Saturday, May 26, 2012

நள்ளிரவு சூரியன்



நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா ???
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை

நள்ளிரவிலும் சூரியன் ஒரு வட்டத் தட்டு போலத் தோன்றி  ஜொலிக்கும் பகுதி வட தென் துருவ வட்டங்கள் ஆகும்..
இரு துருவங்களைச் சுற்றி சுமார் 90 கி. மீ. வரையிலும் கோடையில் நடு இரவிலும் சூரியன் ஜொலிக்கிறார். 
வடதுருவ கரடி எனப்படும் சப்த ரிஷி மண்டலத்திற்கு அருகில் இருப்பதால் பூமியின் வட பகுதி முடிந்து விடும் இடத்திற்கு 
ஆர்டிக் என்று பெயர் சூட்டப்பட்டது.
ஆர்டிக் என்ற கிரேக்க சொல்லின் பொருள் கரடிக்கு அருகிலுள்ள என்பதாகும். 

நார்வேயின் சவால்பார்ட் என்ற இடத்தில், ஏப்ரல் 13 முதல் ஆகஸ்ட் 23 வரை (5 மாதங்கள், 10 நாட்கள்) 24 மணி நேரமும் பகலவன் மறையாமலே, அந்த ஊரிலேயே சுற்றிக்கொண்டு காட்சி அளிப்பார்.

அதற்கும் மேல் உள்ள பகுதிகளில் வருடத்தில் பாதி மாதங்கள் சூரியன் நாள் முழுவதும் காட்சி கொடுக்கும். 
அப்போது அப்பகுதியில் இரவே இருக்காது.!
துருவப் பகுதிகளில், 60 பாகை அட்ச ரேகைகளுக்கு மேல் போய் விட்டால், அதாவது ஆர்டிக்கு தெற்கே -அண்டாட்டிக்காவுக்கு வடக்கே, பொன் அந்திமாலை ஒளியைத் தரும்வெளிச்சம் இரவிலும் இருக்கும். 

மின் விளக்கு இன்றி படிக்கலாம். 


இந்த தினங்களை செயின்ட் பீட்ச்பர்க் மற்றும் ரஷ்யாவில் வெள்ளி, இரவு தினங்கள் என ஜூன் 11- ஜுலை 2 வரை, இந்த நாட்களில் எல்லாம், கலாசார விழாக்கள் கொண்டாடுகிறார்கள்.

ஆர்டிக் பகுதியில் ஆர்டிக்பெருங்கடல், கனடா நாட்டில் சில பகுதிகள், ரஷ்யா, கிரீன்லாந்து, வட அமெரிக்கா (அலாஸ்கா), நார்வே, சுவீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து மக்கள் வாழும் இடங்களும் உள்ளன. 
ஆர்டிக்கில் ஏராளமான பனி மூடிய பெருங் கடல்கள் காணப்படுகின்றன.
மரம் என்ற ஒன்று இல்லாத நிரந்தர உறைபனி சுந்திரப் பகுதியாகவே உள்ளது. தரைக்கு கீழும் கூட பனி! 
நடுநிசி நேரத்திலும் சூரியன் பளபளவென்று ஒளி வீசி 
அந்தப் பகுதியையே கொளுத்தி, பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் அதிசயத்தைக் காணலாம்.
ஜுலை மாதம் நாள் முழுவதும் சூரியன்!ஆனாலும் கூட அப்போது அங்கு வெப்பத்தின் அளவு அதிகபட்சம் 10 பாகை செல்சியஸ்தான் இருக்கும். 
ஆர்டிக் வட்டப் பகுதிக்குள் குளிர் காலத்தில் சூரியனையே காணமுடியாத 24 மணி நேரமும் இரவும், கோடையில் 24 மணி நேரமும் சூரியன்  மறையாது பிரகாசிக்கும் பகலும் காணப்படும்.
பின்லாந்தின் கால் பகுதி வட ஆர்டிக் வட்டத்தில் உள்ளதால் அதன் வடக்கு முனையில், கோடையில் 60 நாட்கள் சூரியன் அந்த ஊரை விட்டு நகரவே நகராமல் மறையவே மறையாத நாட்களாக வியப்பூட்டும் ..
இந்த நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் வரவால் 
நகரங்கள் களைகட்டும்
சூரிய உதயமும் இல்லை மறைவும் இல்லை,  
24 மணிநேரமும் பிரகாசிக்கிறார்.
.24 மணிநேரமும் பிரகாசமான சூரிய ஒளி இருப்பதால் என்னதான் சன்னலை இறுக்க மூடிக் கொண்டு வெளிச்சத்தைத் தவிர்த்தாலும் தூக்கம் கண்ணாமுச்சி காட்டுகிறதாம்... 
இரவு 11 மணிக்கு பார்த்தாலும் பயங்கர பிரகாசமான ஒளி.அதுமட்டுமன்றி ஒருவித அமைதியற்ற மன இறுக்கம் அனைவருக்கும் நிலவுவதாக உணர்கின்றனர்...
Midnight Sun Norway
பனிப் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்கள் 
இக்லூ என்ற வீட்டில் வசிப்பார்கள்
பின்லாந்திற்க்கு அடுத்துள்ள ஆர்டிக் பிரதேசமான Urho Kekkonen National பார்க் ல் ஒரு பனிப்பிரதேசத்தின் இரவை கழிப்பதற்காக இக்லூ போன்ற தங்கும் அறைகளை அமைத்துள்ளது Kakslauttanenஎன்ற ஹோட்டல் . 
டிசம்பர் மாத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரைக்கும் இக்லூ கிராமத்தில் தங்கும் வசதி உண்டு ..
கண்ணாடியால் ஆன இக்லூ வீடுகள் உறைந்து போவதில் இருந்து பாதுகாக்கவும் ,  மிதமான வெப்பத்தை வீட்டின் உள்ளே நிலைப்படுத்தவும் இந்த வீடு முழுவதும் விசேஷித்த வெப்ப கண்ணாடிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதனால் அதிகபட்சமாக மைனஸ் 30  டிகிரி செல்சியஸ் வரையிலும் இந்த வீட்டின் உள்ளே தங்கி இருந்து இயற்கை அழகை ரசிக்க முடியும். 
Reindeer farm
இந்த இடத்தில ஐஸ் கட்டியில் செய்த ஒரு உணவகமும் ,  விருந்தினர்கள் பொழுது போக்கிற்காக ஐஸ் பிஷிங் மற்றும் பனிமான் வண்டியில் சவாரி போன்ற வசதிகளும் திருமணத்திற்காக வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாம். 
 http://jaghamani.blogspot.com/2011/09/blog-post_529.html  --
ஜில்லென்று ஐஸோ ஐஸ் நியூஸ் ....ஸ்...ஸ்
நவீன வசதிகள் கொண்ட இக்ளூ தங்குமிடங்கள்.. 

ஆஸ்திரேலியாவில் - டாஸ்மேனியா என்பபடும் பக்கத்தில் இருக்கும் நாட்டில் நள்ளிரவு சூரியனைப்பார்க்க சுற்றுலாவாக அழைத்துச்செல்கிறார்கள்..

Midnight Sun Excursion to Kaunispää fell


Arctic Sea and Hurtigruten Cruise, Norwa

பூமியில் நிலவி வரும் பருவநிலை மாற்றத்தினால் மூன்று ஆண்டுகளுக்குள் ஆர்டிக் கடலில் உள்ள ஐஸ் மொத்தமும் உருகி தண்ணீராக மாறிவிடும் என்று கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஆர்டிக் கடலின் ஐஸ் மொத்தமும் உருகிவிடும் பட்சத்தில் துருவக்கரடிகள் மொத்தமும் அழிந்து விடும் அபாயமும் உருவாகியுள்ளது 

Arctic Wolves AnimatedArctic Wolves Animated
arctic monkeys, humbug tour

33 comments:

  1. படங்களும் தகவலும் நல்லா இருக்கு.

    ReplyDelete
  2. vithyasamana pathivu thagavagaluku nanri amma

    ReplyDelete
  3. ஆஹா! முதல் படத்தில் சூரியனார் வாக்கிங் போகும் அந்த அழகே அழகு!
    என்ன வேகம் என்று அதிசயித்தால்..

    ஆறாவது படத்தில் பார்த்தால் மேலே தான் பளீரிட்டுக் கொண்டு கடலுக்கடியில் தன் பிம்பத்தை குளிக்கச் செய்யும், அதுவும் ஒரு பிம்பத்தை ரெண்டு, மூணு, நாலாக்கும் ஜாலவித்தை யெல்லாம் அவருக்குத் தான் தெரியும் போலிருக்கு!

    ReplyDelete
  4. அற்புத தகவல்கள்...
    அழகழகாய் படங்கள்!
    சுபெர்ப் பதிவு...

    ReplyDelete
  5. நள்ளிரவில் சூரியனை என்றாவது ஒரு நாள் பார்க்க ரம்மியமாகத்தான் இருக்கும் தினமும் என்றால் கஷ்டம் தான் ..!

    ReplyDelete
  6. அருமையான பதிவு.
    அரிய தகவல்கள்.
    திரைப்படம் பார்ப்பது போல இருக்கிறது.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. பிரமிப்பாக இருந்தது தகவலும் படங்களும் .

    ReplyDelete
  8. பின்லாந்து போகனும்னு ஆசை வந்திருச்சு. படங்களும் தகவல்களும் ஆச்சரியமூட்டுகின்றன.

    ReplyDelete
  9. இயற்கை அதிசயம்! நள்ளிரவு சூரியன்! நல்ல படங்களோடு கூடுதல் தகவல்கள். கட்டுரைக்கு நன்றி!

    ReplyDelete
  10. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - சூரியனின பயணம் பற்றிய அரிய தகவல். நான் இது வரை கேள்விப்பட்டதில்லை. எப்படித்தான் தகவல் மற்றும் படங்கள் சேகரிக்கிறீர்களோ தெரியவில்லை. அத்தனையும் அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  11. ”நள்ளிரவின் சூரியன்”

    தகவல்கள் யாவும் பிரமிக்க வைக்கின்றன.

    ReplyDelete
  12. முதல் மூன்று படங்களிலும் சூரியன் நம் வலப்புறமிருந்து இடப்புற்மாக ஓட்டம் பிடிப்பதும், அது அந்தத் தண்ணீரில் பிரதிபலிப்பதும், மிகவும் சுவையான சுவாரஸ்யமான காட்சியாக உள்ளது.

    ReplyDelete
  13. //சூரிய உதயமும் இல்லை மறைவும் இல்லை, 24 மணிநேரமும் பிரகாசிக்கிறார்.

    24 மணிநேரமும் பிரகாசமான சூரிய ஒளி இருப்பதால் என்னதான் சன்னலை இறுக்க மூடிக் கொண்டு வெளிச்சத்தைத் தவிர்த்தாலும் தூக்கம் கண்ணாமுச்சி காட்டுகிறதாம்.

    இரவு 11 மணிக்கு பார்த்தாலும் பயங்கர பிரகாசமான ஒளி.

    அதுமட்டுமன்றி ஒருவித அமைதியற்ற மன இறுக்கம் அனைவருக்கும் நிலவுவதாக உணர்கின்றனர்.//

    அடப்பாவமே! இங்கு புதிதாகத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகள் பாடு மிகவும் திண்டாட்டமாகி விடும் போலிருக்கே! ;(

    ReplyDelete
  14. இந்தப்பதிவினில் “நள்ளிரவிலும் சூர்யன்” கொளுத்துகிறாரே என ”ஜில்லென்று ஐஸோ ஐஸ் நியூஸ் ....ஸ்...ஸ்” பக்கம் போய் எட்டிப்பார்த்துவிட்டு வந்தேன். அங்கு போயும் எனக்கு எரிச்சல் அடங்க ரொம்ப நேரம் ஆனது.

    மீண்டும் இதுவே பரவாயில்லை என்று இங்கு ஓடி வ்ந்து விட்டேன்.

    ReplyDelete
  15. //ஆர்டிக் கடலின் ஐஸ் மொத்தமும் உருகிவிடும் பட்சத்தில் துருவக்கரடிகள் மொத்தமும் அழிந்து விடும் அபாயமும் உருவாகியுள்ளது //

    அடப்பாவமே, கீழிருந்து நாலாவது படத்தில், ஒருசில பனிக்கரடியார்கள் சமத்தாக சாதுவாக தெரிகிறார்களே!
    அவங்களுக்குப் போய் ஆபத்து வரப்போகிறதா!!

    மிகவும் வருத்தமாக உள்ளது. ;(

    ReplyDelete
  16. //ஆஸ்திரேலியாவில், டாஸ்மேனியா என்பபடும் பக்கத்தில் இருக்கும் நாட்டில் நள்ளிரவு சூரியனைப்பார்க்க சுற்றுலாவாக அழைத்துச்செல்கிறார்கள்//

    தங்களுக்குச் சென்று வரும் பாக்யம் கிடைத்த்தா?

    ReplyDelete
  17. //நடுநிசி நேரத்திலும் சூரியன் பளபளவென்று ஒளி வீசி அந்தப் பகுதியையே கொளுத்தி, பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் அதிசயத்தைக் காணலாம்//

    பற்பல அதிசயச் செய்திகளைத் தந்திடும் தகவல் களஞ்சியமாகிய உங்கள் பதிவினிலேயே பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் அதிசயத்தைக் காண முடிகிறது எங்களால்.

    ReplyDelete
  18. //இரவு 11 மணிக்கு பார்த்தாலும் பயங்கர பிரகாசமான ஒளி.

    அதுமட்டுமன்றி ஒருவித அமைதியற்ற மன இறுக்கம் அனைவருக்கும் நிலவுவதாக உணர்கின்றனர்//

    மன இறுக்கம் நிச்சயமாக இருக்கத்தான் இருக்கும்.

    சூர்ய வெளிச்சம் மறைந்து, அமுதைப்பொழியும் நிலவு வந்து,
    நம்மை ஆட்கொண்டால் தானே, குளுமையாக [அதுவும் AC போட்டு]
    நிம்மதியாகப் படுத்து உறங்கி, காலையில் Fresh ஆக எழுந்து எழுச்சியுடன், நம் அன்றாடப் பணிகளில் ஈடுபட முடியும்!

    ReplyDelete
  19. //மின் விளக்கு இன்றி படிக்கலாம்//


    ”வாசிப்பது என்பது சுவாசிப்பது
    வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள்”

    என்று சொல்பவர்களை அங்கு கொண்டுபோய் விட்டு விடலாமா?

    ReplyDelete
  20. //வடதுருவ கரடி=சப்த ரிஷி மண்டலம்

    அதற்கு ”ஆர்டிக்” என்று பெயர்.

    ஆர்டிக் என்ற கிரேக்க சொல்லின் பொருள் கரடிக்கு அருகிலுள்ள என்பதாகும்.//

    ஏதோ கரடி விடுவதாக உங்களை யாரும் குற்றம் குறை சொல்லமுடியாதபடி விளக்கம் கொடுத்துள்ளது அருமை. சபாஷ்! ;)))))

    ReplyDelete
  21. ARCTIC MONKEYS நடன நிகழ்ச்சிகள்,

    மூக்கினால் முணுமுணுப்பது போன்று காட்டப்பட்டுள்ள 2 ஜோடி
    Hello Friend Animals,

    அந்த துருவக்கரடிகள் + பறவைகள்,

    Arctic Sea and Hurtigruten Cruise, Norwa வில் கடற்கரையில் உல்லாசமாக அமர்ந்துள்ள ஜனங்கள்,

    நவீன வசதிகள் கொண்ட இக்ளூ தங்குமிடங்கள்,

    என இன்று காட்டியுள்ள படங்களும், விளக்கங்களும் அருமை, புதுமை,
    மாறுபட்டதோர் மகத்தான பதிவு.

    முதல்படத்தில் சூரியனின் வேகமான ஒளி, அதிவேகமாக்ச்செல்லும் நீராவி எஞ்சினின் Head Light போலவும், அதைச் சுற்றி பிரிந்துபோவது போலத் தோன்றும் கருத்த மேகங்கள், நீராவி எஞ்சின் புகைபோலவும் எனக்குத் தோன்றுகிறது.

    இந்த ஓடும் சூர்யனை எப்படித்தான் துரத்திப்பிடித்து வெளியிட்டீர்களோ!!

    மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் பாராட்டுக்கள்.

    சிறப்பான மாறுபட்ட பதிவினைத் தந்து மகிழ்வித்ததற்கு நன்றிகள்.

    எழுச்சியுடன் மேலும் பல பதிவுகள் தொடர்ந்து தர அன்பான வாழ்த்துகள்.

    vgk

    ReplyDelete
  22. ஒருமுறை மஹாபெரியவரை காஞ்சியில் பார்க்கச்சென்றிருந்தேன். வேதத்தை பற்றி ச் சொல்லிக்கொண்டு இருந்தார். உற்றுக்கேட்டு கொண்டு இருந்தேன். வேதம் பொய் சொல்லுமா என்று கேட்டார்.அவர் கேட்கும்போது ஏதோ விஷ்யம் வரப்போகிறது என்று மௌனமாக இருந்தேன். சரி ராத்திரி 12 மணிக்கு சூரியனை பார்க்க முடியுமா என்று கேட்டார். முடியாது என்று சொன்னேன்,அப்போ வேதம் பொய் சொல்லரதே" சதா பஸ்யந்தி சூர்யாக: வரதே சூக்தத்தில்.அப்ப்டின்னா எப்பவும் சூர்யனை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்னுதனே அர்த்தம் . மனதில் குழப்பம் இருந்தாலும் பெரியாவாவே சொன்னா நன்ன இருக்கும்ன்னு சொன்னேன். அவர் சொன்னார்" வேதம் சொன்னவா நம்மளை மாதிரி கண்ணுக்குத்தெரிந்த உலகை மட்டும் பார்க்கவில்லை அவா ஞனக்கண்ணால் உலகை பாத்தவா. அதனாலதன் எப்பவும் பனிக்கட்டியா இருக்குமாமே பின்லாந்துன்னு ஒரு ஊரு அங்கே வருஷத்துலே சிலநாள் எப்பவும் சூர்யன் பிரகசிக்குமாமே அதை வெச்சுத்தான் எழுதி இருப்பாளோ" வேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது. உங்களது பதிவும் இதே மாதிரி அற்புத விஷயங்களை அளிக்கிறீர்கள் நன்றி

    ReplyDelete
  23. படங்களும் தகவல்களும் அருமை! அதுவும் முதல் புகைப்படம்-நகரும் சூரியன் பிரமிக்க வைக்கிறது!

    ReplyDelete
  24. மத்தியதரைப் பிரதேசத்திலிருந்து அங்கு போகும் நம்மைப் போன்றவர்களுக்கு அந்த சூழ்நிலைக்குப் பழகுவது கொஞ்சம் கடினம்தான். தூக்கம் வராது. வந்தாலும் அரைகுறைத் தூக்கம்தான்.

    நான் ஸ்வீடனில் உள்ள "கிருனா" (வடதுருவத்திற்கு சமீபம்) என்ற ஊரில் ஒரு இரவு தங்கியிருக்கிறேன்.

    ReplyDelete
  25. நிறைய அறிந்திராத தகவல்கள் நன்றி....!!!

    ReplyDelete
  26. முத்தான இடுகை உல்லம் கவர்ந்த இடுகை நள்ளிரவில் ஆதாவன் உதிக்கும் காட்சியை அழகுற படம் பிடித்துக் கட்டியமை போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது தொடரட்டும் உமது சிறப்பான பணி

    ReplyDelete
  27. கரண்ட் கட் ப்ராப்ளம் இல்லையென்றாலும் இரவின் ரம்மியத்தை ரசிக்க முடியாமல் போவது வருத்தமே ... தகவலும் , படங்களும் அருமை

    ReplyDelete
  28. ந‌ள்ளிர‌வில் சூரிய‌ன் உதிக்கும் நாடென‌ சின்ன‌ வ‌ய‌சில் ப‌டித்த‌து... உங்க‌ள் த‌ய‌வில் அதைப் ப‌ற்றிய‌ அனைத்தையும் க‌ண்ட‌றிய‌ முடிந்த‌து. த‌ங்க‌ள் சேவை எங்க‌ள் பாக்கிய‌ம்!

    ReplyDelete
  29. நள்ளிரவில் சூரியன் மிகவும் அற்புதமான தகவல் , அழகான படங்கள் அக்கா. அனைத்தும் அருமை.........

    ReplyDelete
  30. நல்ல தகவல்... நன்றி!!

    ReplyDelete
  31. நள்ளிரவுச் சூரியன் படங்கள், தகவல்கள் அருமை. சமீபத்தில் கணவரின் தங்கையும் ஐஸ்லாந்து சென்ற வீடியோ பார்த்தோம் நன்றி நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  32. முதலாவது படம் பார்த்தாலே போதும்.அற்புதம்.இதுபற்றி அறிந்திருந்தாலும் மேலதிகமான தகவல்கள் இன்னும் அர்ர்வம் தருகிறது போய்ப்பார்த்தால் என்னவென்று.நன்றி ஆன்மீகத் தோழி !

    ReplyDelete