





கேரள மாநிலத்தில் ஜாதி, மத பேதமின்றிக் கொண்டா டப்படும் மிகப் பெரிய திருவிழா ஓணம் பண்டிகையாகும்.
எந்தை தந்தைதந்தை
தந்தைதம் மூத்தப்பன்
ஏழ்ப்படி கால் தொடங்கி
வந்து வழிவழி ஆட் செய்கின்றோம்
திருவோணத் திருவிழாவில்
திருமால்வாமன அவதாரம் எடுத்து வந்து மகாபலிக்கு முக்தியளித்த நாளையே திருவோணத் திருநாளாகக் கொண்டாடுகின்றனர்.
திருவோண நாளில் விழாவைக் காண மகாபலி சக்கரவர்த்தி வருகிறார் என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் நம்பிக்கை.
எந்தை தந்தைதந்தை
தந்தைதம் மூத்தப்பன்
ஏழ்ப்படி கால் தொடங்கி
வந்து வழிவழி ஆட் செய்கின்றோம்
திருவோணத் திருவிழாவில்
திருமால்வாமன அவதாரம் எடுத்து வந்து மகாபலிக்கு முக்தியளித்த நாளையே திருவோணத் திருநாளாகக் கொண்டாடுகின்றனர்.
திருவோண நாளில் விழாவைக் காண மகாபலி சக்கரவர்த்தி வருகிறார் என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் நம்பிக்கை.

திருவோண நாளுக்கு பத்து நாட்கள் முன்னரே விழாகளை கட்டத் தொடங்கிவிடுகிறது.
"அத்தம் (ஹஸ்தம்) தொடங்கி பத்து நாள்வரை' என்பது சொல்வழக்கு. திருவோண நாளில் தன் மக்களைத் தேடி வரும் மகாபலி மன்னனை வரவேற்க கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் "அத்தப் பூக்கோலம்' போட்டு, புத்தாடைகள் அணிந்து தீபாவளி போன்றே பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுகின்றனர்.
"ஓண சத்யா' எனப்படும் ஓண விருந்தில் கேரளத்தின் பாரம்பரிய உணவு வகைகள் இடம் பெறுகின்றன.
புதுமணத் தம்பதிகள் இந்த நாளை தலை தீபாவளி போன்று தலை ஓணம் என்று மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். கேரளம் மட்டுமின்றி, கேரள மக்கள் வாழும் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்களிலும் ஓணம் கொண்டாடப்படுகிறது.

திருவோணத் திருவிழாவோடு தொடர்புடைய திருத்தலம் திருக்காட்கரை ஆகும்.
வாமன அம்சமாக எழுந்தருளியிருக்கும் பெருமாள்,
தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள் புரிகிறார்.
திருக்காட்கரை அப்பன் என்னும் திருநாமம் கொண்ட இவர் தனது நான்கு கரங்களில் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஆகிய வற்றை ஏந்தியுள்ளார்.
தாயார் பெருஞ்செல்வ நாயகி, வாத்சல்யவல்லி என்னும் திருப்பெயர் களில் விளங்குகிறாள்.
திருக்காட்கரை அப்பனுக்கு நேந்திரம் வாழைக்குலை
வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
தங்களது கோரிக்கைகள் நிறைவேற பக்தர்கள் ஓணம் பண்டிகை நாளன்று வெகு அதிகாலையிலேயே நேந்திரம் குலைகளைத் தோளில் சுமந்து நீண்ட வரிசையில் நின்று சமர்ப்பிப்பதைக் காணலாம்.
அந்தக் குலைகள் ஆலய முன் விதானங்களில் கட்டித் தொங்கவிடப்படுகின்றன.
வீட்டிலும் ஓணப் பண்டிகை நாளன்று மரத்தாலான
திருக்காட்கரை அப்பன் சிலை வைத்து வழிபாடுகள் செய்கின்றனர்.

முதன்முதலாக திருக்காட்கரைதலத்தில் துவங்கிய ஓணத் திருவிழாவே காலப்போக்கில் கேரள மாநிலம் முழுவதும் பரவியதாகக் கூறுகிறார்கள்.
கபில முனிவர் இத்தலத்துப் பெருமாளை வழிபட்டதால், இங்குள்ள தீர்த்தம் கபில தீர்த்தம் எனப்படுகிறது.
இந்த கபில தீர்த்தத்திலுள்ள நீரைதான் மகாபலி கமண்டலத்தில் எடுத்து வாமனருக்கு
மூன்றடி நிலம் தருவதாக தாரை வார்த்துக் கொடுத்தாராம்.
விருத்த விமானம் எனப்படும் விமானத் துடன் கூடிய இந்தக் கோவிலில் சாஸ்தாவிற்கும் மகாலட்சுமிக்கும் சந்நிதிகள் உள்ளன.
இங்குள்ள சிவலிங்கம் மகாபலி சக்கரவர்த்தி வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
கேரளப் பகுதியில் அதிக அளவில் விளையும் சுவை மிகுந்த நேந்திரம் வாழைக்கும் இத்திருத் தலத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
இப்பகுதி பக்தர் ஒருவர் தனது விளைநிலத்தில் வாழை மரங்கள் பயிரிட, அவை வளர்ந் தும் பலன் தராமல் அழிந்து போயிற்றாம்.
இவ்வாறு பல முறை நிகழவே, அவர் தங்கத்தால் செய்யப்பட்ட வாழைக் குலை ஒன்றை காட்கரை அப்பனுக்குச் சமர்ப்பித்து தனது குறையை முறையிட, பக்தரின் வேண்டுகோளை ஏற்று இறைவன் தனது அருட்பார்வையை வாழை மரங்களின் மீது செலுத்தினார்.
உயர்ந்து வளர்ந்திருந்த வாழை மரங்களில் குலைகள் காய்த்துத் தள்ளிற்றாம்.
![[Gal1]](http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T5_694.jpg)
எம்பெருமானின் நேத்திரங்களின் (கண்களின்) அருட்பார்வை பெற்று செழித்து வளர்ந்த வாழைக் குலைகள், அன்றிலிருந்து "நேத்திரம் வாழை'யெனப்பட்டு, நேந்திரம் வாழையென மாறிற்றாம்!

எம்பெருமானிடம் நேர்ந்து கொண்டு இந்த வாழைப் பழங்கள்
உருவானமையால் நேந்திரம் வாழை என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறுவதுமுண்டு.

இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட பொன் வாழைக் குலைகளில் ஒன்றைக் காணாத இப்பிரதேச மன்னன் ஒருவன், ஆலயத்துக்கு தினந்தோறும் வந்து காட்கரை அப்பனை வழிபடும் யோகி ஒருவரின்மீது சந்தேகப்பட்டு திருட்டுக் குற்றம் சுமத்தி, யோகிக்கு தண்டனை வழங்கினான்.
அதன்பின் அந்தப் பொன் வாழைக் குலை காட்கரை
அப்பனின் திருச்சந்நிதியிலேயே கண்டெடுக்கப்பட்டது.
தன்னைச் சந்தேகப்பட்டதற்காக மனம் வருந்திய யோகி சபித்துவிட்டு தன் உயிரை மாய்த்துக் கொள்ள, யோகி பிரம்மராட்சஸனாகி இத்தலத்தில் திரிந்து கொண்டிருந்தாராம்.
பின் பக்தர்கள் அனைவரும் தங்கள் சாபம் தீரவேண்டி யோகியை வழிபட்டு, இத்தலத்தில் யோகிக்கு கோவில் கட்டி தினமும் வழிபாடு செய்து அவரது ஆத்மா சாந்தி யடையச் செய்தனராம்.
இன்றளவும் திருக் காட்கரை அப்பனை வழிபட்டுச் செல்லும் பக்தர்கள் இந்த யோகியின் சந்நிதிக்குச் சென்று வழிபட்டுவிட்டே செல்கின்றனர்.
பின் பக்தர்கள் அனைவரும் தங்கள் சாபம் தீரவேண்டி யோகியை வழிபட்டு, இத்தலத்தில் யோகிக்கு கோவில் கட்டி தினமும் வழிபாடு செய்து அவரது ஆத்மா சாந்தி யடையச் செய்தனராம்.
இன்றளவும் திருக் காட்கரை அப்பனை வழிபட்டுச் செல்லும் பக்தர்கள் இந்த யோகியின் சந்நிதிக்குச் சென்று வழிபட்டுவிட்டே செல்கின்றனர்.







அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நண்பர்களுக்கும் ஓணம் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஓணத் திருநாளாம் இன்று
ReplyDeleteநண்பர்கள் எல்லோரும்
நற்கரிய வளங்கள் பெற்று
நீடூழி வாழ
வத்சல்யவல்லி அருள்பெற்றோம்.
நன்றி சகோதரி.
நண்பர்கள்அனைவருக்கும் ஓணத் திருநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதிருகாட்கரை அப்பன் தரிசனம் காலையில்... மகிழ்ச்சி.
ReplyDeleteதிருகாட்கரை எந்த மாவட்டம் எந்த ஊர்வழியாக எந்த பெரிய சிட்டி அருகில் உள்ளது போன்ற விவரங்களையும் சொல்லியிருந்தால் கூடுதல் தகவல்கள் கிடைத்தது போலிருக்கும் எங்களுக்கு.
இனிவரும் தலங்களின் வழிதடங்களும்கூறுங்கள் அம்மா.எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். நன்றி பகிர்வுக்கு
//அருள்தரும் வாத்சலய அன்னை வாத்சல்யவல்லி//
ReplyDeleteஆஹா! தலைப்பிலேயே எவ்வளவு வாத்சல்யம்! கொட்டிக்கிடக்குது,தங்கத் தலைவியாகிய தங்களைப்போலவே!
பிறகு முழுவதும் பொறுமையாகப்படித்து விட்டு மீண்டும் வருவேன்.
திருவோணத்திரு நாளன்று
ReplyDeleteதிக்கெக்கும் முழங்கிடும் பஞ்ச வாத்யம்.
அழகான கோலம் சுவையான உணவு.
சும்மாவா சொன்னார்கள் !
கேரளாவை !
கடவுளின் சொந்த நாடென்று !!
(God's Own Country )
அழகான உங்கள் பதிவு
வசீகரிக்கிறது.
வாழ்த்துக்கள்.
சுப்பு ரத்தினம்.
super! ஓணப்பண்டிகை வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய ஓணம் திரு நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteநேத்திரம் பழம் என்பதற்கு இப்படி ஒரு காரணம் இருப்பது
தங்கள் மூலம்தான் தெரிந்து கொண்டேன்.மகிழ்ச்சி
ஓணம் பண்டிகை குறித்த விளக்கங்களும்
படங்களும் வழக்கம் போல் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
அவ்வளவு உயரமான வாழைத்தாரை எப்படித்தான் போட்டோவில் தலையோடு கால் கவரேஜ் செய்தீர்களோ!
ReplyDeleteபார்க்கவே வெகு அருமையாகவும், அதிசயமாகவும் உள்ளது.
இறைவனின் படைப்புக்களில் இதுவும் ஒரு அதிசயம் தானே!
நண்பர்கள் அனைவருக்கும் திருவோண வாழ்த்துக்கள் .
ReplyDeleteவாமனாவதாரம் போல மிகச்சிறியதாக முதலில் உருவாகும் வாழைத்தார் (குலை), விஸ்வரூபம் எடுத்து, ஓங்கி உலகளந்த பெருமாள் போல வளர்ந்துள்ள அழகை, பெருஞ்செல்வ நாயகியான, வாத்சல்யவல்லியான எங்கள் பேரன்புக்கும்,பெரும் மதிப்புக்கும் உரிய திருமதி இராஜராஜேஸ்வரி அம்பாளால் மட்டுமே இது போல அழகாக ஒரு பதிவாகத் தந்தருள முடியும்.
ReplyDeleteஅம்பாளுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், வணக்கங்கள், நன்றிகள்.
தொடரட்டும் தினமும் இந்த மிகச்சிறந்த ஆன்மீகப்பணிகள். vgk
திருவோண நாளுக்கு பத்து நாட்கள் முன்னரே விழாகளை கட்டத் தொடங்கிவிடுகிறது.
ReplyDeleteஆமாம் மேடம் அதனை காண அருமையாக இருக்கும் .நான் ஒரு ஒணத்திர்க்கு கேரளாவில் இருந்து அனுபவித்தேன் .
புதுமணத் தம்பதிகள் இந்த நாளை தலை தீபாவளி போன்று தலை ஓணம் என்று மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.
அமாம் மேடம் தலை தீபாவளி தலைப்பொங்கள் மாதிரி அவர்களுக்கு தலை ஓணம் என்று கொண்டாடுவார்கள் .
மாப்பிள்ளைக்கு சீரும் கொடுப்பார்கள்
வாழ்த்துக்கள்..
ReplyDeleteபதிவும் படங்களும் அருமை! அத்தப்பூக் கோலங்கள் கண்ணை விட்டகல மறுக்கின்றன. கேரள சகோதர சகோதரிகளுக்கு ஓணத்திருநாள் வாழ்த்துகள்!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமாய உலகம் said...
ReplyDeleteஅனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நண்பர்களுக்கும் ஓணம் நல்வாழ்த்துக்கள்/
நன்றி. இனிய ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்!
மகேந்திரன் said...
ReplyDeleteஓணத் திருநாளாம் இன்று
நண்பர்கள் எல்லோரும்
நற்கரிய வளங்கள் பெற்று
நீடூழி வாழ
வத்சல்யவல்லி அருள்பெற்றோம்.
நன்றி சகோதரி.//
கருத்துரைகளுக்கு நன்றி. இனிய ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்!
கடம்பவன குயில் said...
ReplyDeleteதிருகாட்கரை அப்பன் தரிசனம் காலையில்... மகிழ்ச்சி.
திருகாட்கரை எந்த மாவட்டம் எந்த ஊர்வழியாக எந்த பெரிய சிட்டி அருகில் உள்ளது போன்ற விவரங்களையும் சொல்லியிருந்தால் கூடுதல் தகவல்கள் கிடைத்தது போலிருக்கும் எங்களுக்கு.
இனிவரும் தலங்களின் வழிதடங்களும்கூறுங்கள் அம்மா.எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். நன்றி பகிர்வுக்கு//
நன்றிங்க கருத்துரைக்கு. இனி குறிப்பிடுகிறேன் பதிவில்.
இனிய ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்!
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete//அருள்தரும் வாத்சலய அன்னை வாத்சல்யவல்லி//
ஆஹா! தலைப்பிலேயே எவ்வளவு வாத்சல்யம்! கொட்டிக்கிடக்குது,தங்கத் தலைவியாகிய தங்களைப்போலவே!
பிறகு முழுவதும் பொறுமையாகப்படித்து விட்டு மீண்டும் வருவேன்./
தங்களின் இனிய பொறுமையான உற்சாகமூட்டும் அனைத்துகருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.
தங்கள் கருத்துரை வெளிச்சத்தில் பதிவுகள் புது மெருகு அடைகின்றன. நன்றி..
இனிய ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்!
sury said...
ReplyDeleteதிருவோணத்திரு நாளன்று
திக்கெக்கும் முழங்கிடும் பஞ்ச வாத்யம்.
அழகான கோலம் சுவையான உணவு.
சும்மாவா சொன்னார்கள் !
கேரளாவை !
கடவுளின் சொந்த நாடென்று !!
(God's Own Country )
அழகான உங்கள் பதிவு
வசீகரிக்கிறது.
வாழ்த்துக்கள்.
சுப்பு ரத்தினம்.//
பஞ்சவாத்தியமாய் வசீகரிக்கும் கருத்துரைகளுக்கு நன்றி. இனிய ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்!
This comment has been removed by the author.
ReplyDeleteஅம்பலத்தார் said...
ReplyDeletesuper! ஓணப்பண்டிகை வாழ்த்துக்கள்./
நன்றி.
இனிய ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்!
Ramani said...
ReplyDeleteஇனிய ஓணம் திரு நாள் வாழ்த்துக்கள்
நேத்திரம் பழம் என்பதற்கு இப்படி ஒரு காரணம் இருப்பது
தங்கள் மூலம்தான் தெரிந்து கொண்டேன்.மகிழ்ச்சி
ஓணம் பண்டிகை குறித்த விளக்கங்களும்
படங்களும் வழக்கம் போல் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்//
மிக மிக அருமையான கருத்துரைக்கு நன்றி.
இனிய ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்!
M.R said...
ReplyDeleteதிருவோண நாளுக்கு பத்து நாட்கள் முன்னரே விழாகளை கட்டத் தொடங்கிவிடுகிறது.
ஆமாம் மேடம் அதனை காண அருமையாக இருக்கும் .நான் ஒரு ஒணத்திர்க்கு கேரளாவில் இருந்து அனுபவித்தேன் .
புதுமணத் தம்பதிகள் இந்த நாளை தலை தீபாவளி போன்று தலை ஓணம் என்று மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.
அமாம் மேடம் தலை தீபாவளி தலைப்பொங்கள் மாதிரி அவர்களுக்கு தலை ஓணம் என்று கொண்டாடுவார்கள் .
மாப்பிள்ளைக்கு சீரும் கொடுப்பார்கள்/
அருமையான கருத்துரைக்கு நன்றி.
இனிய ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்!/
இனிமையான அருமையான கருத்துரைக்கு நன்றி.
இனிய ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்!
வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteவாழ்த்துக்கள்../
நன்றி.
இனிய ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்!
நிலாமகள் said...
ReplyDeleteபதிவும் படங்களும் அருமை! அத்தப்பூக் கோலங்கள் கண்ணை விட்டகல மறுக்கின்றன. கேரள சகோதர சகோதரிகளுக்கு ஓணத்திருநாள் வாழ்த்துகள்!//
இனிமையான அருமையான கருத்துரைக்கு நன்றி.
இனிய ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்!
பதிவுக்கு மிக்க நன்றி
ReplyDeleteகீழ்க்கண்ட இணைப்புகளில் ஆலயம் செல்லும் வழி பற்றிய விபரங்கள் உள்ளன.
http://www.karma.org.in/product_info.php?cPath=28_396&products_id=230
http://www.ahobilam.com/divyadesams/dd61.aspx
படங்களுடன் நல்ல பகிர்வு. வாழைத்தார் பிரமாதம்.
ReplyDeleteஅனைத்து நண்பர்களுக்கும் ஓணத்திருநாள் வாழ்த்துக்கள்.
ஓணம் பற்றிய தகவல்களும் படங்களும் நன்று.ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஒணம் நல் வாழ்த்துகள்!
ReplyDeleteஓணத்திருநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteஓணம் வாழ்த்துகள். ஓணம் ஸ்பெஷல் இன்றோடு முடிகிறதா....ருசிக்கத் தூண்டும் உணவு வகைகளின் போட்டோக்கள்.
ReplyDeleteVery very nice post Rajeswari.
ReplyDeletePretty flower kolams, Ona sadya,
all of us are celebarated Onam with your writings.
Thanks dear.
viji
1000+4+1=1005 ;)))))
ReplyDeleteஉணர்வு பூர்வமான ஆத்மார்த்த பதில் மகிழ்வளிக்கிறது. நன்றி.