
![[Meenakshi+Thirukalyanam+Minakshi+Kalyanam.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNQNmhnBUj7w_Jc1ALblnhaimDSZx1zjMUmSXKEs6Aw5nnFix3Gb2Ko28axjK3PoJPgvF50VDMOV9jqBaLx863urqea4AUSyIRKYotA9CDT5KMIsCd9xNlq8FnZLF2jxdNFvl2NZ0YWd4/s1600/Meenakshi+Thirukalyanam+Minakshi+Kalyanam.jpg)
மாணிக்க மூக்குத்தி அணிந்து , மரகதப்பச்சைக்கிளி தோளில் கொஞ்ச செங்கோல் தாங்கி மதுரை அரசாளும் அன்னை மீனாட்சியின் மதுரையில்
கண் இமைக்கவிடாமல் கவர்ந்தது வண்டியூர் தெப்பக்குளம்.

திருமலை நாயக்கர் தனது மாளிகை (திருமலை நாயக்கர் மகால்) கட்டும் பொருட்டு தோண்டிய பெரிய பள்ளமே பின்னர் பிரம்மாண்டமான தெப்பக்குளமாக 1645-ஆம் ஆண்டில் உருப்பெற்றது. திருமலை நாயக்கர் சமுத்திரம், வண்டியூர் தெப்பக்குளம் என்று அழைக்கப்படும் இது தென்வடலாக 1000 அடி நீளமும்; கீழ்மேலாக 950 அடி அகலமும் கொண்டது.

குளத்தின் நடுவில் ஒரு தீவுபோல் அமைக்கப்பட்டு, நடுவில் நீராழி மண்டபம், கோவில், நான்கு மூலைகளிலும் நான்கு சிறிய மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குளத்தின் கரையில் வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் ஆலயமும்; மரகதவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ முக்தீஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளன.

இத்தனை சிறப்புகள் பெற்ற வண்டியூரில் மிக முக்கியமான ஒரு வைணவ ஆலயமும் உள்ளது. இங்கு சதுர்புஜ விமானத்தின்கீழ் கருவறையில் வீரராகவப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் நாச்சியாருடன் காட்சி தருகிறார். ஆண்டாள் நாச்சியாரும் உள்ளார். சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த ஆலயத்தில் அரச மரமும் வில்வ மரமும் தலமரங்களாக உள்ளன. திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் இந்த வீரராகவப் பெருமாள் மூலவரின் சிலை வைகை நதியில் கண்டெடுக்கப்பட்டதாகவும்; பின்னர் அவரே பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பியதாகவும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.

இந்த ஊர் வண்டியூர் என்று அழைக்கப்படுவதற்கு ஒரு காரணம் கூறப்படுகிறது. சித்ரா பௌர்ணமிதோறும் வைகை நதியில் எழுந்தருளும் கள்ளழகர், தல்லாகுளம் வழியாக வந்து வைகை நதியில் இறங்கி, அதன் வடகரையில் மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் தந்து காட்சி கொடுத்தார்.
எனவே, அந்த இடம் மண்டூர் என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மண்டியூர் என்று மருவி, தற்பொழுது வண்டியூர் என்று அழைக்கப்படுகிறது. அழகர் மலையிலிருந்து கள்ளழகர் மதுரை வரும் வைபவத்துடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டது இந்த வண்டியூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் ஆலயம்.


சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்துரதங்கள் ஊர்வலம் போகும் நேரம்
வெண்ணிலா விண்ணிலே கண்ணிலே களிக்கும் காட்சி..
வெண்ணிலா விண்ணிலே கண்ணிலே களிக்கும் காட்சி..


சித்திரை மாதம் நடைபெறும் மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், கள்ளழகர் திருவிழாக்களின்போது மதுரையிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்திலுள்ள அழகர் கோவிலிலிருந்து சுந்தரராஜப் பெருமாள் என்ற கள்ளழகர் மதுரைக்கு எழுந்தருளுகிறார். அப்போது கள்ளழகர் இந்த வீரராகவப் பெருமாள் ஆலயத்துக்கு வந்து எதிர்சேவை கொண்டு, இரவில் தங்கி திருமஞ்சனம் கண்டு வைரமுடி தரிசனம் தருகிறார்.


பின்னர் ஷேச வாகனத்தில் வைகையாற்றின் நடுவில் இருக்கும் மையமண்டபம் எனப்படும் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி நாரைக்கு சாப விமோசனம் தந்து அதன்பின்பு தீர்த்தவாரி காண்கிறார். தீர்த்தவாரி முடிந்து தங்கக் கருட வாகனத்தில் மண்டூக மகரிஷிக்குச் சாப விமோசனம் தந்து, இராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் கண்டு பூப்பல்லக்கில் அழகர் மலைக்குத் திரும்புவார்.

இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு மையமாகத் திகழும் வண்டியூர் பெருமாள் ஆலயக் கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளியுள்ள ஆண்டாள் நாச்சியாருக்கு பக்தர்கள் மணப்பேறு கிட்ட புடவை சார்த்தி வேண்டிக்கொள்கின்றனர். இவ்வாறு செய்ய திருமணத் தடை விலகுமென்று நம்பப்படுகிறது. கள்ளழகர் திருவிழா, வைகுண்ட ஏகாதசி, திருக்கார்த்திகை போன்றவை இந்த ஆலயத்தின் முக்கிய திருவிழாக்களாகும். இத்திருக்கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலின் இணைக் கோவில்களில் ஒன்றாகும்.

மதுரை மாநகருக்கு மிக அருகில்- ராமநாதபுரம் சாலையில் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள "வண்டியூர் தெப்பக்குளம்' மதுரைக்கு வருகை தரும் அனைவருக்கும் தெரிந்த ஒரு இடமாகும்.
![[Madurai+Meenakshi+Temple-Golden+Ratha-Nov07.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNo5gzMY4M2DlXy73YVPIpvCE1PaNTAghJ2RVi5n30ytuJ43UxfBGDOcrlN4w2x5qrUW57V2uo529ANvQ6WGRa4jeXchVLFIDUlA2ZonTuUVIA78pJn2404Mgsmjo3kg1wDuMULKx-zpK2/s640/Madurai+Meenakshi+Temple-Golden+Ratha-Nov07.jpg)







திருவிழா என்றால் அது மதுரை சித்திரைத் திருவிழாதான். தெப்பக்குளம் என்றால் அதி வண்டியூர்த் தெப்பக்குளம்தான்.
ReplyDeleteஇரண்டையும் அழகாக கண்முன் கொண்டுவந்து விட்டீர்கள்.
எங்கள் ஊர் அழகைக் கூட உங்கள் பதிவின் மூலம்தான்
ReplyDeleteசிறப்பாகப் பார்க்க முடிகிறது
அற்புதமான படங்கள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
முதல் படத்தில் பிட்டுக்கு மண் சுமந்த பகவான், ஈஸ்வரியுடன் காட்சி தருவது, ஏழை வந்திக்கிழவி போன்ற வாசகர்களாகிய எங்களுக்கு, மன நிறைவாக உள்ளது.
ReplyDelete//மாணிக்க மூக்குத்தி அணிந்து , மரகதப்பச்சைக்கிளி தோளில் கொஞ்ச செங்கோல் தாங்கி மதுரை அரசாளும் அன்னை மீனாட்சியின் மதுரையில்
ReplyDeleteகண் இமைக்கவிடாமல் கவர்ந்தது வண்டியூர் தெப்பக்குளம்.//
ஆமாம். வண்டியூர் தெப்பக்குளம் ரொம்பவும் அழகாகவே உள்ளது.
//சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்துரதங்கள் ஊர்வலம் போகும் நேரம்
ReplyDeleteவெண்ணிலா விண்ணிலே கண்ணிலே களிக்கும் காட்சி..//
அசையும் நீருடன் அற்புதமாக உள்ளது இந்தப்படம்.
அனைத்துப்படங்களுமே அழகோ அழகு. பளிச்சென்று உள்ளன. நேரில் போனால் கூட, அங்குள்ள கும்பலில், இதுபோல ரசித்துப்பார்ப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும்.
ReplyDeleteகடைசி இரண்டு மூன்று படங்களில் உள்ள ரிஷப வாகனம், குதிரை வாகனம், யாளி வாகனம், பல்லக்கு, பவனி வரும் தேர், அழகிய அந்தத் தெப்பக்குளம், நாயன நாட்டியக் கலைஞர்கள் எல்லாமே அருமையாகக் காட்டி அசத்தியுள்ளீர்கள்.
காட்டியுள்ள படங்களுக்குப் பின்னனியில் உள்ள உங்களுடைய பொறுமையும், ஆர்வமும், கடும் உழைப்பும் பளிச்செனத் தெரிகின்றன.
புண்ணியவதியான தங்களின் கருணையால் எங்களுக்கும் தினமும் இதுபோன்ற காட்சிகளைக் காண்பதால் புண்ணியம் சேர வழி வகுக்கிறீர்கள்.
மனம் நிறைந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.vgk
DrPKandaswamyPhD said...
ReplyDeleteதிருவிழா என்றால் அது மதுரை சித்திரைத் திருவிழாதான். தெப்பக்குளம் என்றால் அதி வண்டியூர்த் தெப்பக்குளம்தான்.
இரண்டையும் அழகாக கண்முன் கொண்டுவந்து விட்டீர்கள்.//
அழகான கருத்துரைக்கு நன்றி ஐயா.
Ramani said...
ReplyDeleteஎங்கள் ஊர் அழகைக் கூட உங்கள் பதிவின் மூலம்தான்
சிறப்பாகப் பார்க்க முடிகிறது
அற்புதமான படங்கள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்/
மனம் கவர்ந்த அற்புதமான் கருத்துரைக்கும் வாழ்த்துரைகளுக்கும் நன்றி ஐயா.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteமுதல் படத்தில் பிட்டுக்கு மண் சுமந்த பகவான், ஈஸ்வரியுடன் காட்சி தருவது, ஏழை வந்திக்கிழவி போன்ற வாசகர்களாகிய எங்களுக்கு, மன நிறைவாக உள்ளது./
நிறைவான கருத்துரைகளுக்கு நன்றி ஐயா.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete//மாணிக்க மூக்குத்தி அணிந்து , மரகதப்பச்சைக்கிளி தோளில் கொஞ்ச செங்கோல் தாங்கி மதுரை அரசாளும் அன்னை மீனாட்சியின் மதுரையில்
கண் இமைக்கவிடாமல் கவர்ந்தது வண்டியூர் தெப்பக்குளம்.//
ஆமாம். வண்டியூர் தெப்பக்குளம் ரொம்பவும் அழகாகவே உள்ளது./
அழகான கருத்துரைக்கு நன்றி ஐயா.
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஅனைத்துப்படங்களுமே அழகோ அழகு. பளிச்சென்று உள்ளன. நேரில் போனால் கூட, அங்குள்ள கும்பலில், இதுபோல ரசித்துப்பார்ப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும்........................................
மனம் நிறைந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.vgk //
அருமையய் பொறுமையாய் ரசித்துஅளித்த அத்தனை கருத்துரைகளும் பதிவிற்கு மகுடமாய் ஜொலிக்கின்றன்.
மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.
அட, மதுரை...! பழைய நினைவுகளைக் கிளறி விட்ட புகைப் படங்கள். படங்கள் அழகு. அருமையான விவரங்கள்.
ReplyDeleteவ போ ப அ.
ReplyDeleteதிருவிழாக்களில் கலந்துகொண்டு வருடக்கணக்கிலாகிறது. திருமலை நாயக்கர் சமுத்திரம்? அப்படியொரு பெயரா என்ன? சுவையான விவரங்கள்.
Awesome Pictures!!! Valuable Information...Thanks for the post Amma.
ReplyDeleteWith Love
Lakshmi
கண் கொள்ளா காட்சி..
ReplyDeleteஇயற்கை அழகும் தெய்வீகமும் கை கோர்த்த அழகுப் பதிவு.
அருமையான பதிவு.
ReplyDeleteகண்ணைக் கவரும் படங்கள்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
இப்பதிவில்தான் எத்தனையெத்தனை தகவல்கள்! அவற்றைவிடவும் எத்தனை வண்ணப்படங்கள் இப்பதிவில் சேர்த்திருக்கிறீர்கள். அருமையான கலெக்ஷன். பாராட்டுக்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களின் இந்த பகிர்வினை இப்போதுதான் காணுகிறேன். உண்மையில் வியந்தே போனேன்.நானும் மதுரை நகர் சுற்றி வந்தவன்தான் அதன் திருவிழாக்கள் எனக்கு நீங்காத நினைவுகளே. ஆனாலும் வண்டியூர் தெப்பகுளம் படங்கள், மற்றும் பிற படங்கள் கண்டு ஆனந்தமடைந்தேன்.தற்போதாவது வந்து காண கொடுத்தமைக்கு மிகக நன்றி.
ReplyDelete1037+5+1=1043 ;)))))
ReplyDeleteபதில்களுக்கு நன்றி.