Saturday, September 3, 2011

ஜில்லென்று ஐஸோ ஐஸ் நியூஸ்..ஸ்..ஸ்

icecream
icecreama ice cream 14 You can almost hear the ice cream truck going by (37 photos)ice cream 1 You can almost hear the ice cream truck going by (37 photos)ice cream 23 You can almost hear the ice cream truck going by (37 photos)


 ஐஸ்கிரீம் விதம் விதமாய் சாப்பிட குழந்தைகளுக்குப் பிடிக்கும்.
 ஐஸ் கட்டிகளால் உருவாக்கப்பட்ட தங்கும் விடுதி வேண்டுமென்று உங்களில் யாராவது ஆசைப்பட்டதுண்டா? 
அப்போ இது உங்களுக்கான செய்தி.
Ice Hotel
ஸ்வீடனில் உள்ள கிருனா(Kiruna)விலிருந்து 17கி.மீ. தூரத்தின் இருக்யுகஸ்யார்வே (Jukkasjärvi) கிராமம். 

1990ஆம் வருடத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் 
பனி மற்றும் ஐஸ் கட்டிகளாலான இந்த 'ஐஸ் ஹோட்டல் (ICEHOTEL)' உருவாக்கப்படுகிறது. 

டிசம்பர் முதல் ஏப்ரல் வரை இந்த ஐஸ் ஹோட்டல் உபயோகத்தில் இருக்குமாம். 

உலகத்தின் முதல் ஐஸ் ஹோட்டல் என்ற பெருமை இதற்கு உண்டு. 

ஒரு முறை ஐஸ் ஹோட்டலை உருவாக்கிட 10,000 டன்கள் ஐஸும், 
30,000 டன்கள் பனியும் தேவைப்படுகிறதாம். 

எதுக்கு இவ்வளவுன்னு நினைக்கறீங்க இல்லையா? 

ஹோட்டலின் அறைகள் வடிவமைப்புக்கு மட்டுமில்லாம, ஹோட்டலுக்குள் இருக்கும் தூண்கள், சிற்பங்கள், அலங்கார விளக்குகள், அலங்காரப் பொருட்கள், படுக்கைகள், இருக்கைகள் இப்படி எந்த பக்கம் பார்த்தாலும் ஒரே ஐஸ்மயமாயிருக்குமாம். 

எங்கிருந்து கிடைக்குது இவ்வளவு ஐஸ் கட்டிகள்ன்னு யோசித்தால், 
அந்த கிராமத்திலிருக்கும் டோர்னே (Torne) நதியிலிருந்து ஹோட்டல் 
கட்டத் தேவையான ஐஸ் கட்டிகள் கிடைக்கிறதாம்.

ஒவ்வொரு வருடமும் உலகத்தின் பல்வேறு நாடுகளிலிருந்தும் கலைஞர்களை வரவழைத்து அழகான, கலை நயத்துடன் கூடிய 
ஹோட்டலை வடிவமைக்கிறார்கள். இரவில் தூங்கும் போது 
அங்கே நிலவும் வெப்பநிலையின் அளவு -5 டிகிரி செல்ஸியஸ்.!! 

எல்லாம் சரி! எதற்காக இந்த ஐஸ் ஹோட்டலை உருவாக்கணும்?

ஸ்வீடனில் கோடை காலத்தில மட்டுமே காணப்படும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்,
குளிர் காலத்தில் சுவாரஸியமாக பொழுதுபோக்கும் வகையில் உங்களுடைய கிராமத்தில் என்ன இருக்கு என்ற கேள்விக்கு விடையாகவும் இந்த ஐஸ் ஹோட்டலை உருவாக்கியிருக்கிறார் இந்த ஹோட்டலின் ஸ்தாபகர்
Yngve Bergqvist.

இப்போது சில வருஷங்களாக தங்கும் அறைகள் மட்டுமில்லாமல் தேவாலயம், கடை, பொருட்காட்சிகளையும் ஐஸ் கட்டிகளால உருவாக்கி அசத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமிலிருந்து சுமார் 1350 கீமி தொலைவில் இருக்கிறது Kiruna நகரம். 

அங்கிருந்து மிக அருகில் இருக்கும் ஒரு சின்ன கிராமம்தான் Jukkasjärvi (ஜுக்காசார்வி). இங்குதான் முழுக்க முழுக்க ஐஸால் செய்யப்படும் 
அதிசய ஐஸ் ஹோட்டல் உள்ளது.

 அதென்ன "செய்யப்படும்" என்று கேட்கிறீர்களா? ஒவ்வொரு வருடமும் winter இல் கட்டப்பட்டு பிறகு summer இல் கரைந்து ஓடிவிடுகிறது. 

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல ஒவ்வொரு வருடமும் இந்த அதிசயம் கட்டப்படுகிறது! 

என்ன இந்த ஐஸ் ஹோட்டல் இருக்கும் கிராமத்தில் இருந்து 
Artic Circle 200 கீமீ தூரம்தான்.

1990 ஆம் வருடத்தில்தான் இந்த ஹோட்டல் முதலில் கட்டப்பட்டது.

அதன் பின்னர் ஒவ்வொரு வருடமும் வேறுவேறு designகளில் கட்டப்படும் இது ஒரு இன்ஜினியரிங் அற்புதம்.

Torne River எனும் ஒரு ஜீவ நதி பனிக்காலத்தில் உறைந்து போய்விடும் போது இந்த ஐஸ் ஹோட்டல் சடுதியில் கட்டப்படுகிறது.

பிரத்யேகமாக ஒவ்வொன்றாக மெனக்கெட்டு ஒரு நவீன ஹோட்டலின் எல்லா வசதிகளையும் ஐஸில் கொண்டு வந்து பார்ப்போரை அசர வைக்கிறார்கள்.

கடந்த பல வருடங்களாக சலிக்காமல் புதிதுபுதிதாக இந்த ஐஸ் ஹோட்டல் கட்டப்படுகிறது.

Winter வரும்போது கட்டப்படும் இந்த ஹோட்டல் மறுபடியும் summer இல் உருகி Torne River இல் ஐக்கியமாகி விடும்போது மிஞ்சுவது அதைப்பற்றிய நினைவுகளும் அதனுடைய புகைப்படங்களும்தான்.
ICEHOTEL entrance. Photo by bigbenphoto.com.


Art suite The Forest Suite by Andrea Thomson. Photo by photobigben.com.

Midnight Sun. Photo by Håkan Hjort.
Specially designed glass items for ICEHOTEL. Unique, 
 only available at ICEHOTEL.

அடுத்த ஐஸ் நியூஸ்...
மிகவும் அபூர்வமாக தோன்றுகின்ற "ஐஸ் வளையம்'

சுமார் 10அடி விட்டம் கொண்ட அந்த "ஐஸ் வளையம்' நீரின் நடுவில் அழகாக சுழன்றுகொண்டிருக்க்றது.  

ஆற்றின் நடுப்பகுதியிலே ஏதோ ஒரு தட்டு போல் அழகாக சுழன்று கொண்டிருக்கும் அதிசயகாட்சி. 

மெதுவான நீர் ஓட்டத்தினைக் கொண்ட ஆற்றில், குளிர்காலங்களில் இப்படியான ஐஸ் வளையங்கள் தோன்றுமாம். 

மிகவும் அபூர்வமாக தோன்றும் இந்த அதிசய ஐஸ் வளையம் குறுகிய நேரத்தில் இல்லாமலும் போய்விடுமாம் அல்லது உறைந்துவிடுமாம்.

வடதுருவத்தில் ஐஸ் வேகமாக உருகுகிறது: விஞ்ஞானிகள் கவலை
North Pole could be ice-free by 2013 - Tamilnadu News Headlines in Tamil

வெவ்வேறு நாடுகளிலும் ஐஸ் ஹோட்டல்கள்..

பாவம் பர்ஸும் உருகும்.. நடந்தால் வழுக்கும்..

[Ice-Hotel-Japan-09.jpg][Ice-Hotel-Japan-06.jpg]

Hotel de Glace Quebec, Canada


Chena Hot Springs Ice Palace


ALTA IGLOO HOTEL – ALTA, NORWAY
Harbin China Ice & Snow Festival 
ice_home_sale.jpg
பனி விழும் மலர்வனம்.. உன் பார்வை ஒருவரம்...45 comments:

 1. தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தால்
  குளிரடிப்பது போல இருக்கு
  ஐஸ் பதிவு வெரி வெரி நைஸ்
  மனம் கவர்ந்த ப்திவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. குளிர்ச்சியான பதிவு...!

  ReplyDelete
 3. wow, really cool post...The penguin photos are awesome...very N(ice) madam!!

  ReplyDelete
 4. கூலான தகவல்கள் !

  ReplyDelete
 5. இப்பவே குளிருது.....
  இங்கே அடிக்கும் கொடும் வெயிலுக்கு
  ஜில்லான பதிவு
  நன்றி சகோதரி.

  ReplyDelete
 6. படங்கள் பார்த்து ஒருமுறை படித்து முடித்ததும், மீண்டும் படிக்க, ஒரு கடும்கம்பளியைப் போர்த்திக் கொண்டேன். அவ்வளவு ICE & NICE தகவல்கள்.

  தலையைத்தட்டி கீழே சாய்க்கும் பென்குயினாக தினமும் படைப்புகள் தரும் நீங்கள்.

  [நீங்களே ஒரு பெண் குயின் தானே - ஆஹா, என்ன பொருத்தம்!]

  அடிபட்டாலும், [குட்டுப்பட்டாலும் மோதிர விரலால் குட்டுப்படணும் என்பது போல] கீழே விழுந்தாலும், மீண்டும் மீண்டும் எழுந்துவரும் அந்த பென்குயின் போல, தங்களின் விசிறிகளான வாசகர்களாகிய நாங்களோ! என்று நினைத்துக் கொண்டேன்.

  நல்லதொரு வித்யாசமான அழகிய பதிவும், செய்திகளும் அளித்துள்ளதற்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  vgk

  ReplyDelete
 7. ரொம்ப ஐஸ் வச்சுடிங்க!ரொம்ப குளிருதுங்க!
  கடைசி அனிமேஷன் படம் கலக்கல்!எங்க பிடிக்குரிங்க!

  ReplyDelete
 8. இன்று மாறுதலான பதிவு... பதிவை படங்களை பார்த்தவாறே படிக்கும்போதே ஏதோ காஷ்மீர், சிம்லாவில் இருப்பது போன்ற ஃபீலிங்க் வருகிறது....டப டப டப டப டப டப டப ....அட குளிர்ல பல்லேல்லாம் டைப் அடிக்குதுங்க.... நைஸ் ஐஸ் பதிவு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. அது என்ன ஹாஹா சுடு தண்ணீர் கூட காற்றில் வீசியவுடன் ஐஸ்கட்டியாக மாறுகிறதா....ஹா ஹா

  ReplyDelete
 10. உங்களிடமிருந்து வித்யாசமான பதிவு.படங்கள் ரொம்ப அழகா இருக்கு.தகவல்களும் புதியதாக பயனுள்ளதாக இருக்கு.உங்க பதிவிலுள்ள படங்கள் என்னை அவ்விடங்களுக்கு நேரில் அழைத்து சென்று விட்டது.

  ReplyDelete
 11. அஆஹ் அஆஹ் அச் ஹச் ஹச்....

  என்னவா?? தும்மல்பா...


  முதல்ல சாப்பிட ஐஸ்க்ரீம் கொடுத்தீங்க....

  அதன்பின் அழகா ஐஸால் ஹோட்டல் ஆஹா என்ன குளிர் தாங்கலையே....

  அதோட நிறைய தகவல்கள் படங்களுடன்..

  அதோட வளையம் போல நீரில் தானாவே உருவாவது...

  பெங்குவின் நடக்க நடக்க என்னை போலவே பொத்துனு தண்ணிக்குள் விழுவது....

  எல்லாம் ஓக்கே சாமி...

  அதென்னா கடைசில எல்லாம் பார்த்துட்டோம்னு நாங்க சொன்னதுமே இந்தா காஃபின்னு தூக்கி வீசுறீங்க?

  வீசின வேகத்துல புகைமூட்டமாகி பனியாகிவிட்டதே....

  ராஜி ராஜி எப்ப கூட்டிட்டு போறீங்க எங்களை?

  நீங்க கூட்டிட்டு போனால் உங்க பர்ஸ் தாம்பா உருகும்.... ஆனா எங்க கால் வழுக்கும்....

  எப்பப்பா கூட்டிட்டு போறீங்க?

  அருமையான அசத்தலான பகிர்வுப்பா.. அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...

  ReplyDelete
 12. அப்பா ரொம்ப குளிருது
  ஒரு கோபி பார்சல்
  டால்பின் காமெடி சூப்பர்
  this post is very nice..

  ReplyDelete
 13. நீங்களே ஒரு பெண் குயின் தானே - ஆஹா, என்ன பொருத்தம்!]//

  already orey ice-a erukku..postil ulla coments also..

  ReplyDelete
 14. stalin said...
  (n)ice cream........//

  நன்றி.

  ReplyDelete
 15. Ramani said...
  தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தால்
  குளிரடிப்பது போல இருக்கு
  ஐஸ் பதிவு வெரி வெரி நைஸ்
  மனம் கவர்ந்த ப்திவு
  தொடர வாழ்த்துக்கள்//

  வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 16. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
  அருமை .//

  நன்றி.

  ReplyDelete
 17. ஸ்ரீராம். said...
  குளிர்ச்சியான பதிவு...!//

  நன்றி.

  ReplyDelete
 18. Sanju said...
  wow, really cool post...The penguin photos are awesome...very N(ice) madam!!//

  கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 19. koodal bala said...
  கூலான தகவல்கள் !//

  கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 20. டைப் பண்ண ம்ம்முட்ட்டியாமல்...ல்ல்ல்ல்....விர்ர்ரல்ல்ல்ல்கள் எல்ல்ல்லாம்ம்ம்ம் வெட வெடக்குது....

  ReplyDelete
 21. மகேந்திரன் said...
  இப்பவே குளிருது.....
  இங்கே அடிக்கும் கொடும் வெயிலுக்கு
  ஜில்லான பதிவு
  நன்றி சகோதரி.//

  ஜில்லான கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 22. வை.கோபாலகிருஷ்ணன் said...//

  அழகாய் பொருத்தமாய் அற்புதமாய் வழங்கிய கருத்துரைகளுக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.

  ReplyDelete
 23. கோகுல் said...
  ரொம்ப ஐஸ் வச்சுடிங்க!ரொம்ப குளிருதுங்க!
  கடைசி அனிமேஷன் படம் கலக்கல்!எங்க பிடிக்குரிங்க!//

  கலக்கல் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 24. மாய உலகம்4u said...//

  மாறுதலான கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 25. RAMVI said...
  உங்களிடமிருந்து வித்யாசமான பதிவு.படங்கள் ரொம்ப அழகா இருக்கு.தகவல்களும் புதியதாக பயனுள்ளதாக இருக்கு.உங்க பதிவிலுள்ள படங்கள் என்னை அவ்விடங்களுக்கு நேரில் அழைத்து சென்று விட்டது//

  வித்யாசமான கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 26. மஞ்சுபாஷிணி said...
  அஆஹ் அஆஹ் அச் ஹச் ஹச்....

  என்னவா?? தும்மல்பா...//

  வாங்க மஞ்சுபாஷிணி!

  இப்பத்தான தென்துருவத்துக்கு அருகில் போய் நடுங்கிட்டு வந்திருக்கேன்.

  நீங்கள் வேறு வடதுருவத்திற்கு அருகில் கூப்பிடுறீங்களே!

  நினைத்தாலே நடுக்கம்!

  கருத்துரைக்கு நன்றிங்க.

  ReplyDelete
 27. goma said...
  டைப் பண்ண ம்ம்முட்ட்டியாமல்...ல்ல்ல்ல்....விர்ர்ரல்ல்ல்ல்கள் எல்ல்ல்லாம்ம்ம்ம் வெட வெடக்குது....//

  வெட வெட...கருத்துரைக்கு நன்றிங்க ,

  ReplyDelete
 28. siva said...
  அப்பா ரொம்ப குளிருது
  ஒரு கோபி பார்சல்
  டால்பின் காமெடி சூப்பர்
  this post is very nice..//

  சூப்பர் கருத்துரைகளுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 29. //வெவ்வேறு நாடுகளிலும் ஐஸ் ஹோட்டல்கள்..
  பாவம் பர்ஸும் உருகும்.. //

  bank account Freeze ஆகும் .thanks for sharing ,நான் ஐஸ் க்ரீமை மட்டும் சொன்னேன் .

  ReplyDelete
 30. ஒரு வித்யாசமான பகிர்வு இன்று, நன்றி.

  ReplyDelete
 31. கடைசி படம் ஆச்சிரியம்தான் :-)

  உருகக்கூடிய பொருளுக்கு இவ்வளவு டெக்ரேஷனா உண்மையில் ஆச்சிரியமாகவும் பாவமாகவும் இருக்கு


  படங்கள் சூப்பர் . :-)

  ReplyDelete
 32. பதிவை படித்து ஜில்லுன்னு ஆயிட்டது..

  ReplyDelete
 33. ரொம்ப ஜில்லினுதானிருக்கு.பனிக்கட்டியில கட்டிடங்களை கட்டியவனுக்கு வாழ்த்து சொல்லனும்.வெயிலில் கரைந்து போகும்போது எல்லோருக்குமே வருத்தமா இருக்கும்ல...அந்த பெண்குவின் பின்னால் வரும் பெண்குவினை மண்டையில் தட்டி கீழே விழவைத்துவிடும்.அதை காப்பாத்தி நீங்க எடிட் செய்துள்ளது சூப்பர்.
  முன்னொரு முறை ஆஸ்திரேலிய பாலங்கள் பற்றி முழுபதிவு வெளியிட்டிருந்தீர்கள்.ஆன்மீகப் பதிவுகளுக்கு இடையிடையே இப்படியான பதிவுகளும் வெளியிடுங்கள்.

  ReplyDelete
 34. ஜுக்காசார்வி ஐஸ் ஓட்டல் குறித்த தங்களின் பகிர்வு அருமை அட்டகாசம் அதிலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல என்ற வாசகத்தை நினைவு படுத்தியதற்கு நன்றி

  ReplyDelete
 35. Hai!!!!!!!!!!
  Ice ice ice everywhere.
  My heart starts jumped with happy and chill.
  I really enjoyed the penguin pair. hahahahah
  very very nice pictures Rajeswari.
  I enjoyed your writings and pictures most.
  Thanks.
  viji

  ReplyDelete
 36. புதிய தகவல்கள். குளிராகத் தான் இருக்கிறது. இருங்கள் ரஜாய் போர்த்திக் கொண்டு படிக்கிறேன்....

  ஐஸ்கிரீம் படங்களை என் மகள் பார்த்து குஷியாகி விட்டாள்.

  ReplyDelete
 37. *****வை.கோபாலகிருஷ்ணன் said..
  படங்கள் பார்த்து ஒருமுறை படித்து முடித்ததும், மீண்டும் படிக்க, ஒரு கடும்கம்பளியைப் போர்த்திக் கொண்டேன்.

  அவ்வளவு ICE & NICE தகவல்கள்.

  தலையைத்தட்டி கீழே சாய்க்கும் பென்குயினாக தினமும் படைப்புகள் தரும் நீங்கள்.

  [நீங்களே ஒரு பெண் குயின் தானே - ஆஹா, என்ன பொருத்தம்!]

  அடிபட்டாலும், [குட்டுப்பட்டாலும் மோதிர விரலால் குட்டுப்படணும் என்பது போல] கீழே விழுந்தாலும், மீண்டும் மீண்டும் எழுந்துவரும் அந்த பென்குயின் போல, தங்களின் விசிறிகளான வாசகர்களாகிய நாங்களோ! என்று நினைத்துக் கொண்டேன்.

  நல்லதொரு வித்யாசமான அழகிய பதிவும், செய்திகளும் அளித்துள்ளதற்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.*****

  //siva said...
  நீங்களே ஒரு பெண் குயின் தானே - ஆஹா, என்ன பொருத்தம்!]//

  already orey ice-a erukku..postil ulla coments also..//

  என் பின்னூட்டத்தை கூர்ந்து கவனித்து எழுதியுள்ள கருத்துக்களுக்கு நன்றிகள்.
  vgk

  ReplyDelete
 38. ;)
  வநமாலீ கதீ சார்ங்கீ
  சங்கீ சக்ரீ ச நந்தகீ!
  ஸ்ரீமாந்நாராயணோ விஷ்ணுர் வாஸுதேவோSபிரக்ஷது!!

  ReplyDelete
 39. 975+2+1=978 ;)))))

  என் பின்னூட்டத்தை இன்று மீண்டும் படிக்க ஜில்லென்று கப்-ஐஸ் போலவே இருந்தது. தங்கள் பதிலுக்கும் நன்றி. சிவா என்பவர் இவற்றைக் கூர்ந்து நோக்கி எழுதியுள்ளதும் சிறப்பு. ;)))))

  ReplyDelete