பரமாத்வான இறைவனுடன் இரண்டறக் கலந்த ஜீவாத்மா ரூபிணி ராதை! அதனாலேயே அவள் பெயரைத் தன்னோடு இணைத்து 'ராதா' கிருஷ்ணன் ஆனார். ராதையின் பிறந்த நாளான ராதாஷ்டமி உத்தரபிரதேசத்திலுள்ள ராதை பிறந்த 'ஊரில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
உத்தரப்பிரதேசத்தில் மதுராவுக்கு அருகில் 'பிரம்மஸரண்' என்ற மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பர்ஸானா என்ற சிறிய ஊர்தான் ராதை பிறந்த இடம். ராதை இங்கு 'ராதாராணி' என்றே குறிப்பிடப்படுகிறாள். இங்கு அமைந்துள்ள ராதாராணி ஆலயம், ராஜா பீர்சிங் என்பவரால் செந்நிறக் கற்களால் மிக அழகாக உருவாக்கப்பட்டது. அருகிலேயே இக்கால இணைப்பாக பளிங்கினால் கட்டப்பட்ட ஆலயமும் உள்ளது.ராதை வழிபாடு நடைபெறும் ஒரே ஆலயம் இது மட்டுமே! இங்குள்ள 'ப்ரேம ஸரோவர்' என்ற நதிக்கரையில்தான் ராதையும் கண்ணனும் முதலில் சந்தித்துக் கொண்டார்களாம்! இவ்வூரில் ஹோலி மிக விமரிசையாக நடைபெறும். கோகுலாஷ்டமிக்குப்பிறகு சுக்லபட்ச அஷ்டமியில் ராதாஷ்டமி கொண்டாடப்படுகிறது.
ராதையின் கிருஷ்ண பக்தியைப் பற்றிக் கூறும் வேடிக்கையான கதை இது! ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பு ராஸலீலா வைபவத்திற்காக ராதை, பார்வதியை அழைத்திருந்தாளாம். அது பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி. பார்வதியும் மகாதேவரிடம் அனுமதி வேண்ட, சிவனோ தானும் பெண் வேடத்தில் வந்து கலந்து கொள்வேன் என்று பிடிவாதம் செய்து உடன் வந்தார். அழகிய பெண்ணாக வந்த பரமசிவனை அடையாளம் கண்டு கொண்ட கண்ணன், ராதையுடன் செய்து கொண்டிருந்த ராஸலீலையிலிருந்து விலகி வந்து ஈசனை வரவேற்க, தன்னைத் தவிர்த்து வேறொரு பெண்ணுடன் கண்ணன் நடனமாடுவதைக் கண்ட ராதா கோபம் கொண்டு ஆழ்ந்த தவத்தில் அமர்ந்து விட்டாள்.
பரமசிவன் அவளை சமாதானம் செய்து தரிசனம் கொடுத்தாராம். இதன் காரணமாக கோபி வடிவத்தில் வந்த ஈசன் 'கோபிநாத் கோபேஸ்வர்' எனப்பட்டார். காலையில் சிவலிங்கத்திற்கு பூஜையும், மாலை தினமும் சிவபெருமான் கோபி ரூபத்திலும் வழிபடப்படுகிறார்.
ஒருமுறை ராதை, தன் வீட்டுக் கிளிகளுக்கு கிருஷ்ண நாமம் கற்றுக் கொடுத்தாள். சில தினங்களுக்குப் பின் அதை மாற்றி ராதா நாமம் கற்றுக் கொடுத்தாள். இதைக் கண்ட பலரும், இது ராதாவின் அகங்காரம் என்று எண்ணிப் பரிகசித்தனர். ஆனால் ராதையோ தன் தோழிகளிடம், ""கிருஷ்ண நாமம் கேட்டு எனக்கு ஆனந்தம்; ராதா நாமம் கேட்டு கிருஷ்ணருக்கு ஆனந்தம். கிருஷ்ணரின் ஆனந்தத்தையே நான் பெரிதாக எண்ணியதால், என் கிளிகளுக்கு ராதா நாமம் கற்றுக் கொடுத்தேன்'' என்றாளாம்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
அறியாமைக் கடலைக் கடக்க பகவானின் திருநாம ஜபத்தைத் தவிர வேறு வழியில்லை என்பது சர்வ வேதங்களும் கூறும் உண்மை.
"கண்ணா உன்னை விட்டு நான் வாழ்வதெப்படி?" என ராதை கேட்க "நான் என்றும் யுகயுகமாய் உன்னுடன்தான் இருப்பேன்" என்று ஆறுதல் சொன்ன கண்ணனை இன்றும் நாம் நினைவுறும்போது முதலில் ராதைதானே வந்து நிற்கிறாள். அன்று கிருஷ்ணர் ராதையை திருமணம் செய்து கொள்ளவில்லை; ஆனால் இன்று ராதா கல்யாணம் எல்லா இடங்களிலும் விமரிசையாக நடைபெறுகிறது. ராதா இல்லாமல் கிருஷ்ணன் இல்லையே?
கோகுலத்தில் யசோதை கண்ணனைத் தேடி விறுவிறு என்று ஒரு வீட்டை நோக்கி நுழைந்தாள். அது வேறு யாருடைய வீடுமல்ல! கண்ணனின் காதலி ராதாவின் வீடு தான்.
அவளிடம், ""அம்மா! ராதா! கண்ணனைக் கண்டாயா?'' என்று கேட்டாள். அவளோ கண்களை மூடியபடியே தியானத்தில் இருந்தாள். யசோதையின் கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை. கண்ணனோடு இரண்டறக்கலந்து தெய்வீகப்பரவச நிலையில் இருந்த ராதா, மெல்ல உலகநினைவுக்குத் திரும்பியபடியே கண்விழித்தாள். தன் முன் அமர்ந்திருந்த யசோதையைக் கண்டு ஆச்சரியப்பட்டாள். அப்படியே அவளுடைய பாதங்களில் விழுந்து வணங்கினாள். யசோதை பரபரப்புடன்,""ராதா! என்பிள்ளை கண்ணனைப் பார்த்தாயா?'' என்று மீண்டும் கேட்டாள்.
அவளோஇயல்பாக, ""கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்யுங்கள். அப்போது நம் உள்ளத்தில் கண்ணன் இருப்பதைக் காண்பீர்கள்,'' என்று சொன்னாள். யசோதையும் அப்படியே தியானித்தில் லயித்தாள். ராதா தன்னுடைய தெய்வீக சக்தியை யசோதையின் மீது செலுத்தினாள். புல்லாங்குழலை இசைத்தபடியே கண்ணன் கண்ணுக்குள் தோன்றினான். அதன்பின், நினைத்த நேரத்தில் எல்லாம் கண்ணனைக் காணும் பாக்கியத்தைப்பெற்றாள் யசோதை .
ராதாஷ்டமி புதுத்தகவலாய் இருக்கிறது. அறியாத அரிய தகவல்களை அள்ளித்தருகிறீர்கள் அம்மா.. நன்றி.
ReplyDeleteபடங்கள் கொள்ளை அழகு. கோலமோ கேட்கவே வேண்டாம். பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
ராதாஸ்டமி புதிய அரிய தகவல்
ReplyDeleteபதிவுடன் படங்களும் மிகமிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
முதல் படம் கொள்ளையழகு..
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
கிளி கொஞ்சிடும் அழகான பதிவு. மீண்டும் பொறுமையாக படித்து விட்டு வருவேன்.
ReplyDelete//பரமாத்மாவான இறைவனுடன் இரண்டறக் கலந்த ஜீவாத்மா//
ReplyDeleteஅதுபோல இரண்டறக் கலக்கவே எனக்கும் ஆசை தான்.
//இங்குள்ள ‘ப்ரேம ஸ்ரோவர்’ என்ற நதிக்கரையில்தான் ராதையும் கண்ணனும் முதலில் சந்தித்துக் கொண்டார்களாம்!//
ReplyDeleteகேட்கவே மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.
ஆனந்தம் .. ஆனந்தம் .. ஆனந்தமே!
கண்ணனும் ராதையும் தாமரை இதழ்களில் அழகாக மலர்ந்துள்ளது, காண்பதற்கே அருமையான படமல்லவோ!
ReplyDeleteஅழகிய தாமரை என்றும் தாமரை தான்!
மலர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு அல்லவோ! அதிலும் தாமரை என்றாலே அம்பாளின் நினைவு தான் வருகிறது.
ஆண்டாள், ராதா, மீரா போன்றவர்கள் பிரேம பக்திக்கு எடுத்துக் காட்டானவர்கள் அல்லவோ!
ReplyDeleteஅகங்காரமாவது? அப்படிச் சொன்ன மக்களின் அறியாமையல்லவோ!
கிளிகளுக்கு ராதா நாமம் சொல்லிக்கொடுத்தது கிளி கொஞ்சுவதாக உள்ளது. “ராதே கிருஷ்ணா” என்று கிளிகள் சொல்லுவது என் காதில் ஒலிக்கிறதே!
//அன்று கிருஷ்ணர் ராதையைத் திருமணம் செய்து கொள்ளவில்லை, ஆனால் நாம் இன்று எங்குமே “ராதா கல்யாண” வைபவங்களே நடத்தி, ராதைக்கே முன்னுரை தருகிறோம்.
ReplyDeleteஆம். ஒருவர் மேல் ஒருவருக்கு ஏற்பட்டிடும் பிரேம பக்திக்கு முன்னால் திருமணம் எல்லாம் தேவையற்றது.
இவர் மனத்தில் அவள். அவள் மனத்தில் இவர்.
”மறக்க மனம் கூடுதில்லையே!”
//கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்யுங்கள். அப்போது நம் உள்ளத்தில் கண்ணன் இருப்பதைக் காண்பீர்கள்.//
ReplyDeleteஸத்தியமான வாக்கு. அனுபவித்தவர்களுக்கே புரியும் இந்த அற்புதமான உண்மை.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!
மனமார்ந்த ஆசிகள்.
பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.
நன்றிகள். vgk
ராதாராணி பிறந்த ஊர்,கோவில் அவரை பற்றிய இந்த கதைகள் அனைத்தும் நான் இதுவரை கேள்விபடாத புது தகவல்கள்.
ReplyDeleteஅழகிய படங்களுடன் அருமையான பதிவு.நன்றி.
ராதாஷ்டமி குறித்த நல்ல தகவல்கள்.
ReplyDeleteபடங்கள் அனைத்தும் அழகு.
என் மகளுக்கு தங்களின் இடுகையில் வரும் படங்கள் மிகவும் பிடித்துள்ளன.
இன்று எனது பதிவு - http://kovai2delhi.blogspot.com/2011/09/blog-post_23.html
"குறையொன்றும் இல்லை மறைமூர்த்திக் கண்ணா!"
ReplyDeleteநன்றியுடன்,
நல்ல பதிவு.
ReplyDeleteஆமாம் உள்ளத்தில் ராதைதான்,ராதையை பெருமைப்படுத்திவிட்டது பதிவு.
ReplyDeleteஅழகிய படங்களுடன்.. அருமையான பதிவு...
ReplyDeleteபுதிய தகவல்கள். முதல் படம் உயிரோவியம்.
ReplyDeleteஅருமையான படங்களுடன் கூடிய பகிர்வு. பர்சானா கிராமம் மதுரா செல்லும் பலர் செல்லும் இடம்.
ReplyDeleteஅழகு பதிவு.... அருமை
ReplyDelete;)
ReplyDeleteகுறையொன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா!
குறையொன்றும் இல்லை கண்ணா
குறையொன்றும் இல்லை கோவிந்தா!!
1058+8+1=1067
ReplyDelete