Thursday, May 24, 2012

அழகுத் தேர் திருவிழா


வைகாசி விசாகம் அன்று முருகனை வழிபட்டால் அந்த ஆண்டு முழுவதும் வணங்கிய பலன் கிடைக்கும் ..
 நேர்திக்கடன் செலுத்துவதற்காகபால்குடம் எடுத்தல்,  காவடி - சர்ப்ப காவடி , மச்சக்காவடி, இளநீர் காவடி எடுத்து வழிபடுகின்றனர். 
 திருச்செங்கோட்டில் 14 நாட்கள் உற்சவமாக அனைத்து மக்களும் பங்கேற்கும் வண்ணம் சிறப்பாக வைகாசி விசாகம் தேர்த்திருவிழா கொண்டாடப்படுகிறது..
வைகாசி விசாக திருவிழாவிற்காக, சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் "வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா '' என்ற கோஷங்கள் முழங்க தேரில் பவனி வந்து முருகப்பெருமான் பக்கதர்களுக்கு அருள் பாலிக்கும் எழில் திருக்கோலம்..


 "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என சரணகோஷம் எழுப்பி பழநியில் வைகாசி விசாகத்திருவிழா தேரோட்டம் 

திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகம் கோலாகலமாக சுவாமி ஜெயந்திநாதர் தங்கச்சப்பரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி, முனிகுமாரர்களுக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்... கடலில் புனித நீராடி, பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், அங்கப்பிரதட்சணம் மற்றும் அடிப்பிரதட்சணம் செய்தும் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.. 
கால்நடைகள், நவதானியங்களை கோயிலுக்கு தானமாக வழங்குவார்கள்..
world cup 2011



  • 250 கிலோ எடையுள்ள பஞ்சலோக ஸ்ரீ ஆறுமுகசாமி, வள்ளி தெய்வானை சிலைகள் வைகாசி விசாக தேர் திருவிழாவில் ஊர்வலம்..
  • பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் நாகநாதசுவாமி கோவில் வைகாசி திருவிழா 400 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட கலைச் சிற்பத்துடன் கூடிய தேர் வடிவழகுமிக்கது..
கடலூர் திருப்பாபுலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி திருவிழா 
படிமம்:வேலைப்பாடு மிகுந்த தேர்.JPG

Mangalore Car Festival"of Lord Venkatramana temple in Car Street.

Kodial Theru.
"எண்ணிப் புள்ளி வைத்து இழை எடுத்துப் போட்ட அழகு தேர்க்கோலம்" 

தாமரை தேர்

24 comments:

  1. கண் கொள்ளாக் காட்சி.. வைகாசி விசாகம் அன்று வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலனா.. அருமையான படங்கள்.. மனசு சிலிர்க்கிறது.

    ReplyDelete
  2. ஆஹா இன்றும் அழகுத் தேர் திருவிழாவா?

    அச்சா! பஹூத் அச்சா!!

    ReplyDelete
  3. புள்ளி வைத்த அழகுத் தேர்க் கோலம்,கொடி பறக்கும் அழகான கலர்க் கோலம், தாமரைத் தேர்க்கோலம், ஒற்றைச்சக்கரத் தேர்க் கோலம் என்று நான்குமே வெகு அழகாக உள்ளதே ! ;)

    ReplyDelete
  4. புள்ளிக்கோலத்திற்கு மேல் மூன்றாவதாகக் காட்டப்பட்டுள்ள தேர்ச் சக்கரங்கள் எவ்வளவு பெரியதாக உள்ளன!

    புதிதாக பெயிண்ட் அடித்து அழகாக சிகப்பு நிறத்தில் கோலமிட்டு, அச்சுக்கட்டைகளும் அழகாக பச்சை நிறத்தில் தெரிய, பளபளப்பாகத் தெரியுது.

    தேர்வடக் கயிறு, பிரேக் போட முட்டுக்கட்டை என்று எல்லாமே அமர்க்களமாகக் காட்டி விட்டீர்கள்!!

    ReplyDelete
  5. அதன் கீழே அதாவது புள்ளிக்கோலத்திற்கு மேலே இரண்டாவது படத்தில் தேரைக்காண எவ்வளவு ஜனங்கள்... ;)

    அடேங்கப்பா.

    மொய்மொய்யென்று கொசு மொய்ப்பது போலல்லவா உள்ளது.

    ReplyDelete
  6. புள்ளிக்கோலத்திற்கு மேல் உடனே உள்ள படத்தில் அது என்ன பல்லாக்கா!

    படு ஜோராக உள்ளதே!!

    அதைத்தாங்கிப் பிடித்திட நான் நீ என ஆயிரம் கரங்கள் நீண்டுள்ளது வெகு அழகாகவல்லவா உள்ளது. ;))

    ReplyDelete
  7. முதல்பட காசுமாலை முருகனும், இரண்டாவது பட எலுமிச்சம் பழமாலை முருகனும் மிகவும் அழகாக பொருத்தமாகத் தேர்ந்தெடுத்து ’டாப்’பில் போட்டுள்ளது சிறப்பாகவே இருக்கு.

    நல்ல படத்தேர்வு ! சபாஷ் !!

    ReplyDelete
  8. முருகனைப்பற்றியும், வைகாசி விசாகச் சிறப்புகள் பற்றியும், பல்வேறு கோயில்களின் ஸ்வாமி புறப்பாடுகள் பற்றியும், பலவிதமான விளக்கங்கள் கொடுத்துள்ளீர்கள்.

    தெவிட்டாமல் பலவித தேர்களையும் தரிஸனம் செய்ய முடிந்தது.

    மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    ReplyDelete
  9. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ;)

    ReplyDelete
  10. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ஆஹா இன்றும் அழகுத் தேர் திருவிழாவா?

    அச்சா! பஹூத் அச்சா!

    அழகான கருத்துரைகளால் தேர்த்திருவிழாவை அலங்கரித்ததற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  11. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ஆஹா இன்றும் அழகுத் தேர் திருவிழாவா?

    அச்சா! பஹூத் அச்சா!

    அழகான கருத்துரைகளால் தேர்த்திருவிழாவை அலங்கரித்ததற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  12. ’தேர்’ப்படங்களை அழகாக பலவித

    கோணங்களில் காட்டுவதில் நீங்கள்

    கை’தேர்’ந்தவராக இருக்கிறீர்களே !

    ;)))))

    பாராட்டுக்கள்.

    வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.
    vgk

    ReplyDelete
  13. ரிஷபன் said...
    கண் கொள்ளாக் காட்சி.. வைகாசி விசாகம் அன்று வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலனா.. அருமையான படங்கள்.. மனசு சிலிர்க்கிறது.

    மனம் நிறைநத கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  14. மிகவும் அருமை அழகு தேர் திருவிழா பற்றிய பகிர்வு நன்றி அக்கா...

    ReplyDelete
  15. அக்கா மறுபடியும் அழகுத்தேர் திருவிழா காண்பது மிக்க மகிழ்ச்சி . அழகிய படங்களுடன் கூடிய கருத்து மிகவும் அருமை...

    ReplyDelete
  16. அழகழகான தேர்கள்... பார்க்கவே கண்கொள்ளா காட்சி. தேர் புள்ளிக்கோலமும் சூப்பர்.

    ReplyDelete
  17. அன்பின் இராஜராஜேஸ்வரி - மறுபடியும் வைகாசி விசாகம் - பார்க்கப் பார்க்க கண் கொள்ளாக் காட்சி - எத்தனை கோவில்களில் வைகாசி விசாகத் திருவிழா . முருகப் பெருமானின் பல்வேறு அலங்காரங்கள் - கண்டு கண்டு மகிழ்ந்தேன் - கோலங்கள் அத்த்னையும் அருமை. தேர்த் திருவிழாப் படங்கள். நண்பர் வை.கோ வின் அழகிய மறுமொழிகள். பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  18. ரிஷபன் said...
    //கண் கொள்ளாக் காட்சி.. வைகாசி விசாகம் அன்று வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலனா.. அருமையான படங்கள்.. மனசு சிலிர்க்கிறது.//

    Dear Sir, Good Evening!

    பழநிமலை,திருப்பரங்குன்றம்,ஸ்வாமிமலை போன்ற மலை உச்சிகளில் இருப்பதால் முருகனுக்குப் பெருமை.

    ”அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன்”
    என்பார்கள். அதாவது அவரே “குரு”ஸ்தானத்தையும் வகிப்பவர் ஆகிறார்.

    அதுபோல தேருக்கு அழகு, அதன் உயரமும்,அதன் உச்சியில் உள்ள அழகான கும்பமும் தான்.

    மலை உச்சிபோல, தேரின் அழகான உயரமான கும்பம் போல, என் எழுத்துலக மானஸீக ’குரு’நாதராகிய தாங்கள் பின்னூட்டத்தின் உச்சியில் அமர்ந்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    உயரமான தேர்களின் உச்சி கோபுர அழகையும், முருகனின் கோயில்கள் அமைந்துள்ள மலை உச்சிகளையும்
    பார்க்க ஓடோடி வந்த எனக்கு என் குருநாதராகிய தாங்களும் உச்சியில் அமர்ந்திருப்பதைக் கண்டு உண்மையிலேயே உச்சி குளிர்ந்து போனேன்.

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பின்னூட்டங்கள் என்ற தேரின் உச்சியில் தேர்க்கலஸமாக அமர்ந்து இன்று தரிஸனம் தந்துள்ளதற்கும், அடியேனும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    என்றும் அன்புடன் தங்கள்

    வீ..........ஜீ [vgk]

    ReplyDelete
  19. வந்தேன், பார்த்தேன், ரசித்தேன்.

    ReplyDelete
  20. muthana pathivu murugan perumai pesum pathivu ther kolam vegu azhagu migavum nanri amma

    ReplyDelete
  21. அழகு தேர் திருவிழா பற்றிய பகிர்வு கோலங்கள் அத்த்னையும் அருமை.

    ReplyDelete
  22. நற்பதிவு.அழகிய படங்கள் .ஆன்மிகம் வளரட்டும் உங்கள் திருக்கரங்களால் நட்புடன் குரு.பழ.மாதேசு www.kavithaimathesu.blogspot.com

    ReplyDelete
  23. வைகாசி விசாக திருநாள் வள்ளி கடம்பனின் திருநாள் அல்லவா!
    தேர் கோலங்கள், தேர்திருவிழா கண்டு மகிழ்வு கொண்டேன், நன்றி.

    ReplyDelete
  24. 3160+10+1+1**** = 3172

    ****http://jaghamani.blogspot.com/2011/11/blog-post_24.html
    one more recent comment to the above post is added here for accounting purpose.

    அன்பின் திரு. சீனா ஐயா அவர்களுக்கு என் நன்றிகள்.

    தங்களின் ஓர் பதிலுக்கும் [ இருமுறை ] நன்றிகள்.

    ReplyDelete