வெட்டுடயாள் என்பாள் விளங்கும் திருக்கரங்கள்
எட்டுடயாள் சின்ன இடுப்பினிலே பட்டுடயாள்
தெம்புடயாள் பாதகர்க்கு வம்புடயாள்
கிண்கிணிய பூனுன்கிளி
சண்டியாயி சங்கரியாயி சாமாளயாயி
கோமளயாயி அருளும் இறையாவளாயி
அண்டி வருவார் தமக்கெல்லாம்
வாழ்வளிக்கும் காளிதருவாள் நமக்கு தனம்
வேதம் வணங்கிடும் வெட்டுடயாள் காளி
தனில் பாதம் பணிந்தால் பதம் தரும் -நிதம்
கிடைக்கும் சுகம் ஓங்கும் கேடில்லா
வாழ்க்கை படைக்கும் நிலைக்கும் பரந்து
அருள்மிகு வெட்டுடையார் காளி கோவில் மிகவும் பிரசித்தம்.மிகவும் சக்தி வாய்ந்த அம்மன்.கோவிலின் மற்றுமொரு சிறப்பு தொலைந்துபோன அல்லது காணாமல் போன பொருட்கள் மீண்டும் திரும்ப கிடைப்பதற்கு இந்த சக்தி வாய்ந்த அம்மனிடம் வேண்டி காரியசித்தி பெற்றவர்கள் ஏராளம்.ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆன்மீக சுற்றுலா செல்பவர்கள் தவறாமல் செல்லும் ஒரு கோவிலாக தற்பொழுது வெட்டுடையார் கோவில் உள்ளது.
மதுரையில் இருந்து தொண்டி செல்லும் பாதையில் -
சிவகங்கையில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது கொல்லங்குடி
சிவகங்கையில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது கொல்லங்குடி
மனிதர்களாய்ப் பிறக்கும் பிறப்பை அரிய பிறவியாக அறிந்து கொள்ளாமல் பலர் அநீதி புரிவது, அடுத்தவர்க்கு தீங்கிழைப்பது, நம்பியவர்களைக் கைவிடுவது, துரோகம் செய்வது, ஏமாற்றுவது போன்ற பல தீயசெயல்களைச் செய்து வருகின்றனர்.
சமூகத்தில் கொலை, கற்பழிப்பு, களவு போன்றவை சகஜமாகிவிட்டன. குற்றம் புரிந்தவர்களையோ, நம்மை ஏமாற்றுபவர்களையோ தட்டிக் கேட்பதற்கும் தண்டனை கொடுப்பதற் கும், நீதி வழங்குவதற்கும் நாம் என்ன செய்கிறோம்?நீதிமன்றத்துக்குப் போகிறோம்; வழக்கு தொடுக்கிறோம்; நீதி கேட்கி றோம். அங்கே எப்போது நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடிவதில்லை. அங்கே சந்தர்ப்ப சாட்சியங்கள்தான் முன்னிலை வகிக்கின்றன.
நிரபராதி தண்டனை பெறுவதும், குற்றவாளி விடுதலை ஆவதும் பல வழக்குகளில் நடந்து வருகின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது.பணம் எனும் சக்தியால் நியாயத்தை விலைக்கு வாங்கி அநியாயத்தை நிலவ விடும் அவலமும் நடைபெற்று வருகிறது.
ஆனால் பணத்தினாலோ... வேறு எந்த சக்தியாலோ தப்பிக்க முடியாத வகை யில் தவறு செய்பவர்களைத் தண்டிக்க வும், திருத்தவும் செய்யும் சக்தி கொல்லங் குடியில் கோவில் கொண்டிருக்கிறது!
நாணயம் தவறி தவறு செய்பவர் களுக்கு நாணயத்தாலேயே தண்டனை கொடுத்து, தவறு செய்தவர்களைத் திருத்தும் தெய்வம்தான் வெட்டுடையார் காளியம்மன்.
KOLLANGUDI - ARULMIGU VETTUDAYA KALIAMMAN (MOLLAVAR)
அம்மனிடம் நமக்கு நேரிட்ட தீங்குகளையும், அவை யாரால் நேரிட்டன என்பது பற்றியும் நாம் முறையிட வேண்டும். அப்படி முறையிட் டதும்
வெட்டு ஒன்று துண்டு இரண்டாக குற்றவாளிகளைத் தட்டிக் கேட்பவள் இந்த காளியம்மன்
காசு வெட்டிப்போட்டு நியாயம் கேட்கும் இவ்வாலய வழிபாட்டு முறை
அம்மனின் பூஜைத் தட்டில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அதன்மீது நம் கையை வைத்தபடி, நம்மை துன்பப் படுத்தியவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, பூசாரி சொல்வது போல் நாம் அதைத் திரும்பக் கூற வேண்டும். பூசாரி தெளிவாக அம்மனிடம் எடுத்துக் கூறுவதை நாமும் வாய்விட்டு உரக்க குரல் கொடுத்து அம்மனிடம் முறையீடு செய்ய வேண்டும்.அதன்பிறகு அந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக்கொண்டு அம்மன் சந்நிதிக்குப் பின் புறம் செல்ல வேண்டும். அங்கே ஒரு சிறிய பீடத்தில் நிறைய வெட்டுப்பட்ட நாணயங்கள் குவிந்துள்ளன. காசுகளை வெட்டுவதற்காக இரும்பு சுத்தியல்கள் இருக்கின்றன. வெட்டுப் பட்ட நாணயங்கள் இருக்கும் பீடத்தைச் சுற்றி ஈட்டிகள் வேலிபோல அமைந்துள்ளன.சுத்தியால் நாணயத்தை ஓங்கி அடித்து வெட்டுப்படச் செய்து, நம் புகார்களையும் கோரிக்கை களையும் மனதில் நினைத் துக்கொண்டே நாணயத்தை அங்கே வைத்துவிட வேண்டும். அதன்பின் நமது வேண்டு தல்கள், நமக்கு தீமை செய்தோ ரின் பெயர்கள் ஆகியவற்றை எழுதி ஈட்டியில் செருகி, அதன்மீது எலுமிச்சம் பழம் ஒன்றைக் குத்தி வைத்துவிட்டு மறுபடி யும் அம்மனை நினைத்து வேண்டிக்கொள்ள வேண்டும். அதன்பின் கோவிலில் உள்ள "சோனையா' எனும் காவல் தெய்வத்திடம் முறையிட வேண்டும்.வெட்டுடையார் காளியம்மனும், சோனையா தெய்வமும் இணைந்து நம் துன்பங்களைக் களைவார்கள். அத்துன்பங்களுக்குக் காரண மானவர்களைத் தண்டிப்பார்கள்.
அம்மனின் திருக்கோலக் காட்சி
தீர்க்கமான கண்களுடன் கருணை பொங்கும் முகத்தோடு தன்னைத் தேடி வரும் பக்தர்களின் குறை தீர்க்கிறாள் அம்மன். வலது காலை மடக்கி, இடது காலைத் தொங்கவிட்டு கம்பீரமாக வீற்றிருக்கிறாள் காளி. நம் கண்களுக்கு தெய்வீக ஒளியாகக் காட்சி அளிக்கும் காளியம்மன், நம்மைப் பாதுகாக்க எட்டு கரங்களுடன் காட்சி அளிக்கிறாள்.
அம்மனுக்கு முன்பு வெள்ளியாலான செங்கோல் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. தங்கள் முறையீட்டிற்கு வெகு விரை வாகப் பலன் கொடுத்த வெட்டுடையார் காளியம்மனுக்கு வெள்ளியாலான செங்கோலை காணிக்கையாகக் கொடுத்துள் ளனர். அவர்கள் கொடுத்த செங்கோல் அம்மனுக்கு முன்பு அழகாகக் காணப்படுகிறது.
.நீதிமன்றத் தீர்ப்பு தவறாக இருக்கலாம். ஆனால் இந்த அம்மனின் தீர்ப்பு மிகச் சரியாக இருக்கும்.
நாணயம் வெட்டிப் போட்ட நாற்பத்தெட்டு நாட்க ளில் நம் பிரச்சினை தீரும்.முன்பு இக்கோவில் ஈச்சந்தூர் எனும் காடாக இருந்ததாகவும், நாணயங்கள் வெட்டிப் போடும் இடம்தான் அம்மனைக் கண்டெ டுத்த இடம் என்றும் வரலாறு குறிப்பிடுகிறது.கோவிலில் வெட்டுவார் அய்யனார்தான் முதலில் பிரதிஷ்டை ஆனவர். வேளார் எனும் குலத்து வாரிசுகள்தான் இங்கே அம்மனுக்கு பூஜைப்பணி செய்யும் பூசாரிகள்.
அனைத்து மதத்தினரும் அம்மனுக்கு விசேஷ பூஜைகள் செய்து பலன் அடைகின்றனர்.
பண மோசடி, சொத்து அபகரித்தல், தொழிலுக்கு நேரிடும் இடையூறுகள் போன்றவற்றுக்கு நீதி கேட்டால் தீர்ப்பு வழங்குவார் வெட்டுடையார் காளியம்மன்.நம் மனதை வருத்துபவர்களை வருந்தச் செய்து திருத்துபவள் இந்தக் காளியம்மன்.
பங்குனி மாதம் பத்து நாட்கள் அம்மனுக்கு இங்கு விமரிசையாகத் திருவிழா நடைபெறும்.நாணயம் தவறியவர்களுக்கு நாணயத்தாலேயே தண்டனை கொடுக்கும் வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் தினமும் அன்னதானம் நடைபெறுகிறது.
இங்கு காலையில் வெட்டுடையார் அய்யனார்மீதும், மாலை வேளையில் அம்மன்மீதும் சூரிய ஒளி விழுவது அற்புதமான காட்சியாகும்.
ஆடிப்பெருக்கு அன்று அம்மன் சந்நிதி முழுவதும் பூக்களால் நிரப்பி, பூச்சொரிதல் விழா நடைபெறும்.
வெட்டுடையார் காளியம்மன் நீதி தேவதை! துடிப்பான தெய்வம்! அம்மனை வேண்டிக்கொண்டால் துன்பங்கள் பறந்தோடும்; வாழ்க்கை சிறந்தோங்கும்!
முதல் தரிசனம்..
ReplyDeleteகேள்விப்பட்டிருக்கிறேன். போனதில்லை.
ReplyDeleteஅனைவருக்கும் அருள் கிடைக்கட்டும்
ReplyDeleteமூலவர் படம் அருமை.
ReplyDeleteஅன்பு சகோதரி,
ReplyDeleteகாளி அமர்ந்திருக்கும் அழகே தனி தான்
தசரா திருவிழா நெருங்குகையில்
உங்கள் பதிவு
மெருகேறி அழகாகிறது....
//சமூகத்தில் கொலை, கற்பழிப்பு, களவு போன்றவை சகஜமாகிவிட்டன. குற்றம் புரிந்தவர்களையோ, நம்மை ஏமாற்றுபவர்களையோ தட்டிக் கேட்பதற்கும் தண்டனை கொடுப்பதற் கும், நீதி வழங்குவதற்கும் நாம் என்ன செய்கிறோம்?நீதிமன்றத்துக்குப் போகிறோம்; வழக்கு தொடுக்கிறோம்; நீதி கேட்கி றோம். அங்கே எப்போது நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடிவதில்லை. அங்கே சந்தர்ப்ப சாட்சியங்கள்தான் முன்னிலை வகிக்கின்றன. //
ReplyDeleteஆமாம். உண்மை தான்.
//நீதி கேட்டு இந்தக் காளியம் மனிடம் சென்றால் மிகச் சீரான தீர்ப்பு கொடுப்பாள் என்பதை நிரூபணம் செய்யும் வண்ணம் பல உண்மைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இது அம்மனின் திருவிளையாடல்களில் ஒன்று. நீதிமன்றத் தீர்ப்பு தவறாக இருக்கலாம். ஆனால் இந்த அம்மனின் தீர்ப்பு மிகச் சரியாக இருக்கும். //
நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
7 ஆவது படமும் 14 ஆவது படமும் அழகாக பளிச்சென்று உள்ளன.
தங்கக்குதிரையில் ஏறி, சிகப்பு வஸ்திரம் அணிந்து, வெற்றி மாலையிட்டு, கையில் ஆயுதமேந்திய அந்த அம்மன் நிச்சயம் நியாயம் வழங்கிடுவாள், அவளை மட்டுமே நம்பி, நியாயமாக நடந்து கொள்ளும், பரமார்த்தியான ஏழை எளிய மக்களுக்கு. அந்தப்படம் நல்ல அழகோ அழகு! நல்ல கம்பீரமும் கூட !!
வழக்கம்போல் அழகிய பதிவு அளித்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
[கடந்த 24 மணி நேரங்களாக நெட் செர்வர் கிடைக்காமல், உலகமே இருட்டாகி விட்டது போல உணர்ந்து வந்த எனக்கு, இப்போது தான் BSNL அதிகாரி ஒருவர் நேரியையாக என் வீட்டுக்கே வந்து, சரிசெய்து கொடுத்துச் சென்றார். எல்லாம் உங்களின் ”துடிப்பான வெட்டுடையார் காளியம்மன்” அருள் தான் என்று நம்புகிறேன்] அன்புடன் vgk
நல்ல பதிவு.
ReplyDeleteஅற்புதமான படத்தொகுப்பு.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
வெட்டுடையார் காளியம்மன் பற்றிய விவரம் அறிந்து கொண்டேன். அம்மன் படங்கள் அனைத்தும் அழகு. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteவெட்டுடையார் காளியம்மனை பற்றி பல தகவல்களை தெரிந்து கொண்டோம். பகிர்வுக்கு நன்றிங்க.
ReplyDeleteஅந்தப்பக்கம் போனா அவசியம் பார்க்கணும்.படங்கள் நன்று.
ReplyDeleteபுதுமையான கோயிலாக இருக்கிறதே.
ReplyDeleteஅம்மன் அங்கு இருப்பதோ உண்மைதான். ஆனால் அங்குள்ள பூசாரிகள் நாம் பிரார்தனை செய்யும்போது நாம் கொடுக்கும் தகவல்களை சேகரித்துக் கொண்டும், நாம் கடிதம் எழுதிவைப்பதை படித்துவிட்டு நமது வீட்டு வரைக்கும் வந்து பூஜை செய்கிறோம், அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்புகிறோம் என்றும் சில ஆயிரங்களையும் வாங்கி செல்கின்றனர். ஆனால் எந்த பூஜையோ, பரிகாரமோ இவர்கள் செய்வதில்லை, நாம் அம்மனின் மேல் உள்ள நம்பிக்கையால் இந்த பூசாரிகள் சொல்லுவதை கேட்டுத்தான் ஆகவேண்டி உள்ளது. நாம் யாரால் பதிக்கப்பட்டோமோ அவர்களிடமும் நமது தகவல்களை தெரிவித்துவிடுகின்றனர். ஆகையால் உங்கள் குறைகளை அம்மனிடம் மட்டுமே மனதிற்குள் வேண்டிவிட்டு வாருங்கள் உங்களுக்கு வெற்றி நிச்சயம். நமது மீது எந்த தவறும் இல்லையெனில் அம்மன் உறுதியாக நமக்கு பாதுகாப்பு அளித்து நம்மை காப்பாற்றுவார். அங்குள்ள பூசாரிகளை நம்ப வேண்டாம்.
ReplyDelete;)
ReplyDeleteகுறையொன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா!
குறையொன்றும் இல்லை கண்ணா
குறையொன்றும் இல்லை கோவிந்தா!!
தாயே துணை நீயே அம்மா.
ReplyDelete1043+2+1=1046
ReplyDelete