குரவே ஸர்வ லோகாநாம் பிஷஜே பவ ரோகிணாம்
நிதயே ஸர்வ வித்யாநாம் தட்சிணாமூர்த்தயே நமஹா.
குரு காயத்ரி மந்திரம்
தேவனாம்ச ரிஷிணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்பக்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்”
குரு பார்க்க கோடி நன்மை' .. குருவருள் இருந்தால் தான் இறைவனின் திருவருள் கிடைக்கும் என்பது பழமொழி.சுபக் கிரகமாக குருபகவான் நவக்கிரகங்களில் முதன்மையானதாக திகழ்கிறார்.
இரண்டு முழு சுப கிரகங்களான குருவை தேவகுரு என்றும்; சுக்கிரனை அசுர குரு என்றும் புராணங்கள் வர்ணிக்கின்றன்.., குரு ஒருவரே முழு சுபகிரகமாகவும் நல்லதைச் செய்ய வல்லவராகவும் திகழ்வதால் "தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று பொதுவாகச் சொல்வதுபோல் குருப் பெயர்ச்சியினால் விமோசனம் ஏற்படும் என்றும்; குருபார்வையில் நன்மைகள் நடக்கும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது...
எந்தப் பரிகாரங்கள் செய்தாலும் குருவின் திருவருள் இல்லை என்றால் பரிகாரங்களினால் எந்த நற் பலனும் ஏற்படாது.
குருவருளின்றித் திருவருள் இல்லை!!!!
தென்திசை பார்த்து, கால்மேல் கால் போட்டு, ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் தக்ஷிணாமூர்த்தி சிவபெருமானின் ஞான வடிவம்.
மௌனமாக உட்கார்ந்து ஞானதீட்சை அளிக்கும் சிவ மூர்த்தி..
நவகிரஹ குருவின் ராசி மாற்றத்தை ‘குரு பெயர்ச்சிப் பலன்’ என தக்ஷிணாமூர்த்தியைச் சித்தரிக்கிறார்கள்.
கொண்டைக்கடலை, மஞ்சள் துணி முதலானவை வியாழ பகவானுக்கு உகந்தவை.. அவற்றுக்கும் தக்ஷிணாமூர்த்திக்கும் தொடர்பில்லை.
ஜகத் குரு தட்சினாமூர்த்தி தேவர்களின் குரு பிருகஸ்பதி - வியாழன்
மூலவர் வசிஷ்டேஸ்வரர்
ராஜகுருவாக எழுந்தருளி குரு பகவான் தனி சன்னதியில் தனி விமானத்துடன்பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் குருபரிகார தலமான தஞ்சை மாவட்டம் தென்குடி திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோவிலில் .ஈஸ்வரனுக்கும், அம்பாளுக்கும் இடையில் தனி சன்னிதியில் குரு பகவான் ராஜ குருவாக எழுந்தருளியுள்ளார்.
மற்ற குரு ஸ்தலங்களில் தட்சிணாமூர்த்திக்கே குருபெயர்ச்சி நடத்தப்படும். இங்கு மட்டும்தான் குருவுக்கு பெயர்ச்சிவிழா கொண்டாடப்படுகிறது..
குருயந்திரம் - எண் வசிய எந்திரத்தை சிறிய மஞ்சள் அட்டையில் எழுதி பூஜை அறையில் வைத்து வணங்கலாம்..
10 5 12
11 9 7
6 13 8
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் தமிழகத்திலேயே முதன்மை வாய்ந்த குரு பரிகார தலமாக குரு பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஆலயமாகும்...
ஆலங்குடியான குருஸ்தலத்தில் சர்வ லோக குருவாக தானே வீற்றிருக்கிறார்..
தங்கக்கவசத்தில் பொன்னன் என அழைக்கப்படும் குருபகவான்
புண்ணிய நதிகளுக்கும், கண்ணுவர் போன்ற முனிவர்களுக்கும் சிவஞானம் பெற்றிட வழிகாட்டிய சிவபெருமான் எழுந்தருளிய தலமான மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் போகும் பாதையில் வள்ளலார் கோவில் சிவாலயத்தில் மேதா தட்சிணாமூர்த்தி நந்தி வாகனத்தில் காட்சியளிக்கிறார்.
சிவபெருமான் குருமூர்த்தமாக (தட்சிணாமூர்த்தியாக) இருக்கும் பொழுதும் தன்னைத் தாங்கும் தனிப்பெரும் உயர்நிலையை ரிஷபதேவருக்கு அருளினபடி, மயிலாடுதுறை வள்ளலார் கோவிலில், தட்சிணாமூர்த்தி ரிஷபத்தின் மீது அமர்ந்த நிலையில்காட்சி தருகிறார்.
இவரை, ‘மேதா தட்சிணாமூர்த்தி’ என்று போற்றுகின்றனர்.
இத்திருக்கோவிலில் தட்சிணாமூர்த்திக்கென்று தனியே திருவிழா நடைபெறுகிறது. தட்சிணாமூர்த்தி உற்சவமூர்த்தமும் உண்டு.
இத்திருக்கோவிலில் தட்சிணாமூர்த்திக்கென்று தனியே திருவிழா நடைபெறுகிறது. தட்சிணாமூர்த்தி உற்சவமூர்த்தமும் உண்டு.
தட்சிணாமூர்த்தி மூல மந்திரம்
ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே
மஹ்யம் மேதாம் பிரக்ஞாம் ப்ரயச்ச நமஹா.
கும்பகோணம், ஆடுதுறை அருகில் சூரியனார் கோவிலில், சூரியனுக்கு எதிரில் குரு எழுந்தருளியுள்ளார்.
சென்னைக்கு அருகில் தற்போது பாடி என்று அழைக்கப்படும் திருவலிதாயத்தில் இறைவனின் பெயர் திருவல்லீஸ்வரர், இறைவி ஜகதாம்பிகை. திருஞானசம்பந்தர் இந்தப் பகுதிக்கு விஜயம் செய்தபோது அவரால் பாடல் பெற்ற பெருமை உடையது.
“கரிகால் சோழன் பாடிவீடு (army camp) கட்டி அங்குத் தங்கினான்.
வசிஷ்டர், குருவி உருவில் இருந்து சிவனை வழிப்பட்ட தலம் குரு ஸ்தலம்’ என பிரபலமாகிவிட்டது...
மயிலாடுதுறை பேரளம் பூந்தோட்டம் அருகில் திருவீழிமிழலையில்
ஸ்ரீ யோக தட்சிணா மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்..
சென்னையில் இருந்து சுமார் 56 கிலோ மீட்டர் தொலைவிலும், திருப்பதியில் இருந்து 75 கி.மீ. தொலைவிலும் சுருட்டப்பள்ளி உள்ளது.
ஆலகால விஷத்தை உண்டு சிவபெருமான் மயக்க நிலையில்
அன்னை பார்வதி மடியில் தலை வைத்து உறங்கும் காட்சியில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
நால்வர் தமிழ்கொடுத்த ஞானக் கிறக்கமோ
மாங்கனி தந்த மயக்கமோ-ஆலத்தை
உண்ட மயக்கமோ உத்தமியாள் பேரழகைக்
கண்ட மயக்கமோ கூறு
ஸ்ரீ சர்வமங்கள ஸமேத பள்ளிக்கொண்டீஸ்வரர் ஆலயம் சுருட்டப்பள்ளி
அம்பாளை மடியில் இருத்தியபடி தாம்பத்ய தட்சிணாமூர்த்தியாகவும் அருள்புரிகிறார்.
பதஞ்சலி, வியாகர பாதர்களுடன், ரிஷபாரூடராய் தேவியை அனைத்த வண்ணம் சின்முத்திரையுடனும், ஞான சக்தியுடனும் காட்சியளிக்கிறார். அம்பிகையின் பெயர் கவுரி.
தேவ்யாலிங்கித வாமாங்கம் பாதோ தபஸ் மூர்திம் சிவம்!
நந்தி வாஹன மீஸானம் ஸ்ரீதாம்பத்ய தட்சணாமூர்த்தியே நமஹ!!
ஸ்ரீ கௌரி ஸ்மேத தட்சிணாமூர்த்தி
ஸ்ரீதட்சிணாமூர்த்தி எந்தத் திருக்கோலத்தில் எழுந்தருளினாலும் அவரை வழிபட்டால் குருவின் திருவருள் கிட்டும்; ஞானம், கல்வியில் சிறந்து விளங்கலாம்; குரு தோஷம் நீங்கும் ..
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகில் குச்சனூர் ஆதீனம் ராஜயோகம் தரும் வட குரு பகவான் ஸ்தலத்தில் குரு யானை வாகனத்தில் காட்சியளிக்கிறார்.
சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயில் முன்பு குருபகவான் கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் இக்கோயிலில் மட்டும் குருபகவான் தவக்கோலத்தில் சக்கரத்தாழ்வாருடன் தனிசந்நிதியில் காட்சியளிக்கிறார்.
இதனால் இக்கோயில் சிறந்த குருபரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
அருளும் குருவும் திருவும்
மறைமிகு கலை நூல் வல்லோன் வானவர்க் காசான் மந்திரி
நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக்கு அதிபனாகி
நிறைதனம் சிவிகை மண்ணில் நீடுபோகத்தை நல்கும்
இறையருள் குரு வியாழன் இரு மலர்ப் பாதம் போற்றி!
ஞானத்தைத் தரும் குரு என்ற முறையில் குரு பெயர்ச்சி காலங்களில் தட்சணாமூர்த்திக்கு பூஜை செய்யப்படுகிறது.
குருபெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் விஷேடமாக தட்சணாமூர்த்தியை தரிசிக்கிறார்கள்..
குருபெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் விஷேடமாக தட்சணாமூர்த்தியை தரிசிக்கிறார்கள்..
மாணிக்கவாசகர் இறைவனை நாயகனாகவும், குருவை சகியாகவும் உருவகித்துப் பாடியுள்ளார். நாயகனான இறைவன் மேல் தீராத பக்தி கொண்ட நாயகி சோலையில் பறந்து திரியும் இராஜ வண்டிடம், "நீ ரீங்காரம் செய்து பாடும் போது இறைவனுடைய தொன்மைக் கோலத்தையும், பெருமைகளையும் பாடு" எனக் கூறுவது போல் பாடப் பட்ட திருவாசகப் பாடலே கோத்தும்பி ஆகும்.
கோத்தும்பி என்றால் வண்டுகளுக்கெல்லாம் அரசனாக விளங்கும் இராஜ வண்டைக் குறிக்கும்.
சிற்ப அற்புதங்கள் நிறைந்த புதுக்கோட்டை ஸ்ரீபிரகதாம்பாள் திருக்கோயில் ஒவ்வொரு சந்நிதியிலும் அழகு ததும்பி நிற்கிற இறைத் திருமேனிகளைக் கண்குளிரத் தரிசிக்கும் சிறப்புத்தலத்தில் முழுமுதற் கடவுளும் ஆனைமுகனுமான ஸ்ரீவிநாயகருடன், ஞானகாரகனாக
ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி அருள்பாலித்து,சகல தோஷங்களும் விலக்கி, எடுத்த காரியங்கள் யாவும் வெற்றியைத் தேடித் தரும்; குருவின் பேரருள் கிடைக்கப் பெற்று, கல்வி- கேள்விகளிலும், தொழில் மற்றும் வேலையிலும் முன்னுக்கு வருவார்கள் என்பதி ஐதீகம்..
புதுக்கோட்டை மன்னருக்கு குருவருள் கிடைத்த தலம் !
ஸ்ரீவிநாயகருடன் காட்சி தரும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வணங்கி வற்றாத வளம் பெறலாம் !
குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வரஹ
குரு சாட்சாத் பரப்ரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா.
என்கிற குரு மந்திரப்படி பிரம்மாவே முதல் குரு
திருவேங்கைவாசல் குரு தட்சிணாமூர்த்தி சந்தன காப்பு அலங்காரம்.
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே”
மிகச்சரியாக குருப்பெயர்ச்சி நடைபெறு நேரத்தில் பதிவை வெளியிட்டுள்ளீர்கள்.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி.
இங்கு என் வீட்டருகே உள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீநாகநாத ஸ்வாமி கோயிலில் அமர்க்களப்படுகிறது.
ReplyDeleteமந்திர ஜபங்கள் லெளட் ஸ்பீக்கர் மூலம் காதில் விழுந்து கொண்டே உள்ளது.
சந்த்யாவந்தனம் முடித்துவிட்டுச் செல்லலாம் என்று இருக்கிறேன்.
அதற்குள் இந்தத்தங்களின் பதிவு!
ஒரே ஆச்சர்யம் தான்!! மகிழ்ச்சி தான்.
திருவருள் கூடும் குருப்பெயர்ச்சியா?
ReplyDeleteகுருவருள் கூடும் திருப்பெயர்ச்சியா?
தலைப்பே நன்றாக அமைந்துள்ளது.
”திரு” வும் “குரு” வும் வார்த்தைகளிலேயே பெயர்ச்சி அடைந்துள்ளது தனிச்சிறப்பு தான். ;)
சந்தனகாப்பு அலங்காரத்தில் குருபகவான் தரிஸனம் மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
ReplyDeleteகுருயந்திரம் - வஸிய எண் எந்திரம் - கொடுத்து இப்படி ஒரேயடியாக வஸியப்படுத்தி விட்டீர்களே!
சந்தோஷம்.
மேலும் சில பின்னூட்டங்கள் கோயிலுக்குச் சென்று வந்தபிறகு முடிந்தால் தொடர்வேன்.
[அதற்கும் எனக்கு குருவருள் இருக்க வேண்டும்]
சரியான நேரத்தில் பொருத்தமான பதிவு.
ReplyDeleteசிறப்பான குரு தரிசனம்@!!!
ReplyDeletethangalakku evvitham nandrisolvadhu veetil erunthabadiye arputhamana dharisanam namaskaram amma
ReplyDelete/குரவே ஸர்வ லோகாநாம்
ReplyDeleteபிஷஜே பவ ரோகிணாம்
நிதயே ஸர்வ வித்யாநாம் தட்சிணாமூர்த்தயே நமஹா/
அழகான மந்திரம் தந்துள்ளது அருமை.
/தென்திசை பார்த்து, கால்மேல் கால் போட்டு, ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் தக்ஷிணாமூர்த்தி சிவபெருமானின் ஞான வடிவம்/
இந்த ஞானவடிவத்தைப் பார்த்து தரிஸனம் செய்து தங்களுக்காகவும் வேண்டிக்கொண்டு, விபூதி பிரஸாதத்துடன் இப்போது தான் வந்தேன்.
இந்த எங்கள் கோயிலில் தக்ஷிணாமூர்த்திக்குத் தனி சந்நதி உண்டு.
ReplyDeleteஒவ்வொரு வியாழனும் சிறப்பு அலங்காரங்கள் உண்டு. சற்று கும்பலும் கூடுதலாகவே இருக்கும்.
இன்று எக்கச்சக்க கும்பல். மஞ்சள் வஸ்திரம், மஞ்சளில் மாலைகள், பெரிய ஹோமகுண்டத்தில் அக்னி ஜ்வாலையாக எரிகிறது. வேத வித்துக்கள் நிறைய கலசம் வைத்து ஜப ஹோமம் முடித்துள்ளனர்.
நிறைய பேர்கள் அர்ச்சனை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த எங்கள் கோயிலில் தக்ஷிணாமூர்த்திக்குத் தனி சந்நதி உண்டு.
ReplyDeleteஒவ்வொரு வியாழனும் சிறப்பு அலங்காரங்கள் உண்டு. சற்று கும்பலும் கூடுதலாகவே இருக்கும்.
இன்று எக்கச்சக்க கும்பல். மஞ்சள் வஸ்திரம், மஞ்சளில் மாலைகள், பெரிய ஹோமகுண்டத்தில் அக்னி ஜ்வாலையாக எரிகிறது. வேத வித்துக்கள் நிறைய கலசம் வைத்து ஜப ஹோமம் முடித்துள்ளனர்.
நிறைய பேர்கள் அர்ச்சனை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
அந்த ஸ்வாமியும் அம்பாளும் இன்று ஜொலிக்கிறார்கள்.
ReplyDeleteஸ்ரீ ஆனந்தவல்லி அம்மனுக்கு சந்தனக்கலரில் பட்டுப்புடவை, நல்ல அரக்கு பார்டருடன் விசிறி மடிப்பாகக் கட்டியுள்ளார்கள்.
அங்கிருந்து எனக்கு வரவே மனது இல்லை. அவ்வளவு ஒரு திவ்யசுந்தரியாக அந்த அம்மன் காட்சி தருகிறாள்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete/குரவே ஸர்வ லோகாநாம்
பிஷஜே பவ ரோகிணாம்
நிதயே ஸர்வ வித்யாநாம் தட்சிணாமூர்த்தயே நமஹா/
அழகான மந்திரம் தந்துள்ளது அருமை.
/தென்திசை பார்த்து, கால்மேல் கால் போட்டு, ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் தக்ஷிணாமூர்த்தி சிவபெருமானின் ஞான வடிவம்/
இந்த ஞானவடிவத்தைப் பார்த்து தரிஸனம் செய்து தங்களுக்காகவும் வேண்டிக்கொண்டு, விபூதி பிரஸாதத்துடன் இப்போது தான் வந்தேன்.///
கருத்துரைப் பிரசாதங்கள் அளித்து பதிவைப் பெருமைப்படுத்தியதற்கு மனம் மலர்ந்த இனிய நன்றிகள் ஐயா..
அம்மன் கழுத்திலும், தக்ஷிணாமூர்த்தி கழுத்திலும், எலுமிச்சை மாலைகளும், மின்னும் வைரத்தில் ஆபரணங்களும் அணிவிக்கப்பட்டுள்ளன.
ReplyDeleteகண்ணைப்பறிப்பதாக அவை ஜொலிக்கின்றன.
இந்த அம்பாளிடம் எனக்கு சிறு வயது முதலே மிகுந்த ஈடுபாடு உண்டு.
இந்த ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மனும், மாந்துறை ஸ்ரீ வாலாம்பிகா அம்மனும், நான் பிறந்த ஊரான கோவிலூர் ஸ்ரீ சாடிவாலீஸ்வரி அம்மனும், அதிக உயரமும் இல்லாமல், அதிக குட்டையாகவும் இல்லாமல், நிதானமாக அழகாக, [சிற்றடை உடை உடுத்தி பாடல் போல] சின்னப்பொண்ணு போல
ஒரே மாதிரியாகக் காட்சி தருவது எனக்கு மிகுந்த வியப்பாக உள்ளது.
இந்த ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாத ஸ்வாமி கோயிலைப்பற்றியே ஒரு பதிவிட நினைத்து நிறைய படங்களையும் இணைத்து வைத்திருந்தேன். அது ஏனோ அப்படியே பாதியில் நின்று போய் உள்ளது. பிராப்தம் இல்லாமல் போய் விட்டது.
ReplyDeleteஇந்த ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாத ஸ்வாமி கோயிலைப்பற்றியே ஒரு பதிவிட நினைத்து நிறைய படங்களையும் இணைத்து வைத்திருந்தேன். அது ஏனோ அப்படியே பாதியில் நின்று போய் உள்ளது. பிராப்தம் இல்லாமல் போய் விட்டது.
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஅம்மன் கழுத்திலும், தக்ஷிணாமூர்த்தி கழுத்திலும், எலுமிச்சை மாலைகளும், மின்னும் வைரத்தில் ஆபரணங்களும் அணிவிக்கப்பட்டுள்ளன.
கண்ணைப்பறிப்பதாக அவை ஜொலிக்கின்றன.
இந்த அம்பாளிடம் எனக்கு சிறு வயது முதலே மிகுந்த ஈடுபாடு உண்டு.
இந்த ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மனும், மாந்துறை ஸ்ரீ வாலாம்பிகா அம்மனும், நான் பிறந்த ஊரான கோவிலூர் ஸ்ரீ சாடிவாலீஸ்வரி அம்மனும், அதிக உயரமும் இல்லாமல், அதிக குட்டையாகவும் இல்லாமல், நிதானமாக அழகாக, [சிற்றடை உடை உடுத்தி பாடல் போல] சின்னப்பொண்ணு போல
ஒரே மாதிரியாகக் காட்சி தருவது எனக்கு மிகுந்த வியப்பாக உள்ளது.
தங்கள் நுணுக்கமான வர்ணணைகளால் ஆலயத்திற்கு நிதர்சனமாக அழைத்துச்சென்று தரிசனம் செய்வித்ததற்கு நிறைவான நன்றிகள் ஐயா.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஇந்த ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாத ஸ்வாமி கோயிலைப்பற்றியே ஒரு பதிவிட நினைத்து நிறைய படங்களையும் இணைத்து வைத்திருந்தேன். அது ஏனோ அப்படியே பாதியில் நின்று போய் உள்ளது. பிராப்தம் இல்லாமல் போய் விட்டது./
கருத்துரைகளிலேயே பதிவில் வரவேண்டிய அத்தனை அம்சங்களையும் தரிசிக்கச்செய்து பிரசாதமும் ஸ்வீகரித்த நிறைவு அளித்ததற்க்கு நன்றிகள் ஐயா..
//தஞ்சை மாவட்டம் தென்குடி திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோவிலில் ஈஸ்வரனுக்கும், அம்பாளுக்கும் இடையில் தனி சன்னிதியில் குரு பகவான் ராஜ குருவாக எழுந்தருளியுள்ளார்//
ReplyDeleteஇந்தக்கோயிலுக்கு நான் சமீபத்தில் சென்று வந்துள்ளேன். ஆம்; ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் இடையில் ராஜ குருவாக குருபகவான் சந்நதி உள்ளது.
இங்கு என் மூத்த சம்பந்திக்கு, ஒரு மறக்க முடியாத சம்பவம் அன்று நிகழ்ந்தது. அது ஒரு சிறிய கதை. நல்ல சுவாரஸ்யமான சம்பவம். சொன்னால் யாராலுமே நம்ப முடியாது. பிறகு சொல்கிறேன்.
Thrilling Thrilling Thrilling !
//ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
ReplyDeleteசனி பாம்பிரண்டு (பாம்பு+இரண்டு)
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே” //
கோள்களைப்பற்றிய அழகான தமிழ் பாடல் அல்லவா!
சிறுவயதில் எவ்வளவு முறை பாடியிருக்கிறோம்.
இப்போது கூட இந்த கோயிலில், நிறைய ஓதுவார்கள் [ஆண்களும் பெண்களுமாக] இதே போல வரிசையாக அமர்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். [அருள்நெறித் திருக்கூட்டத்தினர்.]
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete//ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டு (பாம்பு+இரண்டு)
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே” //
கோள்களைப்பற்றிய அழகான தமிழ் பாடல் அல்லவா!
சிறுவயதில் எவ்வளவு முறை பாடியிருக்கிறோம்.
இப்போது கூட இந்த கோயிலில், நிறைய ஓதுவார்கள் [ஆண்களும் பெண்களுமாக] இதே போல வரிசையாக அமர்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். [அருள்நெறித் திருக்கூட்டத்தினர்.]/
கோவையில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது குழுவில் இணைந்து பாடினோம்...
மிகவும் சிரமப்பட்டு எவ்வளவு அழகாக பல கோயில்களில் உள்ள குரு பகவான் தக்ஷிணாமூர்த்திகளை இன்று எங்களுக்காகவே பதிவிட்டு, பல நல்ல விளக்கங்களும் கொடுத்துள்ளீர்கள்.
ReplyDeleteReally you are so GREAT! ;)
கடுமையான தங்களின் உழைப்பைக் கண்டு வியந்து போகிறேன்.
தொடரட்டும் தங்களின் இதுபோன்ற நற்பணிகள்.
பல்லாண்டு வாழ்க !
பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteமிகவும் சிரமப்பட்டு எவ்வளவு அழகாக பல கோயில்களில் உள்ள குரு பகவான் தக்ஷிணாமூர்த்திகளை இன்று எங்களுக்காகவே பதிவிட்டு, பல நல்ல விளக்கங்களும் கொடுத்துள்ளீர்கள்.
Really you are so GREAT! ;)
கடுமையான தங்களின் உழைப்பைக் கண்டு வியந்து போகிறேன்.
தொடரட்டும் தங்களின் இதுபோன்ற நற்பணிகள்.
பல்லாண்டு வாழ்க !
பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்./
பாராட்டுக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் நிறைவான நன்றிகள் ஐயா..
குருவைத் தரிசித்தேன். கோவிலில் மார்க் போட்டு பயமுறுத்துறாங்க. குரு இருக்க பயமேன் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.
ReplyDeleteமேஷ ராசியை ஜன்ம ராசியாக உடைய நான், ஜன்மத்திலிருந்து இரண்டாம் நிலைக்குச் செல்லும்
ReplyDeleteகுருவை ஜெபிக்க குரு பகவானை தரிசனம் செய்ய ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு
அளித்துள்ளீர்கள்.
குரு பகவானே ப்ரத்யக்ஷமாகி அருள் செய்தது போன்ற ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது
சுப்பு ரத்தினம்.
அன்று உங்கள் ஆக்கம் என்ன இவ்வளவு நீட்டமாக உள்ளதே என்று வாசிக்க சிறி அலுப்பு உண்டாகிவிட்டது. ஒரு வேளை சேரம் 23.51 பின்னிரவு ஆனதோ தெரியவில்லை. மறுபடி முயற்சிப்பேன். மிக மிக நீளம் சகோதரி.....
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
aஅன்பின் இராஜ இராஜேஸ்வரி - ஆலமர் செல்வனை பற்றியும் குரு பகவானைப் பற்றியும் எழுதப்பட்ட பதிவு அருமை - எத்தன எத்தனை படங்கள் - விளக்கங்கள் - ஒரு ஆன்மீகச் சுற்றுலா சென்று வந்தது போலிருக்கிறது. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
ReplyDeleteகுரு பகவானை தரிசனம் செய்ய ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு அளித்த அருமையான பதிவுக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
ReplyDeleteகுருப்பெயர்ச்சி நடைபெறு நேரத்தில் பதிவை வெளியிட்டுள்ளீர்கள்.குருவைத் தரிசித்தேன்பதிவுக்கு பாராட்டுக்கள்..
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteஅரிய தகவல்கள்.
மிக்க நன்றி.
ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராம !
ReplyDelete3061+15+1=3077 ;)))))
ReplyDeleteபஞ்சாமிர்தம் போன்ற ஐந்து பதில்களும் மகிழ்வளிக்கின்றன.
நல்ல தகவல் . நன்றி
ReplyDeleteநல்ல தகவல் . நன்றி
ReplyDeleteஅன்புடையீர்! வணக்கம்!
ReplyDeleteஅன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (17/06/2015)
தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை, மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE