தாரமங்கலம் கைலாசநாதர் திருக்கோயிலை
கெட்டி முதலி அரச பரம்பரையினர் விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர்.
பிற்காலத்தில் மும்முடிச் சோழனும், சீயாழி மன்னனும் இந்தக் கோயிலைப் புதுப்பித்து திருவிழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர். வணங்காமுடி மன்னர் காலத்தில்தான், இந்தக் கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
கெட்டி முதலி அரச பரம்பரையினர் விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர்.
பிற்காலத்தில் மும்முடிச் சோழனும், சீயாழி மன்னனும் இந்தக் கோயிலைப் புதுப்பித்து திருவிழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர். வணங்காமுடி மன்னர் காலத்தில்தான், இந்தக் கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
கோயிலைச் சுற்றி மிகப்பெரிய கல்சுவர் எழுப்பப்பட்டுள்ளது.
ஆலயத்தின் ராஜகோபுரம் 90 அடி உயரத்தில் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. ஒரு பெரிய தேரைக் குதிரைகளும் யானைகளும் இழுத்துச் செல்வதைப் போன்ற தோற்றத்தில் இந்தக் கோபுரம்
அமைந்துள்ளது.
கோவில் தரிசித்து திரும்புபவர்கள் வாழ்வில் ஏற்றம் உண்டு என்பதற்கு கட்டியம் கூறுவது போல் படிகள் அமைத்திருக்கிறார்கள்.
கோவில் பிரதான வாயில் பிரகாரமே மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவ பந்தல் போன்று செதுக்கப்பட்டுள்ளது அற்புதம்.
தாருகா வனத்தில் அமர குந்தி என்ற ஊருக்கு கெட்டி முதலியார் என்பவர் அரசாண்டு வந்த காலத்தில் பசுக்கள் தினந்தோறும் மேய்ச்சலுக்கு செல்கையில் ஒரு பசு மட்டும் குறிப்பிட்ட இடம் ஒன்றில் பால் சொரிகிறது என்ற தகவல் வந்தது.
தான் கேள்விப்பட்ட தகவல்படி அந்த பசு குறிப்பிட்ட இடத்தில் பால் சுரந்தது.அதை கண்டு பரவசப்பட்ட கெட்டி முதலியார், சுவாமி அங்கு எழுந்தருள்வதாக உணர்ந்த அவர் அங்கு வழிபாடு செய்தார்.
அதன்பின்னர் பல ஆண்டுகள் கழித்து மகுடேறி மகுடசூடாவடி மன்னன் மணிமன்னன் வணங்கினும் வணங்காமுடி இந்த கோயிலைக் கட்டியதாக வரலாறு கூறுகிறது.
யாழி வாயில் இருக்கும் உருண்டை 360 டிகிரி சுழலும் வண்ணம் வெளியே வராதவாறு அமைக்கப்பட்டுள்ளது.
ஊர்த்துவ நடராஜருக்கு அருகே ஊடி நிற்கும் சிவகாமியை பெருமான் தாடையை பிடித்துக் கொஞ்சி சமாதானம் செய்துறார். அதனருகே ஊடல் தணிந்த தேவி புன்னகையுடன் தலை குனிந்து நிற்கிறாள். அதனருகே உள்ள அஹோர வீரபத்ரன் அக்னி வீரபத்ரர் சிலைகளும் உக்கிரமும் நுட்பமும் கொண்டவை. தனி சன்னிதியாக பின்பக்கம் நாய் நிற்கும் காலபைரவர் சிலை.
மேற்கு பார்த்த சிவன் கோயில்...
மாசி 9,10,11 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நந்தியின் கொம்பு வழியே சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை போல் விழுகிறது...
மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் ரதி தெரியும்படியும்
அமைந்த சிற்பம் சிறப்பானது.
தாரமங்கலம் கோவிலின் உலகப்பிரசித்தி பெற்ற ரதி. ரதி அருகிலிருந்து பார்க்கையில் மன்மதன் கல்திரையால் மறைக்கப்பட்டுள்ளார்
அமைந்த சிற்பம் சிறப்பானது.
தாரமங்கலம் கோவிலின் உலகப்பிரசித்தி பெற்ற ரதி. ரதி அருகிலிருந்து பார்க்கையில் மன்மதன் கல்திரையால் மறைக்கப்பட்டுள்ளார்
ரதியின் கூந்தல் ஐந்து பிரி பின்னல், சூடிய தாழம்பூ
மன்மதன். கரும்பு வில்லின் நேர்த்தி. மன்மதன் அருகிலிருந்து பார்க்கையில் பெருமான் தெரிவார் ஆனால் பெருமானிடத்திலிந்து மன்மதன் தெரிவதில்லை மன்மதன் பெருமான் பார்வையை அஞ்சுவதால்.......
வாலி சுக்ரீவ போரில் ராமன் மறைந்து நின்று வாலியை வதம் சிலையும் அழகானது.
ராமனிடமிருந்து வாலி தெரிகிறார், வாலியிடமிருந்து ராமர் தெரியவில்லை. அந்த அழகாக காட்சிப்படுத்தி வியக்கச் செய்திருக்கிறார் சிற்பி.
வாலி மனைவி பெயர் தாரை....! என்கிற பெயருக்கும் தாரமங்கலத்திற்கும் தொடர்பிருக்குமோ என்னவோ ...!!???
தாரமங்கலத்தில் உள்ள ஒற்றைக் கல்லில் கோர்க்கப்பட்ட மாதிரி செதுக்கப்பட்ட சங்கிலிகள் , கல்லினால் ஆன சுழலும் தாமரை மேற்கூரையில் மேலும் அதிசயக்கத்தக்கவாறு வடிவமைக்கப்பட்டு,சுற்றி இருக்கும் சுழலும் கிளிகள் , சிங்கம் ஆகியவை சிற்பகலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் பவளக்கல் பட்டியக்கல் நிலை கோயிலின் நுழைவாயிலில்உள்ளது.
தலத்தின் கீழ்பகுதியில் ஒரு காற்று புக முடியாத அறைக்குள் இருக்கும் பாதாள லிங்கத்திற்கு பச்சை கற்பூரம் வைத்து செவ்வாய்க் கிழமை தோறும் அபிஷேகம் செய்தால் கல்யாண பாக்கியம், புத்திர பாக்கியம் மற்றும் தொழில் விருத்தி ஆகியவை கை கூடுகின்றன.
இதற்கு தனியாக நுழைவுச்சீட்டு வாங்கவேண்டும்..
பாதாள லிங்கம் இதற்கு தனியாக நுழைவுச்சீட்டு வாங்கவேண்டும்..
கண்ணப்பநாயனார். பாதாள லிங்க சந்நிதி நுழைவாயில் சுவற்றில் காட்சியளிக்கிறார் ..!
ஜூரகேஸ்வரர் 3 தலை, 3 கால்களோடு இருப்பது சிறப்பு.
இவருக்கு மிளகு ரசம் வைத்து சாதம் படைத்து வடைமாலை சாத்தி அபிஷேகம் செய்தால் காய்ச்சல் மற்றும் தீராத வியாதிகள் குணமடைகின்றன.
நவக்கிரஹ சிலைகளைச் சுற்றியுள்ள தூண்களில் தசாவதாரச் சிற்பங்கள் வேறெங்கும் காணமுடியாதவை..
கல் யானைக்குக் கரும்பு கொடுத்த சித்தர் திரு உருவிற்கு மகப்பேறு வேண்டி கரும்புச்சாறு அபிஷேகம் செய்வார்களாம்..
இராமரும் அனுமனும் இராமேஸ்வரம் போன்று சிவபூஜை செய்யும் சிற்பம் அபூர்வமானது ...
இங்கிருக்கும் துர்க்கை இராமரால் சக்தி பூஜை செய்யப்பட்ட பெருமை கொண்டவள்..
அபிராமி அன்னை தனி சன்னதியில் அருள்புரிகிறாள்..
அனைத்து “தரங்களும்” பெற்று “தரமான” மங்கலம் பின்பு தாரமங்கலம் ஆனது
ஒரே கல்லில் வடித்துள்ள பீடம் சிறப்பானது ..!
தரிசனம் நிறைந்து திரும்பும் போது கோவில் படிக்கட்டில் ஒரு பெண்மணி இன்னொரு பெண்மணியின் உச்சந்தலை முடியை வெடுக்கென்று பற்றி இழுத்து சடக்கு எடுத்து வைத்தியம் செய்துகொண்டிருந்தார்..
விசாரித்தோம்....வறட்டு இருமலுக்கு வர்ம வைத்தியமாம்..
உள்நாக்கு தொண்டையில் படுவதால்தான் இருமல் ஏற்படுகிறது.. எனவே உச்சந்தலை முடியை சிறு கொத்தாக பற்றி இழுக்கும்போது சிறுநாக்கு மீண்டும் மேல்நோக்கி தன் நிலையை அடைவதால் இருமல் சட் என்று நின்றுவிடுகிறதாம்.. ஆச்சரியமாகத்தான் இருந்தது ..
Rolling stone sculpture
பதஞ்சலி முனிவர் சிலையும் உண்டு
தாரமங்கலம் பற்றிய எமது மற்றொரு பதிவு .....
சிற்பங்கள் அற்புதங்கள் தாரமங்கலம் ..
2012 ஆம் வருடம் ஆரம்பித்து
ReplyDelete130 நாட்களில் 150 பதிவுகள்.
அடடா, ஒவ்வொரு பதிவும் அப்படியே கண்களில் ஒற்றிக் கொள்ளும்படியான, தெய்வீக மணம் கமழும் பதிவுகள் அல்லவா!
அபார சாதனையாளராகிய உங்களை அந்த அம்பாள் போலவே நினைத்து மனமுருகி வணங்கி வாழ்த்தி மகிழ்கின்றோம்.
தொடரட்டும் தங்களின் இதுபோன்ற
முத்திரைப்பதிவுகள்.
பிரியமுள்ள
வை. கோபாலகிருஷ்ணன்
முத்திரை பதிக்கும் அருமையான கருத்துரைக்கு மகிழ்ச்சியான இனிய நன்றிகள் ஐயா..
ஆஹா! இது தங்களின் இந்த 2012 ஆம் வருடத்தின் வெற்றிகரமான 150 ஆவது பதிவாக அமைந்துள்ளதில் மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.
ReplyDeleteபாராட்டுக்கள்.
மனமார்ந்த வாழ்த்துகள்.
அன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன் //
பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நிறைவான நன்றிகள் ஐயா..
அன்பின் இராஜராஜேஸ்வரி,
ReplyDeleteவாழ்த்துகள். 150 பதிவுகளுக்கு. அருமை. தாரமங்கலம் அருமையான சிற்பங்கள், அழகான மிகப்பழமையான கோவில். எனக்கு மிகவும் பிடித்த கோவில்.. நன்றி.
அன்புடன்
பவள சஙக்ரி
2012 ஆம் வருடத்தின் 150 பதிவுகள்.
ReplyDeleteவாழ்த்துகள். பாராட்டுக்கள்..
150 பதிவுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteதாரமங்கலம் பற்றி கேள்விப்ப்பட்டிருக்கிறேன். அப்புறம் வறட்டு இருமலுக்கு உச்சி முடி தூக்கிவிடுறது இன்னிக்கும் கிராமத்து சைடில செஞ்சுக்கிட்டுதான் இருக்காங்க. பகிர்வுக்கு நன்றி
ReplyDelete150-வது பதிவுக்கு வாழ்த்துகள்
ReplyDeleteஉங்களின் 150-வது பதிவுக்கு வாழ்த்துகள். பாராட்டுக்கள்..
ReplyDeleteதாரமங்கலம் கோவில் சிற்பக்கலை நுணுக்கம் மிக அருமை..அதை கலை நயத்துடன் நீங்கள் எடுத்த படம் மிக தெளிவாக உள்ளது.யாழியின் வாயில் உருண்டை வியப்பான கலை..வர்மக்கலை வைத்தியமும் வியப்பூட்டுவதாய் உள்ளது..இந்த அருமையான 150 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteமுதலில் வாழ்த்துகள்.
ReplyDeleteதாரமங்கலம் பற்றிய தரமான பதிவுக்கு நன்றி .சிலைகள் எவ்வளவு அழகு!
அனைத்துப்படங்களும் விளக்கங்களும் வழக்கம் போல் வெகு அருமையாக உள்ளன.
ReplyDeleteநேரமின்மையால் ஒவ்வொன்றையும் ரஸித்து மகிழ்ந்து அவற்றைப் பகிர்ந்து விரிவான பின்னூட்டம் தர இயலாத சூழ்நிலை உள்ளது.
மனமார்ந்த வாழ்த்துகள்.
நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள்.
இது தங்களின் 380+150=530 ஆவது பதிவாகும். அனைத்துப் பதிவுகளுமே நவரத்தினம் போல அன்றாடம் ஜொலிப்பவைகள் தான். ;)))))
நான் அவசரமாகக் கொடுத்துச் சென்ற வாழ்த்து MESSAGES இரண்டையும் முதலிடம் கொடுத்து வெளியிட்டுள்ளது கண்டேன். மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.
நன்றியோ நன்றிகள்.
vgk
[வரும் வெள்ளி இரவிலிருந்து, எனக்கான கூடுதல் பொறுப்புக்கள் குறைந்து, சகஜ நிலைக்குத் திரும்பி வந்து விடுவேன் என நம்புகிறேன். அதுவரை இதுபோல நேரம் கிடைக்கும் போது மட்டும் ஏதோ கொஞ்சமாகக் கருத்துகள் கூறுவேன்]
தாரமங்கலம் பற்றி அற்புதமான புகைப்படங்களுடன் அதன் வரலாறையும் தெரிந்து கொண்டேன். இவ்வளவு தகவல்களையும் எப்படி சேகரிக்கிறீர்கள்!!
ReplyDeleteதங்கள் 150-வது பதிவுக்கு நல்வாழ்த்து
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
தங்கள் 150-வது பதிவுக்கு நல்வாழ்த்து
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
வந்தேன், பார்த்தேன், ரசித்தேன்.
ReplyDelete150avadhu padhivukku vazhthi vanangugiren amma. en ammavum palarukku uchimudi soddikki vaidhyam seivar pazhaya ninaivugalai asaipoda vaithirgal nanri amma
ReplyDeleteகோவிலை முழுமையாக அறிமுகப் படுத்தி உளீர்கள். தங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDelete150-ஆவது பதிவிற்கு இனிய வாழ்த்துக்கள் ராஜராஜேஸ்வரி!
ReplyDeleteதாரமங்கலத்தைப்பற்றிய புகைப்படங்களும் விளக்கங்களும் மிக அழகு! தாரமங்கலம் எங்குள்ளது என்பதை நீங்கள் எழுதவில்லையே?
மனோ சாமிநாதன் said...
ReplyDelete150-ஆவது பதிவிற்கு இனிய வாழ்த்துக்கள் ராஜராஜேஸ்வரி!
தாரமங்கலத்தைப்பற்றிய புகைப்படங்களும் விளக்கங்களும் மிக அழகு! தாரமங்கலம் எங்குள்ளது என்பதை நீங்கள் எழுதவில்லையே?//
வாழ்த்துகளுக்கும் கருத்துரைகளுக்கும் இனிய நன்றிகள்..
தாரமங்கலம் சேலத்திற்கு அருகில் இருக்கிறது...
சேலத்தில் பல ஆண்டுகள் தங்கியிருந்தேன்.. ஆனால், அப்போது இந்த கோவிலுக்குப் போனதில்லை..
ReplyDeleteஇப்போது நினைத்தால் வருத்தமாக இருக்கிறது!
தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலைப் பற்றிய அற்புதமான பதிவு.
ReplyDeleteகல்லிலே கலை வண்ணம் கண்டான் - நிஜம் தான் - அங்குள்ள சிற்பங்களைப் பாருங்கள்.
நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அம்மா.
இந்த அற்புதமான பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
ReplyDeleteவாழ்த்துகள்.
115. திருமலை நிவாஸா கோவிந்தா
ReplyDeleteஎங்கள் தாரமங்கலம் பற்றி இது இரண்டாவது பதிவு என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் மேற்படி கோவில்களுக்கு சென்று வந்த தேதியையும் குறிப்பிட்டால் இது ஓர் முழுமையான ஆவணமாகும் அல்லவா?
ReplyDelete2983+4+1=2988 ;))
ReplyDelete