ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ளது உத்திரகோசமங்கை என்ற பாடல் பெற்ற ஸ்தலம்.
மாணிக்கவாசகர் அதிக நாள் இந்த ஆலயத்தில் தங்கி இருந்ததாக குறிப்புகள் கூறுகின்றன.
ஆரூதரா தரிசனத்தன்று மட்டுமே நடராஜரை மரகத கோலத்தில் தரிசிக்கமுடியும். மற்ற நாட்களில் சந்தனகாப்பு சார்த்தபட்டிருக்கும்.
ஆரூதரா தரிசனம் முடிந்த அடுத்த நாள் மீண்டும் சந்தன காப்பு சார்த்தப்பட்டு அடுத்த ஆண்டு ஆரூதரா தரிசனத்தன்று மட்டுமே களையப்படும். சுவாமிக்கு மங்களநாதர் என்று பெயர். இங்கு நடராஜர் சிலை மரகதத்தில் உள்ளது. இந்த நடராஜர் தான் ஆதி நடராஜர் என்றும் சொல்லப்படுகிறது.
இறைவன் உமையவள் மட்டும் காணுமாறு நடனம் ஆடியதுஉத்திகோசமங்கையில் தான்..
.
.
உலகத்திலேயே பெரிய மரகத கல்லால் வடிக்கப்பட்ட, சிரித்த முகமாய் இருக்கும் ஐந்தரை அடி உயரமுள்ள மரகத நடராஜர் எப்பொழுதும் சந்தனம் பூசப்பட்டு இருந்ததால் தான் ஆங்கிலேயர்கள் அது மரகதம் என்று தெரியாமல் தங்கள் ஊருக்கு கடத்தாமல் தப்பித்து நமக்கு அருட்காட்சிப்படுகிறது ..
அம்மனுக்கு பிரணவம்(வேதம்) ரகசியமாய் உபதேசித்த இடமாம். உத்திரம் எனில் உபதேசம், ஓசம் எனில் ரகசியம்.மங்கைக்கு ரகசியமாய் உபதேசித்த இடமானதால் உத்திரகோசமங்கை எனப்பெயராம்.
அம்மனுக்கு பிரணவம்(வேதம்) ரகசியமாய் உபதேசித்த இடமாம். உத்திரம் எனில் உபதேசம், ஓசம் எனில் ரகசியம்.மங்கைக்கு ரகசியமாய் உபதேசித்த இடமானதால் உத்திரகோசமங்கை எனப்பெயராம்.
உத்திகோசமங்கையில் இறைவன் உமயவளுக்கு வேதம் உபதேசித்து நாட்டியமும் காட்டி அருளியதாக வரலாறு.
உத்திகோசமங்கை நடராஜர் சபை ரத்தின சபை என்று அழைக்கப் படுகிறது. உத்திரகோசமங்கை என்பது அன்னை உமையவளையே குறிக்கும். ரகசியமாக உபதேசம் அளிக்கப்பட்ட மங்கை என்று பொருள்.
மாணிக்கவாசகர் உத்திகோசமங்கை ஸ்தலம் பற்றி
9 பாடல்கள் பாடி இருக்கிறார்.
உத்திகோசமங்கை நடராஜர் சபை ரத்தின சபை என்று அழைக்கப் படுகிறது. உத்திரகோசமங்கை என்பது அன்னை உமையவளையே குறிக்கும். ரகசியமாக உபதேசம் அளிக்கப்பட்ட மங்கை என்று பொருள்.
மாணிக்கவாசகர் உத்திகோசமங்கை ஸ்தலம் பற்றி
9 பாடல்கள் பாடி இருக்கிறார்.
மண் முந்தியோ . . . இல்லை . . . மங்கை முந்தியோ . . .என்று
உத்திரகோச மங்கைப் பகுதி தொன்மை பற்றி ஒரு சொல் வழக்கு உண்டு,
வெறும் வார்த்தை இல்லை இது, அப்படியே நிஜம்.
இராமேச்வரம் தோன்றுவதற்கு முன்பே உத்திரகோச மங்கை கோவில் இருந்திருக்கிறது.
இராமேச்வரம் தோன்றுவதற்கு முன்பே உத்திரகோச மங்கை கோவில் இருந்திருக்கிறது.
இராவணன் மனைவி மண்டோதரி இங்கு வந்து வழிபட்டதாய் சொல்கிறார்கள்.
அழகமர் வண்டோதரிக்குப் பேர்அருள் அளித்த பிரான்' என்று சிவ பெருமானைப் பாடுகிறார் மணிவாசகர்.
உத்திரகோச மங்கையில் உள்ள ஸ்தல விருட்சம்
3000 ஆண்டு பழமை வாய்ந்தது ..
அழகமர் வண்டோதரிக்குப் பேர்அருள் அளித்த பிரான்' என்று சிவ பெருமானைப் பாடுகிறார் மணிவாசகர்.
உத்திரகோச மங்கையில் உள்ள ஸ்தல விருட்சம்
3000 ஆண்டு பழமை வாய்ந்தது ..
மணிவாசக வள்ளல் பூமியின் மகா பொக்கிஷமான இந்த இலந்தை மரத்தடியில் அமர்ந்திருக்கிறார்.
மணிவாசகர் காலம் 2-ம் நூற்றாண்டு(கி.பி)இதே மரத்தடியில்தான் பராசரர், வேத வியாசர் முதலியவர்கள் எல்லாம் தவம் செய்தனர் ...
மணிவாசகர் காலம் 2-ம் நூற்றாண்டு(கி.பி)இதே மரத்தடியில்தான் பராசரர், வேத வியாசர் முதலியவர்கள் எல்லாம் தவம் செய்தனர் ...
இலந்தை மரம் பல பல அருட்தலைமுறைகளைப் பார்த்தது; மாமுனிவோர்களைத் தன் பாதவேர்களில் தாங்கியும் , பல சீவன் முக்தர்களுக்கு அருள்நிழல் தந்து. தானும் மரணம் வென்று இருப்பது.
பதஞ்சலி, வியாக்கிரமர்கள் கூட இங்கு இந்த மரத்தடியில் நிட்டையில் இருந்ததாகவும் அறிகிறோம்... . .
மாணிக்கவாசகர் நட்ராஜருக்கு 1087 தலங்கள் இருந்தாலும், பாண்டிநாடே அவன் பதி, உத்திரகோசமங்கையே அவன் சொந்த ஊர் என்கிறார்,
உலகத்தின் இதயஸ்தானம் என்று சொல்லப் படுகின்ற தில்லைச் சிதம்பரத்துக்கே இங்கிருந்துதான் மையத் தொடர்பு இருந்தது, ..
பாண்டி நாடே பழம் பதி ஆகவும் பத்திசெய் அடியரைப் பரம் பரத்து உய்ப்பவன்உத்திர கோச மங்கை ஊர் ஆகவும் ....உலகத்தின் இதயஸ்தானம் என்று சொல்லப் படுகின்ற தில்லைச் சிதம்பரத்துக்கே இங்கிருந்துதான் மையத் தொடர்பு இருந்தது, ..
தமிழ் அறிஞர் வாயைத் தித்திக்க வைக்கும் மணிவாசகத்தின்
திருத் தசாங்கத்தில் ஒவ்வொரு கேள்வியையும் கிளியிடம்கேட்டுப் பெறுகிறார் மணிவாசகர்..
திருத் தசாங்கத்தில் ஒவ்வொரு கேள்வியையும் கிளியிடம்கேட்டுப் பெறுகிறார் மணிவாசகர்..
'தாதாடும் பூஞ்சோலைத் த்த்தாய் நமைஆளும்
மாதாடு பாகத்தன் வாழ் பதி என் - கோதாட்டி
பத்தர்எலம் பார்மேல் சிவபுரம்போற் கொண்டாடும்
உத்திர கோச மங்கை ஊர்.. . .'
உத்தார கோசமங்கை எல்லாமே மாறிவிட்டது. இன்றும் கூடக் கோபுரங்களில் அந்தக் கிளிக் கூட்டங்கள் மட்டும்தான் மாறவே இல்லை.
கிளிக் கூட்டங்கள் மட்டுமே கீச் கீச் என்பதற்குப் பதிலாக ஊர்பேரை உச்சரித்துக் கொண்டிருக்கின்றன. . .'
கிளிக் கூட்டங்கள் மட்டுமே கீச் கீச் என்பதற்குப் பதிலாக ஊர்பேரை உச்சரித்துக் கொண்டிருக்கின்றன. . .'
திருவிளையாடற் புராணத்தில் வருகிற, வலைவீசி விளையாடிய படலம் நடந்த இடம், மணிவாசகர் அண்ணாமலையில் இருந்து கொண்டு பாடியது இங்கே நடந்த வலை வீசி விளையாடிய திருவிளையாடலை
"ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன் விசிறும்
பேராசை வாரியனைப் பாடுதும்காண் அம்மானாய்!"
கண்முன் கொண்டு வருகிறார்..
கால நிலையின் மாற்றத்தால், பூமிப் பரப்பின் மாற்றத்தால் அப்படியே உள் வாங்கி ஏர்வாடி வரை சென்றதாம் கடல்..
உத்திரகோசமங்கைக் கோவில் குளத்தில் மீன்கள் உப்பு நீரில் அதாவது கடல் நீரில் வாழும் மீன் வகையைச் சார்ந்தவையாம்.
கோவிலின் வெளிப்பிரகாரத்துத் தூண்கள், நந்தி சிலைகள் முதலியன கடல்வாழ் பாறைகளை நினைவு படுத்தி கடற் காற்று அரித்த எச்ங்களைப் பறை சாற்றின.
உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் விழா 17 ஆண்டுகளுக்கு பின்னர் யாகசாலை பூஜையுடன் துவங்கி தினமும் காலை, மாலை பூஜைகள் , 66 குண்டங்கள் வளர்க்கப்பட்டு,66 வேத ரிஷிகளுடன் பூஜைகள் சிறப்புடன் நிகழ்த்தப்பட்டன..
640 ஆண்டுகளுக்குப்பின் மங்களேஸ்வரி அம்மன் ஐந்து நிலை ராஜகோபுரம் திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடந்தது.
மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம்,தீபாராதனைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது.
640 ஆண்டுகளுக்குப்பின் மங்களேஸ்வரி அம்மன் ஐந்து நிலை ராஜகோபுரம் திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடந்தது.
மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம்,தீபாராதனைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது.
கும்பாபிஷேகத்தை யொட்டி மாலை மரகத நடராஜர் சிலையில் சந்தனம் களையப்பட்ட நிலையில் பச்சை மரகத மேனியாய் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் மரகத நடராஜருக்கு சந்தனம் பூசப்பட்டது.
கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் மரகத நடராஜருக்கு சந்தனம் பூசப்பட்டது.
இந்த நடராசர் சிலை உத்திர கோசமங்கையின் தனிப்பெரும் சொத்து. வெறும் நெல்லிக்காய்அளவு கோகினூர் வைரமே பிரிட்டிஷ் மணிமகுடத்தில் போய் உட்கார்ந்துவிட்டது.
இந்த மரகதச் சிலையை ஸ்தாபித்த பெரியவர்கள் சந்தனக் காப்பு இடும் முறைமையை ஏற்படுத்தியதால் யார் கண்ணையும் உறுத்தாமல் தப்பித்தது. களப்பிரர்கள, ஆங்கிலேயர் என்று எத்தனையோ படைஎடுப்புக்களைச் சந்தித்த போதும் யாருக்கும் தெரியாமல் இது தப்பித்துக் கொண்டது.
மரகதம் சிலை விருப்பாச்சி சேர்த்து ஏழடி உயரம்
சாதாரண ஒலி அலைகள் கூட மிகவும் மென்மையான மரகதத்தை உதிர வைக்கும் என்பதால், 'மத்தளம் கொட்ட மரகதம் உதிரும்' எனும் வழக்கு மொழி எழுந்தது.
கோவிலில் மத்தளம் , கொட்டு முழக்கு எல்லாம் மரகதச் சிலைக்கு ஊறு ஏற்படலாகாது என்று எண்ணித்தான் சந்தனக் காப்பிடும் முறையை உண்டாக்கியிருப்பார் சண்முக வடிவேலவர் !!
சாதாரண ஒலி அலைகள் கூட மிகவும் மென்மையான மரகதத்தை உதிர வைக்கும் என்பதால், 'மத்தளம் கொட்ட மரகதம் உதிரும்' எனும் வழக்கு மொழி எழுந்தது.
கோவிலில் மத்தளம் , கொட்டு முழக்கு எல்லாம் மரகதச் சிலைக்கு ஊறு ஏற்படலாகாது என்று எண்ணித்தான் சந்தனக் காப்பிடும் முறையை உண்டாக்கியிருப்பார் சண்முக வடிவேலவர் !!
மரகதக் கல் ஒலிக்கே உதிரும் என்னில், செதுக்கும் உளிக்குமுன் எப்படித் தாங்கும்.?
உளி கொண்டு பொளிக்கப் படாமல் மனத்தால் நினைத்து உருவாக்கப் பட்ட சிலை அற்புதம்
இந்த விவரம் தெரியாத நம்மவர்கள் இதைச் சுயம்பு என்கின்றனர்.
உளி கொண்டு பொளிக்கப் படாமல் மனத்தால் நினைத்து உருவாக்கப் பட்ட சிலை அற்புதம்
இந்த விவரம் தெரியாத நம்மவர்கள் இதைச் சுயம்பு என்கின்றனர்.
இங்குள்ள ஆடல் வல்லானுக்கு நித்திய அபிஷேகம் எதுவும் கிடையாது.
காரணம், வருடம் பூரா, சிலை சந்தனக் காப்பு தரித்தே இருக்கும்.
ஆண்டுக்கு ஒருமுறை மார்கழித் திங்கள் திருவாதிரைத் திருநாள் அன்று சந்தனக் காப்பு களையப்படும்.
அன்றுபகல் முழுக்க தனிச் சபைத் தலைவனைக் காப்புக் களைந்த திருக் கோலத்தில் தரிசிக்கலாம்.
ஆண்டுக்கு ஒருமுறை மார்கழித் திங்கள் திருவாதிரைத் திருநாள் அன்று சந்தனக் காப்பு களையப்படும்.
அன்றுபகல் முழுக்க தனிச் சபைத் தலைவனைக் காப்புக் களைந்த திருக் கோலத்தில் தரிசிக்கலாம்.
அன்று ஒன்பது வகை அபிஷேகங்கள் நடைபெறும்.
ஆண்டுமுழுக்க மரகதச் சிலையில் காப்பிடப் பட்டிருந்த
சந்தனம் இப்பொழுது தேவஸ்தானத்திலேயே பாக்கெட் போட்டு விலைக்குக் கிடைக்கிறது..உத்திர கோசமங்கைக் கோவிலில் உள்ள சுரங்கம் மனிதரால் ஏற்படுத்தல் சாத்தியம் இல்லை.
உமாமகேச்வர சன்னதிக்குக் கீழே இருந்து - பெருமாள் சன்னதியில் இருந்து தில்லைக்கும், இராமேஸ்வரத்துக்கும், மெக்காவுக்கும் கூட சுரங்க வழிகள் இருந்தன.
இறைவன் மனத்தளவில் நினைக்க பூமி உள்ளே விரிந்து கொடுக்க ஏற்பட்ட சுரங்கம் அற்புதம் ஆகும்..
அந்தக்கால முனிவர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டன.
காடுகள் நாடுகள் இனங்கள் போர்கள் முதலிய பல்வேறுதடைகளில் சிக்காவண்ணம் நேரிடையாகச் செல்ல திருக்கூட்டத்தார்க்கு மட்டும் அறிவிக்கப் பட்டு இருந்தவை நவீன காலத்தின் இடர்பாடற்ற இனிய பயணங்களால் செயல்இறந்தன.
காடுகள் நாடுகள் இனங்கள் போர்கள் முதலிய பல்வேறுதடைகளில் சிக்காவண்ணம் நேரிடையாகச் செல்ல திருக்கூட்டத்தார்க்கு மட்டும் அறிவிக்கப் பட்டு இருந்தவை நவீன காலத்தின் இடர்பாடற்ற இனிய பயணங்களால் செயல்இறந்தன.
இக்கோவிலில் உள்ளே இருக்கும் ஓவியங்கள் பழமையானவை, அழகானவை
சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியது.
எனவே உத்திர கோசமங்கைக்கு ஆதி சிதம்பரம் என்ற ஒரு பேரும் உண்டு>
நடராஜர் இங்கு அறையில் ஆடிய பின்னர்தான சிதம்பரத்தில்
அம்பலத்தில் ஆடினார்
அம்பிகைக்கு பிரணவப் பொருள் உபதேசித்த இடம்.
ஓசம் என்றால் இரகசியம். உத்தர என்றால் விடை.
மங்கைக்கு உபதேசித்ததால் இது உத்தர கோச மங்கை.
மங்களநாதர் கருவறையில் வடச் சுவற்றை ஒட்டிப்
பாணாசுரன் வழிபட்ட பாண லிங்கம் ஒன்று உள்ளது.
மணிவாசகரின் பாடல் பெற்ற தலம்.மிகமிகத் தொன்மையானதும் இன்று வரை உயிருடன் உள்ளதும் பல அருள் தலைமுறைகளையும் முனிவர்களையும் பார்த்த தல விருட்சம் இலந்தை மரம் உள்ள இடம்.
உலகிலேயே மிகப் பெரிய மரகதக் கல் , சிலை வடிவில், நடராசப் பெம்மானின் அருட்சீவ ஒளிசிந்த ஆடும் திருக் காட்சி காண்முடியும்..
வேதவியாசரும் பாராசரும் பூசித்த தலம்
உலகில் உள்ள 1087 சிவாலயங்களிலும் உள்ள அருட் சக்திகளைத்
தன்னகத்தே கொண்டு விளங்கும் சகஸ்ர லிங்கம்.
திருவிளையாடற் புராணத்தில் வரும் வலைவீசி மீன் பிடித்த படலம்
கோவில் வாயிலில் நிகழ்ந்தது.
மணிவாசக வள்ளலுக்குச் சுத்த பிரணவ ஞான தேகம் கிடைத்த இடம்
இன்றளவும் ஒளி உருவில் அவர் அமர்ந்துள்ள இடம்..
மற்ற கோவில்களில் எல்லாம் மணி வாசகரின் திருமேனித் துறவு
நிலையில் மழித்த தலையோடு வடிக்கப் பட்டிருக்கும்.
இங்கே அவருக்குத் தனிச் சன்னிதியே தவழும் சடாமுடிளோடு கன கம்பீரமாய்.
ஆண்டுக்கு இரண்டு விழா உண்டு.
ஒன்று சித்திரைத் திருவிழா, இன்னொன்று மார்கழித் திருவாதிரைத் திருவிழா
கோவிலில் குடிகொண்டு அருள் பாலிக்கும் முருகப் பெம்மானின் மீது
அருணகிரிநாதர் கூட ஒரு திருப் புகழ் பாடி உள்ளார்.
தில்லை என்பது சிதம்பரம். உத்திர கோசமங்கையோ ஆதி சிதம்பரம்.
ஆதிசிதம்பரத்தில் நடராஜர் திருமேனி பிரதிஷ்ட்டை செய்யப்பட்ட அடுத்த நாள் தில்லையிலும் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டது
இரண்டையும் செய்தவர் சண்முக வடிவேலர்.
இங்குள்ள இரண்டு நடராசர் சிலைகளும்தான் மூலச் சிலைகள்.
மற்ற மற்ற கோவில்களில் இந்த இரண்டையும் பார்த்துத்தான் நடராசர்
சிலைகள் வடிவமைக்கப் பட்டன.
இந்த இரண்டு சிலைகளுக்கும் கழுத்திலோ இடுப்பிலோ பாம்பு கிடையாது;
தலையில் கங்கை கிடையாது; அரையில் புலித் தோலும் கிடையாது.
இரண்டுமே இராஜ கோலம்.
தில்லையில் உள்ளது ஐம்பொன். இங்கோ இது பச்சை மரகதம்..
இரண்டு இடத்திலும் நடராசர் சன்னதிக்கு எதிரில் வலப்புறத்தே பெருமாள் சன்னிதி உள்ளது.
ஒரே வேறுபாடு தில்லையில் இற்றைக்கும் பெருமாளுக்கு
வழிபாடு உண்டு(திருச்சித்ரக் கூடம்) .
ஆனால் உத்திர மங்கையில் அது என்ன காரணத்தாலோ
இன்றளவும் மூடப் பட்டுக் கிடக்கிறது.
மூடி மறைத்து அதன் மேல் உமா மகேச்வர்ர் சிலையும்
மணி மாடமும் உள்ளது.
இரண்டுமே மணிவாசகரால் பாடல் பெற்ற தலங்கள்.
நன்றி!
http://sethuboomi.wordpress.
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி. உத்திரகோசமங்கை அனைவரும் தரிசிக்க வேண்டிய ஸ்தலம்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete@ எல் கே said...
ReplyDeleteதென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி. உத்திரகோசமங்கை அனைவரும் தரிசிக்க வேண்டிய ஸ்தலம்//
Thank you sir.
அன்பின் இராஜராஜேஸ்வரி - அறியாத பல அரிய தகவல்கள் - பகிவினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteDear Periyamma,
ReplyDeleteTHANK YOU periyamma. You are wonderful writer with useful content.
http://jaghamani.blogspot.com/2011/06/blog-post_13.html
உத்திரகோசமங்கை மரகத நடராஜர்
Regards,
D.ANANDHARAJ//
மிகவும் நன்றி.
@cheena (சீனா) said...//
ReplyDeleteநன்றி ஐயா.
mindblowing writes up and content.
ReplyDeleteKeep posting periyamma.
Day by day you are becoming young and energytic.
//ஐந்தரை அடி உயரமுள்ள மரகத நடராஜர் சிரித்த முகமாய் இருக்கிறார்.எப்பவும் சந்தனம் பூசப்பட்டு இருந்ததால் தான் ஆங்கிலேயர்கள் அது மரகதம் என்று தெரியாமல் தங்கள் ஊருக்கு கடத்தாமல் இருந்தார்கள் போலும். உலகத்திலேயே பெரிய மரகத கல் இதுவாக தான் இருக்கும்.//
ReplyDeleteநல்ல தகவல். மரகதக் கடத்தலைத் தடுக்க உதவிய சந்தனம் வாழ்க!
//உத்திரம் எனில் உபதேசம், ஓசம் எனில் ரகசியம்.மங்கைக்கு ரகசியமாய் உபதேசித்த இடமானதால் உத்திரகோசமங்கை எனப்பெயராம்.//
ReplyDeleteபுதிய நல்லதொரு ’ஓசம்’ ஆக இதுவரை இருந்துள்ள ’உத்திர’ விளக்கத்தை கொடுத்துள்ள நீங்களே எங்களுக்கு உத்திரகோசமங்கையாகத் தெரிகிறீர்கள்.
//இன்றும் கூடக் கோபுரங்களில் அந்தக் கிளிக் கூட்டங்கள் இருக்கின்றன. அது மட்டும்தான் மாறவே இல்லை. நம் மனிதர்கள் இல்லை, அவைமட்டும, அவைமட்டுமே கீச் கீச் என்பதற்குப் பதிலாக ஊர்பேரை உச்சரித்துக் கொண்டிருக்கின்றன. . .' //
ReplyDeleteஆஹாஹா! இந்த உங்கள் எழுத்துக்களிலும், கருத்துக்களிலும், கிளி கொஞ்சுதே!
//மரகதக் கல் ஒலிக்கே உதிரும் என்னில், செதுக்கும் உளிக்குமுன் எப்படித் தாங்கும்.? இந்தச் சிலையை வடித்த விதம் ஓர் அற்புதம். உளி கொண்டு பொளிக்கப் பட்டதல்ல இச்சிலை. மனத்தால் நினைத்து உருவாக்கப் பட்டது. இந்த விவரம் தெரியாத நம்மவர்கள் இதைச் சுயம்பு என்கின்றனர்.//
ReplyDeleteஅடடா! அருமையான, புதிமையான, ஆச்சர்யமான தகவல் இது.
//இங்குள்ள மங்களநாதர் கருவறையில் வடச் சுவற்றை ஒட்டிப்
ReplyDeleteபாணாசுரன் வழிபட்ட பாண லிங்கம் ஒன்று உள்ளது. பார்த்திருக்கிறேன்.//
நீங்கள் பார்க்காத கோவிலா, சிலைகளா, சிற்பங்களா, சித்திரங்களா, கொடிமரங்களா, குளங்களா, ஸ்தல விருக்ஷங்களா? கொடுத்து வைத்தவர்கள் நீங்கள். உங்கள் எழுத்துக்களிலும், படங்களிலும், பதிவுகளிலும் இவற்றைக்காணும் நாங்களும் கொடுத்து வைத்தவர்களே.
நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு நீடூழி வாழ்க! வாழ்க! வாழ்கவே!
அன்புடன் vgk
தெரியாத பல கோயில்களைப் பற்றி பதிவிடுவதர்க்கு நன்றிகள்..
ReplyDelete@ Anand said...
ReplyDeletemindblowing writes up and content.
Keep posting periyamma.
Day by day you are becoming young and energytic.//
நன்றி. மனம் மலரச் செய்யும் வலிமையூட்டும் அருமையான கருத்துக்கு..
@வை.கோபாலகிருஷ்ணன் said..//
ReplyDeleteநல்ல தகவல். மரகதக் கடத்தலைத் தடுக்க உதவிய சந்தனம் வாழ்க!//
சந்தனத்திற்கும், அதனை அவதானித்ததங்களுக்கும் நன்றி.
சந்தனக்காப்பு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நினைக்கவே அச்சமாக அல்லவா இருக்கிறது!
@வை.கோபாலகிருஷ்ணன்//
ReplyDeleteசரியான கருத்து அவதானிப்பு.
நீங்கள் பார்க்காத கோவிலா, சிலைகளா, சிற்பங்களா, சித்திரங்களா, கொடிமரங்களா, குளங்களா, ஸ்தல விருக்ஷங்களா//
வயதானால் பொறுப்புகள் கூடிவிடும் என்று முடிவெடுத்து அத்தனை தலங்களுக்கும் சலிக்காது சுற்றிவிட்டோம்.
@ !* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteதெரியாத பல கோயில்களைப் பற்றி பதிவிடுவதர்க்கு நன்றிகள்..//
கருத்துக்கு நன்றி.
@FOOD said...
ReplyDeleteமுற்றிலும் வித்யாசமான தகவல்கள். உங்கள் முயற்சிக்கு இறை அருள் இனிதே கிடைக்கட்டும்.//
இறைஅருளுடன் வாழ்த்துக்கு நன்றி.
அருமையான படங்கள்..மரகத நடராஜர் அருள் பெற உதவியமைக்கு நன்றி
ReplyDeleteஇங்குள்ள ஆடல் வல்லானுக்கு நித்திய அபிஷேகம் எதுவும் கிடையாது.
ReplyDeleteகாரணம், வருடம் பூரா, சிலை சந்தனக் காப்பு தரித்தே இருக்கும்.
அழகிய அவதானிப்பு
@ மாலதி said...//
ReplyDeleteThank you.
உத்தர கோச மங்கை சென்றிருக்கிறேன். இன்று முழுத்தகவலும் அறீந்தேன் . நன்றீ..
ReplyDeleteஇக்கோவிலில் உள்ளே இருக்கும் ஓவியங்கள் பழமையானவை, அழகானவை
ReplyDeleteஉங்களின் உன்னத
உயிருள்ள படைப்புகளைப்போலே
""மரகதக் கல் ஒலிக்கே உதிரும் என்னில், செதுக்கும் உளிக்குமுன் எப்படித் தாங்கும்.? இந்தச் சிலையை வடித்த விதம் ஓர் அற்புதம். உளி கொண்டு பொளிக்கப் பட்டதல்ல இச்சிலை. மனத்தால் நினைத்து உருவாக்கப் பட்டது. இந்த விவரம் தெரியாத நம்மவர்கள் இதைச் சுயம்பு என்கின்றனர்.""
ReplyDeleteஆஹா
மரகத மேனியானை
உருவித்த மரகதத்தை பற்றிய
மரகதத்தகவல்.
மனத்தால் வடித்திருந்தாலும்
உளியால் செதுக்கியிருந்தாலும்
சுயம்புவாய் எழுந்திருந்தாலும்
எல்லாமே
அந்த ஆண்டவன்
அனுக்கிரகாம் இன்றி ஏதும் நிகழாது
பச்சை மரகதத்
பதிவு
அருமை
@A.R.ராஜகோபாலன் said...//
ReplyDeleteஎல்லாமே
அந்த ஆண்டவன்
அனுக்கிரகாம் இன்றி ஏதும் நிகழாது
பச்சை மரகதத்
பதிவு
அருமை//
எல்லாம் அவன் செயல்.
எல்லாம் ஆண்டவன் அனுக்கிரகமே
அவனின்றி அணுவும் அசையாதே.
பகிர்வுக்கு நன்றி.
@ A.R.ராஜகோபாலன் said...
ReplyDeleteஇக்கோவிலில் உள்ளே இருக்கும் ஓவியங்கள் பழமையானவை, அழகானவை
உங்களின் உன்னத
உயிருள்ள படைப்புகளைப்போலே//
உன்னத கருத்துக்கு நன்றி.
@ தேனம்மை லெக்ஷ்மணன் said...
ReplyDeleteஉத்தர கோச மங்கை சென்றிருக்கிறேன். இன்று முழுத்தகவலும் அறீந்தேன் . நன்றீ..//
வாங்க. தேனான கருத்துக்கு நன்றி.
இவ்வளவு சிறப்புக்கள் பெற்ற தலம் மெய்சிலிர்க்க வைக்கிறது.
ReplyDeleteஎங்கள் அம்மா விரும்பிச்சென்று தர்சித்திருந்தார். எனக்குக் கிடைக்கவில்லை :(
மரகத சிலை களவு போகாமல் தடுப்பதற்காகவே சிலையை முதலில் நிறுவி பின் கர்ப்பகிரகம் கட்டப்பட்டதாக கூறுவர். மிக அரிதான "மரகத நடராசரின்" பதிவிற்கும் தங்களின் ஆன்மீக தகவலுக்கும் நன்றிகள் பல... பத்மாசூரி
ReplyDelete@மாதேவி said...
ReplyDeleteஇவ்வளவு சிறப்புக்கள் பெற்ற தலம் மெய்சிலிர்க்க வைக்கிறது.
எங்கள் அம்மா விரும்பிச்சென்று தர்சித்திருந்தார். எனக்குக் இவ்வளவு சிறப்புக்கள் பெற்ற தலம் மெய்சிலிர்க்க வைக்கிறது.//
தர்சிக்க இறை அருள் இனிதே கிடைக்கட்டும்.
@ சந்திர வம்சம் said...
ReplyDeleteமரகத சிலை களவு போகாமல் தடுப்பதற்காகவே சிலையை முதலில் நிறுவி பின் கர்ப்பகிரகம் கட்டப்பட்டதாக கூறுவர். மிக அரிதான "மரகத நடராசரின்" பதிவிற்கும் தங்களின் ஆன்மீக தகவலுக்கும் நன்றிகள் பல... பத்மாசூரி//
Thank you.
நாங்களும் பல கோவில்களுக்கு சென்றிருக்கிறோம். இனி எந்தக் கோயிலுக்குப் போகுமுன் உங்கள் பதிவைப் பார்த்து விஷயம் அறிந்து வழிபடுவோம். பாராட்டுக்கள்.
ReplyDeleteOm Namashivaya
ReplyDeleteஇன்றே இந்த இடுகையை வாசிக்கும் பாக்கியம் பெற்றேன்
ReplyDeletespeechless post.!
ஆஹா அருமையான தகவல். உத்திரகோசமங்கை அரசரை காண என் உள்ளம் மாணிக்கவாசக பெருமானின் திருவாசக்கதை படிக்க பேரு கொண்ட நாளிலிருந்து காத்திருந்தது. உங்கள் பதிவினால் இன்று தான் திருத்தலம் எங்கு உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன்.மேலும் பல தகவல்கள் தெரிந்து கொண்டேன்.திருவாசகத்தில் நீத்தல் விண்ணப்பத்தில் மாணிக்கவாசக பெருமான் உத்திரகோசமங்கைகு அரசே அரசே என்று பாடியிருப்பது நினைக்கும் போதே உள்ளம உருக்குகின்றது.மிக்க நன்றி.சிவில் சர்விசஸ் தேர்வில் தமிழ் விருப்ப பாடத்தில் நீத்தல் விண்ணப்பம் சேர்த்து வைத்துள்ளனர்.நன்றிகள்.
ReplyDeleteமிக நல்ல தகவல்களை தந்திருக்கிறிர்கள். நன்றி விரைவில் தரிசிக்க விழைகிறேன்
ReplyDeleteநல்ல இனிமையான தகவல் . நன்றி
ReplyDelete587+6+1=594
ReplyDelete;))))) திருப்தியளிக்கும் பதில்களுக்கு மிக்க நன்றி. ;)))))
உத்திரகோசமங்கை தலத்தின் தகவல்களும், ஓவியங்களும், புகைப்படங்களும் மிகச்சிறப்பு. நன்றி.
ReplyDeleteஸ்ரீ....
all are true
ReplyDeleteThe Maragatham statue of Lord Nataraja was a gift of my Lord Boghar who made Lord Murugan with Navapashana at Palani.No human being can dare to do such a magic skill in maragatham, What they can do is only a Lingam of small size.My guru says this was his small contribution to honour the numerous Natiyasala that existed at this town in those days.NATARAJA represents their dances. This is the version i got it from Boghar at Palaniashram. R.Parameswaran Coimbatore.
ReplyDeleteadiyaennukku mikavum pidita koil
ReplyDelete