
இனிய தாய்லாந்து பயணத்தில் கண்களையும் கருத்தையும் நிறைத்தது
பத்தரை அடி உயரத் தக தகக்கும் தங்கச்சிலை புத்தர்.
பத்தரை மாற்றுத் தங்கம்... சாலிட் கோல்ட்!
பத்தரை மாற்றுத் தங்கம்... சாலிட் கோல்ட்!
வாட் ட்ரைமித்" அல்லது "டெம்பிள் ஆஃப் கோல்டன் புத்தா" வில் புத்தர் சிலை 5.5 டன் எடையுடன் முழுவதும் தங்கத்தால் ஆனதாம்..
900 வருடங்களுக்கு முன்னால் செய்யப்பட்ட இந்த சிலை பர்மீஸ் படையெடுப்பின் போது கொள்ளையடிக்கப் படாமல் தடுக்க மேலே சாந்துக் கலவையினால் பூசப்பட்டு மறைக்கப் பட்டதாம்.
உண்மையான மதிப்பு யாருக்கும் தெரியாமல் அப்படியே இருந்திருக்கிறது.
1957 ஆம் வருடம் ஒரு கோவிலிலிருந்து இன்னொரு கோவிலுக்கு சிலையை மாற்றும் போது கிரேனிலிருந்து தவறி விழுந்ததில் மேல் பூச்சு சிதற உள்ளிருந்த தங்க விக்கிரகம் வெளித் தெரிந்ததாம்
900 வருடங்களுக்கு முன்னால் செய்யப்பட்ட இந்த சிலை பர்மீஸ் படையெடுப்பின் போது கொள்ளையடிக்கப் படாமல் தடுக்க மேலே சாந்துக் கலவையினால் பூசப்பட்டு மறைக்கப் பட்டதாம்.
உண்மையான மதிப்பு யாருக்கும் தெரியாமல் அப்படியே இருந்திருக்கிறது.
1957 ஆம் வருடம் ஒரு கோவிலிலிருந்து இன்னொரு கோவிலுக்கு சிலையை மாற்றும் போது கிரேனிலிருந்து தவறி விழுந்ததில் மேல் பூச்சு சிதற உள்ளிருந்த தங்க விக்கிரகம் வெளித் தெரிந்ததாம்
அப்போது வெட்டி எடுத்த மண்ணை கண்ணாடி
பெட்டிக்குள் வைத்திருகிறார்கள்!

மொத்த உலகத்திலேயே பெரிய தங்க புத்தர் என்ற பெருமையோடு கோவிலில் குடி புகுந்த. புத்தருடைய உயரத்துக்கும் பருமனுக்கும்
( பனிரெண்டரை அடி அகலம்) தகுந்தபடி ஒரு மேடையில் காட்சியளிக்கிறார்.
உள் அலங்காரம் கையால் வரைந்த சித்திரங்கள் உள்ள சுவர்களுடன் பார்க்க எளிமையாகவும் அதே சமயம் ஒருவித ஆடம்பரமாக கருத்தைக் கவர்ந்தது.

நாமெல்லாரும் களிமண் புத்தர் சிலைகள்தான்.
நம் மீதுள்ள களி மண் பாளங்களை அகற்றினால் நமது தங்கம் வெளிப்படும்.
ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தங்கப் புத்தர் உள்ளார் என்பதை உணர்த்துகிறதோ!

மக்கள் கூட்டம்கூட்டமாக வந்து கும்பிட்டு மலர்மாலைகள், ஊதுவத்திகள், ஒருவித மஞ்சள் நிறமான துணி அடங்கிய பொதி என்று வழிபாடு செலுத்துகிறார்கள்.

இந்தக்கோவிலுக்கு வந்து கும்பிட்டால் அதிர்ஷ்டமாம்.
டன் கணக்கிலான தங்கத்தினால் ஆன புத்தரின் பொன் புன்னகையும், வணங்கி வழிபட வந்த தாய்லாந்து பெண்களின் இனிய புன்னகையுடன் கூடிய சிரத்தையான வழிபாடும் சிந்தையைக் கவர்ந்தது.

வளாகத்துக்குள்ளே இன்னொரு புத்தர் கோவிலும் அதிலே ஒரு அமர்ந்த நிலை புத்தரும் கட்சியளித்தார்கள்.
புத்த பிக்ஷூ ஒருவர் சிகப்பு மேடையில் அருகில்போய் வணங்கியவர்களுக்கு ஆசிகள் வழங்கிக்கொண்டு இருந்தார். . மியூஸியம் காணக்கிடைத்தது


Thailand-Bangkok-Wat-Pho-temple-golden-figure...
golden Buddha statue inside the temple, ...
தாய்லாந்தில் நிறைய இடத்தில் "சயன கோலத்தில் புத்தர்" இருக்கிறார்.
தாய்லாந்து மொழியில் "வாட் போ" அல்லது ஆங்கிலத்தில் "ரிக்ளைனிங் புத்தா" என்று அழைக்கப்படும் கோவிலில் புத்தர் நம்ம ஊர் அனந்த சயனப் பெருமாள் மாதிரி படுத்துக் கொண்டிருக்கிறார்

இந்த சிலையின் நீளம் 165 அடி மற்றும் உயரம் 45 அடி. 1788 ல்
கட்டப்பட்டு 1982-ல் புதுப்பிக்கப் பட்டதாம்.
Reclining Buddha
இந்த சிலையின் நீளம் 165 அடி மற்றும் உயரம் 45 அடி. 1788 ல்
கட்டப்பட்டு 1982-ல் புதுப்பிக்கப் பட்டதாம்.
அள்ளிமுடிந்த கொண்டையில் சுருள்சுருளான முடிகள்
கவனத்தைக் கவர்ந்தது.

அருமையான அட்டகாசமான வேலைப்பாடுகள் உள்ளத் தங்கத்தலையணை !!


பாதங்களின் விரல்கள் எல்லாமே ஒரே நீளம். விரல்களின் கணுக்களும் பின்புறம் ரேகைக் குறிகளும் மூன்று மூன்றாக காட்சியளித்து புத்தரின் தெய்வீகத் தன்மையை பறைசாற்றின.
மனிதர்களுக்கு எல்லாம் கை விரல்களில் மூன்றும் கால்விரல்களில் இரண்டே பகுதியாகவும் அவைகளில் மேல் பகுதியில் மட்டுமே ஒரே ஒரு ரேகைக்குறியுமான அமைப்புதானே! பாதங்களின் அடிப்புறம் உள்ள டிசைன்கள் 'மதர் ஆஃப் பேர்ள்' என்ற சிப்பிவகையைக் கொண்டு செய்யப்பட்டதாம்





வாட் போ " கோவிலின் வெளிப்புறத் தோற்றம்
Chedi's @ Wat Pho temple Bangkok Thailand

Buddha in tree @ Ayutthaya


Thailand, Bangkok, Wat Po,

magnificent details:
the stupas were really complicated structures, one of these even had a golden warrior inside:
performing traditional thai dancing:
நல்ல பதிவு.நன்றி சகோ
ReplyDeleteபுகைப்படங்களெல்லாம் மிக அழகு. 17 வருடங்களுக்கு முன் சென்ற அனுபவம் மனதில் நிழலாடுகின்றது!
ReplyDelete//நாமெல்லாரும் களிமண் புத்தர் சிலைகள்தான். நம் மீதுள்ள களி மண் பாளங்களை அகற்றினால் நமது தங்கம் வெளிப்படும்.ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தங்கப் புத்தர் உள்ளார் என்பதை உணர்த்துகிறதோ!//
ReplyDeleteஆஹா! அதே அதே ...
தங்கமே தங்கமாக ஜொலிக்கிறது இந்தக் கொங்கு நாட்டுத்தங்கத்தின் பதிவு முழுவதுமே.
பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.
நன்றிகள். vgk
தங்க புத்தரின் தரிசனம் இன்று
ReplyDeleteதங்கள் பதிவால் சாத்தியமானது
படங்களும் விளக்கங்களும்
வழக்கம்போல் மிக மிக அருமை
பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்க
5.5. டன் தங்கமா? அம்மாடியோ!...
ReplyDeleteபுத்தரின் படங்கள், மற்ற படங்கள் அனைத்துமே அருமை....
பளபளக்கும் புத்தர் சிலைகள்,கோவிலகள்.அருமை. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅநேகமாக உலகில் உள்ள அனைத்து ஆலயங்களுக்கும் சென்ற ஒரே ஆள் நீங்கதான்னு நினைக்கிறேன் தோழி..
ReplyDeleteபாராட்டுகள்...
பகிர்வுக்கு நன்றி...
சகோதரி!
ReplyDeleteபுத்தர் சிலை மட்டுமல்ல
இப் பதிவைப் போட்டு எங்களை
மகிழ்வித்த தாங்களும் சுத்த
தங்கமே
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ஏ யப்பே அம்புட்டும் தங்கமா...?? ஆர்.எம். வீரப்பன் கவனத்திற்கு....
ReplyDeleteஅம்புட்டு தங்கத்தையும் மாபியா கும்பல் இன்னுமா விட்டு வச்சிருக்காங்க, ம்ம்ம் படங்கள் எல்லாம் அருமை!!!!
ReplyDeleteபிரம்மாண்டம்.
ReplyDeleteஎளிமையான புத்தருக்கு தங்கச் சிலை. பிரமிப்பான, சுவாரஸ்யமான தகவல்கள். நாமெல்லாம் தங்க புத்தர்தானோ...மேலே உள்ள களிமண்ணை அகற்றினால் உள்ளே உள்ள தங்கம் வெளிப் படுமோ...வரிகளை ரசித்தேன்.பிரம்மாண்ட புத்தர் சிலை பிரமிக்க வைக்கிறது. மரத்தில் புத்தர் ஆச்சர்யப் பட வைக்கிறது.
ReplyDeleteபுத்தரின் முகத்தைப் பார்த்தாலே அமைதி நம்மிடத்தில் வந்து விடும்.
ReplyDeleteபடங்களுடன் பிரமாதமான பகிர்வு.
அடேயப்பா....!
ReplyDeleteபுத்தரைப் பற்றி படம் வரைந்து பாகங்களைக் குறித்து, விளக்கங்கள் அளித்து....!
தாய்லாந்து பயணம் போய் புத்த சிலைகளை நேரில்பார்த்து விட்டு வந்தா மாதிரியே இருக்குங்க.
படங்கள் அருமை. அதைவிட ஆச்சரியமான விஷயம், அந்தக் காலத்தில் இந்தியாவிற்கும் தாய்லாந்திற்கும் உள்ள கலாச்சாரத் தொடர்புகள்தான்.
ReplyDeleteபடங்கள் அத்தனையும் கொள்ளையழகு
ReplyDeleteஅழகிய கோயில்.
ReplyDeleteஇதே மாதிரி கோயிலை கர்நாடகா கூர்க் அருகில் இருக்கும் ஒரு இடத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு பிரமாண்டம் கிடையாது.
ReplyDeleteஉலகத்திலேயே பெரிய புத்தரை நாங்களும் பார்க்க முடிந்தது.(புகைப்படத்தில்) ,பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஆச்சரியம்தான்.பதிவின் மூலம் எங்களையும் இந்த புத்தர் கோவிலுக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி.
ReplyDeleteஎதற்கும் ஆசைப்படாதேனு புத்தர் சொன்னதா கேள்விப்பட்டிருக்கேன்.அதனாலதான் அவரை தங்கத்தால் வடிவமைச்சிட்டாங்களோ?
படங்களும் கூடவே தரும் விளக்கங்களும் ரொம்ப நல்லா இருக்கு.
ReplyDeleteஒத்த ரூவா செலவு இல்லாம உலக டூர் காட்னதுக்கு நன்றி....
ReplyDelete//இந்தக்கோவிலுக்கு வந்து கும்பிட்டால் அதிர்ஷ்டமாம்.//
ReplyDeleteஇருக்காதா பின்னே .இவ்வள்வு தங்கத்தை மொத்தமா பாக்குரது நம்ம அதிஷ்டம்தான் .
ஆசையை விடுன்னு சொன்ன புத்தரையே தங்கத்துல செஞ்ச அந்த மனுஷங்களை என்ன சொல்ல அவ்வ்வ்
படங்கள் அழகு :-)
புத்தம் சரணம் கச்சாமி
ReplyDeleteசங்கம் சரணம் கச்சாமி...
1015+2+1=1018
ReplyDelete