Sunday, May 20, 2012

வசீகரிக்கும் வைகாசி




உள்ளம் கொள்ளை கொள்ளும் ஜகன் மோகினி திருகோலம்
வேதாந்த தேசிகர் ஆலயம்.. மயிலாப்பூர் ..அலங்காரமாக அழகாய் வசீகரிக்கும் ஆண்டாள்... இரண்டு அடி நீளம் ..அரை கிலோ எடையுடன் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி ஜடை -- 1230  செயற்கை ரூபி கற்கள் பதிக்கப்பட்டது..


விசாலமாய் மனதை வசீகரித்து விகசிக்கும் மாதம் என்பதால் வைகாசி எனப் பெயர்பெற்றிருக்குமோ!


விகாஸம் என்றால் மலர்ச்சி என்று பொருள். அதனை அடியொற்றியே வசந்த ருதுவாக- இளவேனிலாக வைகாசி பருவகாலம் அழைக்கப்பட்டு வருகிறது.


மாதவ மாதம் என்னும் தனிச்சிறப்பு பன்னிரு மாதங்களில் வைகாசிக்கு மாத்திரமே உண்டு


துளசி பத்ரங்களால் பூஜை செய்து, பலன்கள் நிறைய பெற்று புண்ணியப் பேறு அடைகிற பெரும் தவம் நிறைந்த மாதம் இது.
ஆயுள், செல்வம், மக்கட் செல்வம் அனைத்தும் தரவல்ல பருவகாலம் வைகாசி 
உத்தராயண காலத்தின் ஐந்தாவது மாதமான வைகாசியில் வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும்.


வைகாசியின் வீரியம் அக்னி நட்சத்திரம், கத்திரி என்றெல்லாம் சொல்வதில் அறியலாம்..


"பூமியில் வெடிப்புகள்; வெடிப்புகளின் ஊடே பள்ளமடை; பெருமழை பொழியும்போது, அதனூடே நீர் ஓடி நதிகளில் தெளிவுடன் பாய்ந்தோடி ஸ்படிகமென திகழும் வைகாசி' என்று நயம்பட சாஸ்திரம் வைகாசியில் பெருமழை பொழியும் என்கிறது.கடும் வெயில் மாதத்தில் அடைமழை என்றால் வசந்தம் தருவதாக இருக்கிறது..
Sri Siva Subramaniar Vaikasi Visakam 
வைகாசி மாதத்தை "மாதவ மாதம்' என்றும் நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.கால சாஸ்திரத்தை நிர்ணயம் செய்துள்ள பெரியோர்கள்


புண்ணிய பலன்களை நல்கும் தன்மை கொண்ட களந்திகா என்னும் தாரா பாத்திர தானம் வைகாசி மாதத்தின் சிறப்பு. 


வேத தத்துவங்களில் உயர்ந்ததாகப் போற்றப்படும் நரஹரி வடிவம் ..நரஹரி, மானுடம், மிருகம் என மூன்றும் ஒன்றாகி வந்த பகவானின் பெருமைமிக்க அவதாரம் !வைகாசி சுக்ல சதுர்த்தசியின் சிறப்பிற்குக் காரணம், சிங்கவேளின் அவதாரம்.
தசாவதாரங்களில் ஒன்றான பராக்கிரம பரசுராமர் அவதாரம் நிகழ்ந்தது வைகாசி மாத அட்சய த்ரிதியையில்தான் ..
வானளாவிய சீர்படைத்த மாதவ மாதம் வைகாசி- வசந்தம் தரும் மாதம்..
வைசாக பூர்ணிமைதான் புத்த பூர்ணிமை.



Sri Subramaniaswamy temple at Kumara Vayalur 
near Tiruchi ‘Vaikasi Visakam' festival 

Sri Sugavaneswarar Temple in Salem 
Vaikasi Vishakam Peruvizha’

நல்லூர்பேட்டை
Sri Renukadevi is celebrated as Sri Gangai Amman.Padavedu Sri Renukambal temple.

வைகாசி விசாக திருவிழா - முளைப்பாரி , காவடி, பால்குடம்,
Mylapore temple VASANTA UTSAVAM
pulling the car of Kottai Alagiri Nathar temple in Salem  Vaikasi Vishakam festival.-

23 comments:

  1. ஆஹா! ”வசீகரிக்கும் வைகாசி”.
    தலப்பே வசீகரிக்கிறதே! ;)

    ReplyDelete
  2. முளைப்பாரி, காவடி, பால்குடங்களின் அனிவகுப்பு மிகவும் அழகாக உள்ளது.

    ReplyDelete
  3. 3 ஆவது படம் “ஜனனி.....ஜனனி” ஜகந்மோஹினி என்ற இனிமையான பாடலை நினைவு படுத்துவதாக உள்ளது.

    ReplyDelete
  4. 4 ஆவது படத்தில் காட்டப்பட்டுள்ள உற்சவர் சிவசுப்ரமணியர் + வள்ளி + தெய்வயானை + மூலவர் + பூமாலை அலங்காரங்கள் + இடப்புறம் உள்ள நம் ஹொந்திப்பிள்ளையார் சந்நதி என எல்லாமே நல்லாயிருக்கு.

    அந்த இரண்டு அம்பாளின் பாவாடை விரிப்பும் அற்புதமாக ஒரு புது டிசைனாக உள்ளது.

    ReplyDelete
  5. அழகிய பதிவு! அருமையான பதிவு!

    ReplyDelete
  6. நம்மூர் திருச்சி குமார வயலூர் கோபுரங்களும், தேரும் காட்டியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

    ”வைகாசி விசாகம்” விழா மிகவும் பிரபலமாகவே எங்கும் கொண்டாடுகிறார்கள்.

    ReplyDelete
  7. வைகாசி = மாதவ மாதம்.

    அருமையான தகவல். இந்தப் புதுத்தகவலை தஙக்ள் மூலம் அறிய நாங்களும் மா..தவம் செய்திருக்கிறோம் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  8. வஸந்த உதஸவம் நடைபெறும் மைலாப்பூர் கோயில் கோபுரம் மின்விளக்குகளால் ஜொலிப்பது போல காட்டியுள்ள படமும் நல்லாயிருக்குது.

    ReplyDelete
  9. இந்த ஆண்டின் 160 ஆவது பதிவாகவும், ஒட்டு மொத்தமான எண்ணிக்கையில் 540 ஆவது பதிவாகவும் இது அமைந்துள்ளது.

    அதுவும் அழகன் முருகனைப்பற்றிய அழக்கானதோர் பதிவு என்பதில் தனிச்சிறப்பு தான்.

    இதுவும் மா தவ மாதத்தில் வெளியிடப்படும் பாக்யம் பெற்றுள்ளது.

    வழக்கம்போல் அழகான படங்கள், அற்புதமான விளக்கங்கள்.

    அனைத்துக்கும், தங்களின் அசராத உழைப்புக்கும் மிக்க நன்றிகள்.

    தினமும் இதுபோன்ற தெய்வாம்ச படைப்புகளை தொடர்ந்து தந்திட அன்பான வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. madhava madhathin mahatuvathai unarthum mahathana pathivu amma nanri amma
    .

    ReplyDelete
  11. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரருக்கும் வைகாசி விசாகம்தான் பிரம்மோற்சவம் நடைபெறும் தினமாகும். இந்த ஆண்டு 03-06-2012 அன்று மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. அனைவரும் தரிசித்து பயன்பெற வேண்டுகிறேன்.

    ReplyDelete
  12. நல்ல படங்கள்.

    ReplyDelete
  13. மிகவும் அருமையான மாதவ மாதம் ஆகிய வைகாசியை பற்றி நான் நல்லா புரிந்துகொண்டேன் . நல்ல பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  14. மிகவும் அருமையான மாதவ மாதம் ஆகிய வைகாசியை பற்றி நான் நல்லா புரிந்துகொண்டேன் . நல்ல பகிர்வுக்கு நன்றி அக்கா.

    ReplyDelete
  15. அருமையான பக்தி பதிவு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  16. வைகாசியின் புகழை எடுத்துச் சொல்லி வெவ்வேறு கோவில்களின் விழாப் படங்களோடு பதிவு அருமை.

    ReplyDelete
  17. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - வைகாசி விசாகம் - பல்வேறு இடங்களில் நடைபெற்ற விழாக்களின் படங்கள் - அதட்னையும் கண்டு மகிழ்ந்தேன் - வழக்கம் போல் வை.கோவின் மருமொழிகள் - நான் பொறுத்திருந்து அவரின் மறுமொழிக்ளைப் படித்து விட்டுத்தான் உங்கள் பதிவினையே படிப்பேன். இருவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  18. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - வசீகரிக்கும் வைகாசி - தலைப்பே வசீகரிக்கிறது. ஜகன்மோகினி திருக்கோலம் - ம்யிலாப்பூர் வேதாந்த தேசிகர் திருக்கோவிலில் ஆண்டாள் அலங்கார்ம் - 1230 செயற்கை ரூபி யுடன் கூடிய, இரண்டடி நீளமுள்ள, தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி ஜடை - வைகாசி மாத்ததினைப் பற்றிய சிறப்பு விளக்கங்கள் - குமார வயலூர் முருகன் - சேலம் சுகவனேஸ்வரர் - நல்லூர்பேட்டை கங்கை அம்மன் - முளைப்பாரி - பால்குடம் என அத்தனையையும் புகைபடங்களின் மூலமாக விளக்கியமை நன்று. ஆலயங்களுக்குச் சென்று கண்டு களிப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  19. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராம !

    ReplyDelete
  21. 3109+9+1=3119

    அன்பின் திரு. சீனா ஐயா அவர்களின் சிறப்பானதோர் கருத்துக்கு என் நன்றிகள்

    ReplyDelete