Friday, May 11, 2012

ஆனந்தமாய் அருளும் அனுமன் !




ஓம் அனுமனே போற்றி
ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி  
ஓம் ஆரோக்கியம் தருபவனே போற்றி
ஓம் ஆனந்த வடிவே போற்றி
ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி  
ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி
ஓம் சொல்லின் செல்வனே போற்றி
ஓம் வெற்றியளிப்பவனே போற்றி  
ஓம் வித்தையருள்பவனே போற்றி

ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ர ஸ்லோகம். சரீர சங்கடங்கள் அகல

தத்ரஜஸ்தவ தநோதி பாதுகே   மாநஸாந்யகடி நாநி தே ஹிநாம்!


ப்ரஸ்தரஸ்ய பதவீக தஸ்ய யத் வ்யாசகார முநிதர்ம தாரதாம்||
ஒ பாதுகையே!  உன்னுடைய தூளி, கல்லைப் பெண்ணாக (அகலிகையாக) மாற்றியது. அந்த தூளியே மனிதர்களின் மனசுகளையும் இளகச்செய்யும்.  
 


 

 

 






MOOLAI ANJANEYAR, JILEBI ALANKARAM, THANJAVUR

மூலை அனுமார் வாலில் சனீசுவர பகவான் உட்பட நவக்கிரஹங்கள் வாசம் செய்வதாக ஜதீகம். 

தொடர்ந்து 18 அமாவாசைகள் மூலை அனுமாருக்கு தேங்காய் துருவல் அபிஷேகம் செய்து வழிபட்டால், வறுமை, கடன் தொல்லைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
 
KARYA SIDDHI ANJANEYAR, BANGALORE, CHENDURA KAAPPU/ALANKARAM.




ஸ்ரீ ஆத்யந்தப்ரபு, ஆஞ்சநேய விநாயகர், CHENNAI,


திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழனன்று வெற்றிலை மாலை, துவங்கிய வேலைகளில் தடை நீங்க வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடைமாலை சாத்தலாம். 

அனுமனும் ராமனும்

அனுமன் பிறர் நலமே தன்னலம் என நினைத்தவர். சுயநலமில்லாமல் ராமனுக்கு சேவை செய்தவர். அப்படிப்பட்டவர்களுக்கு கடவுளின் அருகில் இடம் பதிவு செய்யப்படும் என்பதை உணர்த்தவே, ராமன் அனுமனை தன்னருகில் அமரச் செய்துள்ளார்.

இலக்கண பட்டதாரி

சிறந்த கல்விமானான அனுமனை, "நவ வ்யாகரண வேத்தா' என்பர். அதாவது, அவர் ஒன்பது வகையான இலக்கணத்தையும் படித்தவர். புத்தி, சக்தி இரண்டும் அவரிடம் இருந்தது.

ஒரே சிலையில் மூன்று வடிவம்

உ.பி. கான்பூரிலிருந்து 8 கி.மீ. தூரத்திலுள்ள பங்கி ஆஞ்சநேயர் கோயிலில், காலையில்அனுமன் குழந்தை வடிவிலும், மதியம் இளைஞனாகவும், மாலையில் வீர புருஷராகவும் காட்சி தருகிறார். 
வீரமங்கள ஆஞ்சநேயர்

நாகப்பட்டினத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள பொரவச்சேரி ராமபத்ர பெருமாள் கோயிலில் வீரமங்கள ஆஞ்சநேயர், வலது காலைத் தொங்கவிட்டு இடது காலை வடக்கு நோக்கி மடித்து வைத்த நிலையில் தரிசனம் தருகிறார். 

ராம பாராயண ஆஞ்சநேயர்

ஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாள் கோயில் அருகேஉள்ள நந்தவனத்தில் ராமநாமம் பாராயணம் செய்யும் கோலத்தில் அனுமன் வீற்றிருக்கிறார். அருகே ராமர், பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருகிறார். 
Jai Shri Hanuman
அனுமனை வணங்குவதன் பலன்

அனுமனை வணங்குவதால், புத்தி, பலம், புகழ், குறிக்கோளை எட்டும் திறன், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்குவன்மை ஆகியவற்றைப் பெறலாம். 
கிருஷ்ணனுக்கும் பிரியமானவர்

அனுமன் ராமனுக்கு மட்டுமல்ல! ராமாவதாரத்தை அடுத்து வந்த கிருஷ்ணாவதாரத்தில், அர்ஜுனனின் கொடியில் இருந்தவர் அவர். அவரது முன்னிலையிலேயே, கிருஷ்ணன் கீதையைப் போதித்தார்.

துஷ்ட நிக்ரஹ அனுமான்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மலைக்கோட்டை செல்லும் வழியில் உள்ள சிறு குன்றில் துஷ்ட நிக்ரஹ அனுமான் அருள்பாலிக்கிறார். வலது கைபக்தர்களின் துன்பங்களைஅறைந்து விரட்டுவது போல வடிக்கப்பட்டுள்ளது.

கெடாத வடைமாலை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலுள்ள வீர அழகர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் அணிவிக்கும் வடைமாலை நீண்டநாள் கெடுவதில்லை.
வாயைப் பொத்திய ஆஞ்சநேயர்

ராமனின் முன்பு தலையை குனிந்து, வாய் பொத்தி, மிகுந்த மரியாதையுடன் உள்ள அனுமன் சிலை கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் ராமசாமி கோயிலில் உள்ளது.

ராமநாம மகிமை

ராம நாமம் சொன்னால் பாவம் தீரும். மரணத்தின் விளிம்பிற்கு செல்பவர்கள் நலன் பெறுவார்கள். அனுமன் ஓயாமல் ராமநாமம் சொன்னதால் தான், கடலைத் தாண்ட முடிந்தது. முடியாததையும் முடித்து வைப்பது ராமநாமம். 

மனோ – ஜவம் மாருத – துல்ய – வேகம் 
ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம் |
வாதாத்மஜம் வாநர – யூத – முக்யம்
ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி ||

ஸ்ரீதியானஆஞ்சநேயர், குண்டூர்.. ஆந்திரா

நாமக்கல் ஹனுமான் சந்தன காப்பு/சந்தன அலங்காரம், 

அனுமனுக்குரிய பல மந்திரங்கள் டாகினி சாகினி ஆகியவர்களை அவர் அழிப்பதைக் குறிக்கும். 'மாருதி ராக்ஷஸாந்தகம்' என்றும் அவர் குறிப்பிடப்படுகிறார்.
                   
எதிரிகளை அழிப்பதற்கு அவருடைய வாலைத் தோத்திரம் செய்யும் மரபு உண்டு...அந்த வாலால்தான் இலங்கையைக் கொளுத்தி அழித்தார்.
ராவணனுக்கும் மேலான ஆசனமாக உயர்த்திவைத்ததும் வால்தான்.
வாலால் கோட்டையேகூட கட்டியிருந்தார்.
                
பிரமாஸ்த்திரத்தையே ஸ்தம்பனம் செய்த ஸ்ரீருத்ர மூர்த்தி' ஆபதுத்தாரக ஹனுமத் ஸ்தோத்ரம் -விபீஷணனால் துதிக்கப்பட்டது... 

அஸ்யஸ்ரீ ஆபதுத்தாரக ஹனுமத் ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய ;  விபீஷண ரிஷி: ஆபதுத்தாரக ஹனுமான் தேவதா ஆபதுத்தாரக ஹனுமத் ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே வினியோக:
த்யானம்
வாமே கரே வைரிபிதம் வஹந்தம சைலம் பரே இச்ருங்கல ஹாரிடங்கம்
 ததாந மச்சச்சவி யக்ஞ ஸத்ரம பஜே ஜ்வலத் குண்டலம் ஆஞ்சநேயம்
ஸபீத கௌபீந முதஞ்சிதாங்குளீம் ஸமுஜ்ஜ்வலந் மௌஞ்ஜ் யஜ்ஞோபவீதினம்
ஸகுண்டலம் லம்பசிகா ஸமாவ்ருதம் தம் ஆஞ்சனேயம் சரணம் ப்ரபத்யே.
ஆபந்நாகில லோகார்த்தி ஹாரிணே ஸ்ரீஹனூமதே
அகஸ்மா தாகதோத்பாத நாசனாய நமோஸ்துதே
ஸீதா வியுக்த ஸ்ரீராம சோகதுக்க பயாபஹ:
தாபத்ரிதய ஸம்ஹாரிந் ஆஞ்சநேய நமோஸ்துதே    
ஆதிவ்யாதி மஹாமாரீ, க்ரஹபீடாபஹாரிணே
ப்ராணாபஹர்த்ரே தைத்யானாம், ராமப்ராணாத்மனே நம:
ஸம்ஸார ஸாகராவர்த்த, கர்தவ்ய ப்ராந்த சேதஸாம்
சரணாகத மர்த்யானாம், சரண்யாய நமோஸ்துதே
ராஜத்வாரி பிலத்வாரி, ப்ரவேசே பூதஸங்குலே
கஜஸிம்ஹ மஹாவ்யாக்ர, சோரபீஷண காநநே
சரணாய சரண்யாய, வாதாத்மஜ நமோஸ்துதே
நம: ப்லவங்க ஸைன்யானாம் ப்ராண பூதாத்மனே நம:
ராமேஷ்டம் கருணாபூர்ணம், ஹநூமந்தம் பயாபஹம்
சத்ரு நாசகரம் பீமம், ஸர்வாபீஷ்ட பலப்ரதம்
ப்ரதோஷே வா ப்ரபாதே வா, யே ஸ்மரந்த் யஞ்ஜநாஸ¤தம்
அர்த்தஸித்திம் யச: கீர்த்திம் ப்ராப்நுவந்தி ந ஸம்சய:
காராக்ருஹே ப்ரயாணே ச ஸங்க்ராமே தேசவிப்லவே
யே ஸ்மரந்தி ஹநூமந்தம் தேஷாம் நாஸ்தி விபத் ததா
வஜ்ரதேஹாய காலாக்நி ருத்ராயாமித தேஜஸே
ப்ரஹ்மாஸ்த்ர ஸ்தம்பநாயாஸ்மை நம: ஸ்ரீருத்ரமூர்த்தயே
ஜப்த்வா ஸ்தோத்ரமிதம் மந்த்ரம் ப்ரதிவாரம் படேந்நர:
ராஜஸ்தாநே ஸபாஸ்தாநே ப்ராப்தவாதே ஜபேத்த்ருவம்
விபீஷண க்ருதம் ஸ்தோத்ரம் ய:படேத் ப்ரயதோ நர:
ஸர்வாபத்ப்யோ விமுச்யேத நாத்ர கார்யா விசாரணா
மர்க்கடேச மஹோத்ஸாஹ ஸர்வசோக விநாசக
சத்ரூந் ஸம்ஹார, மாம் ரக்ஷ இயம் தாஸம்ஸ்ச தேஹி மே
இதி விபீஷண க்ருத ஆபத்துத்தாரக ஹநூமத் ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் 

32 comments:

  1. பல இடங்களிலும் உள்ள ஆஞ்சநேயரின் படங்கள் அருமையாக இருக்கிறன.

    ReplyDelete
  2. jai sriram namaskaram amma vayuthoodhan perumaigalai varnikka mudiyamal vayadaithu mei silirthu nirkiren .

    ReplyDelete
  3. ஆனந்தமாய் அருளும் அனுமனைக் கண்டோம். பேரானந்தம் கொண்டோம்! ;)))))

    ReplyDelete
  4. ஜெய ஹனுமான் ஜெயஹனுமான்
    மாருதிராயா ஜெயஹனுமான்
    அஞ்சனை புத்ரா ஜெயஹனுமான்
    ஸ்ரீஆஞ்சனேயா ஜெயஹனுமான்
    வாயுகுமாரா ஜெயஹனுமான்
    ஸ்ரீராமதூதா ஜெயஹனுமான்
    ஹனுமனை பற்றிய அனைத்து பதிவுகளும் அருமை..

    ReplyDelete
  5. அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி
    அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
    அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
    அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான்
    -கம்பராமாயணம்

    ReplyDelete
  6. //அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்குவன்மை ஆகியவற்றைப் பெறலாம்//

    அனுமனை வணங்குவதற்கு முன்னால் தங்களின் [அனும்னைப்பற்றிய] பல்வேறு பதிவுகளைப்
    படித்துவிட்டு வணங்கினால் மேலே சொன்னவற்றையெல்லாம் ஒருசேர மிகச்சுலபமாக சீக்கரமாகவே பெற்றுவிடலாம்.

    ReplyDelete
  7. ////ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் அணிவிக்கும் வடைமாலை நீண்டநாள் கெடுவதில்லை//

    அது எப்படி கெடும்! சூப்பரான சுவையான பிரஸாத வடையல்லவோ !!
    அதுவும் தங்களின் பதிவுகள் போலவே என்றும் ருசிக்கவே செய்யும் !!!

    ReplyDelete
  8. //முடியாததையும் முடித்து வைப்பது ராமநாமம்//

    மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள். சந்தோஷம் ;)))))

    ReplyDelete
  9. விபீஷணனால் துதிக்கப்பட்ட ஆபதுத்தாரக ஹனுமத் ஸ்தோத்ரம்
    மூவதுமாகக் கொடுத்துள்ளது, தனிச்சிறப்பு தான்.

    ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!

    ReplyDelete
  10. சிந்தையை கவரும் மிகச்சிறப்பான படங்களுடன் பதிவிட்டுள்ள இந்தப்பதிவு
    அனுமனின் வாலில் கட்டப்பட்டுள்ள மணி போல ...

    அதுவும் சாதாரண மணி அல்ல ....

    ஜகமணியாக ஒலிப்பதைக்கண்டு மகிழ முடிகிறது. ;)))))

    ReplyDelete
  11. 2
    ஸ்ரீராமஜயம்

    ஹனுமனைப்பற்றியே வெவ்வேறு தலைப்புகளில் ஒரு 108 அல்லது 1008 பதிவுகளாவ்து தந்துவிட வேண்டும் என்று சங்கல்ப்பம் கொண்டுள்ளீர்கள் என் நினைக்கத்தோன்றுகிறது.

    எத்தனை தடவைப்படித்தாலும் ஸ்ரீ ராமசரித்திரம் அலுக்கவே அலுக்காது.

    அதுபோலவே தங்களின் ஸ்ரீ ஹனுமத் சரித்திரப் பதிவுகளும்.

    நாளை ஸ்திரவாரத்திற்கு ஒரு நான் முன்பாகவே ஸ்ரீ ஹனுமன் தரிஸனம்.

    வெற்றிகளை தரும்
    ஹனுமனைப் பற்றிய இன்றைய பதிவு, வெற்றிகரமாக சில சுப நிகழ்வுகள், குடும்பத்தில் இன்று நிறைவுற்றுள்ள நிலையில், என்னால் படிக்கவும் பார்க்கவும் முடிந்ததில் மனம் மகிழ்ந்து போனது.

    தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
    ;)))))

    vgk

    ReplyDelete
  12. ஆந்திரா, தமிழ்நாடு ஆஞ்ச்நேயர் அருளை பெற்றேஏன். சந்தன காப்பு, வடை மாலை, வெற்றிலை மாலையுடன் கூடிய வாயு பகவானின் அருள் பெற்றேன். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  13. திரு.அனந்தபத்மநாபாச்சார் அவர்களின் சுந்தரகாண்ட பாராயண CD 8 நாட்களாக வீட்டில் கேட்டு இன்று பட்டாபிஷேக பாராயணம் முடிந்து நைவேத்யம் வைத்து பூஜை முடிந்து பார்க்கும்போது தங்களின் இப்பதிவு வேளியாகி இருந்தது. தங்களின் பதிவு வழியாக ஆஞ்சனேயர் எங்கள் இல்லம் வருகை தர உதவியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. படங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளன.

    ReplyDelete
  14. சங்க சக்ரத்துடன் கூடிய அழகான பாதுகையும், சரீர சங்கடங்கள் அகல் ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ர நாம ஸ்லோகமும்.....

    //ஒ பாதுகையே! உன்னுடைய தூளி, கல்லைப் பெண்ணாக (அகலிகையாக) மாற்றியது.
    அந்த தூளியே மனிதர்களின் மனசுகளையும் இளகச்செய்யும்//

    சூப்பர்! ;)))))

    ReplyDelete
  15. தொடர்ந்து 18 அமாவாசைகள் மூலை அனுமாருக்கு தேங்காய் துருவல் அபிஷேகம் செய்து வழிபட்டால்,
    வறுமை, கடன் தொல்லைகள் முதலியன யாவும் சுத்தமாக நம்மிடைருந்து துருவப்பட்டு விடுமா?

    ஆச்சர்யம் தான்!

    ReplyDelete
  16. வாலில் வாசம் செய்யும் சனி உள்பட அனைத்து நவக்கிரஹங்களும் நம்மிடம் வாலாட்டாதோ?

    மிக நல்ல ஆறுதல் அளிக்கும் விஷயமாகச் சொல்லியுள்ளீர்களே !!

    அருமை அருமை. ;)))))

    ReplyDelete
  17. ஸ்ரீ ஆத்யந்தப்பிரபுவாக, நமக்கு மிகவும் பிடித்த தொந்திப் பிள்ளையாரையும், ஸ்
    ரீ ஹனுமனையும்
    [அர்தநாரீஸ்வரர் போல] ஆளுக்குப்பாதியாகப் பிச்சு [பிய்த்து] பிச்சு உதறி விட்டீர்களே ! சபாஷ்.

    ஆரம்பத்தில் நாம் எதற்கும் பிள்ளையாரை தான் வணங்குவோம்.
    காரியஸித்தி ஏற்பட்டதும் ஸ்ரீ ஹனுமனை வணங்கி முடிப்போம்.

    இதை வைத்துத்தான்

    “பிள்ளையார் பிடிக்கப்போய் அது குரங்காய் முடிந்தது”

    என்று வேடிக்கையாகச் சொல்லுவார்கள்.

    எதற்கும் பிள்ளையாரின் கால்களை நாம் கெட்டியாக பிடிக்க, இறுதியில்
    வெற்றி, ஹனுமனின் வாலால் சுலபமாக நிறைவேற்றப்படும்

    என்பதையே அவ்வாறு கூறி வருகிறார்கள்.

    அது போன்ற சொல்வழக்குக்கு இந்தப்படம் மிகவும் பொருத்தமாக உள்ளது.

    பூர்ணம் - ஸம்பூர்ணம் -
    ஸர்வத்ர ஸம்பூர்ணம்

    படத்துடன் விளக்கம் காட்டியுள்ளது ......

    மகிழ்ச்சி. ;)))))

    ReplyDelete
  18. //சிறந்த கல்விமானான அனுமனை,
    "நவ வ்யாகரண வேத்தா” என்பர்//

    ஆமாம்.

    ஸ்ரீ ஹனுமான் அனைத்து வேத சாஸ்திரங்களையும்
    அறிந்த புத்திமானும்
    பலவானும்
    பெளவ்யவானும்
    ஆன்வர் என்பார்கள்.

    ஜோர் ஜோர் ! ;)))))

    ReplyDelete
  19. //முடியாததையும் முடித்து வைப்பது ராமநாமம்//

    மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள். சந்தோஷம் ;)))))

    ReplyDelete
  20. விபீஷணனால் துதிக்கப்பட்ட ஆபதுத்தாரக ஹனுமத் ஸ்தோத்ரம்
    மூவதுமாகக் கொடுத்துள்ளது, தனிச்சிறப்பு தான்.

    ReplyDelete
  21. hanumanai patri yethanai padhivugal avarin aasi petra ungalai namaskarikkiren amma

    ReplyDelete
  22. ஒரே சிலையில் மூன்று வடிவமா!! விதவிதமான அலங்காரத்தில் அனுமனைத் தரிசித்தேன்.

    ReplyDelete
  23. சனிக்கிழமை அன்று எத்தனை எத்தனை அஞ்சநேயர்களின் தரிசனம்...
    தகவல்கள் சூப்பர்...
    நிறைவான பதிவு...நன்றி.

    ReplyDelete
  24. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //விபீஷணனால் துதிக்கப்பட்ட ஆபதுத்தாரக ஹனுமத் ஸ்தோத்ரம்
    மூவதுமாகக் கொடுத்துள்ளது, தனிச்சிறப்பு தான்.//

    ”மூவதுமாக” என தவறாக டைப் அடித்துள்ளேன். Sorry.

    அதை ”முழுவதுமாக” என மாற்றிப் படிக்க வேண்டுகிறேன்.

    அதுபோலவே, இதுவும் மற்றொரு பின்னூட்டமும், ஒருமுறைக்கு இருமுறையாக ஏதோவொரு அவசரத்திலோ, நேற்றைய அலைச்சல்களால் ஏற்பட்ட களைப்பிலோ, REPEAT ஆகியுள்ளன.

    சரியாகத் திட்டமிட்டு கருத்துக்கள் கூறமுடியாமல் போய்விட்டது.

    அதற்கும் வெட்கப்படுகிறேன்.
    Please adjust.

    ===============

    இதுபோன்ற அழகான அசத்தலான படங்களுடன் கூடிய ஸ்ரீஹனுமன் பற்றிய பதிவுகள் அவ்வப்போது தொடரட்டும்.

    சூடான சுவையான வடைகள், ஜாங்கிரிகள், துளஸி, வெற்றிலை [வெற்றி] போன்ற பிரஸாதங்கள் கிடைக்கட்டும்.

    ஜெய் ஹனுமான்!

    ReplyDelete
  25. Usha Srikumar has left a new comment on your post "ஆனந்தமாய் அருளும் அனுமன் !":

    சனிக்கிழமை அன்று எத்தனை எத்தனை அஞ்சநேயர்களின் தரிசனம்...
    தகவல்கள் சூப்பர்...
    நிறைவான பதிவு...நன்றி. /

    அருமையான கருத்துரைக்கு
    நிறைவான நன்றிகள் !

    ReplyDelete
  26. மிகவும் அற்புதமான காட்சி இராஜராஜேஸ்வரி அக்கா. ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமி தரிசனம் பெற்றேன். நன்றி அக்கா.

    ReplyDelete
  27. சென்னை நங்க நல்லூர் ராஜ ராஜேசுவரி அம்மன் மற்றும் ஆஞ்ச நேயர் ஆலயம் சென்று தரிசித்து வரும் போது, அன்னையைப் பற்றி எழுதிய அடுத்த வாரம் என் இனிய சகோதரி அன்ஞ்சனையின் புதல்வனும் என் இனிய ராமனை உள்ளில் வைத்து சதா பூசிக்கும் அனுமனை பற்றி அழகு தமிழில் எழுதுவார்கள் என நினைத்தேன். என் எண்ணப்படியே அருமையான பதிவினைத் தந்து உள்ளத்தினை கொள்ளை கொண்ட உங்களுக்கு நன்றி....
    ஓம் ராம்...ஓம் ராம்...ஓம் ராம்!

    ReplyDelete
  28. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete