தாய்லாந்து யானைகளுக்குப் பெயர்பெற்றது. இந்த யானை பொம்மைகள் கருத்தைக் கவர்ந்தன.
Elephant village என்ற இடத்தில் யானைகளின் சகாசக் காட்சி நிலையத்தில் வரிசையாக யானைகளுக்குப்பிடித்த உணவுகளை வைத்திருந்தார்கள்.வாங்கி யானைகளுக்குக்கொடுக்கலாம்.
யானைகளின் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி. யானைகள் ஒவ்வொரு நாட்டுப் பெயர்பொறித்த விரிப்புக்களோடு வருகின்றன.
இரு அணிக்கும் இடையே நடக்கிறது கால்பந்து மோதல்.
யானைகள் லாவகமாக கோல் போட்டு விளையாடுகின்றன.
யானைகள் மெல்ல மெல்ல அணிவகுத்து வந்து வேடிக்கை காட்டி விளையாடி மகிழ்வித்தன.
அழகிய புலிகள் உயிரோடு, அதற்குப் பக்கத்தில் நின்று படம் கூட எடுக்கலாம் தைரியம் இருந்தால்....
முதலைகளின் சாகசத்தில் சிறுவன் முதலையின் வாய்க்குள் தலையைக் கவிழ்ப்பதுமாக நடக்கிறது விளையாட்டு.
The Erawan Museum
Sukhumvit Road as you enter Samut Prakan
Damnoen Saduak என்ற பகுதியில் இருக்கும் மிதக்கும் சந்தை (Floating Market). Damnoen Saduak என்ற வாய்க்காலுக்கு இருமருங்கும் பெட்டிக்கடைகள் நிறைக்க, நடுவில் ஓடும் நீரோடையில் இந்த மிதக்கும் சந்தை வியாபாரம் களை கட்டுகின்றது
ஆசியாவின் வெனீஸ் என்று அழைக்கப்படும் அழகிய இடம்.
ஜாக்கிசானின் திரைப்படம் மற்றும் பல படங்களில் இந்த Floating Market நடித்திருக்கும் நட்சத்திர அந்தஸ்து பெற்றது.
இங்கே கால்வாய்க்கு இருமருங்கிலும் அமைந்த பெட்டிக் கடைகளோடு, கூடவே கால்வாயில் பயணிக்கும் நீண்ட வள்ளங்களில் ஒவ்வொரு வியாபாரியும் தங்கள் பொருட்களை நிறைத்துக் கொண்டே நீர்ப்பாதையின் இரு மருங்கும் பயணிப்பார்.
இந்த இடத்துக்குப் பொருட்களை வாங்க வரும் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர்வாசிகள் தமக்கான வள்ளங்களில் கட்டணம் கொடுத்து ஏறிப் பயணித்துக் கொண்டே எதிர்ப்படும் இந்த மிதக்கும் கடைகளில் பேரம் பேசிப் பொருட்களை வாங்குவார்கள்.
பாங்காக்கிலிருந்து 200 கி. மீ தொலைவில் Suphan Buri province மியூசியம் சுற்றுலா சொர்க்கமாக அமைந்திருக்கிறது.
டிராகன்கள் நெருப்பைக்கக்கும் எனக் கேள்விப்பட்டிருப்போம்.
வானளாவிய பிரம்மாண்டமான உருவத்துடனும் உயிரோட்டமான வண்ணப்பூச்சுடனும் இந்த டிராகன் தண்ணீரைக் கக்கிக்கொண்டிருப்பது கண்கொள்ளாக்காட்சி.
5000 வருட சீனாவின் வரலாற்றுப் பெருமையையும் பாரம்பர்ய பழமையையும் விவரிக்கும் 20 அதிநவீன கணிணிகள் இந்த அழகுவண்ண டிராகனின் உள்ளே வடிவமைக்கட்டிருக்கும் அதிசய உலகம்.
படங்களும் வவரங்களும் அருமை.படங்கள் ,விவரங்களைச் சொல்லாமல் சொல்கின்றன,
ReplyDeleteவிளக்கங்கள் இடங்களைப் படம் பிடித்துக் காட்டுகின்றன
பல தெரியாத விஷயங்கள்..
ReplyDeleteநன்றி தோழி..
நல்ல விவரங்கள். யானைகள் விழா நடப்பது பற்றி சமீபத்தில் எங்கோ படித்தேன்.
ReplyDeleteதாய்லாந்து நன்றாக இருக்கிறது.
ReplyDeleteவிசயங்கள் தெரிந்து கொண்டேன்
ReplyDeleteஎனக்கு மிகவும் பிடித்தது முதல் படம்
அதிலுள்ள வேலைப்பாடு அதன் அழகு
மிகவும் பிடித்துள்ளது மேடம்
படங்களும் பகிர்வும் மிக நன்று.
ReplyDeleteadada.....sooper
ReplyDeleteகுட்டிக்குட்டி யானை பொம்மைகள் அழகு.
ReplyDeleteநல்ல பசியோடு டிபன் சாப்பிட வரிசையில் வந்து நிற்கும் நிஜ யானைகள் அருமை.
ஒவ்வொரு நாட்டு யானைகளின் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி, ஆஹா எவ்வளவு அழகாக அணிவகுத்துச் செல்கின்றன.
யானைகளின் கால் பட்டும் அந்து பந்து சேதாரமடையாதபடி, பூப்போல உதைக்கப் பழக்கியிருப்பர்களோ!
யானைகள் லாவகமாக கோல் போடுவதைப் பார்ப்பது நல்லதொரு வேடிக்கை தான்.
ஆனைக்கும் அடிசறுக்கும் என்பார்களே, அது தானோ அந்த ஒன்பதாம் நம்பர் இங்கிலாந்து யானைக்கு ஏற்பட்டுள்ளது! அல்லது அது கொக்கை எங்காவது பார்த்து அதுபோல தானும் ஒத்தைக்காலில் நிற்கணும் என்ற தவ முயற்சியோ! பாவம் அது!!
அந்தக்குட்டியூண்டு குழந்தை யானை very cute. அது குறும்புடன் குறுக்கும் நெடுக்குமாக தாயுடன் சேர்ந்து நடந்து செல்லும் காட்சிகளை Discovery இல் பார்க்கும்போது, அந்த பெரிய யானை இடறிவிடப்போகிறதே என்ற பயம் எனக்கு ஏற்படும். ”கோழி மிதித்து குஞ்சு சாகுமா” தான் இங்கேயும்.
மொத்தத்தில் “நல்ல நேரம்” M.G.R, K.R Vijaya & அவர்கள் வளர்க்கும் ராமு யானை கதைதான் ஞாபகம் வந்தது.
புலிகளும், முதலைகளும் படத்தில் பார்த்தாலே பயமா இருக்குதுங்க!
டிராகன் தண்ணீரைக் கக்கிக்கொண்டிருப்பது கண்கொள்ளாக்காட்சி தான்.
தாய்லாந்தை ஒரு தாய் தன் குழந்தைக்குக் காட்டுவது போல, எங்களுக்கெல்லாம் அழகாகவே காட்டிவிட்டீர்கள். மிக்க நன்றி.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
2-3-சிலவேளை 4லோ தாய்லாந்து பற்றிய கருத்திடுகை தந்தேன். வாழ்த்துகள் சகோதரி. மிக அருடையான படங்கள் விவரணங்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
சூப்பருங்க!
ReplyDeleteதெற்காசிய நாடுகளில்
ReplyDeleteதாய்லாந்துக்கு இன்று
கூட்டிச் சென்றமைக்கு
மிக்க நன்றி சகோதரி...
வழக்கம்போல படங்கள் எல்லாமே சிறப்பாக இருந்தன. ஒரு சில படங்கள் ஓப்பன் ஆக மறுக்கின்றன. முயற்சி செய்கிறேன்.
ReplyDeleteபடங்கள் எல்லாமே பிரமாதம். முதல் யானைப் பொம்மையின் வேலைப்பாடு அருமை.
ReplyDeleteநல்ல தகவல்கள். பகிர்வுக்கு நன்றிங்க.
அழகான படங்கள் சூப்பராய் இருக்கு
ReplyDeleteஎப்படி !!இப்படி!!!!
ReplyDeleteசூப்பர்
வாழ்த்துக்கள் ...
என்றும் அன்புடன் ...
யானைக்குட்டி ...
அழகின் தாய் வீடு போல் இருக்கும்
ReplyDeleteதாய்லாந்து குறித்த பதிவு அற்புதம்
இந்தப் படகு மார்கெட் மட்டும் உலகம் சுற்றும் வாலிபனில்
பார்த்த ஞாபகம்.மற்ற அற்புத அழகிய தகவல்கள் எல்லாம்
எனக்கு புதியவையே
அருமையான தகவல்களை படங்களுடன்
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
அருமையான படங்களுடன் பதிவு.
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteஅருமையான படங்கள்.
வாழ்த்துக்கள் அம்மா.
பதிவு சூப்பர்.அதை விட படங்கள் அசத்தல்
ReplyDeleteஇதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5
தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5
தாய்லந்து படங்களும்
ReplyDeleteகட்டுரையும் அருமை
நேரில் சென்று காண்பது போல்
உள்ளது!
புலவர் சா இராமாநுசம்
இன்றைய வலைச்சரத்தில் தங்களை
ReplyDeleteஅறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
Super-duper Post Amma!!! and attractive pictures that compliment the post. :)
ReplyDeleteWith Love
Lakshmi
;)
ReplyDeleteவநமாலீ கதீ சார்ங்கீ
சங்கீ சக்ரீ ச நந்தகீ!
ஸ்ரீமாந்நாராயணோ விஷ்ணுர் வாஸுதேவோSபிரக்ஷது!!
1021+2+1=1024
ReplyDelete