
ஆரம்பகாலத்தில் செண்பக காடாக இருந்து செண்பகவனம் என அழைக்கப்பட்டு பின் "சேண்பாக்கம்' என்று அழைக்கப்பட்டதாகவும், சுயம்புவாக விநாயகர் சபை அமைத்து இருப்பதால் "ஸ்வயம்பாக்கம்' என இத்தலத்திற்கு பெயர் வந்ததாகவும், அதுவே மருவி சேண்பாக்கம் என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
![[Image1]](http://img1.dinamalar.com/Kovilimages/T_500_543.jpg)
ஆதிசங்கரருக்கு சுயம்புமூர்த்தி தரிசனம் செய்வதில் மிகவும் விருப்பம். சேண்பாக்கத்தில் 11 சுயம்புமூர்த்திகள் இருப்பதை அறிந்து இங்கு வந்தார்.
11 சுயம்புமூர்த்திகளும் லிங்க வடிவில் இருப்பதைக் கண்டார்.
தன் ஞானதிருஷ்டியால் அனைத்து லிங்கங்களும் விநாயகரே என்பதை அறிந்தார்.
சுயம்பு மூர்த்திகளுக்கு எதிரில் ஈசான்ய மூலையில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்தார்.
ஆதிசங்கரரின் வழிபாட்டிலிருந்தே இந்த கோயிலின் பழமையும் சிறப்பும் விளங்கும்.
இந்த யந்திரத்தின் அருகே நவக்கிரக மேடை அமைத்துள்ளனனர்.
இதிலிருக்கும் சனிபகவான் தனக்கு அதிபதியான விநாயகரை பார்த்திருப்பது தனி சிறப்பு.
கோயில் நுழைவுவாயில்

- 11 சுயம்பு மூர்த்திகள்: மூலஸ்தானத்தில் உள்ள 11 விநாயகருக்கும் தனித்தனியே பெயர் உள்ளது.
- பால விநாயகர், நடன விநாயகர், ஓம்கார விநாயகர், கற்பக விநாயகர், சிந்தாமணி விநாயகர், செல்வ விநாயகர், மயூர விநாயகர், மூஷிக விநாயகர், வல்லப விநாயகர், சித்திபுத்தி விநாயகர், பஞ்சமுக விநாயகர்.
![[Gal1]](http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T3_543.jpg)
மூலஸ்தானத்தில் 11 விநாயகர்
![[Gal1]](http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T1_543.jpg)
- இதில் பால விநாயகர் எப்போதும் நீரில் மூழ்கியபடி காட்சி தருகிறார். ஆறாவதாக வீற்றிருக்கும் செல்வ விநாயகருக்கு தான் அபிஷேகமும், ஆராதனையும்.நடைபெறுகிறது.
விநாயகருக்கு பூஜை
![[Gal1]](http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T9_543.jpg)

- பதினாறு வகை செல்வங்களில் மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமான 11 செல்வங்களை அள்ளித்தரும் வள்ளலாக 11 விநாயகர்கள் உள்ளனர். "விநாயக சபை' என்று இந்த அமைப்புக்கு பெயரிட்டுள்ளனர்..
- யானை வாகனம்: பொதுவாக விநாயகரின் எதிரே மூஷிக வாகனம் இருப்பதே இயல்பு.
- ஆனால், செல்வவிநாயகருக்கு எதிரில் யானை வாகனம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
- காலப்போக்கில் ஒவ்வொரு விநாயகருக்கும் மூஷிக வாகனங்களை பிரதிஷ்டை செய்தனர்.
- பதினொரு விநாயகர், யானை மற்றும் மூஷிக வாகனங்கள், கொடிமரம் ஆகியவற்றை சேர்த்து பார்க்கும் போது, "ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தின் அமைப்பில் தெரியும்.
- தேவர்கள், ரிஷிகள் தினமும் இங்கு வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது. அதற்கு வசதியாக மூலஸ்தானத்திற்கு மேற்கூரை கிடையாது. கோயில் கொடிமரம் மற்ற கோயில்களைப் போல் வெளியே இல்லாமல், மூலஸ்தானத்திலேயே அமைந்துள்ளது மற்றொரு விசேஷம்.

- இங்கு அனைத்துமே சுயம்பு என்பதால் ஒவ்வொரு விநாயகரையும் அந்தந்த பெயரில் சுதையில் வடித்து கோயில் சுற்று சுவரில் வைத்துள்ளார்கள்.
- விநாயகரின் பின்புறம் மீனாட்சி சுந்தரேஸ்வரரும், அன்னை காமாட்சியும் உள்ளனர்.
- இங்கு இரண்டு தெட்சிணாமூர்த்திகள் உண்டு. அதில் ஒருவர் விநாயகரைப்போலவே சுயம்பு மூர்த்தி.
- தல விருட்சமாக இருக்கும் வன்னிமரம் மிகவும் சக்தி வாய்ந்தது.
- கோயில் உருவான காலத்திலிருந்தே இருக்கும் இந்த மரம் மிகப்பெரிதாக வளர்ந்துள்ளது.
- விநாயகர் கோயிலில் வன்னிமரம் இருப்பது மிகவும் விசேஷமானது.
- வன்னிமரத்தின் அதிபதி சனீஸ்வரன். எனவே சனி தோஷம் உள்ளவர்கள் இந்த பழமையான மரத்தை வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.
- இதற்கு தனியாக விஜயதசமி நாளில் சிறப்பு பூஜையும் உண்டு.
மூலஸ்தானத்தில் கொடிமரம்
![[Gal1]](http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T7_543.jpg)
- திருமண தடை உள்ளவர்கள், குழந்தை இல்லாதவர்கள் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்து தீபம் ஏற்றி விநாயகரை வழிபாடு செய்தபின், ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரம் அமைத்துள்ள இடத்திலுள்ள நவக்கிரகத்தை வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
- குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பாலவிநாயகருக்கு பால் அபிஷேகம் செய்கிறார்கள்.
தலவிருட்சம் வன்னிமரம்

- மராட்டிய அமைச்சரான துக்காஜி தனது சாரட்டில் இவ்வழியாக நின்று கொண்டிருந்தார்.
- ஓரிடத்தில் சக்கரத்தின் அச்சு முறியவே கீழே இறங்கி பார்த்தார். சக்கரத்தின் கீழிருந்து ரத்தம் கொப்புளித்தது.
- பயந்து போன துக்காஜியிடம் விநாயகரின் அசரீரி தோன்றி, ""இவ்விடத்தில் ஏகாதச (11) வடிவில் நான் இருக்கிறேன். என்னை வெளிக்கொண்டு வா,'' என்றதன்படி இவ்விடத்தில் லிங்க வடிவில் இருந்த 11 விநாயகர்களையும் எடுத்து பிரதிஷ்டை செய்தார் துக்காஜி.
- மூலவரான செல்வ விநாயகரின் முதுகின் வலது பக்கத்தில் சாரட் வண்டி சக்கரம் ஏறிய வடு இன்னமும் உள்ளது.

![[GANESH1.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6LuolMwKp9x88F1CxPFeUq4jplsqwVLZ9rWv4LPVbQ2_pjBEjHRVWrPFjIEganVknP9HeGqre1Y9NegZS1PzVuAV93CbNeV8hjncGceBMD6ur4XOauo2NtrqGODxY14ZzFAzoFtkk8m8/s1600/GANESH1.jpg)


விநாயகர் தின வாழ்த்துக்கள்...
ReplyDeleteவிநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் பற்றிய அழகிய பதிவு...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
வழக்கம் போல் அனைத்துப்படங்களும், விளக்கங்களும் அருமை.
ReplyDeleteகடைசியில் காட்டப்பட்டுள்ள, கிரேனில் தொங்கவிடப்பட்டுள்ள பிள்ளையார்(கள்) மிகவும் பளிச்சென்று உள்ளது.
நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
எனக்கு மட்டுமாவது, பூர்ணம் மட்டும் கொரியரில் அனுப்பி வைத்து, பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த தொடருக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவீர்கள் என்று நினைக்கிறேன்.
அன்புடன் vgk
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் சகோதரி.
ReplyDeleteவிநாயகரின் அருள்பெறச் செய்த பதிவுக்கு நன்றி.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்,சேண்பாக்கம் விநாயகரை தரிசனம் வைத்ததற்கு நன்றி.என் வலைதள சதுர்த்தி பூஜைக்கும் வந்துடுங்க.
ReplyDeleteவி நாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteவழக்கம்போல் பதிவும் படங்களும்
மிக மிக் அருமை தொடர வாழ்த்துக்கள்
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்..சகோ..
ReplyDeleteபதிவும், படங்களும் மிக அருமை..
வாழ்த்துகள்..
சதுர்த்தி வாழ்த்துகள் ...
ReplyDeleteஅருமையான படங்கள் ,விளக்கங்கள்
ReplyDeleteவினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
ReplyDeleteவினாயக சதுர்த்தி அன்று நீங்கள் வெளியீட்டிருக்கும் அனைத்து
ReplyDeleteவர்ணப்படங்களும் மிக அருமை. உங்கள் வர்ணனையும் சிறப்புடைத்து.
உங்களுக்கு என் நல் வாழ்த்துக்களைச் சொல்லிக்கொள்ளும்
அதே தருணத்தில் , உங்கள் பதிவு தரும் படங்களுடன்
திருமதி கவி நயா அவர்களின் (http://kavinaya.blogspot.com)பாடல்களை பாடியிருக்கிறேன்.
இந்த பாடல் எனது வலைப்பதிவில் இன்று வருகிறது.
சுப்பு ரத்தினம்.
http://menakasury.blogspot.com
அன்பின் இராஜஇராஜேஸ்வரி - விநாயகர் சதுர்த்தி அன்று நல்ல தொரு தரிசனம் - படங்கள் அத்தனையும் அருமை - தலவரலாறு விளக்கமாக அளித்தமை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅருமையான பகிர்வு. நன்றி ராஜி. விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்:)
ReplyDeleteபதிவும் படங்களும் அருமை.
ReplyDeleteஅதிலும் பார்வதி தாயார் குட்டி விநாயகரை மடியில் வைத்திருக்கும் படம் மிக அழகு..
விநாயகப் பெருமானின்
ReplyDeleteஅருள் முழுவதும்
கிடைக்க வாழத்துகிறேன்
சா இராமாநுசம்
வழக்கம்போல் படங்கள் அருமை....:)
ReplyDeleteவிநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...
அருமையான படங்களுடன் வினாயகர் சதூர்த்தி கொண்டாடியாச்சு உங்க பதிவில்... உங்க பதிவும் ஒரு ஆலயம் தானே... நன்றியுடன் வாழ்த்துக்கள்
ReplyDeleteபல படங்களைச் சேகரித்து பலவிதமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டு நீங்கள் செய்கின்ற பணியும் பரிசுத்தமான ஒரு ஆன்மீகப் பணியே.
ReplyDeleteவிநாயகர் சதுர்த்தியில் கோவிலுக்குச்செல்லவும், இல்லத்துப்பூஜையை ஆஸ்திரேலியாவுக்கு ஒளி பரப்பவும், அங்கு செய்த பூஜையை இங்கு பார்ப்பதற்குமே நேரம் போதவில்லை.
ReplyDeleteதங்களின் ரசிப்புடன் கூடிய அனைத்து கருத்துரைகளுக்கும் உற்சாகமூட்டிய பூரண பின்னூட்டங்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
செண்பகவனம் என்ற பெயர் ஏன் தான் மாறியதோ! மிக மிக அருமையான படங்கள் (தகவலும் தான்)மிக மகிழ்வாக உள்ளது படங்களின் அழகால். முதல்- கடைசிப் படங்கள் சுப்பர் சகோதரி. வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
;)
ReplyDeleteவநமாலீ கதீ சார்ங்கீ
சங்கீ சக்ரீ ச நந்தகீ!
ஸ்ரீமாந்நாராயணோ விஷ்ணுர் வாஸுதேவோSபிரக்ஷது!!
நல்ல தகவல் , படங்கள் அருமை . எல்லாம் வல்ல விநாயகர் அருள்பெற வாழ்த்துக்கள்
ReplyDelete963+2+1=966 ;)
ReplyDeleteமறைமுகமாக ஒரேயொரு பதில் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. அதை எனக்கே எனக்கு என்று பூரணமாக நம்பி எடுத்துக்கொண்டேன். ருசியோ ருசியாக இருந்தது {பூர்ணம்} மிகவும் சந்தோஷம் ;).