Tuesday, May 8, 2012

சிறப்பான சித்திரைத் தேரோட்டம்



படிமம்:Scattered Temple.jpg
தேர்த்திருவிழா ஐயனின் ஐந்தொழில்களில் அழித்தல் தொழிலை குறிக்கின்றது. 

அசுரர்களை அழித்து தேவர்களையும் மற்ற ஜீவராசிகளையும் காப்பதைக் குறிக்கின்றது. 

ஆகவே தான் திருத்தேரில் எழுந்தருளி திரு உலா வரும் போது கையில் பினாகம் என்னும் அவருடைய வில்லை ஏந்தியவராக அலங்காரம் செய்வது மரபு.

யாராலும் அழிக்க முடியாத தங்க வெள்ளி இரும்பு பறக்கும் கோட்டைகளை அமைத்து கொண்டு மிரட்டிக் கொண்டு இருந்த திரிபுர அசுரர்களை தன் சிரிப்பினாலேயே எரித்து கொன்ற திருபுராரி, காரணீஸ்வரப் பெருமான் அன்னை சொர்ணாம்பிகையுடனும், எழில் முருகனுடனும், சண்டிகேஸ்வரருடன் மாட வீதிகளில் உலா வரும் அழகுத்திருக்கோலம் ...



அழகு குமரனின் அருட்கோலம்

பொன்னேரியில் சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் நந்தி வாகனத்தில் காட்சியளிக்கும் ஸ்ரீஅகத்தீஸ்வரர்.


கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி சுவாமி பெருமாளை ஏழு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

சித்திரை தேரோட்டம் தமிழகத்தில் உலாவரும் மூன்று முக்கிய தேர்களில் ஒன்றாகவும், திருவாரூர் ஆழித்தேருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேருக்கும் இணையாக புகழ்பெற்றதாகும்.

இப்பெரிய மரத்தேரின் எடை 500 டன் எடை ஆகும். தேரின் அடிப்பாகம் 25 அடியாகவும், மேல்தட்டு 35 அடியாகவும், உயரம் 30அடியாகவும் உள்ளது. 
குடந்தை ஸ்ரீ சாரங்கபாணி கோயிலில் ரதபந்தன கவிதை

தேனி அருகிலுள்ள வீரபாண்டியிலுள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலிலும் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. 

சித்திரை மாதம் கடைசி செவ்வாய்க் கிழமை தொடங்கி 
மறு செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து எட்டு நாட்கள் நடைபெறுகிறது.

இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் போது மட்டும் 24 மணி நேரமும் கோயிலில் வழிபாடு நடத்தப்படுகிறது. 

சித்திரைத் திருவிழாவின் போது அம்மன் அன்ன வாகனம், சிம்ம வாகனம், காமதேனு வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம் போன்றவற்றில் பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார். 

சித்திரைத் திருவிழாவில் வெள்ளிக் கிழமையன்று பூவால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் ஊர்வலமாகக் கொண்டு வரப்படுகிறார். அன்று இதைக் காண அதிக அளவில் மக்கள் கூடுகிறார்கள்.

பாண்டிய மன்னனுக்குக் கண் பார்வை தந்த இந்தக் கோயிலில் வணங்கிச் செல்பவர்களுக்கு அம்மை மற்றும் கோடைக்கால அனைத்து வெப்ப நோய்களும் நீங்கி விடும் என்கின்றனர்.

கோயிலின் தீர்த்தமாக கோயிலுக்கு அருகே ஓடும் 
முல்லை நதியின் நீர் பயன்படுத்தப்படுகிறது.

கோயில் கோபுரத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகளான மகாத்மா காந்தி, கஸ்தூரிபா காந்தி, ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோரது உருவச் சிலைகள் கோபுரத்தில் இடம் பெற்றுள்ளனர்.
படிமம்:வீரபாண்டி தேர்.jpg

வீரபாண்டி கோட்டையிலே
மின்னலிக்கும் வேளையிலே
ஊரும் ஆறும் தூங்கும் போது
பூவும் நிலவும் சாயும் போது
கொலுசு சத்தம் மனச திருடியதே

மதுரை சித்திரை திருவிழா ...


மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் 
சித்திரைத் திருவிழா திருத்தேர்கள். 




சித்திரைத் தேரோட்டம் - சென்னை ..திருவல்லிக்கேணியில் உள்ள செண்பகாம்பிகை உடனுறை திருவேட்டீஸ்வரர்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா எனப்படும் விருப்பன் திருநாள்


”திருநெல்வேலியான் தேர் பாரான் 
திருச்செந்தூரான் கடலாடான்”என்கிறது சொலவடை.

சொலவடைன்னா சும்மாவா,
”சொந்தம் பொய்த்தாலும் சொலவடை பொய்க்காது ?

தேரை இழுத்து தெருவில விட்ட மாதிரி......ஊர் கூடி தேரிழுப்பார்கள் --
ஊர் கூடினால் தேர் ஓடும் என சமுதாய ஒற்றுமைக்கு அச்சாணி தேர்த்திருவிழா..

திருநெல்வேலித் தேரோட்டம் பார்த்த பின் வேறு ஊரின் 
திருவிழாக்கள் ரசிக்காது..

தூரத்தில் நின்று பார்க்கும் போது தேர், அதன் அலங்காரத் தட்டுக்கள், .கொடி, பிரம்பு வளையங்களின் மேல் சுற்றித் தைத்த துணிக் குழல்கள் (குட மாலைகள்) எல்லாம் மெலிதாக அசைய, தலைகள் மேலாக தேர் ஆடி ஆடி வரும்போது ”தேரு வந்தது போலிருந்தது நீ வந்த போது” என்று பாடியது சரிதான் என்று தோன்றும்
அவினாசி தேர் திருவிழா. தமிழ்நாட்டிலேயே இரண்டாவது பெரிய தேர்.

தேர் அமைப்பு. (அருணகிரிநாதர் நூல்கள்)

30 comments:

  1. சிறப்பான சித்திரைத் தேரோட்டம் கொள்ளை அழகு தான்.


    தேர் மீண்டும் சற்று மெதுவாகவே வரும்.

    ReplyDelete
  2. தேர் கோலங்கள்
    [ரத ஸப்தமிக் கோலங்கள்]
    இரண்டும் நல்ல அழகு!

    ReplyDelete
  3. கடைசி படத்தில், அருணகிரிநாதர் நூல்களிலிருந்து எடுத்துக் கொடுக்கப்பட்டுள்ள தேர் அமைப்பும், நடுவில் ம்யிலார் + சேவலாருடன் காட்டப்பட்டுள்ள முருகனாரும் தனிச்சிறப்பு, தான்.

    ReplyDelete
  4. எவ்ளோ தேர்கள் ஒவ்வொன்றையும் பற்றிய எவ்ளோ விபரங்கள் .......
    அசத்தல் தான் அந்த அசைந்தாடி வரும் தேர்கள் போலவே!!

    ReplyDelete
  5. வீரபாண்டிக் கோட்டையிலே ...............
    கொலுசு ச்த்தம் மனச திருடியதே! ;)

    விட்டால் எதையாவது இடையில் நுழைத்து விடும் சாமர்த்தியம் .....
    அதி புத்திசாலித்தனம் ..... அழகோ அழகு தான்.

    ReplyDelete
  6. ”சொந்தம் பொய்த்தாலும் சொல்வடை பொய்க்காது?” என்றே ஒரு சொல்வடையா?

    நல்ல சூப்பரான வடையாகவே உள்ளது.

    ReplyDelete
  7. தேரை இழுத்துத் தெருவில் விட்ட மாதிரி...

    ஊர் கூடி தேரிழுப்பார்கள்...

    ஊர் கூடினால் தேர் ஓடும்

    சமுதாய ஒற்றுமைக்கு அச்சாணி தேர்த்திருவிழா!

    அச்சா..... பஹூத் அச்சா !!! ;)

    ReplyDelete
  8. ”தேரு வந்தது போலிருந்தது நீ வந்த போது”

    இருக்கும் இருக்கும்.

    நிறைமாத கர்ப்பிணிப்பெண்கள் தங்கள் வயிற்றையும் இடுப்பையும் பிடித்துக்கொண்டு, அசைந்து ஆடிக்கொண்டு, ஆஸ்பத்தரி பீரியாடிகல் செக்-அப் க்கு கும்பலாக வருவார்கள்.

    அதுசமயம் நான் நினைத்துக்கொள்வேன்:

    எவ்வளவு தேர்களை ஒரே இடத்தில் பார்க்க முடிகிறது என்று.

    இந்தத் தங்களின் பதிவும் அதைத்தான் எனக்கு ஞாபகப்படுத்துகிறது.

    ReplyDelete
  9. சித்திரை மாதத்தில் எத்தனைப் பதிவுகள்! அடேங்கப்பா!

    தேர் அப்படியும் இப்படியும் மிக மெதுவாக நகர்ந்து நாளைக்கு 150 ஆவது சுற்றை முடிக்க உள்ளதே!!

    சும்மாவா கொ.எ.கு. அல்லவா!!!

    அட்வான்ஸ் வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. நேரில் காண்பது போன்ற அற்புதமான புகைப் படங்கள்
    அற்புதமான விளக்கங்க்கள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. அருமை அம்மா. அருமையான பதிவு, அருணகிரிநாதர் கொடத்த தேர் அமைப்புப் புகைப்படம் புதிய தகவல். நெல்லை தான் எனக்கு என்றாலும் இதுவரை நெல்லை தேரோட்டத்தைப் பார்த்தது இல்லை. ஆனால் என் கலூரி இருக்கும் ஆழ்வார்குறிச்சியில் சிவசைலனாதர் பரமகல்யாணி அம்மன் தேரை கல்லூரி மாணவர்கள் நாங்கள் தான் வடம் பிடித்து இழுப்போம் . அதை நினைவூட்டியது உங்கள் பதிவு

    ReplyDelete
  12. "கல்யாணத்திற்கு ஜவுளி வாங்குதல்"

    இவ்ளோ நாள் கழிச்சு இந்தப் பதிவப் பாத்து கமென்ட் போட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  13. வை.கோபாலகிருஷ்ணன் said...
    சிறப்பான சித்திரைத் தேரோட்டம் கொள்ளை அழகு தான்./

    கொள்ளை அழகான கருத்துரைகளால் தேரை சிறப்பாக அலங்கரித்து அருமையாக அசைந்தாடி நிலைக்குக் கொண்டுவந்த பெருமை தங்களையே சாரும்..

    கருத்துரைகள் அனைத்துக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  14. Ramani said...
    நேரில் காண்பது போன்ற அற்புதமான புகைப் படங்கள்
    அற்புதமான விளக்கங்க்கள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள் //

    அற்புதமான கருத்துரைக்கு நிறைவான இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  15. பழனி.கந்தசாமி said...
    "கல்யாணத்திற்கு ஜவுளி வாங்குதல்"

    இவ்ளோ நாள் கழிச்சு இந்தப் பதிவப் பாத்து கமென்ட் போட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்./

    பதிவுலகத்திற்கு வரும் முன் கொஞ்சும் கோவைத்தமிழில் எழுதிய தங்களின் பதிவுகளைப் படித்து திருமணச்சடங்குகளின் அர்த்தங்களை உணர வாய்ப்பளித்த தங்களுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    பழமையின் சிறப்பை எடுத்துரைக்கும் சாசனங்கள் அவை ....

    ReplyDelete
  16. சீனு said...
    அருமை அம்மா. அருமையான பதிவு, அருணகிரிநாதர் கொடத்த தேர் அமைப்புப் புகைப்படம் புதிய தகவல். நெல்லை தான் எனக்கு என்றாலும் இதுவரை நெல்லை தேரோட்டத்தைப் பார்த்தது இல்லை. ஆனால் என் கலூரி இருக்கும் ஆழ்வார்குறிச்சியில் சிவசைலனாதர் பரமகல்யாணி அம்மன் தேரை கல்லூரி மாணவர்கள் நாங்கள் தான் வடம் பிடித்து இழுப்போம் . அதை நினைவூட்டியது உங்கள் பதிவு /

    மலரும் நினைவுகளாலான இனிய கருத்துரைகளுக்கு நிறைவான நன்றிகள்..

    ReplyDelete
  17. சீனு said...
    ..//நெல்லை தான் எனக்கு என்றாலும் இதுவரை நெல்லை தேரோட்டத்தைப் பார்த்தது இல்லை //

    அதனால்தான் சொலவடை அமைத்திருப்பார்களோ!!!.

    ReplyDelete
  18. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ”சொந்தம் பொய்த்தாலும் சொல்வடை பொய்க்காது?” என்றே ஒரு சொல்வடையா?

    நல்ல சூப்பரான வடையாகவே உள்ளது.//

    அந்த சொலவடையையும் திருநெல்வேலிக்காரர் ஒருத்தர் நிரூபித்திருக்கிறார் பாருங்கள் .. அதுதான் ஆச்சரியம்...

    ReplyDelete
  19. கோபுரத்தில் விடுதலை போராட்ட தலைவர்கள் சுவாரசியமான தகவல். தமிழகத்தில் பெரிய தேர் தெரியும், இரண்டாவ்து பெரிய தேரை உங்களால் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  20. சிறப்பான சித்திரை தேரோட்டம். தலைப்பில் சொன்ன மாதிரியே பதிவு மிகச் சிறப்பாக இருக்கு. படங்கள் மனைதை கொள்ளைகொள்கிறது.

    ReplyDelete
  21. சிறப்பான பதிவு ! நன்றி !

    ReplyDelete
  22. 2012 ஆம் வருடம் ஆரம்பித்து
    130 நாட்களில் 150 பதிவுகள்.

    அடடா, ஒவ்வொரு பதிவும் அப்படியே கண்களில் ஒற்றிக் கொள்ளும்படியான, தெய்வீக மணம் கமழும் பதிவுகள் அல்லவா!

    அபார சாதனையாளராகிய உங்களை அந்த அம்பாள் போலவே நினைத்து மனமுருகி வணங்கி வாழ்த்தி மகிழ்கின்றோம்.

    தொடரட்டும் தங்களின் இதுபோன்ற
    முத்திரைப்பதிவுகள்.

    பிரியமுள்ள
    வை. கோபாலகிருஷ்ணன்

    ReplyDelete
  23. நேரில் தேர் தரிசனம் செய்ததைபோல் அழகான படங்கள்.தேர் கோலம் நன்றாக உள்ளது..கோல நோட்டில் கோலத்தை போட்டு வைத்துள்ளேன்.நன்றி.

    ReplyDelete
  24. சிறப்பான சித்திரை தேர் திருவிழா கண்டது மிகவும் மகிழ்ச்சி .

    தமிழ்நாட்டில் உள்ள தேர்கள் எல்லாவற்றையும் பார்த்த திருப்தி எனக்கு கிடைத்தது .மிகவும் அருமை அக்கா .
    என்னுடைய வலைப்பூவை சற்று திறந்து பார்க்கவும். எனது வலைப்பூவின் உறவினராக வாருங்கள் அக்கா. நம் நட்பு மீண்டும் மலரட்டும்.

    ReplyDelete
  25. சித்திரைத் தேரோட்டம் ஒவ்வொன்றும் பார்க்க மனத்தை நிறைக்கின்றது.

    ReplyDelete
  26. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  27. 114. பத்மநாப ஹரி கோவிந்தா

    ReplyDelete
  28. 2971+11+1=2983 ;))

    மகிழ்ச்சியுடன் கொடுத்துள்ள இரண்டு பதிலகளுக்கு நன்றிகள்.

    ReplyDelete