும் வியாழ பகவான்.
குரு பார்வையால் தான் ஒரு மனிதன் வாழ்வில் திருமணம், குழந்தைப்பேறு, பணவரவு, கல்வியறிவு, சமூக கவுரவம் போன்றவை சிறப்பாக அமையும்.
பிரம்மதேவர் படைப்புத் தொழிலில் தனக்கு உதவிபுரிய சப்த ரிஷிகளை உருவாக்கினார். அந்த ஏழு ரிஷிகள் மூலம் மனித, அசுர இனங்கள் தோன்றின. அந்த ஏழு ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன்தான் பிரகஸ்பதி எனும் வியாழ பகவான்.

வாழ்வில் உயர்ந்த இடத்தை அடையவேண்டும் என்று லட்சியம் கொண்ட பிரகஸ்பதி நான்கு வகை வேதங்களையும் கற்று, பல யாகங்களும் ஹோமங்களும் செய்தார்.
அஸ்வமேத யாகம் போன்ற சிறந்த யாகங்களை நூற்றுக்கும்மேல் செய்தார். இப்படி சிறப்பான ஹோமங்களைச் செய்து மிகச்சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒருவர்தான் தேவர்களுக்கு குருவாக முடியும்.
அதன்படி தேர்வு பெற்று பிரகஸ்பதி தேவர்களுக்கு குருவானார்.

அத்துடன் அவர் திருப்தி அடைந்துவிடவில்லை. தேவ குருவைவிட சிறப்பான இடத்தை அடைய மேலும் பல அரிய ஹோமங்களும் யாகங்களும் செய்ததுடன், திட்டை தலத்துக்கு வந்து, அங்கு கோவில் கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரரைக் குறித்து கடுந்தவம் புரிந்தார்.

அவர் தவத்துக்கு மெச்சிய சிவபெருமான் அவருக்கு நவகிரக பதவியை வழங்கினார். அதன்படி நவகிரகங்களில் சுபகிரகமான குரு பகவானாக ஏற்றம் பெற்றார்.
திட்டை கோயிலில் நவக்கிரக குரு பகவானே சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் தனி சன்னதியில் தனி விமானத்துடன் ராஜ குருவாக நின்ற கோலத்தில் அருள் பாலிக்கும் அமைப்பு உலகில் வேறு எந்த சிவாலயத்திலும் இல்லை. திட்டை வந்து, குரு பகவானை வழிபட்டு குருபகவான் சன்னதியில் நடைபெறும் பரிகார ஹோமங்களில் பங்கு கொள்வது மிகுந்த நற்பலன்களை தரும்

இறைவன் வசிஷ்டேஸ்வரர் சன்னதியில் உள்ள உட்புற கோபுரத்தில் சந்திர காந்தக் கல் வைத்து கட்டப்பட்டுள்ளது கோவிலின் தனி சிறப்பு..

24 நிமிடத்திற்கு அதாவது ஒரு நாழிகைக்கு ஒரு முறை இந்த சந்திர காந்தக்கல்லால் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி கல்லிலிருந்து ஒரு சொட்டு நீர் இறைவன் வசிஷ்டேஸ்வரர் மீது எப்பொழுதும் விழுந்து கொண்டிருக்கும் .கூர்ந்து கவனித்தால் இதை பார்கக முடியும்.
.


சித்ரா பௌர்ணமி ,குரு பெயர்ச்சி சிறப்பாக கொண்டாடப்படும் .
திட்டையில் வழிபட்டால் தீங்குகள் மாயமாகும்

தென்குடித்திட்டை ஆலயம் முழுவதுமே கற்களால் கட்டபட்டது . கோவில் சுவர்கள் ,கூரை ,கொடி மரம் என்று அனைத்துமே கற்களால் கட்டப்பட்டது.
சந்திர தீர்த்தம் சிறப்புடையது..

சிவபெருமானின் ஞானவடிவமான ஆதிகுரு தட்சிணாமூர்த்தி
வழிபடுபவர்களுக்கு அருளையும், ஞானத்தையும் வழங்கக்கூடியவர்.
எல்லா சிவன் கோவில்களிலும் சிவபெருமானின் ஞான வடிவான
ஸ்ரீ தட்சிணாமூர்த்தியே குருவாகப் பாவித்து வழிபடப்படுகிறார்.
ஸ்ரீ தட்சிணாமூர்த்தியே குருவாகப் பாவித்து வழிபடப்படுகிறார்.
ஆனால் குரு வேறு; தட்சிணாமூர்த்தி வேறு என்பதை
புரிந்துகொள்ளவேண்டும்.
புரிந்துகொள்ளவேண்டும்.
குருவுக்கு செய்யும் பரிகாரங்களை குருவுக்கே செய்யவேண்டும்.
குருவால் ஏற்படும் தோஷங்களுக்கு குருவையே வழிபடவேண்டும்.

உலகம் முழுவதும் உள்ள பணம், பொன் விஷயங்களுக்கு குருவே அதிபதி. எனவே பொருளாதாரம் உயரவேண்டுமானால் குருவை வழிபடவேண்டும். திருமணம் நடைபெறவும் குருவின் அருள் வேண்டும்.

ஒருமுறை பார்வதி தேவி பூவுலகில் பிறந்து, சிவபெருமானை
திருமணம் செய்துகொள்ள கடுந்தவம் புரிந்தார்.
நாட்கள் கடந்துகொண்டே இருந்தன. ஆனால் திருமணம் கைகூடி வரவில்லை. தேவர்கள் சிவ பெருமானிடம் சென்று தேவியை மணந்து கொள்ளவேண்டுமென்று முறையிட்டனர்.
அப்போது சிவன், "தேவியைத் திருமணம் செய்துகொள்ள நானும் தயாராகவே இருக்கிறேன். ஆனால் என்ன செய்வது? தேவிக்கு இன்னும் குரு பலம் வரவில்லையே' என்றார்.
உலக அன்னையான தேவிக்கே குரு பலம் இருந்தால்தான் திருமணம் நடைபெறும் என்னும்போது சாமான்யர்கள் நிலை எண்ணிப்பார்க்கவேண்டும்..

எனவே திருமணம் தடைப்படுபவர்கள் அவர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் திட்டைக்கு வந்து சுவாமி, அம்பாளை தரிசனம் செய்து, குரு பகவானை அபிஷேகம், அர்ச்சனை செய்து வணங்கினால், திருமணத்தடை விலகும் என்பது ஐதீகம்.
குழந்தை வரம் கிடைக்க புத்திரகாரகன்
குரு பகவானையே வழிபடவேண்டும்.

நவீன விஞ்ஞான ஆய்வுகளும் இதையே கூறுகின்றன. வியாழகிரகத்திலிருந்து வரும் மஞ்சள் நிறமான மீத்தேன் கதிர்கள்தான் உயிரினங்கள் உண்டாகக் காரணமென்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


குழந்தை நல்லபடியாகப் படித்து முன்னேறவும்
குரு பகவான்தான் அருளவேண்டும்.
கல்வியில் முன்னேற்றம், வேத வேதாந்த சாஸ்திர அறிவு, நல்ல புத்தி,
ஞாபக சக்தி அனைத்தையும் வழங்குபவர் குரு பகவான்தான்.
ஞாபக சக்தி அனைத்தையும் வழங்குபவர் குரு பகவான்தான்.
நல்லபடியாகப் படித்துத் தேறிய குழந்தை களுக்கு உரிய பதவியை வழங்குபவரும் குரு பகவான் அருளால்தான் அரசியல் தொடர்பான பதவிகள் முக்கியமான நிர்வாகத் துறைகளில் உயர் பதவிகளில் அமர குரு அருள் அவசியம்...
.பூர்வ புண்ணியத்திற்கான பலன்களை அளிக்கும் நவநாயகர்களில் ஐந்தாவதாக - நடு நாயகராகத் திகழும் .தேவகுருவான குரு பகவானே பூரணமான முழுச்சுபராக கருதப்படுகின்றார். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு
சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய ஐந்து முழு பாப கிரகங்களினால் வரும் தோஷங்களைக் கட்டுப்படுத்துகிற சக்தி முழு சுபகிரகமான குரு பகவானுக்கு உண்டு. எனவே "குரு பார்க்க கோடி தோஷம் விலகும்', "குரு பார்க்க கோடி நன்மை' . குரு பார்வை தோஷ நிவர்த்தி’ என்றெல்லாம் குருபகவானின் அருள்திறம் போற்றப்பெறுகின்றது.
குரு பகவானுக்கு உகந்த நாளான வியாழக்கிழமையில் குரு பரிகாரம் செய்யலாம். வியாழக்கிழமை அன்று விரதமிருந்து குரு பகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து குருவுக்கு அர்ச்சனை செய்யலாம்..
லட்டு தானம் குருவுக்கு உகந்தது..
லட்டு தானம் குருவுக்கு உகந்தது..
குரு பெயர்ச்சி என்பது குருபகவான் ராசி மண்டலத்தில் ஒரு ராசியில் இருந்து மற்றோர் ராசிக்குச் செல்லும் நிகழ்வாகும்.
ஆலங்குடி, திருச்செந்தூர், மந்திராலயம், தூத்துக்குடி ஆழ்வார் திருநகரி ஆகிய தலங்கள் ஏதாவது ஒன்றுக்குச் சென்று மனதார வழிபட்டு வந்தால் நலம் பெறலாம் ..
ஜன்ம ஜன்மமாக பாபங்கள் செய்துவிட்டு இந்த பரிகாரங்கள் செய்தால் போதுமா என்றெல்லாம் கேட்டுக்கொண்டு காலத்தைக் கடத்திக் கொண்டிராமல் தகிக்கும் வெய்யிலை பாதரட்சை கொண்டு சமாளிப்பது போல - மழையை குடை பிடித்து எதிர் கொண்டு சமாளிப்பது போல இயன்ற பரிகாரங்கள் , ஹோமங்கள் , தானங்கள் , பகவத் ஆராதனைகள் மூலம் நலம் பெறலாம்..
தொடர்புடைய பதிவுகள்
குருவருள் கூடும் திருப்பெயர்ச்சி..
அருளும் குருவும் திருவும்
ஜன்ம ஜன்மமாக பாபங்கள் செய்துவிட்டு இந்த பரிகாரங்கள் செய்தால் போதுமா என்றெல்லாம் கேட்டுக்கொண்டு காலத்தைக் கடத்திக் கொண்டிராமல் தகிக்கும் வெய்யிலை பாதரட்சை கொண்டு சமாளிப்பது போல - மழையை குடை பிடித்து எதிர் கொண்டு சமாளிப்பது போல இயன்ற பரிகாரங்கள் , ஹோமங்கள் , தானங்கள் , பகவத் ஆராதனைகள் மூலம் நலம் பெறலாம்..
தொடர்புடைய பதிவுகள்
குருவருள் கூடும் திருப்பெயர்ச்சி..
அருளும் குருவும் திருவும்




தங்கத்தாலான ஏதாவது ஒரு ஆபரணத்தை உடலில் அணிவது . வசதியைப் பொறுத்து மஞ்சள் டோபாஸ் கல்லால் ஆன டாலர் அணிவது கணபதியை பூஜிப்பது ஆகியவையும் நன்மைதரும்..
கோயில் யானைக்கு மஞ்சள் வாழைப்பழம்
இயன்ற அளவு வாங்கிக் கொடுப்பதும் சிறப்பு.....
இயன்ற அளவு வாங்கிக் கொடுப்பதும் சிறப்பு.....









குரு பார்க்கட்டும்
ReplyDeleteஅனைவருக்கும்
கோடி நன்மை கிடைக்கட்டும்
நன்றி சகோதரியாரே
Thanks a lot for the Timely Enunciation of All Slokas. I shall be heartened to render them on the occasion.
ReplyDeletesubbu thatha.
www.pureaanmeekam.blogspot.com
சிவபெருமானின் குரு மூர்த்தி கோலம் தான் - ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி!..
ReplyDeleteதேவர்களின் குரு - பிரகஸ்பதி எனும் வியாழ மூர்த்தி!..
குரு பெயர்ச்சி சமயத்தில் - நல்ல பதிவு..
குரு பார்த்தால் கோடி நன்மை தான். ஆனால் என்ன செய்வது பாவம் ரொம்ப busy எத்தனை பேரை என்று அவர் பார்ப்பது ஹா ஹா. பர்வதிக்கே அந்த நிலைமை என்றால் நாம் எம் மாத்திரம். இருந்தாலும் வணங்குவோம் மழைக்கு குடை பிடிப்பது போல் ஆகும் அல்லவா நல்ல உதாரணம். நல்ல பதிவு. நன்றி வாழ்த்துக்கள்....!
ReplyDeleteகுருப்பெயர்ச்சியின் நேரம் குருபகவான் பற்றிய பல சிறப்பான தகவல்கள்,ஸ்லோகங்கள். //ஜன்ம,ஜன்மமா பாவங்கள்// நல்லதொரு கருத்து .குரு வேறு தட்சணாமூர்த்தி வேறு.//புதிது. குருபெயர்ச்சி நடைபெறும் கோவில் தகவல்கள் மிகவும் பயனுள்ளது. அழகான படங்களுடன் சிறப்புமிக்க பகிர்வு. நன்றி.
ReplyDeleteகுரு பெயர்ச்சி பற்றிய தகவல்கள் அருமை அம்மா.
ReplyDeleteதட்சணாமூர்த்தி வேறு, குரு வேறு என்பதை புதிதாக தெரிந்து கொண்டேன். படங்களுடன் தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள் . நன்றி.
ReplyDeleteசென்ற ஆண்டு தெந்திட்டைக் குடிக்கு சென்று வசிஷ்டேஸ்வரரை தரிசித்தோம் குரு வழிபாடு குறித்த நோட்டிஸ் எங்களுக்கும் வந்தது. அருமையான பதிவு அழகு படங்களுடன் . வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇன்னும் இரண்டு நாட்களில் குருப்பெயர்ச்சி இல்லையா? என் ராசிக்கு வருகிறார்.படங்களுடன் சிறந்த பதிவு.
ReplyDelete’குரு பார்க்க கோடி நன்மை’
ReplyDeleteதங்கத்தலைவியின் தலைப்பைக்கண்டதும் தலைகால் புரியாமல் நன்மைகளும் சந்தோஷங்களும் கிடைத்து விட்டது போன்ற ஓர் குதூகலம் ஏற்பட்டது.
>>>>>
குருவுக்கு அடுத்ததாக என் செல்லக்குட்டி, தங்கக்கட்டி பிள்ளையாரப்பாவைக் காட்டியுள்ளது அழகாக உள்ளது.
ReplyDeleteமுழுமுதற் கடவுள் அல்லவா !
தினமும் நான் தரிஸித்து வரும் படத்திலுள்ள தோற்றத்திலும் அப்படியே ........ டிட்டோ ;)
சும்மா ஜொலிக்குது !
>>>>>
ஸ்ரீ வேத வியாசர் எழுதியுள்ள ஸ்தோத்ரங்களும், குரு ஸ்லோகமும், குரு காயத்ரியும், வியாழன் துதியும், இனிமை இனிமை இனிமையோ இனிமையான உள்ளன.
ReplyDelete>>>>>
இன்று காட்டியுள்ள படங்கள் அத்தனையும் அழகோ அழகு.
ReplyDeleteஆலங்குடி, திட்டை, கஞ்சனூர், திருநள்ளாறு உள்பட அனைத்து நவக்கிரஹ ஸ்தலங்களுக்கும் போய் வந்த பாக்யம் அவ்வப்போது பல முறைகள் கிடைக்கப்பெற்றுள்ளேன்.
இப்போதெல்லாம் தங்கள் பதிவினிலேயே அந்த பாக்யம் கிடைத்து விடுவதால், அங்கெல்லாம் மீண்டும் மீண்டும் போய் வந்தது போல ஓர் திருப்தி மனதுக்கு ஏற்படுகிறது.
>>>>>
தென்குடித்திட்டைக்கு நானும் என் பெரிய சம்பந்தியும் ஒரு முறை நேரில் சென்றபோது பல்வேறு ஆச்சர்யங்கள் அங்கு எங்களுக்கு நடைபெற்றன. அவற்றைப்பதிவிட்டால் யாருமே நம்ப மாட்டார்கள். REALLY WONDERFUL MIRACLES ! ;)
ReplyDelete>>>>>
தாங்கள் கூறியுள்ள புராணக்கதைகள் + பரிகாரங்கள் [பாதரக்ஷை + குடை உதாரணங்களுடன்] சுவாரஸ்யமாக உள்ளன.
ReplyDeleteபாலூட்டிய குழந்தையைத் தூளியிலிட்டு அம்மா தாலாட்டுப் பாட்டுப்பாடி கதைகள் சொல்வதுபோல அற்புதமாக உள்ளன. ;)
எத்தனை புத்திசாலி தாங்கள் என நினைத்து, தினமும் வியந்து போகிறேன் !
>>>>>
ஸ்ரீ மங்களாம்பிகை படம் மங்களகரமாக உள்ளது.
ReplyDeleteகுரு வேறு, தக்ஷிணாமூர்த்தி வேறு ...
எல்லாமே வேறு வேறு தான், இருக்கட்டும், இருந்துவிட்டுப் போகட்டும்.
இருப்பினும் எல்லாவற்றையும் எங்களுக்குத் தினமும் புரியும் படியாக அழகான படங்களை இணைத்துப் பாடங்களை நடத்தும் தங்களை விட வேறொரு குருவும் உண்டோ என எண்ணத்தோன்றுகிறதே !
என்னே எங்கள் பாக்யம் ! நீடூழி வாழ்க !!
>>>>>
நாளை குருவாரம் வியாழக்கிழமை வைகாசி அனுஷம் ... ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் ஜயந்தி. அவதாரதினம்.
ReplyDeleteஅதற்கு முதல் நாளே இந்த அழகான பதிவு.
அதற்கு மறுநாள் குருப்பெயர்ச்சி. என் அன்புக்குரிய அம்மா வருகை தரும் நன்நாள்.
என்னப்பொருத்தம் ............ இந்தப்பொருத்தம் ;)
>>>>>
This comment has been removed by the author.
ReplyDeleteமிகப்பெரிய பயனுள்ள பதிவாக உள்ளது.
Deleteஅனைத்துக்கும் என் மனம் நிறைந்த அன்பான இனிய நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
தொடரட்டும் இதுபோன்ற தங்களின் பதிவுகள்.
மலரட்டும் கோடிக்கணக்கான என் பின்னூட்ட எண்ணிக்கைகள்.
;) 1302 ;)
ooo ooo ooo
http://jaghamani.blogspot.com/2012/05/blog-post_17.html
ReplyDeleteதொடர்புடைய மேற்படிப்பதிவினில் என் கருத்துக்களுக்கு நிறைய பதில் சொல்லியுள்ளீர்கள். இன்று மீண்டும் அவற்றைப் படிக்க எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.
மறந்துபோய் நிறையக் கொடுத்திருப்பீர்களோ என்னவோ !
என்னவோ போங்கோ !!
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே !!! அது ஏன் .... ஏன் .... ஏன் .... நண்பியே !!!!
தங்களால் எங்களுக்கு குரு அருள் கிடைத்தது. நன்றி.
ReplyDeleteகுரு பார்த்தால் கோடி நன்மை. ஆனால் இராஜராஜேஸ்வரியான ஜகமணியின் வலைப்பதிவைத் தினந்தோறும் பார்த்தால் அதைவிட நன்மை!
ReplyDeleteசிறப்பான விளக்கங்கள் அம்மா... செல்லப்பா ஐயா சொன்னதும் மிகச் சரி...
ReplyDeleteசிறப்பான விளக்கம்..... குருப்பெயர்ச்சி சமயத்தில் தென்குடித்திட்டையின் பெருமை பற்றி அறிந்தோம்.....
ReplyDeleteபடங்களூம் மிக அழகு.